Advertisment

Tamil News Today : எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamil News Today Updates : மாவட்டங்களில் ஆய்வு செய்ய கட்சி சார்பில் சென்றால், என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதால், என்னை ஒதுக்கிவிட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் பழனிசாமி செல்வதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, நாளை ( ஆகஸ்ட் 17ம் தேதி) திருவள்ளூருக்கு மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தடுப்பூசி, கூடிய விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. விஞ்ஞானிகள் ஒப்புதல் கிடைத்ததும், தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும்,'' என, பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:35 (IST)16 Aug 2020

    எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரணிடம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

    20:31 (IST)16 Aug 2020

    சென்னையில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு

    சென்னையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக அறிவித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    19:23 (IST)16 Aug 2020

    எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்; அவரது மகன் சரண் தகவல்

    எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிறப்பாக சிகிச்சை அளித்துவருகின்றன. தனது தந்தை விரைவில் குணமடைவார். அனைவரது அன்புக்கும் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்து சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    19:23 (IST)16 Aug 2020

    எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்; அவரது மகன் சரண் தகவல்

    எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிறப்பாக சிகிச்சை அளித்துவருகின்றன. தனது தந்தை விரைவில் குணமடைவார். அனைவரது அன்புக்கும் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்து சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    19:13 (IST)16 Aug 2020

    சென்னையில் புதிதாக 1,196 பேருக்கு கொரோனா; பிற மாவட்டங்களில் 4,754 தொற்று

    சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    18:08 (IST)16 Aug 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று; 125 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 125 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:59 (IST)16 Aug 2020

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுஹான் கொரோனா தொற்றால் மரணம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுஹான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. சேத்தன் சவுஹான் 1969 முதல் 1981 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

    17:07 (IST)16 Aug 2020

    கொரோனா தடுப்பு விதிப்படி மாநிலங்களவை கூட்டம் ஆகஸ்ட் 3வது வாரத்தில் நடத்த ஏற்பாடு

    கொரோனா தடுப்பு விதிப்படி சமூக இடைவெளியுடன் மாநிலங்களவைக் கூட்டத்தை ஆகஸ்ட் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

    16:27 (IST)16 Aug 2020

    கோவாவில் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி

    நடப்பாண்டு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

    * நவம்பர் மாதம் தொடங்கவுள்ள கால்பந்து போட்டி தொடர், கொரோனா காரணமாக ரசிகர்களின்றி நடைபெறவுள்ளது

    16:27 (IST)16 Aug 2020

    இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம்

    பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் பணியிடை நீக்கம்

    விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி

    16:22 (IST)16 Aug 2020

    2-வது தலைநகரமாக மதுரை?

    மதுரையில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைகூட்டத்தில் பொதுச் செயலாளராக ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும். மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்ககோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையை தமிழகத்தின் 2 ஆம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது.

    16:04 (IST)16 Aug 2020

    வாட்ஸப், ஃபேஸ்புக் பாஜக கைகளில்...

    இந்தியாவில் வாட்ஸப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது

    சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி

    ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன

    - ராகுல்காந்தி

    15:50 (IST)16 Aug 2020

    பாதிப்பு எண்ணிக்கை 19,816

    திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,816 ஆக அதிகரிப்பு.

    15:43 (IST)16 Aug 2020

    அன்பிற்கினிய அன்னைய்யா...

    தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    "அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா"

    இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

    15:40 (IST)16 Aug 2020

    விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

    ராசிபுரம் அருகேயுள்ள ப.மு. பாளையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விபரீதம்

    தொழிலாளர்கள் சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் உயிரிழப்பு - மேலும் 3 பேர் கவலைக்கிடம்.

    15:13 (IST)16 Aug 2020

    ரூ.50 லட்சம் நிதி

    கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும்

    - மு.க.ஸ்டாலின்

    14:23 (IST)16 Aug 2020

    பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி

    தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

    13:36 (IST)16 Aug 2020

    ராமதாஸ் வரவேற்பு

    பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன. பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    13:17 (IST)16 Aug 2020

    முதல்வர் இரங்கல்

    5 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு, இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர் திருவேங்கடம். என்று மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    12:48 (IST)16 Aug 2020

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.வரும் 21-ஆம் தேதி வரை 5 நாட்கள் ஆவணி மாத சிறப்பு பூஜைக்காக கோயில் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால், நெய் அபிஷேகம், படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

    12:42 (IST)16 Aug 2020

    பன்னீர்செல்வம் வாழ்த்து

    மக்களின் மனதில் என்றுமே கேப்டன் கூலாக நிலைத்திருப்பார் தோனி. கடின உழைப்பு மற்றும் கிரிக்கெட்டின் ஆழ்ந்த உணர்வுகளின் மூலம் அணியை வெற்றிமுனைக்கு கொண்டு வந்துள்ளார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    11:51 (IST)16 Aug 2020

    தமிழ் பேரடையாளம்

    விமான நிலைய மொழி சர்ச்சை குறித்து வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தொன்மைமிக்க தமிழ் மொழியை நேற்று வந்த மொழிகள் உரசிப் பார்ப்பதற்கும், ஊடுருவப் பார்ப்பதற்கும் உடன்படோம். இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம், தமிழோ பேரடையாளம் என குறிப்பிட்டுள்ளார்.

    11:47 (IST)16 Aug 2020

    காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில், ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    11:45 (IST)16 Aug 2020

    மாஞ்சா நூல் விற்பனை - 45 பேர் கைது

    சென்னையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 36 மாஞ்சா நூல் கண்டுகள், 164 பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    11:06 (IST)16 Aug 2020

    கனிமொழி வரவேற்பு

    11:02 (IST)16 Aug 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக பட்டியல்

    11:00 (IST)16 Aug 2020

    அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரர் மரணம்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் எனது சகோதரர் மட்டுமல்ல, தனது உற்ற நண்பனாகவும் திகழ்ந்ததாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    publive-image

    10:30 (IST)16 Aug 2020

    மீண்டும் பரிசோதனை

    கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் 7,8வது நாளில் பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    10:23 (IST)16 Aug 2020

    டாக்டர் திருவேங்கடம் மறைவு - ஸ்டாலின் இரங்கல்

    10:03 (IST)16 Aug 2020

    வாஜ்பாய் நினைவு நாள்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

    09:51 (IST)16 Aug 2020

    விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

    சென்னை தண்டையார்பேட்டையில், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கேசவனை, 10 பேர் கொண்ட மர்மநபர்களால், படுகொலை செய்யப்பட்டசம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    09:29 (IST)16 Aug 2020

    தோனி ஓய்வு - முதல்வர் வாழ்த்து

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    09:23 (IST)16 Aug 2020

    மயக்க நிலையிலிருந்து மீண்டார்

    கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார். அவ்வப்போது கண்விழிப்பதாகவும், நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Tamil nadu news today updates : தமிழக அரசு, பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து, ஒவ்வொரு துறையிலும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, வளர்ச்சி பாதையில் பீடு நடைபோட்டு வருகிறது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்முறையாக, தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.நாட்டின், 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், வழக்கமாக அமைப்பு செயலர் அல்லது தலைமை நிலைய நிர்வாகிகள், தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவர்.

    Tamil Nadu Corona Virus Edappadi K Palaniswami Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment