Tamil Nadu news today live updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் முக்கிய எதிர்கட்சிகள் ஒரு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்இந்நிலையில், இன்று ஒரு படி மேலாக முக்கிய எதிர்க் கட்சி தலைவர்கள் ஒரு குழுவாக குலாம்நபி ஆசாத் தலைமையில் இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ளனர்.
இந்த பயணத்தில் 9 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி,டி.ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா, ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பயணம் செய்ய உள்ளனர்.
Tamil Nadu news today live updates: நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தேக்க நிலையை சரி செய்ய பல பொருளாதார செயல்முறைகளை நட்டு மக்களிடம் எடுத்துரைத்தார்.
கோவையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து, கோவை மாநகரம் முழுவதும் நேற்று உச்ச கட்ட பாதுகாப்பில் இருந்தது. தொடர்ந்து செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்
Web Title:Tamil nadu news today live updates
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து தைவான் வீராங்கனை டைசூ யிங்கை 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் மந்தமான சூழல் நிலவுகிறது; இந்தியா போன்ற வளரும் நாட்டில் மட்டுமே இந்த சிக்கல் இல்லை என்று கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.2 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படலாம் . உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அது போன்ற நடவடிக்கைகள் தொடரும். பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மத்திய நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்: ”“உலகளவிலான வர்த்தகம் மந்த நிலைய் அடைவது புதிதல்ல. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை சந்தித்துவருவதாக கூறுவது தவறு. தொழிலாளர் நலச்சட்டம், வரி உள்ளிட்டவை எளிமையாக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாசனத்திற்காக மேட்டூர் மற்றும் கல்லனையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உழவர்கள் அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹீர் என்பவரை நாகை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,778-க்கு விற்பனையான நிலையில் தற்ப்போது கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,757-க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் ரூ.3,621-க்கு விற்பனையான நிலையில் ரூ.21 குறைந்து ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.48.30-க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.48,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.48.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.48,200-க்கு விற்பனை செய்யபடுகிறது.
தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து, மதுரை மாநகரம் முழுவதும் கூடுதலாக 500 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மதுரை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கோவையில், கமாண்டோ படையினர் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது, அருவியின் தண்ணீருடன் தீடீரென கற்கல் மேலே விழுந்ததால் 6 பெண்கள் உடபட 7 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து சிறிது நேரம் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸீல் உள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசுகையில்: “இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நட்பு மிக பலம் வாய்ந்தது. தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும். பாரீஸ் பிரகடன இலக்கை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியா எட்டும்” என்று கூறினார்.
கோவையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதி என கருதப்படும் நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதி என கருதப்படும் நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் நபரை யாரேனும் பார்த்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார். அவருக்கு மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப்பிரமானம் செய்துவைத்தார். பதவியேற்பின்போது, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
லஷ்கர் இ தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையின் தகவலை அடுத்து, கோவை முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.