Tamil News Today: புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவை வளர்ப்பதாகவும், தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்,'' உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கைகுறைந்தது, 50 சதவீதம் அதிகரிக்கும். வேலை தேடுவோரை உருவாக்காமல், வேலை அளிப்பவர்களைஉருவாக்கும் என்றும், மோடி உறுதி அளித்தார். நாட்டில், 34 ஆண்டுகளுக்கு பின், தேசிய கல்விக் கொள்கையில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது என்று, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தின் கல்வி நலன் காக்கிற முயற்சியை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வோம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத, பிற மாநில முதல்வர்கள், அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொள்வோம்.அவர்களுடன் இணைந்து, மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வோம்.என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சீனா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ஸ்பான்சர்களையும் தக்கவைத்து கொள்வதாக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு முடிவெடுத்துள்ளனது. ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் விவோ சீன நிறுவனத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடதக்கது.
ஐ.பி.எல் தொடருக்கான அனுமதியை மத்திய அமைச்சகம் அடுத்த வாரத்திற்குள் அளிப்பார்கள் என்று நம்புவதாக ஐ.பி.எல் குழு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
செப். 19 முதல் நவ. 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு
* ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற அரசு அனுமதி
* போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
* ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவ.10 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல்
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் கமலா ராணி என்பவர் தொழில்நுட்ப கல்வி துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் லக்னோவில் உள்ள ராஜ்தானி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் மோசமடைந்ததால் உயிர்காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
கமலா ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறந்த சமூக சேவகியான கமலா ராணி திகழ்ந்ததாகவும், அமைச்சரவையில் திறம்பட பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தி நாளை மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தனது பயணத்தை யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம், தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” - மு.க.ஸ்டாலின்
மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/hGDGhhtaQD
— M.K.Stalin (@mkstalin) August 2, 2020
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையில், உயர் கல்வியில் சேர பொது நுழைவுத்தேர்வு, தேசிய உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்தி அதன் கீழ் உயர்கல்வித் துறை சார்ந்த துறைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் நாளை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை புதிய கல்விக் கொள்கை குறித்து அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதனையடுத்து புதிய கல்விக் கொள்கையில் சாதக பாதக அம்சங்கள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும்
- முதலமைச்சர் பழனிசாமி
Praying the almighty God for speedy recovery of Shri @AmitShah ji from his present illness.
Best wishes from TamilNadu for his good health.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 2, 2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
- துணை முதல்வர் ஓபிஎஸ்
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில்
குணமடைய வேண்டுகிறேன்!”
- ராகுல்காந்தி ட்வீட்
Wishing Mr Amit Shah a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) August 2, 2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து டிஸ்சார்ஜ்
கொரோனாவிலிருந்து குணமடைந்து அமிதாப் பச்சன் வீட்டில் ஓய்வில் இருப்பதாக மகன் அபிஷேக் ட்வீட் செய்துள்ளார்.
🙏🏽 my father, thankfully, has tested negative on his latest Covid-19 test and has been discharged from the hospital. He will now be at home and rest. Thank you all for all your prayers and wishes for him. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) August 2, 2020
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். ஏற்கெனவே ஆளுநர் மாளிகையில் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.
TN governor Banwarilal puthir advised home isolation by the hospital. The health bulletin says he will be monitored by the medical team. #covid19 @TheWeekLive pic.twitter.com/j0FMTMV5kL
— Lakshmi Subramanian (@lakhinathan) August 2, 2020
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதையடுத்து, எம்.பி செல்வராசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனைக் குறிப்பிட்டு, “பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். https://t.co/YtiRZXtCpf
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 2, 2020
சென்னை பொன்னேரியில் வீட்டு வாடகை தகராறில், குடியிருந்தவரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பென் சாம்-ஐ சென்னை மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.189 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.85 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.72 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.40.70 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.38.90 கோடிக்கும் சென்னை மண்டலத்தில் ரூ.21.69 கோடிக்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று பொது முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் நேற்று அதிக அளவில் மது விற்பனையாகி உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்படி கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக மௌனம் காக்கக் கூடாது, அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக, ஸ்டாலின் தலைமையில் கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் ஆகும். கல்வி சிறந்த தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும். கல்வி கொள்கை குறித்து, பிரதமர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 161, காரைக்காலில் 7, ஏனாமில் 32 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/FPi3goN0U5
— Greater Chennai Corporation (@chennaicorp) August 2, 2020
வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஆக.4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும். தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மருத்துவம் வழங்கப்படுவதாக கூறினார்.
சென்னையில் இன்று (ஆக., 02), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 35வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 8வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மாகாந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரிட்டன் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights