Advertisment

Tamil News Today: கோயம்பேடு சந்தை திறக்க முடிவு; வலுக்கும் நீட் எதிர்ப்பு - டாப் நியூஸ் ஹைலைட்ஸ்

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
chennai koyambedu market traders meets deputy cm ops, koyambedu market traders demand to reopen koyambedu market, கோயம்பேடு மார்க்கெட், சென்னை, கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்படுமா, வியாபாரிகள் சங்கம் கோரிக்கை, ஒபிஎஸ், deputy cm o panneer selvam, traders demand to reopen koyambedu market, coronavirus, covid-19, koyambedu vegetable market, koyambedu flower market, koyambedu fruit traders

TN Latest News Live

Tamil News Today Live : பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தவிர மற்ற அனைத்து 'அரியர்' பாட தேர்வுகளிலும் 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய அனைவருக்கும் 'ஜாக்பாட்' பரிசு கிடைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலை மற்றும் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டது.இதைப் பின்பற்றி தமிழகத்திலும் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்காலிக சட்டசபை அமைப்பதற்கான முன்னேற் பாடுகளை பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் நடக்க உள்ளது. கொரோனா காரணமாக சமூக இடைவெளியுடன் சட்டசபை கூட்ட அரங்கில் கூட்டத்தை கூட்ட இயலாது. இதனால் கலைவாணர் அரங்கில் சட்டசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.இதற்கான முறையான ஒப்புதல் கிடைத்துள்ளதால் தலைமை செயலர் சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:10 (IST)27 Aug 2020

    ராஜஸ்தான் முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து

    ராஜஸ்தான் முதலமைச்சர் அலுவலக ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் அசோக் கெலாட் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார்.

    21:50 (IST)27 Aug 2020

    தேர்ச்சி மதிப்பெண்கள்

    அரசு அறிவித்த படி அரியர் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு

    21:13 (IST)27 Aug 2020

    தானிய விற்பனை அங்காடி செப்.18

    கோயம்பேட்டில் உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18 ஆம் தேதியும், காய்கறி சந்தை செப்.28 ம் தேதி முதல்பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

    20:56 (IST)27 Aug 2020

    செப்டம்பர் 28ம் தேதி திறப்பு

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

    உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செப்.18ம் தேதி திறக்கப்படும்

    20:39 (IST)27 Aug 2020

    தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை

    நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு தேவை என்பதுதான் தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை - ஸ்டாலின்

    * நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல நிரந்தரப் பாதுகாப்பு

    20:39 (IST)27 Aug 2020

    5,232 பேர் உயிரிழப்பு

    கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,386 பேர் கொரோனாவால் பாதிப்பு; மேலும் 141 பேர் உயிரிழப்பு.

    இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,09,792 ஆக உயர்வு.

    2,19,554 பேர் குணமடைந்துள்ளனர்; 5,232 பேர் உயிரிழப்பு.

    20:38 (IST)27 Aug 2020

    2,406 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 10 பேர் உயிரிழப்பு.

    தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,673 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 43,761 ஆகவும் உயர்வு.

    20:30 (IST)27 Aug 2020

    பிக் பாஸ் 4 - வீடியோ

    மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    20:20 (IST)27 Aug 2020

    மற்ற நாடுகளும் இணைய வேண்டும்

    ”சீன ஆக்கிரமிப்புகளை தடுக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைய வேண்டும்”

    - சீன மனித உரிமை ஆர்வலர் கோரிக்கை

    20:00 (IST)27 Aug 2020

    அப்படியா?

    வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது - முதல்வர் பழனிசாமி

    19:50 (IST)27 Aug 2020

    பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - செய்தியாளர்கள் சந்திப்பு

    * நாகையில் விவசாயிகள் , சுய உதவிக்குழுக்கள், சிறு குறு தொழில் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

    * பல்வேறு கருத்துகள் , கோரிக்கைகளை அவர்கள் தெரிவித்தனர் - முதலமைச்சர்

    19:41 (IST)27 Aug 2020

    கொரோனா - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு

    அரியலூர் -74

    செங்கல்பட்டு -298

    சென்னை - 1,286

    கோவை - 439

    கடலூர் -261

    தர்மபுரி - 1

    திண்டுக்கல் -102

    ஈரோடு - 121

    க.குறிச்சி -73

    காஞ்சிபுரம் -256

    குமரி - 104

    கரூர் -33

    கிருஷ்ணகிரி -32

    மதுரை - 73

    நாகை - 90

    நாமக்கல் -84

    நீலகிரி-25

    பெரம்பலூர்-19

    புதுக்கோட்டை-136

    ராமநாதபுரம்-75

    ராணிப்பேட்டை-162

    சேலம்-413

    சிவகங்கை-64

    தென்காசி-55

    தஞ்சை-122

    தேனி-130

    திருப்பத்தூர்-42

    திருவள்ளூர்-323

    தி.மலை-99

    திருவாரூர்-95

    தூத்துக்குடி-95

    நெல்லை-118

    திருப்பூர்-96

    திருச்சி-113

    வேலூர்-161

    விழுப்புரம்-144

    விருதுநகர்-152

    19:18 (IST)27 Aug 2020

    மீண்டவர்களின் எண்ணிக்கை 3,43,930

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,43,930 ஆக அதிகரித்தது.

    இன்று ஒரே நாளில் 5,870 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

    19:18 (IST)27 Aug 2020

    109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    தமிழகத்தில் மேலும் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

    அதிகபட்சமாக சென்னையில் 32, திருவள்ளூரில் 13, கோவையில் 11 பேர் உயிரிழப்பு.

    மாநிலம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்தது.

    18:58 (IST)27 Aug 2020

    சென்னையில் 1,286

    சென்னையில் மட்டும் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதியானது.

    சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,564 ஆக அதிகரித்தது.

    சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,450ஆக உள்ளது.

    18:58 (IST)27 Aug 2020

    5,981 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மொத்த பாதிப்பு 4,03,242 ஆக உயர்வு

    18:22 (IST)27 Aug 2020

    2ஆம் தலைநகராக கோவை?

    தமிழகத்தின் 2ஆம் தலைநகராக கோவையை அறிவித்தால் என்ன?

    * சென்னையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்காமல் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும்

    * மும்மொழிக் கொள்கையில் அதிமுக அரசு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்

    - வானதி சீனிவாசன்

    18:22 (IST)27 Aug 2020

    மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம்

    நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1.50 லட்சம் கோடியாக கணக்கீடு நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.3 லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

    18:01 (IST)27 Aug 2020

    கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து வியாபாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆலோசனை

    கொரோனா வைரஸ் பரவல் மையாமாக மாறியதை அடுத்து கோயம்பேடு சந்தை 3 மாதங்களுக்கு மேளாக மூடப்பட்டுள்ளது. அதனால், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து வியாபாரிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அதிகார்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருமழிசை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடம் சந்தையில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று வணிகர்கள் புகார் தெரிவித்தனர்.

    17:21 (IST)27 Aug 2020

    எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது - மகன் சரண் தகவல்

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி-யின் மகன் சரண், இன்று அப்பாவை சந்திக்கவில்லை. ஆனால், அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.மேலும், “அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடந்து சிகிச்சை அளித்து கண்காணித்த் உவருகின்றனர்” என்று சரண் தெரிவித்துள்ளார்.

    17:09 (IST)27 Aug 2020

    கொரோனா பரிசோதனை செய்துகொண்ட பிறகே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன் - முதல்வர் பழனிசாமி

    நாகையில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, “காவிரி டெல்டா மாவட்டங்களில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்துள்ளோம். தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் செயல்படும். கொரோனா பரிசோதனை செய்துகொண்ட பிறகே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” என்று கூறினார்.

    16:56 (IST)27 Aug 2020

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது - முதல்வர் பழனிசாமி

    நாகப்பட்டினத்தில் அரசுத் திட்டங்களை தொடங்கிவைத்த முதல்வர் பழனிசாமி, “நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது. கொரோனா காலத்திலும் அதிக மூதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால், தமிழகத்தின் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.

    16:26 (IST)27 Aug 2020

    மத்திய அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜர்க்கு கொரோனா தொற்று உறுதி

    சமூக நீதிக்கான மத்திய இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    16:25 (IST)27 Aug 2020

    பேரறிவாளனின் தாயார் மனு மீது முடிவெடுக்காமல், மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? ஐகோர்ட் கேள்வி

    பரோல் கேட்டு பேரறிவாளனின் தாயார் கொடுத்த மனு மீது முடிவெடுக்காமல், மனுவை சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    15:46 (IST)27 Aug 2020

    கீழ்வேளுர் திமுக எம்.எல்.ஏ மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதி

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    15:22 (IST)27 Aug 2020

    நீட், ஜேஇஇ தேர்வு: 4 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    15:19 (IST)27 Aug 2020

    ஓணம் பண்டிக்கையொட்டி ஆகஸ்ட் 31ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஓணம் பண்டிக்கையொட்டி ஆகஸ்ட் 31ம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அந்த நாளுக்கு பதிலாக செப் 12ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு வேலை நாள் என்று தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)27 Aug 2020

    தமிழக இளைஞர்கள் வரும் தேர்தலில் பாஜகவிற்கு அதிகம் வாக்களிப்பார்கள் - அண்ணாமலை ஐபிஎஸ்

    சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, வரும் தேர்தலில் தமிழக இளைஞர்கள் அதிகமாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    14:30 (IST)27 Aug 2020

    மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

    மொஹரம் பண்டிகை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மொஹரம் ஊர்வலத்தை அனுமதித்தால் குழப்பம் உருவாகும். கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டும் நிலை ஏற்படும் எனவும் கருத்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    13:52 (IST)27 Aug 2020

    இ-பாஸ் முறை இன்னும் தேவை- முதல்வர் பழனிசாமி

    மத்திய அரசு, மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்க கூடாது என்று மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    13:40 (IST)27 Aug 2020

    மகத்தான வெற்றி – ஸ்டாலின்

    உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி. அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதியை நிலைநாட்டியுள்ள உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    13:04 (IST)27 Aug 2020

    நடமாடும் மருத்துவக் குழுக்கள்

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கடலூரில் 39 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    13:01 (IST)27 Aug 2020

    காவலர் முருகனின் ஜாமீன் ரத்து

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முருகனின் ஜாமீன் மனுவை, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் 4ஆவது முறையாக ஒத்திவைத்தது 

    12:48 (IST)27 Aug 2020

    உள்ளூர் விடுமுறை

    ஓணம் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் 31 ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 12ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:16 (IST)27 Aug 2020

    ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி உள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    11:59 (IST)27 Aug 2020

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    11:40 (IST)27 Aug 2020

    மாநில அரசுக்கு அதிகாரம்

    பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2009ல் அருந்ததியினருக்கு திமுக அரசு 3% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    11:27 (IST)27 Aug 2020

    சபாநாயகர் தனபால் விசாரணை

    11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரும் விவகாரத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோரிடம் சபாநாயகர் தனபால் காணொலி மூலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    publive-image

    11:10 (IST)27 Aug 2020

    நடமாடும் ரேஷன் கடைகள்

    தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    10:53 (IST)27 Aug 2020

    அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதிக்கு கொரோனா

    சீர்காழி தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    10:52 (IST)27 Aug 2020

    வணிக கப்பல் போக்குவரத்து

    கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    10:50 (IST)27 Aug 2020

    ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை

    திருவிடைமருதூர் வண்ணக்குடி பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், உறவுக்காரப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் திருமணம் செய்வதற்காக பெண் கேட்டுள்ளார்.பெண் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நவீன் என்பவர், கல்யாணசுந்தரத்தை கத்தியால் குத்தினார். படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கல்யாணசுந்தரம் உயிரிழந்தார். தப்பி ஓடிய மகேந்திரன் மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

    10:24 (IST)27 Aug 2020

    தமிழகத்தில் தான் அதிகம்

    கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    09:57 (IST)27 Aug 2020

    கடலூரில் புதிய திட்டப்பணிகள்

    கடலூரில் ரூ.32.16 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி அடிக்கல்நாட்டி, தொடங்கி வைத்தார்.

    09:54 (IST)27 Aug 2020

    75,760 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்ப்பு விகிதம் 1.83%; குணமடைந்தோர் விகிதம் 76.24% ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:29 (IST)27 Aug 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    தமிழகத்தில், இன்று (ஆக., 27), பெட்ரோல் லிட்டருக்கு 84.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து, 84.82 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    09:23 (IST)27 Aug 2020

    ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்

    மாரடைப்பு காரணமாக  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், காலமானார்.

    சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் (ஆக.,26ம் தேதி இரவு 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று பகல் 11 மணி அளவில் தேவகோட்டையில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

    Tamil nadu news today updates : 'குட்கா ஊழலில், சி.பி.ஐ., விசாரணையை தடுக்கும் உயர்மட்ட சக்தி எது?' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

    'இந்தியா, ஜப்பான் அரசுகளிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1264 கோடி கடன் ஒப்பந்தம் டிச.,ல் கையெழுத்தாகும். அடுத்த 45 மாதங்களில் பணிகள் முடியும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது

    Tamilnadu Corona Virus Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment