Tamil nadu news today updates : தொற்று நோயாகிய, 'கொரோனா' வைரஸ் என்ற, 'மஹா மாரி'யை விரட்ட, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ''அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில், வார சந்தைகள், பெரிய ஜவுளி கடைகள், நகை கடைகள் போன்றவை, இன்று முதல், 31ம் தேதி வரை மூடப்படும்; பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில், தரிசனம் நிறுத்தப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22-03-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ரயில் சேவைகளில் மாற்றம்
ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது ரயில் பயணத்திற்கான தேவை மிகவும் குறையும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, அதாவது 22-03-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 07:00 மணி முதல் மாலை 09:00 மணி வரை ரயில் சேவைகளைப் பொறுத்தவரை பின்வரும் மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகின்றன:
1. பயணிகள் ரயில் சேவைகள்:
21/22-03-2020 நள்ளிரவு 00:00 மணி முதல் 22-03-2020 அன்று இரவு 22:00 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் இயக்கப்படாது.
2. மெயில் / எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள்:
22-03-2020 அன்று 04:00 மணி முதல் 22:00 மணி வரை இயக்கப்படும் நீண்ட தூர மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பெரிய அளவில் ரத்து செய்யப்படும்.
3. புறநகர் ரயில் சேவைகள்:
சென்னை பிராந்தியத்தில் 22-03-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அத்தியாவசிய பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புறநகர் ரயில் சேவைகள் குறைந்தபட்சமாக மட்டுமே குறைக்கப்படும்
- தெற்கு ரயில்வே
கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அடுத்த நான்கு வாரங்களில் மிகவும் முக்கியமான நடவடிக்கை ‘சமூக விலகல்’
'சமூக விலகல்' நடவடிக்கை பின்பற்றப்படுவதை மாநில முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்
- முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பை அடுத்து, பிரதமர் உத்தரவின் பெயரில் முதல்வரின் 9 அம்ச நடவடிக்கைகள்
கொரோனா பாதிப்பு: பிரதமர் உத்தரவின் பெயரில் முதல்வரின் 9 அம்ச நடவடிக்கைகள்!https://t.co/t73uauPEZa | @CMOTamilNadu | #coronavirusindia | #StayHomeStaySafe | #Covid19India | #JantaCurfewChallenge pic.twitter.com/HC1FQVGSLa
— News7 Tamil (@news7tamil) March 20, 2020
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7பேர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆசை.
ஜெயின்கமிஷன் விசாரணையில் சதி திட்டங்களை ஆராய பல்வேறு புலனாய்வு அமைப்புகளை உள்ளடக்கிய MDMA அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
MDMA அறிக்கையை பொருத்து முடிவெடுக்கப்படும் என ஆளுநர் செயலகம் கூறியுள்ளது.
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து ஏப்ரல் 21 வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது - தமிழக அரசு, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தடுக்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணை ஏப்ரல் 21-க்கு ஒத்திவைப்பு.
7 பேர் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநரின் செயலருக்கு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வந்துள்ளது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் செயலகம் விளக்கம் அளித்துள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்
கொரோனா பரவுதலைத் தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு (மார்ச் 22) ஆதரவு தெரிவிக்குமாறு ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பிரபலங்களுக்கு கமல்ஹாசன் ட்விட்டர் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
I call upon my fans,my friends and my people in support of the cause on 22nd March Sunday, 7am to 9pm #JantaCurfew (2/2)@rajinikanth #Ajith @actorvijay @Suriya_offl #Vikram @dhanushkraja #Simbu @VijaySethuOffl #Ilayaraja, @anirudhofficial @gvprakash @GhibranOfficial @ThisIsDSP
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு நிலையை அனுசரிக்க பிரதமர்மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது ரசிகர்கள், ம்ககள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக , 2020 மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை சென்னை பத்திரிகையாளர்* மன்றத்தில் செய்தியாளர் சந்திப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே நிகழ்ந்து வந்த பனிப்போர் தீவிரமான நிலையில், சிந்தியா, மோடியை சந்தித்த நிலையில், அமித் ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதன்காரணமாக, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது கமல்நாத் அரசு. சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கமல்நாத், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உயர்கல்வித்துறை சார்பில், 7 புதிய கலை, அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, 3500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும்.181 அம்மா சிறப்பு அங்காடிகள் புதிதாக துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா விவகாரத்தில், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக தத்தமது வீடுகளில் இருக்குமாறு கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா கேட்டுக்கொண்டுள்ளனர்.
Stay Home. Stay Safe. Stay Healthy. 🙏🏻 pic.twitter.com/UNMi2xQbbz
— Anushka Sharma (@AnushkaSharma) March 20, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், மலேசியாவிற்கு பணி மற்றும் சுற்றுலா நிமித்தமாக சென்றிருந்த 200 தமிழர்கள், இந்தியா திரும்ப முடியாமல், கோலாலம்பூர் விமானநிலையத்தில் தவித்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு நிலையை அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், அன்றைய தினம் தமிழகத்தில் பால் விநியோகம் இருக்காது என்று தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா பீதி அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி, தானாக முன்வந்து கொரோனா சோதனை மற்றும் கைகளை சானிடைசர் வைத்து சுத்தம் கழுவிய வீடியோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#TN_Together_AgainstCorona #CoronaVirus pic.twitter.com/H0l8VZi2ax
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 20, 2020
எந்த ரேஷன் கடையிலும், பொருட்கள் வாங்கும் திட்டம், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், சோதனை அடிப்படையில், ஒரு மாதம் செயல்பாட்டில் இருந்தது. இந்த திட்டத்தில், 9,000 பேர், வேறு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி பயனடைந்தனர்.இதில், எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை. இதனால், ஏப்., 1 முதல், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின், எந்த ரேஷன் கடைகளிலும், பொது மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights