Tamil nadu news today updates : டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட 27 பேர் பலியாகி உள்ளனர்; 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டில்லியின் சில பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுக்க நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். வன்முறையைத் தவிர்க்குமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். டில்லியின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் வன்முறையில் ஈடுபடும் மக்கள் வெளியில் இருந்து வருவதாகக் கூறியுள்ளனர். எல்லைகளை முத்திரையிட வேண்டும். மீறி நுழைய முயலும் போராட்டக்காரர்களை தடுக்கவும் கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இரண்டு நாள் பயணமாக வந்திருந்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் பயணத்தை முடித்து, இரவு தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். குஜராத்தின் ஆமதாபாத் வந்த அவர், மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார். ஆமதாபாதில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில், அவரை வரவேற்று, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடந்தது. இடைப்பட்ட, 22 கி.மீ., துாரத்தில் அவரை வரவேற்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கிருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற அவர், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றி பார்த்தார். இரண்டாவது நாளில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின், ஜனாதிபதி அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன்: “இந்தியா போன்ற ஜனநாயக கூட்டாளிகளுடன் உறவை வலுப்படுத்துவது முக்கியம். ஆனால், மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட நமது மதிப்புகளைப் பற்றி உண்மையாக பேச முடியும்-அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் நடந்த வகுப்புவாத வன்முறைகளால் ஏற்பட்ட மரணங்களால் மிகவும் கவலையடைந்துள்ளதாக அமெரிக்க அவையின் வெளியுறவுக் குழு தெரிவித்துள்ளது. “எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஜனநாயகத்தில் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் அவை அமைதியாக இருக்க வேண்டும், காவல்துறை அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று அந்த குழு கூறியுள்ளது.
வடகிழக்கு டெல்லி வன்முறையில் ஈடுபட்டதாக 106 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், வன்முறை தொடர்பாக காவல்துறை 18 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
“புதன்கிழமை எந்தவிதமான அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை, வடகிழக்கு டெல்லியில் இருந்து பி.சி.ஆர் அழைப்புகள் குறைந்துவிட்டன” என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்ற) மந்தீப் சிங் ரந்தாவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 011-22829334, 22829335 ஆகிய இரண்டு ஹெல்ப்லைன் எண்களையும் போலீசார் வெளியிட்டனர்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வடகிழக்கு டெல்லியில் உள்ள டி.சி.பி அலுவலகத்திற்கு வருகை தந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வடகிழக்கு பகுதிகளுக்கு வருகை செய்ததோடு, கடந்த மூன்று நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலையை மீட்டெடுப்பது குறித்து உள்ளூர் மக்களுக்கு உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் சென்று பார்வையிட்டார்.
Delhi: Chief Minister Arvind Kejriwal has reached the office of DCP North East. #DelhiViolence pic.twitter.com/fc4xNhrKS3
— ANI (@ANI) February 26, 2020
டெல்லி குரு தேக் பகதூர் மருத்துவமனையில் மொத்தம் 25 இறப்புகளும், லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டு இறப்புகளும் இதுவரை பதிவாகியுள்ளது. இதனால், தேசிய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை மாலை 27 ஆக உயர்ந்தது. இருப்பினும், புதன்கிழமை இன்று புதிய வன்முறை வழக்குகள் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
டெல்லி போராட்டம் உளவுத்துறையின் தோல்வி மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க; இந்த வழி நல்ல வழி என்று டுவிட் செய்துள்ளார்.
சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க.
இந்த வழி நல்ல வழி.
தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்.— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2020
நடிகர் ரஜினி: இப்போது டெல்லியில் நடந்துகொண்டிருக்கிற போராட்டங்கள் எல்லாமே உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசை நான் கடுமையாக கண்டிக்கிறேன். டிரம்ப் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும்போது அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் உளவு வேலையை சரியாக செய்ய வில்லை. வன்முறையை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் தொடர்ச்சியாக வன்முறையை நிறுத்த வேண்டும் எனவும் வடகிழக்கு டெல்லியில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெறுகிறது. பேரணியில் பிரியங்கா காந்தி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
Delhi: Congress leaders and workers participating in 'peace march' stopped at Janpath Road. They were heading towards Gandhi Smriti. pic.twitter.com/LSaAAhmTo6
— ANI (@ANI) February 26, 2020
திருச்சி எம்.ஆர். பாளையத்தில் இயங்கி வரும் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய உயிரியல் பூங்கா அலுவலர், தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவட்ட நீதிபதிகளிடம் 2 வாரங்களுக்கு ஒரு முறை டெல்லி காவல்துறை விண்ணப்பிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான உதவி எண்களை அறிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனதளவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் டெல்லியில் அமைதியை நிலைநிறுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், கலவரத்தை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டிருப்பதால், அவரை ராஜினாமா செய்யக் கூறுவது நகைச்சுவையானது என்றும் அவர் அறிவித்துள்ளார் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
கல்வி என்பது பட்டத்திற்காக அல்ல, அதிகாரமளிப்பதற்கும் மேம்பாட்டிற்குமானது என புதுச்சேரி பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பேசினார். மேலும் மாணவர்கள் எந்த மொழியையும் படிக்கலாம், ஆனால் தாய்மொழி முதன்மையானது என கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. வேளாண் துறையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ந்து வரும் வன்முறை நிகழ்வு மிகவும் துரதிருஷ்டவசமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இததொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், உடனடியாக தாங்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நிகழ்ந்து வரும் வன்முறைய கட்டுப்படுத்த உடனடியாக ராணுவத்தை அனுப்ப வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
I have been in touch wid large no of people whole nite. Situation alarming. Police, despite all its efforts, unable to control situation and instil confidence
Army shud be called in and curfew imposed in rest of affected areas immediately
Am writing to Hon’ble HM to this effect
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2020
தலைநகர் டெல்லியில் வன்முறையை தூணடும்விதமாக பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அனுராக் தாகூர், பர்வேஷ் ஷாகிப் சிங், கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். டெல்லி போலீஸ் இந்த விவகாரத்தில் சொந்தமாக செயல்படுங்கள் என்று டில்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். போராட்டத்தில் பங்கேற்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை மூத்த அதிகாரிகளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு இந்த ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு வன்முறையால் பாதிக்கப்பட்ட சீலாம்பூர், ஜப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் ஆகிய இடங்களுக்கு அஜித் தோவல் நேரில் சென்று நிலமையை ஆய்வு செய்தார்.
'கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கரு முட்டை, சிறுநீரகத்தை விற்கும் அவலம் தொடர்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights