Advertisment

Tamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் - தனியார் பேருந்துகள் ஓடாது

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today: தமிழகத்தில் ஜூன்.1 முதல் பேருந்துகள் இயக்கம் - தனியார் பேருந்துகள் ஓடாது

Tamil News Today Live updates : தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்குஉத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் மே 30 ம் தேதி, புதிய உச்சமாக ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184 ஆகவும், 160 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:50 (IST)31 May 2020

    இரண்டு ஊழியர்கள் உளவு பார்த்ததாக கைது

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் விசா பிரிவில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் உளவு பார்த்ததாக கைது.

    விரும்பத்தகாத நபர்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

    - வெளியுறவுத்துறை

    22:27 (IST)31 May 2020

    மாநில வாரியாக...

    மாநிலவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு (மே 31)!

    * ஜம்மு காஷ்மீர் - 105

    * உத்தரகண்ட் - 105

    * ஆந்திரா - 98

    * தெலங்கானா - 199

    * கேரளா - 61

    * அசாம் - 56

    * ஜார்க்கண்ட் - 16

    * பஞ்சாப் - 30

    * சட்டீஸ்கர் - 45

    22:26 (IST)31 May 2020

    இன்றைய கொரோனா பாதிப்பு

    மாநிலவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு (மே 31)!

    * மகாராஷ்டிரா - 2,487

    * டெல்லி - 1,295

    * தமிழகம் - 1,149

    * குஜராத் - 438

    * ராஜஸ்தான் - 214

    * மேற்குவங்கம் - 371

    * உ.பி - 262

    * கர்நாடகா - 299

    * ஹரியானா - 168

    * ம.பி - 198

    22:07 (IST)31 May 2020

    1 லட்சம் சானிடைசர்கள் வழங்கிய நடிகர் சல்மான்கான்

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை காவல்துறையினருக்கு 1 லட்சம் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் சானிடைசர்களின் முக்கியத்துவத்தை அறிந்த அவர், FRSH என்ற புதிய பிராண்டினை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போலீசாருக்கு உதவி செய்த சல்மான் கானுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.

    21:55 (IST)31 May 2020

    மாவட்டம் வாரியாக பாதிப்பு

    தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை,

    21:40 (IST)31 May 2020

    2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 67,655 ஆக அதிகரிப்பு

    - மாநில சுகாதாரத்துறை

    21:19 (IST)31 May 2020

    சுற்றுலாப்பயணிகள் வர தடை

    'நீலகிரிக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடைவிதிப்பு'

    எந்தவொரு மாவட்டங்களில் இருந்தும் நீலகிரிக்கு சுற்றுலாப்பயணிகள் வர அனுமதி இல்லை

    - மாவட்ட ஆட்சியர்

    21:19 (IST)31 May 2020

    நாளை பேருந்துகள் இயங்காது

    'குமரியில் நாளை பேருந்துகள் இயங்காது'

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது

    - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    * பேருந்துகள் இயங்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும்

    20:55 (IST)31 May 2020

    ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

    கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

    * சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை

    * பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை தேடும் போலீசார்

    20:43 (IST)31 May 2020

    காய்கறி சந்தைகள் இடமாற்றம்

    திருச்சியில் நாளை முதல் பேருந்து சேவை தொடங்குவதால் தற்காலிக காய்கறி சந்தைகள் இடமாற்றம்

    - மாவட்ட ஆட்சியர் சிவராசு

    20:43 (IST)31 May 2020

    சமூக இடைவெளியுடன் சாப்பிட அனுமதி

    புதுச்சேரியில் ஜூன்.08 முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி; உணவகங்களில் சமூக இடைவெளியுடன் சாப்பிட அனுமதி

    புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்

    - முதல்வர் நாராயணசாமி

    20:16 (IST)31 May 2020

    பேருந்து சேவை இயக்கம்

    'தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து சேவை இயக்கம்'

    அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்

    - போக்குவரத்துத்துறை

    * தமிழகத்தில் அரசு பேருந்து சேவை நாளை முதல் தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

    20:16 (IST)31 May 2020

    அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    ’பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5,000-ம் என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும்’

    - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    19:33 (IST)31 May 2020

    664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    கரூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள், கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

    19:16 (IST)31 May 2020

    தனியார் பேருந்துகள் நாளை ஓடாது

    நாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. 60 சதவீத பயணிகளுடன் இயங்குவது சாத்தியம் இல்லை என்று அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பேருந்துகள் இயங்கும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

    18:50 (IST)31 May 2020

    மொத்த பரிசோதனைகள் - 4,91,962

    தமிழக கொரோனா நிலவரம்!

    * மொத்த பாதிப்பு - 22,333

    * சிகிச்சையில் உள்ளவர்கள் - 9,400

    * குணமடைந்தவர்கள் - 12,757

    * உயிரிழப்பு - 173

    * மொத்த பரிசோதனைகள் - 4,91,962

    * இன்றைய பரிசோதனைகள் - 12,807

    18:49 (IST)31 May 2020

    13 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு; மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்தது!

    18:39 (IST)31 May 2020

    இன்று புதிய உச்சம்

    தமிழகம் - கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்!

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333ஆக உயர்வு!

    18:20 (IST)31 May 2020

    299 பேருக்கு கொரோனா

    'கர்நாடகாவில் ஒரே நாளில் 299 பேருக்கு கொரோனா'

    கர்நாடகாவில் மேலும் 299 பேருக்கு கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 2 பேர் உயிரிழப்பு

    - மாநில சுகாதாரத்துறை

    * கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,221 ஆக அதிகரிப்பு; இதுவரை 51 பேர் உயிரிழப்பு

    18:13 (IST)31 May 2020

    1,295 பேருக்கு கொரோனா

    'டெல்லியில் மேலும் 1,295 பேருக்கு கொரோனா'

    டெல்லியில் ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு

    - மாநில சுகாதாரத்துறை

    18:12 (IST)31 May 2020

    38 பேர் டிஸ்சார்ஜ்

    ’நெல்லையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து 38 பேர் டிஸ்சார்ஜ்’

    நெல்லை: பாளையங்கோட்டையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 38 பேர் டிஸ்சார்ஜ்

    18:06 (IST)31 May 2020

    உத்தராகண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா

    உத்தராகண்ட் மாநிலத்தில் அமைச்சர், அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் உட்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:57 (IST)31 May 2020

    தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

    தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்,காவல் நிலையத்தில் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அங்கு அவரது உயிர் சிறிது நேரத்தில் பிரிந்தது.

    17:30 (IST)31 May 2020

    மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக காணொலி காட்சி மூலம் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    * கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாக தகவல்

    17:23 (IST)31 May 2020

    பொதுமுடக்கம் நீட்டிப்பு

    'மகாராஷ்டிராவில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!'

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு

    17:22 (IST)31 May 2020

    ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடக்கம்

    'மதுரையில் பேருந்துகளின் இருக்கைகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடக்கம்'

    முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி

    * நாளை முதல் மதுரையில் 400 பேருந்துகளை இயக்கவுள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சானிடைசர் வழங்க ஏற்பாடு

    17:01 (IST)31 May 2020

    இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்

    உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் . 2019 20 ஆம் ஆண்டு ஆண்டிற்கு விராட்கோலி 196 கோடி ரூபாய் வருமானம் எட்டியுள்ளார். இதன்மூலம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற்றுள்ளார் .கடந்த ஆண்டு பட்டியலில் விராட் கோலி 100 இடத்தில் இருந்த நிலையில் தற்போது 66 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    17:00 (IST)31 May 2020

    90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும்

    நோய்த்தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவர்

    ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும்

    பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்

    - தெற்கு ரயில்வே

    16:57 (IST)31 May 2020

    மே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம்

    மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் கிரிக்கெட் முடங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலை ஆறு மாதத்திற்கு தொடரும் என்றும் வீரர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

    16:43 (IST)31 May 2020

    இ-பாஸ் கட்டாயம்

    ‘ரயில்களில் பயணிக்கவும் இ-பாஸ் கட்டாயம்’

    மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ-பாஸ் பெறுவது கட்டாயம்

    தமிழகத்தில் நாளை 4 வழித்தடங்களிலும் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

    - தெற்கு ரயில்வே

    16:43 (IST)31 May 2020

    43 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

    கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்தமானில் சிக்கித்தவித்த 43 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 161 தொழிலாளர்கள், 43 மீனவர்கள் கப்பலில் சென்னை வருகை

    தமிழகம் திரும்பிய மீனவர்கள்,தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

    16:42 (IST)31 May 2020

    வசதிகள் செய்து தர ஏற்பாடு

    கோவாவில் சுமார் 250 மீனவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் போன்ற வசதிகள் செய்து தர ஏற்பாடு

    ஈரான், இதர வெளிநாடுகளிலுள்ள மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை

    - அமைச்சர் ஜெயக்குமார்

    16:24 (IST)31 May 2020

    1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை

    'கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை'

    தென் கொரியாவிலிருந்து கொரோனா பரிசோதனைக்காக மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன

    - தமிழக சுகாதாரத்துறை

    16:12 (IST)31 May 2020

    ஆம்பூர், வாணியம்பாடியில் மழை

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை

    தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை

    16:10 (IST)31 May 2020

    ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா

    'திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா'

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு

    * சென்னையிலிருந்து வந்த 23 பேர் உள்பட இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

    15:57 (IST)31 May 2020

    அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்தவரை கொன்ற போலீஸ் - மனைவி விவாகரத்து நோட்டீஸ்

    அமெரிக்காவின் மினஸ்சோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த திங்களன்று நடந்து சென்ற கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த 4 காவல்துறையினர், பொது இடத்தில் கருப்பினத்தவரின் கழுத்தின் மீது தங்களது கால்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் அதிகாரிக்கு, அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கணவரின் செயலால் வேதனை அடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக தனது வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    15:36 (IST)31 May 2020

    மீன் பிடிக்க போகப்போவதில்லை

    மீன் பிடிக்க போகப்போவதில்லை - கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு

    * இன்று நள்ளிரவுடன் மீன் பிடி தடைக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் மீனவர்கள் அறிவிப்பு

    15:35 (IST)31 May 2020

    சூரரைப் போற்று திரையரங்கில் தான் முதலில் வெளியாகும் - நடிகர் சூர்யா

    சூரரைப் போற்று திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் முதலில் வெளிவரும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் சூரரை போற்று தமது மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று என குறிப்பிட்டார். திரையரங்கில் படத்தை பார்க்கும் அனுபவம் போல் வேறு எதிலும் கிடைக்காது என்று சுட்டிக்காட்டிய சூர்யா,தமது படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியான பின்பு தான், OTT தளத்தில் வெளியாகும் என்று உறுதியளித்தார்.

    15:18 (IST)31 May 2020

    ஆந்திர அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம்

    கொரோனா தொற்று பரவலை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு நடைபெறக் கூடிய ஆறுகால பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் மாநில அரசு உத்தரவுக்காக திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாகவும், உத்தரவு வந்த உடன் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்க தேவையபன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 முதல் 8 அடி தூரம் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக, கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும், திருமலையில் வரிசையில் செல்லும் பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    15:15 (IST)31 May 2020

    இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு எனவும் மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. மேலும் 10 லட்சம் பேரில் 50 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆண்கள் 41 பேரும், பெண்கள் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

    15:14 (IST)31 May 2020

    சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் - பாரதிராஜா

    சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதை போல சினிமா பட‌பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடித‌த்தை, படிப்படியாக அன்றாட வாழ்வை மீட்டுகொண்டிருக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகளுடன் தொடங்கியுள்ளார். விதிகள் தளர்த்தி சின்னத்திரை பட‌ப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கடித‌த்தில் கூறியுள்ள பாரதிராஜா, சினிமா முடங்கி போய் கிடப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் திணறி வருகின்றனர், பலர் உணவுக்கே வழியின்றி சிரம படுகின்றனர், முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்டமுடியாமல் திகைக்கின்றனர் என்பது இயக்குநர் பாரதிராஜா எழுதிய கடித‌த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சினிமா படபிடிப்பிற்கும், அனுமதி அளிக்குமாறு கோரியுள்ள பாரதி ராஜா, அரசு வரையறுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம் எனவும் உறுதி அளித்துள்ளார்.

    15:13 (IST)31 May 2020

    தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நிவாரண உதவி

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஆலந்தூர் தர்மராஜா கோவில் தெருவில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பத்தாயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    14:26 (IST)31 May 2020

    சென்னையில் குடிசைப் பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை

    சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்படும்.  அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    14:11 (IST)31 May 2020

    கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திய பெண்ணை சிசிடிவி காட்சி உதவியுடன்  போலீசார் கைது செய்தனர்.

    13:36 (IST)31 May 2020

    யாருக்கு கொரோனா பரிசோதனை

    வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம் * பரிசோதனையில் தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

    13:35 (IST)31 May 2020

    இ-பாஸ் யார் அவசியம் எடுக்க வேண்டும்

    மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

    சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அலுவல் ரீதியாக சென்று 48 மணி நேரத்தில் திரும்பும் நபருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை

    வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    12:52 (IST)31 May 2020

    அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

    நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு எடுக்கப்பட உள்ளது.

    12:50 (IST)31 May 2020

    குழியில் தவறி விழுந்து சிறுவன் மரணம்

    வாணியம்பாடியில் நகராட்சி சார்பில் தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் தேங்கியதில், 7 அடி ஆழமுள்ள குழியில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் ஹரீஷ் உயிரிழந்துள்ளான்.

    12:40 (IST)31 May 2020

    ஜி 7 நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு

    கொரோனா ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளளதாக கூறப்பட்டது . இந்த நிலையில் ஜூன் மாதம் 10ம் தேதி நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

    12:12 (IST)31 May 2020

    மதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு

    மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

    12:00 (IST)31 May 2020

    வெட்டுக்கிளி தாக்குதலை தடுக்க புதிய உத்திகள்

    வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளி பிரச்னை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    11:44 (IST)31 May 2020

    கொரோனா போர் நீண்ட காலம் நீடிக்கும் வாய்ப்பு

    கொரோனாவிற்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்திக்கு யோகா முக்கியமானது. யோகா செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    11:35 (IST)31 May 2020

    மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு

    கொரோனா காலத்தில், உயிரிழப்புகள் குறைந்ததற்கும் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கும் மருத்துவ பணியாளர்கள் ஆற்றிய பணியை பிரதமர் மோடி  பாராட்டி உள்ளார்.

    11:20 (IST)31 May 2020

    மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

    கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    10:57 (IST)31 May 2020

    திமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது - பாஜக தலைவர் எல்.முருகன்

    திமுக கட்சி, சமூகநீதியை குடிதோண்டி புதைத்துள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

    சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முருகன் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடு பகுதிகளை தவிர்த்து, பிற பகுதிகளில் கோவில்கள் திறக்க அனுமதிக்க வேண்டுமென அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    10:45 (IST)31 May 2020

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

    publive-image

    10:34 (IST)31 May 2020

    1,82,143 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,82,143 ஆக அதிகரித்துள்ளது.

    10:13 (IST)31 May 2020

    தமிழகத்தில் பொது போக்குவரத்து - 8 மண்டலங்களாக பிரிப்பு

    தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    10:04 (IST)31 May 2020

    5 ஆயிரத்தை கடந்தது

    இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 193 பேர் மரணமடைந்துள்ள நிலையில், தேசிய அளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்துள்ளது.

    09:59 (IST)31 May 2020

    தூய்மை பணியாளருக்கு மதிப்பூதியம் - அரசு அறிவிப்பு

    சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் சிறப்பினமாக 2500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    publive-image

    09:41 (IST)31 May 2020

    சுற்றுலாத்தளங்கள். ஓட்டல்களுக்கு தடை தாெடரும்

    நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை தொடர்கிறது.  ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது

    09:40 (IST)31 May 2020

    வழிபாட்டுத்தலங்கள் திறப்பு எப்போது?

    தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.

    09:39 (IST)31 May 2020

    அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்

    டீ கடைகளில் அமர்ந்து டீ அருந்தவும் தமிழக அரசு அனுமதி

    சென்னையில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி. 

    முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களை திறக்க அனுமதி

    உணவங்களில் தனிமனித இடைவெளியோடு அமர்ந்து உணவு உண்ண  அனுமதி

    09:31 (IST)31 May 2020

    நாளைமுதல் (ஜூன் 1ம் தேதி) பஸ்கள் ஓடும்

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் 60 சதவீத பயணிளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Tamil nadu news today updates : நாட்டின் நிதிப் பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில், 4.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், 2018 - 19ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.6 சதவீதமாக நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதற்கு முன், கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில் தான் நிதிப் பற்றாக்குறை, 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.

    ஐ.நா. அமைதிப்படையில் சிறப்பாக பணியாற்றிய இந்திய பெண் ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

    Tamil Nadu Corona Virus Narendra Modi Edappadi K Palaniswami Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment