Tamil News Today Live : தமிழகத்தில், மும்மொழி கொள்கையை, அரசு எப்போதும் அனுமதிக்காது; இரு மொழி கல்வி கொள்கை மட்டுமே, தொடர்ந்து பின்பற்றப்படும்' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த, மும்மொழி கொள்கையை மறு பரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பை களைய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.என்று அவர் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை: முதல்வர் பழனிச்சாமி திட்டவட்டம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை (ஆகஸ்ட் 5ம் தேதி) நடக்க உள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு சம்பவம் வீடியோ,
Massive Bomb Blast in Beirut.
pic.twitter.com/7ucMVk61vl— Tarek Fatah (@TarekFatah) August 4, 2020
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் 10.08.2020 முதல் 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 04 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளன மீட்புக் குழுவினர்
பெய்ரூட் துறைமுகத்தில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பாதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை
The second explosion seems to have been the bigger one. https://t.co/i8WV4jGnP3
— Sumanth Raman (@sumanthraman) August 4, 2020
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 34,713 கன அடி நீர் காவிரியில் திறப்பு
கபினி அணையில் இருந்து 30,000 கன அடி நீர், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,713 கன அடி நீர் திறப்பு
* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு
எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது
எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள்
ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்
- பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம். ஏற்கனவே அரசுக்கு 2 முறை கோரிக்கை வைத்திருக்கிறோம். அதேபோல் அரசின் விதிகளை பின்பற்றவும் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மற்றும் பழ மார்க்கெட் மூடி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அரசு அழைத்தாலும் பேச தயாராக இருக்கிதோம். அதேபோல் 2 ம் கட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
பிரான்ஸ் நாட்டில் வரும் குளிர்காலம் அல்லது இலையுதிர்காலங்களில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்க அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு அங்கு குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் ஆபத்தானது, எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சை- 93
திருச்சி- 83
திருப்பத்தூர்-66
திண்டுக்கல்-64
சேலம்- 62
நாகை- 55
விழுப்புரம் - 50
அரியலூர்- 49
ராமநாதபுரம்- 47
தென்காசி- 45
புதுக்கோட்டை- 41
மதுரை - 40
நாமக்கல்- 39
திருவாரூர்- 31
கரூர்-25
கிருஷ்ணகிரி- 25
ஈரோடு - 20
நீலகிரி - 14
திருப்பூர்- 8
பெரம்பலூர் - 4
தர்மபுரி - 2
தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 108 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்வு.
சென்னையில் மேலும் 1,023 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,040 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர்
கொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம்
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்ததாக வெளியான தகவல் தவறானது
மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது.
- கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
வேலூரில் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல ரூ.3,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு இடைத்தரகர்கள் இ-பாஸ் வாங்கித் தருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறுபவர்களை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லையில் குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.
இலங்கை தாதா அங்காடா லக்கா உயிரிழந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.விசாரணை நடத்த 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர் அங்காடா லக்கா தானா என்பது குறித்தும் விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 மணிநேரத்தில் 230 மிமீ மழை பெய்துள்ளதால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மும்பையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க மும்பை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Severe water logging in parts of Mumbai after more than 230 mm of rainfall was recorded in last 10 hour. #MumbaiRain pic.twitter.com/OndO36rQFo
— The Indian Express (@IndianExpress) August 4, 2020
மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். கூடுதலாக ஒருமொழியை கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கிறார்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
I have been tested positive for #Covid19 & also been admitted to the hospital on the advice of doctors as a precaution.
I request all those who had come in contact with me to check out for symptoms & to quarantine themselves.
— Siddaramaiah (@siddaramaiah) August 4, 2020
சென்னையில் இன்று (ஆக., 04), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 37வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 10வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்கள் மூலம் மட்டும் 19 சதவீத கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை 27 ஆயிரத்து 139 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் அறிகுறி இருந்தவர்களை சோதனைக்கு உட்படுத்தியதில் 16 ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் கடைசி வாரம் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights