உத்தவ் தாக்கரே முதல்வராக நாளை பதவியேற்பு: மோடியை சந்திப்பேன் என அறிவிப்பு

முதல்வர் பதவி பிரமாண விழாவில் அமித் ஷா உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள தான் விரும்புவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

முதல்வர் பதவி பிரமாண விழாவில் அமித் ஷா உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள தான் விரும்புவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maharashtra Political Power Shiv Sena can't return to full blooded Hindutva

Maharastra Government Formation - uddhav thackeray

Flash News in Tamilnadu Today Updates:  மகாராஷ்ட்ராவின் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார் தேவேந்திர ஃபட்னாவிஸ். இதனையடுத்து, சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.மேலும், இந்த கூட்டணி கட்சி ஒரு மனதாக உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளாராக தேர்ந்தெடுத்தனர். நாளை உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில், அமித் ஷா உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள தான் விரும்புவதாகவும் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisment

மகாராஷ்டிரா உச்சநீதிமன்ற வழக்கு லைவ் அப்டேட்ஸ் ஆங்கிலத்தில் -  Maharashtra political crisis LIVE updates   

 சார்க்கண்ட் தேர்தல் களம் எப்படி - இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ : 

Advertisment
Advertisements

 

தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவாட்டம் நேற்று உதயமானது.  ஜனவரி 8ம் நாள், தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி, சட்டமன்ற பேரவையில், தமிழகத்தின் புது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தார். இந்த மாவட்டம் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை,திருக்கோயிலூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் , கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியையும் உள்ளடைக்கியது.

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    21:41 (IST)26 Nov 2019

    ஃபட்னாவிஸ்ஸின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார் - உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் சிவசேனா- என்.சி.பி- காங்கிரஸ் முன்னணியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: தேவேந்திர ஃபட்னாவிஸ் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார். உண்மையான ஜனநாயகம் இப்போது நடந்துள்ளது; அனைவரும் இணைந்து விவசாயிகளின் துயரை துடைப்போம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம் என்று கூறினார்.

    20:30 (IST)26 Nov 2019

    சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம் - உத்தவ் தாக்கரே

    சிவசேனா தலைவரும், 'மகா விகாஸ் அகாதி' முதலமைச்சர் வேட்பாளருமான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவை மகராஜா சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.

    20:29 (IST)26 Nov 2019

    உத்தவ் தாக்கரேவை முதல்வராக நியமித்து எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றம்

    மகாராஷ்டிராவில், சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் முன்னணி உத்தவ் தாக்கரேவை முதல்வராக நியமித்து எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

    18:46 (IST)26 Nov 2019

    நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது மகாராஷ்டிர சட்டப்பேரவை

    மாகாராஷ்டிரா சட்டப்பேரவை நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது. அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு நாளை காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர்.

    18:01 (IST)26 Nov 2019

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

    மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பு தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவது உறுதியானது. இதனிடையே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார்.

    17:30 (IST)26 Nov 2019

    நித்தியானந்தாவுக்கு குஜராத் நீதிமன்றம் உத்தரவு

    நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் இரண்டு சிஷ்யைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா தொடர்ந்த் வழக்கில் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது நீதிமன்றம்.

    17:22 (IST)26 Nov 2019

    இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

    பாஜக எம்.எல்.ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.

    17:18 (IST)26 Nov 2019

    முதல்வராக செயல்படுவார் உத்தவ் தாக்கரே

    சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக செயல்படுவார். காங்கிரஸ் கட்சியின் பாலா சாஹேப், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டில் ஆகியோர் துணை முதல்வர்களாக செயல்படுவார்கள் என அறிவிப்பு.

    17:16 (IST)26 Nov 2019

    14 கிலோ சுறா மீன் துடுப்புகள்

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    16:28 (IST)26 Nov 2019

    ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு அரசாணை

    மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசுப் பள்ளிகளில் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு அரசாணை வெளியிட்டிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.

    16:17 (IST)26 Nov 2019

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது

    மகாராஷ்ட்ராவின் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார் தேவேந்திர ஃபட்னாவிஸ். இதனைத் தொடர்ந்து நாளை மகாராஷ்ட்ராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது. ஆளுநர் சிவசேனா கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கும் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மகாராஷ்ட்ராவில் எதிர்கட்சியாக பாஜக கூட்டணி செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    15:49 (IST)26 Nov 2019

    சிவசேனா எங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்

    எங்களுடன் சிவசேனா இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அவர்கள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முயற்சிக்கவில்லை. மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை மட்டுமே வழங்கியுள்ளனர். சிவசேனா கூறுவது போல் நாங்கள் அவர்களுக்கு எந்த விதமான வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என்றும் ஃபட்னாவிஸ் பேச்சு.

    15:43 (IST)26 Nov 2019

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்

    அஜித் பவாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார். 

    15:42 (IST)26 Nov 2019

    மகாராஷ்ட்ராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே

    துணை முதல்வர் பதவியில் இருந்து விலகி அஜித் பவார் தற்போது எங்களுடன் தான் இருக்கிறார் என சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி. 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்ட்ராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்றும் நம்பிக்கை.

    15:06 (IST)26 Nov 2019

    ராஜினாமா குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது - ஜெயந்த் பாட்டில்

    அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவும் என்.சி.பி கட்சியின் சட்டமன்ற தலைவராக ஜெயந்த் பாட்டில் நியமிக்கப்பட்டார். அஜித் பவாரின் ராஜினாமா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. முழுமையான தகவல்கள் எனக்கு கிடைத்த பிறகு தான் நான் இது குறித்து கருத்து தெரிவிக்க இயலும் என்று அவர் கூறியுள்ளார்.

    15:03 (IST)26 Nov 2019

    பொங்கல் பண்டிகைக்கு ரூ. 1000 வழங்கப்படும்

    தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி அரிசி மட்டும் வாங்கும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

    14:38 (IST)26 Nov 2019

    துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அஜீத் பவார்

    நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் துணை முதல்வர் அஜீத் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து பேசினார். தற்போது அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 03:30 மணி அளவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

    14:18 (IST)26 Nov 2019

    நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும் - ராம் தேவ்

    பாஜகவின் ராம் தேவ் தற்போது மகாராஷ்ட்ரா விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் நட்சத்திர விடுதி அல்ல. சட்டமன்றத்தில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று கூறீயுள்ளார்.

    14:18 (IST)26 Nov 2019

    கூட்டணியின் தலைவரை தேர்வு செய்கிறது சிவசேனா

    சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியின் தலைவரை இன்று மாலை 5 மணிக்கு தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை மும்பையில் இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.

    12:37 (IST)26 Nov 2019

    பெரும்பான்மையை நிரூபிப்போம் - பாஜக தலைவர் ராவ் சாஹேப் டான்வே

    பாஜக தலைவர் ராவ் சாஹேப் டான்வே செய்தயாளர்களிடம்,  நாளை நாங்கள் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார்.  மேலும், அவர்  அனைத்து மகாராஷ்டிரா  பாஜக சட்டமன்ற உருப்பினர்களும் இன்று இரவு 9 மணிக்கு   மும்பையில் உள்ள கார்வேர் கிளப்பில் சந்தித்து நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதிப்பார்கள் என்றும் கூறினார். 

    12:33 (IST)26 Nov 2019

    நாளை வாக்கெடுப்பு - மகாராஷ்டிரா சட்டமன்றத்தை சுற்றி பாதுகாப்பு

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மும்பையில் உள்ள விதான் சபாவை சுற்றி  (சட்டமன்றம்) உயர்மட்ட பாதுகாப்பு அளித்துவருவதாக   மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழுக்கு தெரிவித்தார். வளாகத்திற்கு வெளியே எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தவிர்க்க விரிவான போலிஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் , அங்கீகரிக்கப்படாத நபர்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.  

    12:26 (IST)26 Nov 2019

    அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    அரசியலமைப்பு நிர்ண்ய மன்றத்தில் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 70வது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்திய  ஜனாதிபதி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்  கூட்டத்தை கூட்டி சிறப்பு உரையாற்றினார்.  இந்த  ஜனாதிபதி உரையை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக புறக்கணித்தது. மகாராஷ்டிராவில் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் நடத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டு.  

    காங்கிரஸ் கட்சி உறுபினர்கள் அனைவரும், பாராளுமன்றத்தில் இருக்கும்  அம்பேத்கர் சிலையின் முன் நின்று இந்திய அரசியலமைப்பில் இருக்கும் preamble பகுதியை சத்தம் போட்டு வாசித்தனர். 

    publive-image    

    publive-image

    11:07 (IST)26 Nov 2019

    சத்தியம் வெற்றியடைந்துவிட்டது - நவாப் மாலிக்

    உச்சநீதிமன்றம் நாளை மாலை ஐந்து மணிக்குள் மகாராஷ்டிரா சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தது.  இந்த தீர்ப்பை வரவேற்று  ட்விட்டரில் கருத்து தெரிவித்த , தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நவாப் மாலிக், சத்தியம் வெற்றியடைந்துவிட்டது, பாஜக வின் ஆட்டம்  முடிந்து விட்டது என்று தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் .           

    10:46 (IST)26 Nov 2019

    நாளை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

    மகாராஷ்டிரா சட்டபேரவையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்  என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாளை மாலை ஐந்து மணிக்குள் இந்த வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவேண்டும். சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் லைவ் டெலிகாஸ்ட்  செய்யப்பட  வேண்டும்  

    10:39 (IST)26 Nov 2019

    தீர்ப்பு வாசிக்க தொடங்கிய நீதிபதிகள் :

    நீதிபதி என்.வி.ரமணா,  நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக என்சிபி-காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தற்போது வாசித்து வருகிறது.  

    10:34 (IST)26 Nov 2019

    காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத்  தலைவராக பாலாசாகேப் தோரத் நியமிக்கப்படலாம்

    மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத்  தலைவராக பாலாசாகேப் தோரத் நியமிக்கப்படலாம் என்று அறசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
     

    10:32 (IST)26 Nov 2019

    அரசியலமைப்பு நாள் விழாவில் பங்கேற்கமாட்டோம் - காங்கிரஸ்

    இன்று நாடாளுமன்றத்தில்  அரசியலமைப்பு நாள் விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மகாராஷ்ட்ராவில்,  அரசியலமைப்பு  புறக்கணிப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆட்சி ஆதிகாரத்தில் இருப்பவர்கள்    இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.   

    10:16 (IST)26 Nov 2019

    அரசியல் சாசன தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

    அரசியல் சாசன தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நவம்பர் 26, 1949ம் ஆண்டு  அம்பேத்கர் முன்மொழிந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியலமைப்பு நிர்ண்ய மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. எற்றுக்கொள்ளப்பட்ட 70வது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் அரசியல் சாசனத்தில் இருக்கும் preamble பகுதியை மாணவர்கள் ஒன்றாக வாசிக்க வருமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.          

    09:38 (IST)26 Nov 2019

    இடஒதுக்கீடு உறுதி செய்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டும் - உயர்நீதிமன்றத்தில் மனு

    தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மேயர், துணை மேயர், நகாரட்சித் தலைவர் போன்ற பதவிகள் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் எந்த இடஒதுக்கீடு கொள்கையையும் அரசு கடைபிடிப்பதில்லை என்று செ.கு.தமிழரசன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் இடஒத்துக்கீடு உறுதிசெய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும், ஆனால், இதற்கு அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தனது மனுவில் தெரிவத்திருக்கிறார்.

    09:20 (IST)26 Nov 2019

    26/11 துயர சம்பவம் 11வது ஆண்டு நினைவு அஞ்சலி-

    26/11 தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்த  காவல் துறையினருக்கு மகாராஷ்டிரா முதல்வரும், ஆளுநரும்  நினைவு அஞ்சலி செலுத்தினர்.  இது 11 வது நினைவு அஞ்சலியாகும் .

    publive-image

    publive-image

    09:14 (IST)26 Nov 2019

    கனமழை காரணமாக சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை

    கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலைப்பாதை, கனமழையின் காரணமாக மூன்றாவது நாளாக நிறுத்திவைக்கபப்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மகாலிங்கம் கோவிலில், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். 

    09:02 (IST)26 Nov 2019

    டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பு :

    செப்டம்பர் 1 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, நில அளவை, நில பதிவேடுகள் சார் நிலைப்பணி போன்வைகளில் உள்ள 6 ஆயிரத்து 400 காலியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.  குரூப் 4 தேர்வு முடிவுகள் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிகையை 9 ஆயிரத்து 400க அதிகரித்துள்ளது டிஎன்பிஎஸ்சி. இதனால், மேலும் 3 ஆயிரம் தேர்வர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகிவுள்ளது.

    08:48 (IST)26 Nov 2019

    இன்று சபரிமலைக்கு செல்வோம் - திருப்தி தேசாய்

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் தற்போது கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். மாநில அரசு பாதுகாப்பு  கொடுத்தாலும் சரி, கொடுகாவிட்டாலும் சரி , எங்களது பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நாளான இன்று நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். எங்களைத்  தடுக்க மாநில அரசாலும், காவல் துறையினராலும் முடியாது என்றும் தெரிவித்தார்.              

    07:58 (IST)26 Nov 2019

    இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்:

    தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. இதன் தொடக்க விழாவில் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

           

    Tamil Nadu news today updates : தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் பைப் தண்ணீரின் தரம் மிகவும் மோசமாகி வருவதாக Bureau of indian Standards ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை டெல்லி ஜல் வாரியம் (டி.ஜே.பி) சோதனை செய்த 1.5 லட்சம் நீர் மாதிரிகளில் 98.5 சதவீதம் பாதுகாப்பானது என்று கெஜ்ரிவால் அரசு கூறியது . BIS அறிக்கையும் கேள்வி கேட்டது டெல்லி அரசு. இந்நிலையில், உச்சநீதிமன்றம் இந்த விசயத்தை தானாக முன்வந்து உண்மையைக் கண்டறியும் என்று கூறியதோடு, உங்களின் அரசியலை இங்கே கொண்டுவராதீர்கள், டெல்லி நரகமாகி வருகிறது, நரகத்தை விட மோசமாகி வருகிறது என்று கூறியது. மேலும், காற்று, தண்ணீர் போன்றவைகளை மாசுபடுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் மக்களை வேதனை படுத்துவதை விட ஒட்டு மொத்தமாக ஒரே மூச்சாக மக்களின் உயிரைப் பறித்து விடலாமே ?  என்று வினாவையும் எழுப்பியது.

    Tamilnadu

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: