Advertisment

Tamil News Today : தமிழகத்தில் உணவகங்கள், வணிக வளாகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி!

Tamil News updates : தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Live updates

Tamil News Live updates

Tamil News Today updates : கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கைகளாக, உணவகங்கள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 8) தமிழகத்தில் விதிமுறைகளின் அடிப்படையில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்பட துவங்கியுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கான கட்டண விபரத்தை, அரசுஅறிவித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம், 5,000 ரூபாய்; அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

'கிரேடு ஏ 1' மற்றும் 'ஏ 2' என்ற, முதல் நிலை மருத்துவமனைகளில், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு, பொது வார்டில், தினசரி கட்டணமாக, 7,500 ரூபாய்; தீவிர சிகிச்சை பிரிவில், 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உணவகங்களில், 'ஏசி' பயன்படுத்தக் கூடாது; நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், நாளை முதல் உணவகங்களில், 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதையொட்டி, உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டுள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:02 (IST)07 Jun 2020

    நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுகு உள் ஒதுக்கீடு; நாளை அறிக்கை தாக்கல்

    நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுகு உள் ஒதுக்கீடு செய்வது தொடர்பக நாளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு நாளை முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது.

    19:45 (IST)07 Jun 2020

    மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை மத்திய அரசு அனுமதி

    மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை திறப்பதற்கு மத்திய கலாச்சாரத்துறை அனுமதி அளித்துள்ளது.மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய கலாச்சார துறையின் உத்தரவின்படி தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், நாமக்கல் மலைக்கோட்டை உள்பட தமிழகத்தில் பல இடங்கள் திறக்கப்பட உள்ளன.

    19:08 (IST)07 Jun 2020

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 18 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

    18:24 (IST)07 Jun 2020

    மின்வாரியத் தலைவர் விக்ரம் கபூர் பணியிட மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் - தமிழக அரசு

    விக்ரம் கபூர் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

    சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவுக்கு மின் வாரியம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    18:21 (IST)07 Jun 2020

    கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் - முதல்வர் பழனிசாமி உறுதி

    கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.

    18:17 (IST)07 Jun 2020

    வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் காக்க மக்கள் கடமை உணர்ந்து செயல்பட முதல்வர் வேண்டுகோள்

    அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுமக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்

    மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவைத் தடுப்பது சாத்தியமில்லை - முதல்வர் பழனிசாமி

    தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - முதல்வர் உரை

    வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

    18:12 (IST)07 Jun 2020

    தமிழகத்தில் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - முதல்வர் உரை

    தமிழகத்தில் மொத்தமாக 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - முதல்வர் உரை

    பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்களுக்கும் முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி

    18:09 (IST)07 Jun 2020

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது - முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் இதுவரை 6.50 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன - முதல்வர் உரை

    பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு பாராட்டு - முதல்வர் பழனிசாமி உரை

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லை.

    இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் சதவீதம் அதிகம் - முதல்வர்

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது - முதல்வர் பழனிசாமி

    பயிர்க்கடன், கூட்டுறவுக் கடன், மின்சாரக் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    18:05 (IST)07 Jun 2020

    கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது - முதல்வர்

    கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது - முதல்வர் பழனிசாமி

    தமிழகத்தில் இதுவரை 6.50 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன - முதல்வர் உரை

    18:02 (IST)07 Jun 2020

    கொரோனா தடுப்பு பணி - முதல்வர் பழனிசாமி உரை

    கொரோனா வைரஸுக்கு எதிராக தமிழக அரசின் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊடகங்கள் மூலம் உரையாற்றுகிறார்.

    16:40 (IST)07 Jun 2020

    கொரோனா பாதிப்பை 20 நிமிடங்களுக்குள் கண்டறிய மலிவு விலை பரிசோதனை - ஐஐடி ஐதராபாத்

    கொரோனா பாதிப்பை 20 நிமிடங்களுக்குள் கண்டறிய மலிவு விலை பரிசோதனை உபகரணத்தை, ஐஐடி ஐதராபாத் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.  இதை எங்கும் எளிதில் எடுத்து சென்று பரிசோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.   

    16:15 (IST)07 Jun 2020

    சுற்றுலா தலம், நினைவுச்சின்னங்கள் நாளை முதல் இயங்கும் - மத்திய அமைச்சர்

    மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா தலம், நினைவுச்சின்னங்கள்  நாளை முதல் இயங்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்தார்.   

    16:02 (IST)07 Jun 2020

    தட்டுப்பாடு இன்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன - காமராஜ்

    தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன: மோட்டா அரசி, நயம் அரிசி இரண்டும் கலந்து கொடுக்கப்படும் . அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி  செய்வதில்  சிக்கல்கள் வராது என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.  

    16:02 (IST)07 Jun 2020

    தட்டுப்பாடு இன்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன - காமராஜ்

    தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன: மோட்டா அரசி, நயம் அரிசி இரண்டும் கலந்து கொடுக்கப்படும் . அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி  செய்வதில்  சிக்கல்கள் வராது என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.  

    15:31 (IST)07 Jun 2020

    கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு

     
     
    கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு
     

    15:28 (IST)07 Jun 2020

    வழிபாட்டுத் தலங்கள் தவிர்த்து உணவகங்கள், வணிக வளாகங்கள் நாளை முதல் திறப்பு

    தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் தவிர்த்து ஊரடங்கால் மூடப்பட்டிருந்த உணவகங்கள், வணிக வளாகங்கள் நாளை முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.   

    15:23 (IST)07 Jun 2020

    உணவக மேலாண்மை (Hotel Management) தேசிய கூட்டு நுழைவுத் தேர்வு (NCHM JEE) ஒத்திவைப்பு- அமைச்சார் அறிவிப்பு

    ஜூன் 22ஆம் தேதி நடப்பதாக இருந்த உணவக மேலாண்மை (Hotel Management) தேசிய கூட்டு நுழைவுத் தேர்வு (NCHM JEE) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.  

    14:55 (IST)07 Jun 2020

    4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழையும் ;  தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    14:46 (IST)07 Jun 2020

    ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அமைச்சர்

    ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். 

    முன்னதாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள கல்லூரிகள் திறப்பது குறித்து

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செயல்பட அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. கல்வி நிறுவனங்கள் மட்டத்தில் பெற்றோர் மற்றும் பிற தரப்பினருடன் ஆலோசனை நடத்துமாறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இதில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில், கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதிப்பது குறித்து ஜூலை 2020-இல் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

     

    14:26 (IST)07 Jun 2020

    ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், 700 இந்தியர்களுடன் மாலேயிலிருந்து இன்று தூத்துக்குடி வந்தது

    சமுத்திர சேது திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், 700 இந்தியர்களுடன் மாலேயிலிருந்து இன்று தூத்துக்குடி வந்தது.

    14:15 (IST)07 Jun 2020

    முதல்வர் பழனிசாமி மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.

    14:13 (IST)07 Jun 2020

    இந்தியாவில் கொரோனா இறப்பு 0.49 பேர் /லட்சம் மக்கள், பாதிப்புகள் 17.32 பேர்/லட்சம் மக்களுக்கு என்ற அளவில் உள்ளது

    பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா இறப்பு 0.49 பேர் /லட்சம் மக்கள், பாதிப்புகள் 17.32 பேர்/லட்சம் மக்களுக்கு என்ற அளவில் உள்ளது. கொரோனா தொற்றுக்குஎதிரான இந்தியாவின் நடவடிக்கை, மக்களின் தகுந்த நடத்தையுடன் கூடிய பங்களிப்புடன் கூட்டு நிர்வாகத்தை காட்டுகிறது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்தது. 

     

    13:35 (IST)07 Jun 2020

    7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா மரணம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 294 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 6941 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தொற்று அதிகம் பாதித்த மோசமான நாடுகளில் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

    13:31 (IST)07 Jun 2020

    சென்னையில் சைக்கிள்ஷேரிங் திட்டம் அமல்

    சென்னையில் பொது போக்குவரத்து செயல்படாத நிலையில் #CycleSharing திட்டத்தை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.





    12:50 (IST)07 Jun 2020

    முதல்வர் பழனிசாமி அறிக்கை

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    publive-image

    publive-image

    12:48 (IST)07 Jun 2020

    5.53 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு

    தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறிய 5.94 லட்சம் பேர், கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 5.53 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.10.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    12:05 (IST)07 Jun 2020

    12 சிறுவர்களுக்கு கொரோனா

    சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 45 சிறுவர்களில் நேற்று 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது வரை 39 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    11:38 (IST)07 Jun 2020

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

    publive-image

    11:18 (IST)07 Jun 2020

    அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    11:07 (IST)07 Jun 2020

    10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 109 அரசு பேருந்துகள் இயக்கம்

    10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பெற்றிட ஏதுவாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 109 அரசு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், மாணவர்கள் ஆசிரியர்கள் தவிர மற்ற பயணிகள் ஏறக்கூடாது என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:49 (IST)07 Jun 2020

    ராயபுரத்தில் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

    சென்னையில் உள்ள 15மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,717 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 5 மண்டலங்களில்  கொரோனா பாதிப்பு தலா 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 1,043 ஆக அதிகரித்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:07 (IST)07 Jun 2020

    ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி

    தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி.50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    09:41 (IST)07 Jun 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:36 (IST)07 Jun 2020

    பெட்ரோல், டீசல் விலை 34 நாட்களுக்கு பிறகு உயர்வு

    சென்னையில் இன்று (ஜூன் 07), 34 நாட்களுக்குப்பின் விலை உயர்ந்து, பெட்ரோல் லிட்டருக்கு 76.07 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 68.74 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    publive-image

    09:25 (IST)07 Jun 2020

    தமிழக அரசு முக்கிய உத்தரவு

    முகக்கவசம் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது. கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

    Tamil nadu news today updates : தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில் மே மாதம் 32.50 கோடி லிட்டர் டீசல்; 22 கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையாகியுள்ளன.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7) துவக்குகிறார்.

    Tamil Nadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment