Advertisment

Tamil News Today : திருச்சியில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.54-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உடனுக்குடன் தமிழக செய்திகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil News Today Live updates: இந்தியாவில் கொரோனாவால் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவில் இருந்து இதுவரை 95,527 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 97,581 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5598 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

 

தமிழகத்தில் திங்கள்கிழமை மேலும் புதிதாக 1,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,000ஐ தாண்டியது. கொரோனா பாதிப்பால், இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று முதல் சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட நோய் கட்டுப்படுத்தப்பட்ட சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற மண்டலங்களில் பொது மக்களின் பொது போக்குவரத்துக்காக பேருந்துகள், ஆட்டோக்கள் தொடங்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog



























Highlights

    21:34 (IST)02 Jun 2020

    தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    திருச்சியில் இருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    21:01 (IST)02 Jun 2020

    முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

    பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது முகக் கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வரின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.

    20:34 (IST)02 Jun 2020

    இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.82 சதவீதம்

    இந்தியாவில் கொரோனா  உயிரிழப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு . சர்வதேச அளவில் 6.13 சதவீதம் என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

    20:10 (IST)02 Jun 2020

    அமமுக மாணவரணி செயலாளர் வெட்டிக்கொலை

    பெரம்பலூர் :மாவட்டம் விளாமுத்தூர் சாலையில் அமமுக மாணவரணி செயலாளரான பாண்டி(22) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

    19:50 (IST)02 Jun 2020

    பிரதமர் மோடி ஆலோசனை

    நிசார்கா புயல், நாளை பிற்பகலில் அலிபாக் - ராய்காட் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புயல் மேலும் வலுவடைந்துள்ளது. இதன்காரணமாக, மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த புயல், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெரும்சேதத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

    19:45 (IST)02 Jun 2020

    இளையராஜாவின் இசை OTT தளம்

    இசை OTT என்னும் பக்கம் மூலமாக ரசிகர்களை சந்திக்க இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 40 வருட இசை வாழ்வு குறித்த அனுபவங்கள், பாடல் உருவான விதம், இசைக்கச்சேரி, நேரலை உரையாடல்கள் என நிறைய தகவல்களை நேரடியாக பகிர்ந்து கொள்ள இசை OTT என்ற தளம் உருவாக்கப்பட்ட உள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். 

    19:27 (IST)02 Jun 2020

    கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1,412ஆக உயர்ந்துள்ளது.

    19:03 (IST)02 Jun 2020

    மதுரையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு அதிகளவு கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மதுரை எல்லீஸ் நகரில் சென்னையில் இருந்து வந்த நபருக்கு ‘கொரோனா’ கண்டறியப்பட்டதால் இன்று அப்பகுதிக்கு மாநகராட்சி பணியாளர்கள் ‘சீல்’ வைத்தனர்.

    18:55 (IST)02 Jun 2020

    மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

    நிசார்கா புயல், நாளை பிற்பகலில் அலிபாக் - ராய்காட் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புயல் மேலும் வலுவடைந்துள்ளது. இதன்காரணமாக, மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    18:49 (IST)02 Jun 2020

    K.N.லட்சுமணன் மறைவு - துணை முதல்வர் இரங்கல்

    முதுபெரும் தலைவர் திரு.K.N.லட்சுமணன் அவர்களின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பாஜக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    18:31 (IST)02 Jun 2020

    சென்னையில் இன்று 12 பேர் பலி

    சென்னையில் 12 பேர் உட்பட தமிழகத்தில் இன்று மேலும் 13 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு..

    தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197ஆக உயர்ந்தது..

    18:22 (IST)02 Jun 2020

    சென்னையில் 16,579

    சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,579 ஆக உயர்வு

    18:09 (IST)02 Jun 2020

    1091 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல்

    * தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது

    * கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்வு

    * சென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனா

    17:53 (IST)02 Jun 2020

    தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து புயலாக வலுபெற்று நாளை மாலை வடக்கு மஹாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

    வெப்பச்சலனம் காரணாமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    17:24 (IST)02 Jun 2020

    முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

    தமிழக பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

    கே.என்.லட்சுமணன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு - முதலமைச்சர்

    17:20 (IST)02 Jun 2020

    ஆளுநர் - முதல்வர் பழனிசாமி சந்திப்பு

    ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    * ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு

    16:57 (IST)02 Jun 2020

    இறப்பு விகிதம் குறைவு

    தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு, வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில் தான். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி

    16:49 (IST)02 Jun 2020

    ஒப்பீடு செய்வது தவறானது

    கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது

    * நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

    16:48 (IST)02 Jun 2020

    குணமடைவோர் விகிதம் 48.07

    இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் - சுகாதாரத்துறை

    16:36 (IST)02 Jun 2020

    சென்னையில்தான் அதிகளவில் கொரோனா

    தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது

    * சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது

    - முதல்வர் பழனிசாமி

    16:22 (IST)02 Jun 2020

    புயல் முன்னெச்சரிக்கை - பிரதமர் மோடி அறிவுரை

    அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில், அது பற்றிய கள நிலவரத்தை ஆய்வு செய்ததாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் உருவாகி உள்ள புயல் நிலவரத்தை தொடர்ந்து, அனைவரின் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் சாத்தியமுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

    16:03 (IST)02 Jun 2020

    பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு - விரைவில் தொடங்க தொழில்நுட்ப கல்வி முடிவு

    2020-21 கல்வி ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவை தொடங்க தொழில்நுட் கல்வி இயக்குநரகம் தயாராகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு செய்ய நாற்பது நாட்கள் வரை, மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெறுவதால், அவர்களுக்கு தனியாக நான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நடப்பாண்டு கொரோனா நெருக்கடி காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    15:41 (IST)02 Jun 2020

    ஜெ.பி.நட்டா உத்தரவு

    டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை நியமித்து ஜெ.பி.நட்டா உத்தரவு

    * பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயராவார்

    15:40 (IST)02 Jun 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    சென்னை ஐ.ஐ.டி-யில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை அறிவிக்க கோரிய வழக்கு

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உயர் கல்வி செயலாளர், சென்னை ஐஐடியின் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    15:39 (IST)02 Jun 2020

    ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்

    * தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    * மாணவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் மனுவில் கோரிக்கை

    15:39 (IST)02 Jun 2020

    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு ராணி ராம்பால் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    15:04 (IST)02 Jun 2020

    நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்?

    நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    "விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், முரண்பாடு ஏன்?"

    தமிழக அரசு நாளை பதிலளிக்க உத்தரவு

    14:53 (IST)02 Jun 2020

    அரபிக் கடலில் உருவானது ’நிசர்கா’ புயல்

    அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது.

    நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் சில பகுதிகள் (மும்பை, பால்கர், தானே, ராய்காட்), கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    14:47 (IST)02 Jun 2020

    வழிகாட்டுதல் நெறிமுறைகள்

    விமானங்கள் இயக்கப்படுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    14:42 (IST)02 Jun 2020

    சிறுமி நரபலி

    புதுக்கோட்டை சிறுமி நரபலி விவகாரத்தில் கைதான பன்னீரின் 2வது மனைவியும் மர்ம மரணம்

    * கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னீரின் 2வது மனைவி மூக்காயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்; சிறுமி நரபலிக்கு மூக்காயியும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தகவல்

    14:24 (IST)02 Jun 2020

    49 பேருந்துகள் ஏற்பாடு

    10,11ஆம் வகுப்பு படிக்கும் சிறப்பு மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல 49 பேருந்துகள் ஏற்பாடு

    - தமிழக அரசு

    14:04 (IST)02 Jun 2020

    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நாளை அறிவிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டணம் நாளை அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    13:40 (IST)02 Jun 2020

    திருப்பதியில் ஜூன் 8-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி

    திருபதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 8-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக ஜூன் 8-ம் தேதி உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

    13:20 (IST)02 Jun 2020

    தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு; மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதல்வர் பேட்டி

    கொரோனா தடுப்பு பற்றி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி அலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 23,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56% பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.80% ஆக உள்ளது. அதனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று கூறினார்.

    13:18 (IST)02 Jun 2020

    தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.80%; மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதல்வர் பேட்டி

    கொரோனா தடுப்பு பற்றி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி அலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 15 மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கினார்கள். சில மண்டலங்களில் தொற்று அதிகம் இருப்பதற்கான காரணங்களை அதிகாரிகள் விளக்கினார்கள்.” என்று கூறினார்.

    12:53 (IST)02 Jun 2020

    நளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் 2 பேரும் உறவினர்களுடன் பேச அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு உரிய பதிலை நாளை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணையின்போது நளினி, முருகன் இந்தியாவில் உள்ள அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உடன் தொலைபேசியில் பேச அனுமதி உண்டு. ஆனால், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது பற்றி முடிவெடுக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    12:39 (IST)02 Jun 2020

    ஆளுநரை இன்று மாலை நேரில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

    தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் விளக்க உள்ளார்.

    12:26 (IST)02 Jun 2020

    கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி கொண்டாட வேண்டும் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் கருணாநிதி பிறந்த நாளை ஆடம்பரம் இல்லாமல் கொண்டாட வேண்டும். கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம். அவரவர் இடங்களிலேயே சமூக ஒழுங்கை கடைப்பிடித்து கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    12:23 (IST)02 Jun 2020

    வளர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்ப 5 பண்புகள் தேவை - பிரதமர் மோடி உரை

    சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி “சுயசார்பு இந்தியாவை நனவாக்கி நமது வளர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்ப, நமக்கு 5 பண்புகள் தேவை. அவை: நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, கட்டமைப்பு, புதுமை ஆகியவை” என்று கூறினார்.

    12:19 (IST)02 Jun 2020

    நாம் வளர்ச்சியை மீண்டும் பெறுவது நிச்சயம் - சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

    சிஐஐ ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாம் வளர்ச்சியை மீண்டும் பெறுவது நிச்சயம் என்றார்.

    #Unlock1 மூலம் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளை நாம் திறந்துள்ளோம். நமது நாட்டின் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

    11:52 (IST)02 Jun 2020

    திருச்சியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

    திருச்சியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் திருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

    11:28 (IST)02 Jun 2020

    வேளாண் விளைபொருள்கள் விற்பனை; அவசரச் சட்டம் பிறப்பிப்பு

    தமிழ்நாடு வேளான் விளைபொருள்கள் விற்பனை சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் சட்டத் திருத்தத்தை தமிழக முதல்வர் பழனிசாமி பரிந்துரையின் பேரில் ஆளுஎஅர் பன்வாரிலால் புரோஹித் அவசரச் சட்டத்தை பிறப்பித்தார்.

    1987-ம் ஆண்டு சட்டத்தில் சீர்ட்திருத்தங்களை மேற்கொள்ள விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    11:12 (IST)02 Jun 2020

    சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்போம்

    சிஐஐ ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி: கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். விவசாயம், சுயதொழில் செய்வொர், தொழில் முனைவோர் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் மீளும் என்று கூறினார்.

    11:08 (IST)02 Jun 2020

    தமிழகத்தில் குட்காவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு

    தமிழகத்தில் குட்கா, பான் மசலா மற்றும் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான தடையை தமிழக அரசு ஓராண்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், குட்கா, பான் மசலா மற்றும் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சேமித்து வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    11:06 (IST)02 Jun 2020

    வெடிகுண்டு மிரட்டல் - முதல்வர் பழனிசாமி விட்டில் சோதனை

    வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி விட்டில் சோதனை, அபிராமபுரம் காவல் நிலைய போலீசா வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வெடி குண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    10:42 (IST)02 Jun 2020

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் - தமிழக அரசு

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டயமாக உட்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    10:40 (IST)02 Jun 2020

    தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தலமைச்செயலக பணியாளர்களை 50 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    10:36 (IST)02 Jun 2020

    13 வயது சிறுமி படுகொலை வழக்கில் தந்தை கைது

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் 13 வயது சிறுமி படுகொலை வழக்கில் சிறுமியின் தந்தை பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் மந்திரவாதி பேச்சைக் கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மந்திரவாதி பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    10:09 (IST)02 Jun 2020

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,935 ஆக உயர்வு - மாநகராட்சி

    சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் கோடம்பாக்கம் 1,867, திருவிக நகர் 1,651, திருவொற்றியூர் 534, மணலி 222, மாதவரம் 378, தண்டையார்பேட்டையில் 1,839 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகரட்சி மண்டலவாரியாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

    09:58 (IST)02 Jun 2020

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வு மையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதா..? சானிடைசர் உள்ளதா...? எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    09:56 (IST)02 Jun 2020

    வருவாய், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், வனத்துறை திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

    வருவாய், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

    09:54 (IST)02 Jun 2020

    சலூன் கடைகள் அழகு நிலையங்களில் ஆதார் அட்டை கட்டாயம் - தமிழக அரசு

    கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் தொடர்பு தடம் அறிவதை எளிதாக்கவும் தமிழகத்தில் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் அடையாள அட்டை மற்றும் சுய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Corona Coronavirus India Corona Virus Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment