Flash News in Tamilnadu Today Updates: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடைய வில்லை, தேர்தலில் அரசியலமைப்பு ஒதுக்கீட்டுமுறை ஒழுங்காக நடைமுறைபடுத்தவில்லை, எனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தேதியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக எடுத்து விசாரிக்கின்றது. கடந்த டிசம்பர் 2ம் தேதி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டதால் உச்ச்சநீதிமன்றம் இதை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா? - Harinee Chandrasekaran வீடியோ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழக மக்களால் நினைவு கூறப்படுகிறது. அதிமுக கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதுபோன்ற, மேலும் முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின் தொடருங்கள்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகல்களை, அரசு தகவல்களை இங்கே காணலாம்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி 6 ம் தேதி இரவு 7 மணிக்கு துவங்கும். இந்நிலையில் போட்டி நடைபெறும் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இரு அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் போட்டி 8 ம் தேதி திருவனந்தபுரத்திலும் 3 வது இறுதி 20 ஓவர் போட்டி 11 ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டி சென்னையில் வருகிற 15 ம் தேதி நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி
தீர்மானத்தை அனுமதித்தார், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி.
அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு. நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில் சபாநாயகர் அறிவிப்பு. தன் மீதான தீர்மானத்தை செனட் சபையில் எதிர் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு.
காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்களை அமைத்து பலப்படுத்துவதற்காக 'நிர்பயா' நிதியிலிருந்து ரூ.100 கோடியை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
வேலூரில் ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த கிடங்குக்கு மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கான உத்திகல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் இன்று ஒரு கூட்டுக் கூட்டத்தை நடத்தியது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறையில் இந்த சந்திப்பு நடந்தது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10:30க்கு தீர்ப்பு வழங்குகிறது.
#BREAKING உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை காலை 10:30க்கு வழங்குகிறது #LocalBodyElections pic.twitter.com/oWNNMPFQwG
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 5, 2019
வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது . இந்த கூட்டத்தில் வெங்காய விலை உயர்வு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக அமைச்சர்கள் விவாதிக்கின்றனர்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அஸம் கான் கூறுகையில், “வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். வெங்காயம் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் என்ன இருக்கிறது? நம்முடைய ஜெயின் சகோதரர்கள் வெங்காயம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு, இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள் எல்லாமே மிச்சமாகும். ஒரு முறை ஒரு ராணி சொன்னால், அவர்களிடம் ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும் என்றாராம்” என்று கூறினார்.
Azam Khan,Samajwadi Party: Stop eating onions, what is the compulsion to eat it? Our Jain brothers don't eat. Stop eating onions,stop eating garlic, stop eating meat, everything will be saved. A Queen had once said 'if they don't have bread then let them eat cake.' pic.twitter.com/Vvus05GUYl
— ANI (@ANI) December 5, 2019
பாஜக எம்.பி. வீரேந்திர சிங் மாஸ்ட் மக்களவையில் பேசுகையில், தேசத்தையும் ஆட்சியாளர்களையும் இழிவுபடுத்துவதற்காக ஆட்டோமொபைல் துறை மந்தமாகிவிட்டது என்று கூறுகிறார்கள். ஆட்டோமொபைல் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றால், சாலைகளில் ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல்கள் உள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Security tightened in Ayodhya ahead of Babri Masjid demolition anniversary tomorrow. pic.twitter.com/XejRSI3jVS
— ANI UP (@ANINewsUP) December 5, 2019
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா வழக்கு தொடர்பாக அவருடைய தந்தை அப்துல் லத்தீஃப் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்தீஃப்: எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. விசாரணை சரியான முறையில் நடக்க வேண்டும் என வலியுறுத்தினேன். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக அமித்ஷா தெரிவித்தார்.
6 மாதங்களில் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றலாம். கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மெரினாவை சுத்தப்படுத்துவது தொடர்பான இந்த வழ்க்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியுடன் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மக்களவையில் கூறுகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 1,113 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 891 ராணுவ வீரர்கள், 182 விமானப்படை வீரர்கள், 40 கடற்படை வீரர்கள் என தெரிவித்துள்ளார்.
சுடான் தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்த துயரச் செய்தி தனது மனதை உலுக்கியது என்றும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 106 நாட்களில், நான் வலுவாக இருந்தேன், பின்வரும் காரணங்கள் எனக்கு நம்பிக்கை அளித்தது:
- நான் ஆற்றிய அமைச்சர் பணியும் , எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக உள்ளது. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிக நபர்கள் மற்றும் என்னைக் கவனிக்கும் பத்திரிகையாளர்களும் அதை நன்கு அறிவார்கள்.
- என் குடும்பம் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கை .
- நீதிமன்றங்கள் இறுதியில் நீதியை வழங்கும் என்று எங்களுக்குள் இருந்த நம்பிக்கை .
உச்சநீதிமன்றத்தின் நேற்று தெளிவான மற்றும் விரிவான உத்தரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். குற்றவியல் சட்டத்தைப் பற்றிய நமது புரிதலிலும், குற்றவியல் சட்டங்களை நமது நீதிமன்றங்கள் நிர்வகிக்கப்பட்ட விதத்திலும் உள்ள துரதிர்ஷ்டவசமான தூசுகளையும் நேற்றைய உத்தரவு தெளிவுபடுத்தியிருக்கிறது.
நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து நான் ஒருபோதும் கருத்துத் தெரிவிக்கவில்லை, அந்தக் கொள்கையை நான் தொடர்ந்து கடைப்பிடிப்பேன். இந்த வழக்கில் உங்களது சாத்தியமான பல கேள்விகளுக்கு, நேற்று உச்சரிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவில் பதில்களைக் காணலாம்.
நேற்று இரவு திகார் ஜெயிலில் இருந்து ஜாமீன் பெற்று வெளிவந்த ப.சிதம்பரம் இன்று காலை 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது,
நான் கடைசியாக உங்களுடன் பேசிய 106 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேற்று இரவு 8 மணியளவில் நான் வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்தபோது, எனது முதல் சிந்தனையும் பிரார்த்தனையும் ஆகஸ்ட் 4, 2019 முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 75 லட்சம் மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டதை பற்றியதாய் இருந்தது.
குறிப்பாக , எந்த தவறும் இல்லாமல் காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் . சுதந்திரம் பிரிக்க முடியாத ஒரு கருத்தாகும்: நம்முடைய சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், அவர்களின் ( காஷ்மீர் மக்களின் ) சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. சாட்சியங்களை கலைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது, வழக்கு தொடர்பாக பத்திரிகை நேர்காணல்களை அளிக்கக்கூடாது, பகிரங்கமாக வழக்கு தொடர்பான ஆவணங்களை வெளியிடக் கூடாது போன்ற நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights