Tamil News : தமிழகத்தில், சென்னை - சேலம் இடையேயான, எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக, மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாளை(ஜூலை 30) ஆலோசனை நடத்துகிறார். 'மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு, தி.மு.க., தொடுத்த வழக்கு தான் முக்கிய காரணம் என்பதை, பொது மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துமாறு, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் அழுத்தம் தரவும், இவ்விவகாரத்தில், அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து சட்டசபை கூட்டத் தொடரைக் கூட்ட அனுமதி அளித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அசோக் கெலாட் தலைமியிலான அமைச்சரவை கடந்த 7 நாட்களில் நான்கு தீர்மானங்களை ஆளுனருக்கு அனுபியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் ஏப்ரல் மாதம் முதல், குறைந்த அளவிலேயே உள்ளது. இது தற்போது 2.23 சதவீதமாக உள்ளது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,286 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களில் எண்ணிக்கை மொத்தம் 9,88,029 ஆகும். குணமடையும் விகிதமானது 64.51 விழுக்காட்டை எட்டியுள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கூடுதலாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.
My family members and I developed a slight fever few days ago. It subsided by itself but we got tested nevertheless. The result has shown a mild COVID positive today. We have home quarantined as prescribed by the doctors.
— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020
திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாகுபலி திரைப்பட இயக்குனர், இந்த செய்தியை தனது ட்விட்டர் கணக்கில் இன்று பகிர்ந்து கொண்டார். மருத்துவர்கள் ஆலோசனையின் படி, நாங்கள் அனைவரும் எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
பொதுமுடக்கம் 3ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. அதே நேரத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை தொடர்கிறது. மேலும், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடையும் தொடர்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,34,114ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும். கல்விக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.
புதிய கல்விக் கொள்கைகளை அறிவித்த மத்திய உயர் கல்வி செயலாளர் அமித் கரே: 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி அவசியம். 8ஆம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களின் சுமைகளை குறைப்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். நாட்டினம் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
உயர்க் கல்வி செயலாளர் அமித் கரே இன்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தார்: தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும். கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே
புதிய கல்விக் கொள்கை. நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். கல்விக் கட்டணங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத. 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் தொழில்முறைக் கல்விகளின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தேதியின்படி, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், வெவ்வேறு தனித்தனி நிறுவனங்களுக்கு வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன. புதிய கல்வி கொள்கை தரத்தின் காரணங்களுக்காக, விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், உரிமையின் படி இருக்காது என்று உயர்க்கல்வித்துறை செயலாளார் அமித் கரே தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்று கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தினால் கொரோனா இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்களால் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது என்று கூறினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானா அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கின.
அம்பாலா விமானப்படைதளத்தில் தரையிறங்கிய ரஃபேல் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஒப்பந்தப்படி 36 போர் விமானங்களில் இதுவரை 10 விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது பிரான்ஸ் நிறுவனம்.
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திற்காக ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 645 சித்த மருத்துவ மையங்களில் 1,104 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்
- அரசு தரப்பு
மாவட்டவாரியாக சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்கக்கோரிய வழக்கில் தமிழகஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பன்னோக்கு விசாரணை ஆணைய இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதால் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலர் விளக்கம்
பரோல் மனுவை உரிய நேரட்த்தில் பரிசீலிக்காததால் சிறைத்துறைக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது என மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் 4,000 பேருக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தக்கோரி வழக்கு
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் வாகை குளத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக எழுந்த புகாரில் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அணைக்கரை முத்து உடலில் 4 இடங்களில் காயங்கள் உள்ளன என்று நீதிபதி தெரிவித்துளளார்.
நீதித்துறை நடுவர் அறிக்கையின்படி, உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரான்ஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள்
அரபி கடலின் மேற்கு பகுதியில் உள்ள இந்திய போர்க்கப்பலின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் விமானங்கள் வந்தன.
ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலை ரஃபேல் விமானங்கள் தொடர்பு கொண்டன.
5 ரஃபேல் விமானங்களும், 2 மணியளவில் இந்தியா வந்தடைய உள்ளன
ஹரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்தில் தரையிறங்க உள்ளன
கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரஃபேல் விமானங்களை இயக்குகின்றனர்
இந்தியா - பிரான்ஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வரவுள்ளன. இதற்கான ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகத்தினரும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 428 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 13,776 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர்.செங்கல்பட்டில் 3,680 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 9429 பேர் குணமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஏற்கனவே 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுற்ளது. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/z8t3X1vJvX
— Greater Chennai Corporation (@chennaicorp) July 29, 2020
சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020 https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020
தமிழகத்தில் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் முறையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவ நிபுணர்களுடன், அவர் நாளை ( 30ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 1ம் தேதி தான், சீதாலட்சுமி, சென்னை மாவட்ட கலெக்டராக பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று (ஜூலை 29), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 31வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 4வது நாளாக மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலிகளை பாதுகாக்கும் நாடுகளுடன் இணைந்து செயலாற்றத் தயாராக உள்ளோம்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights