/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-30T215025.900.jpg)
Tamil News Today Updates : தமிழகம் முழுதும், இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு, அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது; கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக, நாளொன்றுக்கு 9 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 40 மில்லியனை தாண்டியதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. புதிய தளர்வுகள் அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு இனி இல்லை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தளர்வுகளில், “அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற
புனித இடத்திற்கும் (Sanctum sanctorum) ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டுத்
தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் 7-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய 8ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் தேவையில்லை. தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நேற்று பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் தேர்வுக்கான பயிற்சிக்கு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த அகாடமியில் பயின்று பதவிக்கு வந்ததாக தகவல் பரப்பப்பட்ட நிலையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது கடந்த கால சாதனைகளைப் பற்றி நான் பேசவில்லை. எனினும், அதுகுறித்து வரும் தகவல்களைப் பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கை புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போதுதான். ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தேன். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் பணியாற்றினேன். பாஜக ஆட்சியின் கீழ் 4 நாட்கள்தான் பணியாற்றினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Let more investigation start into this as well. 🤣.
Though I don’t talk about past laurels, felt it is needed for the speculators about my past life. All of these along with my whole life story will be in detail in my book which will be published shortly 🙏 pic.twitter.com/huZQC9hqwp— K.Annamalai (@annamalai_k) August 30, 2020
JEE-NEET aspirants wanted the PM do ‘Pariksha Pe Charcha’ but the PM did ‘Khilone Pe Charcha’.#Mann_Ki_Nahi_Students_Ki_Baat
— Rahul Gandhi (@RahulGandhi) August 30, 2020
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் ஜேஇஇ/நீட் நுழைவுத் தேர்வுகள் நடத்தும் மத்திய அரசின் முடிவுகளை ராகுல் காந்தி மீண்டும் எதிர்த்துள்ளார். இன்று தனது ட்விட்டர் பதிவில். ' மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்வர்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசாமல்,பொம்மை பொருட்கள் பற்றி பேசியுள்ளார்' என்று தெரிவித்தார்.
பிரதமர் இன்று மான் கீ பாத் நிகச்சியில், " இந்தியாவில் சில இடங்கள் Toy Clusters அதாவது விளையாட்டுப் பொருட்களின் மையங்கள் என்ற வகையில் மேம்பாடு அடைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, கர்நாடகாவின் சன்னபட்னா, ஆந்திராவின் கொண்டப்பள்ளி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் ஆகிய பகுதிகள் விளையாட்டுப் பொருட்களின் மையங்களாக உள்ளன" என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிறுவும், பிரதமர் மோடி, மான் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி பேசியதாவது, நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காலம் இது. பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது. உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஒற்றுமையை பறை சாற்றுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அனுசரிக்கப்பட இருப்பதால், நேற்று (ஆகஸ்ட் 29ம் தேதி) மட்டும் ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை மண்டலம் - ரூ.52.50 கோடி, திருச்சி - ரூ.48.26 கோடி, மதுரை - ரூ.49.75 கோடி, சேலம் - ரூ.47.38 கோடி, கோவை - ரூ.45.23 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,99,837 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,94,928 வாகனங்கள் பறிமுதல்; 9,02,249 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35.42 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 948 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 63,498ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.65 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாதி, மத பேதமின்றி ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை மற்றும் உத்ராடம், திருவோண சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி வரை பக்தர்கள் தரிசனமின்றி வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், இன்று (ஆக., 30), பெட்ரோல் லிட்டருக்கு 85.00 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து, 85.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் நாளையுடன் ( ஆகஸ்ட் 31) பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவ மழை காலம் துவங்க உள்ளது. பருவ கால சவால்களை திறம்பட கையாள, மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும், என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights