Flash News in Tamilnadu Today Updates: தன்னை பாலியல் வல்லுறுவு செய்ததாக குற்றம் சாட்டியதால் தீ எரிப்புக்கு உள்ளான உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் நேற்று இரவு 11.40 மணியளவில் மரணம் அடைந்தார் . 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளான இந்த பெண் நேற்று மாரடைப்பால் காலமானார் என்று டெல்லி மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ரே பரேலிக்கு தனது பாலியல் வல்லுறுவு வழக்கிற்காக சென்ற இந்த பெண்ணை ஐந்து பேர் (2 பேர் பாலியல் வழக்கில் நேரடியாக தொடர்பு உடையவர்கள்) வழிமறித்து தாக்கியதோடு மட்டுமல்லாமல் தீ வைத்து எரித்து தப்பியோடிவிட்டது. விமான ஆம்புலன்சில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines :
தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுவிட்டது.
பதிவு செய்யப்பட்டதற்கான ஆணையை தேர்தல் ஆணையம் வருகின்ற திங்கட்கிழமை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திடம் வழங்குகிறது - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்.
திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதாக கூறி கோவையில் தனியார் விடுதியை மூடிய உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..
தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பி உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தார். தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்கு எண்ணிக்கை ஜனவறி 2ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மூலம் திகார் ஜெயிலில் இருந்து வெளிவந்த ப.சிதம்பரம் தற்போது தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாலர்களை சந்தித்த ப.சிதம்பரம், " இந்தியா முழுவதும் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றது , காஷ்மீர் மக்களின் சுதந்திரம் நம்முடைய சுதந்திரமும் ஒன்றுபட்டது என்றும் தெரிவித்தார் .
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க விருக்கிறார். 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படலாம் என்று தெரிய வருகிறது.
உன்னாவ் பாலியல் வல்லுறவால் சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிற்கு நியாயம் கேட்டு, அதே சப்தர்ஜங் மருத்துவமனைக்கு முன்பு ஒரு தாய் தனது மகள் மீது எரியக்கூடிய திரவத்தை ஊற்றி போராடியதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. பின்னர், அந்தப் பெண் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
It is extremely important for women to enter politics, to stand for elections at Panchayat & Vidhan Sabha levels. I tell women they must take power into their hands so they can protect themselves: AICC GS Smt. @priyankagandhi #BetiKoNyayDo pic.twitter.com/D3jYmd0vzm
— Congress (@INCIndia) December 7, 2019
உன்னாவ் பாலியல் வல்லுறுவால் மரணமடைந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், " கடந்த ஒரு வருடமாகவே இந்த குடும்பம் துன்புறுத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு பாஜக தொடர்பு இருப்பதாக கேள்விப்பட்டேன், அதனால்தான் அவர்கள் இத்தனை நாள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் . மேலும், இந்த மாநிலத்தில் குற்றவாளிகள் மத்தியில் எந்த பயமும் இல்லை என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் காவல்துறையினர் குற்றவாளிகளை "மாநில விருந்தினர்களாக" வைத்திருக்கிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். தெலுங்கானாவில் நான்கு பேரை என்கவுண்ட்டர் பாராட்டத்தக்கது என்று தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மாயாவதியின் குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த உத்தரஉத்தரபிரதேச காவல்துறையினர் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் சந்தேகத்திற்கு இடமான 103 குற்றவாளிகள் என்கவுண்ட்டரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து இருக்கிறது.
உன்னாவ் பாலியல் வல்லுறுவால் மரணமடைந்த பெண்ணிற்கு நியாயம் கேட்டு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோ மாநில சட்டமன்றத்திற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தார்." இன்று எங்களுக்கு ஒரு கருப்பு நாள் , தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்த மகளும் பாதுகாப்பாக இல்லை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
வெங்காய விலை அதிகரித்து வரும் சூழ்நிலையால், வெங்காயத்தை இறக்குமதி செய்து அதன் விலையை குறைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். அடுத்த 45 நாட்களுக்குள் வெங்காயத்தின் விலை மலிவு விலைக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் , மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்த தேர்தல் அட்டவணையையும் திரும்பப் பெற்றது. இந்நிலையில், புதிய உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. ஆணையர் பழனிசாமி தலைமையில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில் மற்ற மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவில் கும்பல் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்கவுண்ட்டர் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் யாதவ் ஆகியோர் 2014ம் ஆண்டில் என்கவுண்ட்டர் தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்த விதிமுறைகளை காவல்துறை அதிகாரிகள் மீறியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
போதிய ஜிஎஸ்டி வரி வருவாய் இல்லாததால் மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடுத் தொகையை வழங்க முடியாது என்று கூறிவருவதை அடுத்து, அந்த பணத்தை வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையைக் காத்திடும் வகையில் நீதிமன்றங்களில் வழக்காடியாவது பணத்தை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னை பாலியல் வல்லுறுவு செய்ததாக குற்றம் சாட்டியதால் தீ எரிப்புக்கு உள்ளான உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் நேற்று இரவு 11.40 மணியளவில் மரணம் அடைந்தார் . 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளான இந்த பெண் நேற்று மாரடைப்பால் காலமானார் என்று டெல்லி மருத்துவமனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது
பெண்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் சென்னையில் வழங்கப்பட்டு வருவதால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் குறைவாக உள்ளது, பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் சிறப்பு தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights