Advertisment

Tamil News Highlights : பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று

Tamil News : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
SS Rajamouli, family members test positive for coronavirus

SS Rajamouli, family members test positive for coronavirus

Tamil News : தமிழகத்தில், சென்னை - சேலம் இடையேயான, எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக, மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நாளை(ஜூலை 30) ஆலோசனை நடத்துகிறார். 'மருத்துவ கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு உரிமை உண்டு' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு கிடைப்பதற்கு, தி.மு.க., தொடுத்த வழக்கு தான் முக்கிய காரணம் என்பதை, பொது மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துமாறு, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் அழுத்தம் தரவும், இவ்விவகாரத்தில், அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    23:12 (IST)29 Jul 2020

    ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து சட்டசபையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல்

    ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து சட்டசபை கூட்டத் தொடரைக் கூட்ட அனுமதி அளித்தார்.  சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அசோக் கெலாட் தலைமியிலான அமைச்சரவை கடந்த 7 நாட்களில் நான்கு தீர்மானங்களை ஆளுனருக்கு அனுபியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    23:00 (IST)29 Jul 2020

    தொடர்ந்து 6வது நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கூடுதலாக உள்ளது

    கொரோனா தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் ஏப்ரல் மாதம் முதல், குறைந்த அளவிலேயே உள்ளது. இது தற்போது 2.23 சதவீதமாக உள்ளது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,286 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களில் எண்ணிக்கை மொத்தம் 9,88,029 ஆகும். குணமடையும் விகிதமானது 64.51 விழுக்காட்டை எட்டியுள்ளது. தொடர்ந்து ஆறாவது நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கூடுதலாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.  

    22:44 (IST)29 Jul 2020

    பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று

    திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாகுபலி  திரைப்பட இயக்குனர், இந்த செய்தியை தனது ட்விட்டர் கணக்கில் இன்று பகிர்ந்து கொண்டார். மருத்துவர்கள் ஆலோசனையின் படி, நாங்கள் அனைவரும் எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். 

      

    21:35 (IST)29 Jul 2020

    பொதுமுடக்கம் 3ஆம் கட்ட தளர்வுகள்

    65 வயதைக் கடந்தவர்கள், உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர்கள் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    20:48 (IST)29 Jul 2020

    பொதுமுடக்கம் 3ஆம் கட்ட தளர்வுகள் - - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    பொதுமுடக்கம் 3ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. அதே நேரத்தில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை தொடர்கிறது. மேலும், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடையும் தொடர்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    20:44 (IST)29 Jul 2020

    சினிமா தியேட்டர்கள், மெட்ரோ ரயில் .... ஆக்டஸ்ட் 31ம் தேதி வரை செயல்படாது

    மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், உல்லாச விளையாட்டு பூங்காக்கள் போன்றவற்றிற்கு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை அனுமதி அளிக்கப்படவில்லை

    20:39 (IST)29 Jul 2020

    இரவு நேரத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கம்

    மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பில்,  இரவு நேரத்தில் தனிநபர் வெளியில் செல்வதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.    

    20:35 (IST)29 Jul 2020

    3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்!

    பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது  என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.   

    19:44 (IST)29 Jul 2020

    புதிய கல்விக் கொள்கை - மும்மொழிக் கொள்கை அறிமுகம்

    புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    18:16 (IST)29 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா; 82 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,34,114ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:11 (IST)29 Jul 2020

    ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    18:06 (IST)29 Jul 2020

    பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்; புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும். கல்விக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.

    18:03 (IST)29 Jul 2020

    எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதாக மத்திய உயர் கல்வி செயலாளர் அமித் கரே அறிவிப்பு

    புதிய கல்விக் கொள்கைகளை அறிவித்த மத்திய உயர் கல்வி செயலாளர் அமித் கரே: 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி அவசியம். 8ஆம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களின் சுமைகளை குறைப்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். நாட்டினம் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.

    17:54 (IST)29 Jul 2020

    12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி - புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு

    உயர்க் கல்வி செயலாளர் அமித் கரே இன்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தார்: தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும். கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே

    புதிய கல்விக் கொள்கை. நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். கல்விக் கட்டணங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத. 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் தொழில்முறைக் கல்விகளின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    17:49 (IST)29 Jul 2020

    பல்கலைக்கழகங்களின் விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் - உயர் கல்வி செயலாளர்

    இந்த தேதியின்படி, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், வெவ்வேறு தனித்தனி நிறுவனங்களுக்கு வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன. புதிய கல்வி கொள்கை தரத்தின் காரணங்களுக்காக, விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், உரிமையின் படி இருக்காது என்று உயர்க்கல்வித்துறை செயலாளார் அமித் கரே தெரிவித்துள்ளார்.

    17:43 (IST)29 Jul 2020

    மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

    17:32 (IST)29 Jul 2020

    கொரோனா தடுப்பு பணி: மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் பாராட்டு

    முதல்வர் பழனிசாமி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்று கூறினார்.

    17:29 (IST)29 Jul 2020

    தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது - முதல்வர்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தினால் கொரோனா இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

    17:18 (IST)29 Jul 2020

    தமிழகத்தில் நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்களால் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து தொழில் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது என்று கூறினார்.

    16:21 (IST)29 Jul 2020

    உலக புலிகள் தினம்

    புலிகள்தான் காடுகளின் பல்லுயிர்ச்சூழலையும், உணவுச்சங்கிலியையும் பாதுகாக்கும் வனக்காவலன்!! புலிகளை பேணி பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக 2010ம் ஆண்டு முதல் ஜூலை 29ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    16:11 (IST)29 Jul 2020

    யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் - தனி வாரியம்

    யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    15:57 (IST)29 Jul 2020

    5 மாவட்டங்களில் மிக கனமழை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    15:55 (IST)29 Jul 2020

    ரஃபேல் குறித்து விமர்சிப்போர் யார்?

    ரஃபேல் குறித்து விமர்சிக்க நினைப்போர், நாட்டின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புவோராகவே இருப்பர்

    - ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர்

    15:24 (IST)29 Jul 2020

    தரையிறங்கிய ரஃபேல்

    பிரான்ஸில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானா அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கின.

    அம்பாலா விமானப்படைதளத்தில் தரையிறங்கிய ரஃபேல் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    ஒப்பந்தப்படி 36 போர் விமானங்களில் இதுவரை 10 விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது பிரான்ஸ் நிறுவனம்.

    15:23 (IST)29 Jul 2020

    தொடர்ந்து உயரும் தங்கம் விலை

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    15:17 (IST)29 Jul 2020

    5 மணிக்கு முதல்வர் உரை

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார்.

    மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்த நிலையில் இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி.

    15:11 (IST)29 Jul 2020

    ரூ.186 கோடி ஒதுக்கீடு

    சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திற்காக ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 645 சித்த மருத்துவ மையங்களில் 1,104 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்

    - அரசு தரப்பு

    மாவட்டவாரியாக சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்கக்கோரிய வழக்கில் தமிழகஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

    15:00 (IST)29 Jul 2020

    7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் தாமதம்

    பன்னோக்கு விசாரணை ஆணைய இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதால் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலர் விளக்கம்

    பரோல் மனுவை உரிய நேரட்த்தில் பரிசீலிக்காததால் சிறைத்துறைக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    14:59 (IST)29 Jul 2020

    மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

    நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக் கூடாது என மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

    மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள் 4,000 பேருக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தக்கோரி வழக்கு

    நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை.

    14:54 (IST)29 Jul 2020

    16 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

    பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் 16 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவிப்பு

    14:46 (IST)29 Jul 2020

    இந்திய எல்லைக்குள் ரஃபேல்

    ரஃபேல் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதை வீடியோ மூலம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    publive-image

    14:42 (IST)29 Jul 2020

    500 மீட்டர் தொலைவுக்கு அனுமதி இல்லை

    ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் நுழைவு வாயிலில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. 

    Image Courtesy - The Indian Express

    14:17 (IST)29 Jul 2020

    7 பேர் விடுதலை எப்போது? - ஆளுநர் தரப்பு விளக்கம்

    7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை குழும அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    14:09 (IST)29 Jul 2020

    உடலில் 4 இடங்களில் காயங்கள்

    தென்காசி மாவட்டம் வாகை குளத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக எழுந்த புகாரில் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அணைக்கரை முத்து உடலில் 4 இடங்களில் காயங்கள் உள்ளன என்று நீதிபதி தெரிவித்துளளார்.

    நீதித்துறை நடுவர் அறிக்கையின்படி, உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    13:46 (IST)29 Jul 2020

    கட்டுப்பாட்டு எல்லைக்குள் ரஃபேல் விமானங்கள்

    பிரான்ஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள்

    அரபி கடலின் மேற்கு பகுதியில் உள்ள இந்திய போர்க்கப்பலின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் விமானங்கள் வந்தன.

    ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலை ரஃபேல் விமானங்கள் தொடர்பு கொண்டன.

    5 ரஃபேல் விமானங்களும், 2 மணியளவில் இந்தியா வந்தடைய உள்ளன

    ஹரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்தில் தரையிறங்க உள்ளன

    கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரஃபேல் விமானங்களை இயக்குகின்றனர்

    13:26 (IST)29 Jul 2020

    நாளை +1 தேர்வு முடிவுகள்

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளையும் (ஜூலை 30ம் தேதி), 12ம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள், 31ம் தேதியும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:09 (IST)29 Jul 2020

    ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை

    இந்தியா - பிரான்ஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வரவுள்ளன. இதற்கான ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகத்தினரும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    publive-image

    publive-image

    12:46 (IST)29 Jul 2020

    முதல்வர் பழனிசாமி பெருமிதம்

    கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    12:17 (IST)29 Jul 2020

    428 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 428 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 13,776 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர்.செங்கல்பட்டில் 3,680 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 9429 பேர் குணமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    11:36 (IST)29 Jul 2020

    கிண்டி ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஏற்கனவே 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுற்ளது.  7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    11:29 (IST)29 Jul 2020

    சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு பட்டியல்

    11:14 (IST)29 Jul 2020

    சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் - நடிகர் சூர்யா

    சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    11:09 (IST)29 Jul 2020

    15 லட்சத்தை தாண்டியது

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,83,156ல் இருந்து 15,31,669ஆக உயர்ந்துள்ளது. 5,09,447 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  9 லட்சத்து 8 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    10:55 (IST)29 Jul 2020

    தொழிலாளர் காப்பீட்டு சட்டம் - முக்கிய தீர்ப்பு

    தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 பெண் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

    10:33 (IST)29 Jul 2020

    முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    தமிழகத்தில் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் முறையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவ நிபுணர்களுடன், அவர் நாளை ( 30ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    10:28 (IST)29 Jul 2020

    சென்னை கலெக்டருக்கு கொரோனா

    சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 1ம் தேதி தான், சீதாலட்சுமி, சென்னை மாவட்ட கலெக்டராக பதவியேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    10:24 (IST)29 Jul 2020

    தலைமை செயலாளர் சண்முகம் அம்மாவுக்கு கொரோனா

    தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

    10:23 (IST)29 Jul 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று (ஜூலை 29), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை 31வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 4வது நாளாக மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    10:18 (IST)29 Jul 2020

    அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை. தனியாா் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து வருவதையடுத்து, வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.

    தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலிகளை பாதுகாக்கும் நாடுகளுடன் இணைந்து செயலாற்றத் தயாராக உள்ளோம்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

    Tamil Nadu Corona Virus Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment