Tamil News Today: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,31,673ஆக உயர்வுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம், கொரோனாவைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,25,273ஆக உயர்ந்துள்ளது.
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,28,210ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை பொருத்தவரையில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 21,16,922ஆக உயர்ந்துள்ளது வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,825ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பில், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை,'' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால், அரசு மருத்துவமனையில் இறப்போரின் எண்ணிக்கை, அரசுக்கு தெரியும். தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் தகவல்களையும் ஒருங்கிணைத்து, அறிவிக்கப்படுகிறது. இதில், எதையும் மறைக்க முடியாது.கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தால், அது அனைவருக்கும் தெரிந்து விடும். இதை மறைப்பதால், அரசுக்கு எந்த நன்மையும் இல்லை. தினமும் சுகாதாரத் துறை மூலம், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோரின் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனாவை எதிர்த்து, உலக நாடுகள் போராடி வருகின்றன; இந்தியாவும் போராடு கிறது. கொரோனா நெருக்கடிக்கு இடையே, நாம் மேலும் பல பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறோம். புயல், கனமழை, வெள்ளம், வெட்டுக்கிளி, எண்ணெய் கிணற்றில் தீ, நில அதிர்வு போன்ற பிரச்னைகளையும், நாம் எதிர்கொண்டு வருகிறோம். இது போன்ற பேரிடர்களை, வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம், நமக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.கொரோனாவால் நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, திருப்புமுனையாக மாற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மேட்டல் இங்க் நிறுவன தலைவர்களுக்கு, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழல்களை பட்டியலிட்டு, தனித்தனியே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிராவில் இன்று 3,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,717ஆக அதிகரித்தது.
நாளை முதல் இ- பாஸ் இல்லாதவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதரிஷினி தெரிவித்துளளார். தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஏற்கெனவே 25 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும் என்றும் அவர் தெரிவித்தார்.கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சுகாதாரத்துறைக்கு தலைமையேற்ற பின்னர்,
பீலா ராஜேஷ் தனது அயராத உழைப்பால், கொரோனா பேரிடரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கட்டுக்குள் வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு பேரிழப்பு என்றும் அவர குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட முதியவரை சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தடுத்ததால் பரபரப்பு
* 68 வயதான முதியவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு
சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தாவிட்டால் டிசம்பர் மாதத்துக்குள் ஒரு லட்சம் பேர் இறக்க நேரிடும் என திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி எச்சரித்துள்ளார். மறைந்த எம்.எல்.ஏ. அன்பழகனின் உருவப் படத்திற்கு தண்டையார்பேட்டை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகை உள்ளது என கூறிய அவர், ஆரம்பத்திலேயே சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தால், கொரோனா தொற்றை தடுத்திருக்க முடியும் என்றார். அனைவருக்கும் பரிசோதனை செய்யாததால் நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதாக கூறிய கலாநிதி வீராசாமி, தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்பதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஹரியானா மாநிலத்தில் 127 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் அம்மாநில காவல்துறையினர்.
Haryana Police have seized 127 kg 800 grams of ganja (marijuana) and 4800 bottles of banned syrups from Nuh district. Two people arrested and further probe is underway.. pic.twitter.com/rSxOJWxjIT
— ANI (@ANI) June 12, 2020
டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை வெறும் 17 முறைகள் மட்டுமே ஜூன் 12ம் தேதிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டது. 12 ஆண்டுகள் கழித்து தற்போது காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! pic.twitter.com/WJr67eIzTf
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2020
எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2020
சென்னை மிக மிக பேராபத்தை சந்தித்துள்ள நிலையில், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து அதிமுக அரசு மக்களை காக்க வேண்டும். டெண்டர் இறுதி, பா.ஜ. அரசை மகிழ்விக்கும் நேரத்தின் சிறுபகுதியையாவது மக்களுக்காக செலவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் தரப்பட்டுள்ள நிலையில், 10 ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை இன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளஆ.
சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் நெகட்டிவ் என முடிவுகள் வந்த பின்பு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். பரிசோதனை மேற்கொள்வோர் அனைவரும் தனிமைப் படுத்த வேண்டும் என்று நேற்று மாநகராட்சி அறிவித்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன்.சுயநலத்துக்காக பாஜகவில் இணையவில்லை. சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி என்று பாஜகவில் இணைந்த பின்னர் வழக்கறிஞர் பால் கனகராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமது பெயரில் தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அரசின் உத்தரவை மக்கள் மதிக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்து வரும், ஒரு வாரத்தில், மேலும், 10 ஆயிரம் பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights