Tamil News Today : தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், 15 நாட்களுக்கு, பஸ் போக்குவரத்து கிடையாது. இம்மாதம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்படும். மற்ற நாட்களில், டீக்கடை, உணவகங்கள் செயல்படும். நோய் பரவல் அதிகம் உள்ள, ஐந்து மாவட்டங்களில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
டிக்டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த மருந்து மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசுத் தரப்பில் மதுரைக் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் செயல்படும்.
வேலூரில் இறைச்சிக் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும்.
துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை ஞாயிறு, செவ்வாய், வியாழன் சனி ஆகிய 4 நாட்கள் மட்டுமே செயல்படும்.
மருந்துகடைகள், பெட்ரோல் பங்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களும் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னயில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து அதிகப்பட்சமாக மதுரை மாவட்டத்தில் 257 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 153 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கும் தேனி மாவட்டத்தில் 75 பேருக்கும் கடலூர் மாவட்டத்தில் 65 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் மாத்திரை வாங்க சென்றவரை தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற விவகாரம்
ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்?
அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
* காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவு
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதியிடம் மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணையை தொடங்கினார்
தலைமைக் காவலர் ரேவதி, சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்
தமக்கு மிரட்டல் வரும் என்று ரேவதி தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் விசாரணை
விசாரணை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதாக தகவல்
கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன
- பிரதமர் மோடி
பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.
கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது;
* இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்
பொதுமுடக்கத்தின் 2ம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது
- பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து காணொலி மூலம் இன்னும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
Watch Live! https://t.co/y44gKCLjLJ
— PMO India (@PMOIndia) June 30, 2020
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு அந்தமான், தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய கர்நாடகா கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அரசின் ஊரடங்கு விதிமுறைப்படி துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஆனால் அவரது இறுதி சடங்கில் அரசின் விதி முறைகளை மீறி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கிராமம் முழுவதும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரே கிராமத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சதர்காட், மிகப் பெரிய நதி துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றுத் துறைமுகம் வழியாக வணிகப்போக்குவரத்து சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் என்ற பகுதியிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு மார்னிங் என்ற படகு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்து. அப்போது படகு சதர்காட்டில் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் உள்ள ஃபராஷ்கஞ்சில் பகுதியை அடைந்த போது எதிரே வந்த மொயூர்-2 என்ற பெயர்கொண்ட படகு 'மார்னிங்' மீது பலாமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மார்னிங் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், டிக் டாக் தடை தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிக் டாக்கை 14 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்து, இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம். கோடிக்கணக்கான பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதனை சார்ந்துள்ளனர். அவர்களில் பலர் முதல் முறை இணைய பயனர்கள். இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து தனியுரிமை தரவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் டிக் டாக் தொடர்ந்து இணங்குகிறது. மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்களின் எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.
தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை தொடங்கும்வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையின் 4 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனாம்பேட்டையில் 2,363 பேர், ராயபுரத்தில் 2,212 பேர், கோடம்பாக்கத்தில் 2,094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை- 4 பேர்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை- 3 பேர்
பலி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை- 9 பேர்
ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் பலி ஆகியுள்ளனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கான அனைத்து, 'ஸ்கிரீனிங்' பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். டாக்டர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனைகளிலோ, கொரோனா தடுப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights