Advertisment

ஆசிரியர்கள் சொத்து கணக்கு: தமிழக பள்ளிக்கல்வித்துறை திடீர் உத்தரவு

Tamil Nadu news today live updates: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.74.80-க்கும், டீசல் ரூ.68.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN School education dept 10 working days reduced new revised calendar Tamil News

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates:  சென்னையில் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.74.80-க்கும், டீசல் ரூ.68.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியின்  "தூய்மை இந்தியா" திட்டத்திற்க்கு பாராட்டும் வகையில் பில் கேட்ஸ் நடத்தி வரும் தொண்டு நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மோடிக்கு விருது வழங்க உள்ளது.  கிராமப்புற வீடுகளில் கழிவறை, கிராமத்திற்கான பொதுகழிவறை, நகர்ப்புறங்களில் கழிப்பறைகள்,  பள்ளி கல்லூரிகளில் கழிப்பறைகள் "தூய்மை இந்தியா"  திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஜப்பான் சென்றுள்ள இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோவை சந்தித்து பேசினார். இரு நாடுகளுகும் இடையில் உள்ள நட்புறவு நாளுக்கு நாள் முதிர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற, செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களைப் பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், அரசியல் நடப்புகள், தங்கம் மற்றும் பெட்ரோல் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த ப்ளாக்கை பின்தொடருங்கள்.    














Highlights

    21:58 (IST)03 Sep 2019

    பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர்

    ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் மசோதாவை தாக்கல் செய்து, பார்லி.,யில் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை ஓட்டெடுப்பு நடந்த போதும், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால், அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (செப்.,3) அந்நாட்டு பார்லி.,யில் நடைபெற்று வந்தநிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., பிலிப் லீ, எதிர்கட்சி எம்.பி.,க்களின் வரிசையில் அமர்ந்தார். பிலிப் லீ எதிர்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியில் இணைந்ததையடுத்து, போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.

    21:52 (IST)03 Sep 2019

    ஆசிரியர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை

    ஆசிரியர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்  என்று பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் சொத்து விவரங்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

    21:32 (IST)03 Sep 2019

    சட்டவிரோத பணபரிவர்த்தனை : கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது

    சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரசின் முன்னாள் அமைச்சர், டி.கே.சிவகுமாரிடம், மூன்றாவது நாளாக, அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    20:44 (IST)03 Sep 2019

    தெலுங்கானா ஆளுநராக தமிழிசை செப்.8ம் தேதி பதவியேற்பு

    தெலுங்கானா ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் செப்.8ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்ட நிலையில் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்க உள்ளார்.

    19:55 (IST)03 Sep 2019

    அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து

    அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக நாளை முதல் அதாவது செப்டம்பர் 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.  2500 பணி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து செய்திருப்பது விண்ணப்பதாரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

    19:07 (IST)03 Sep 2019

    நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் வளர்ச்சியே முக்கியம் – பிரேமலதா

    நாட்டின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சியையும் மத்திய அரசு கணக்கில் கொள்ள வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

    18:31 (IST)03 Sep 2019

    ரேஷன் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னிலை – அமைச்சர் காமராஜ்

    ரேஷன் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். டில்லி சென்றுள்ள அமைச்சர் காமராஜ், அங்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர்களை சந்தித்து பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது, 3 ஆயிரம் ரேஷன் பொருள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கான மண்ணெண்ணெயை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பருப்பு, பாமாயில் மானியத்தை தொடருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    17:45 (IST)03 Sep 2019

    பின்லாந்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

    பின்லாந்து நாட்டிற்கு அரசுமுறைப்பயணம் சென்றுள்ள தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்நாட்டின் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்லாந்து, சர்வதேச அளவில் கல்வித்துறையில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    16:48 (IST)03 Sep 2019

    பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்

    பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து பேசியுள்ளார் தமிழக உணவு பாதுகாப்புது துறை அமைச்சர் ஆர். காமராஜ். தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் அளிக்க கோரிக்கை மனு அளித்ததாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.

    16:35 (IST)03 Sep 2019

    புதுவையின் சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் 5ம் தேதி

    புதுவை மாநிலத்தின் துணை சபாநாயகர் தேர்தல் 5ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். இந்த பதவிக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக வாரியத் தலைவராக பணியாற்றிய எம்.எல்.ஏ பாலன் போட்டியிடுகிறார்.

    16:06 (IST)03 Sep 2019

    உச்ச நீதிமன்றத்தி உத்தரவின் படி, சிதம்பரத்தின் காவல் 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தி உத்தரவின் படி, சிதம்பரத்தின் காவல் 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் அறிவிப்பு. நீதிமன்ற வளாகத்துக்குள் சிதம்பரத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 நிமிடம் சந்தித்து பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    15:53 (IST)03 Sep 2019

    சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மித்தாலி ராஜ்

    சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கணை மித்தாலி ராஜ்

    15:43 (IST)03 Sep 2019

    உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகும் ப்ரியங்கா காந்தி ?

    உத்திரப் பிரதேச கிழக்கு பிராந்தியத்தின் பொதுச்செயலாளராக இந்த வருடம் ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார் பிரியங்கா காந்தி. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    15:20 (IST)03 Sep 2019

    ICC batting test rankings

    ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 904 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம். ஒரு புள்ளியை இழந்து 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார் இந்தியாவின் விராத் கோலி. மூன்றாவது இடத்தில் கேன் வில்லியம்சனும், நான்காவது இடத்தில் சத்தீஸ்வர் புஜாராவும் (825) உள்ளனர்.

    14:51 (IST)03 Sep 2019

    அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை

    தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையின் படி அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:36 (IST)03 Sep 2019

    5ம் தேதி வரை சி.பி.ஐ காவல் தொடரும் - உச்ச நீதிமன்றம்

    ஐ.என்.எக்ஸ் வழக்கில், ப.சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், சி.பி.ஐ காவல் தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு. வருகின்ற 5ம் தேதி வரை இதே நிலை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    14:31 (IST)03 Sep 2019

    ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை துவங்கியது

    ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு துவங்கியுள்ளது. சிதம்பரம் சார்பில் கபில் சிபில் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரும் ஆஜராக உள்ளனர். நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் வருகை.

    13:49 (IST)03 Sep 2019

    சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு

    தமிழகத்தில், 20 சுங்கச் சாவடிகளில், செப்டம்பர், 1 முதல் கட்டணத்தை உயர்த்தின. சுங்கச் சாவடிகளின் அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் எப்படி கட்டணத்தை உயர்த்த முடியும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் எடுத்த முடிவு என்றும் குற்றச்சாட்டு. 

    13:13 (IST)03 Sep 2019

    அமைச்சர் காமராஜ் டெல்லி பயணம்:

    தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெயை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்துரைப்பதற்காக  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்க்கும்,  உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் தேவையான பெட்ரோலிய பொருட்கள் தடையின்றி    வழங்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி.  

    12:42 (IST)03 Sep 2019

    பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.

    புதுக்கோட்டை  அமமுக  மாவட்டச் செயலாளரும் , தற்போது அதிமுக எம்எல்ஏ இரத்தின சபாபதியின் சகோதரருமான பரணி கார்த்திகேயன் இன்று மு.க் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஏற்கனவே அமமுக கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தது குறிப்பிட்டத்தக்கது.  

    11:48 (IST)03 Sep 2019

    நரேந்திர மோடிக்கு விருது அறிவுப்பு

    இந்தாண்டு இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ் நடத்தி வரும் தொண்டு நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் 'தூய்மை இந்தியா' திட்டத்திற்காக விருதி வழங்கி சிறப்பிக்க இருக்கிறது.  

    11:22 (IST)03 Sep 2019

    கால்நடை பண்ணைகளை நேரில் ஆய்வு:

    அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருக்கும் தமிழக முதல்வர் இன்று பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரில்  ஆய்வு மேற்கொண்டார் . 

    11:19 (IST)03 Sep 2019

    தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மறுப்பு:

    இந்த வாரம் நடைபெற்ற எம்.இ, எம்டெக், எம்.ஆர்ச் மற்றும் எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சீட்டுகள் கூட நிரப்படவில்லை . இதனால், சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்று ராமதாஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சிறப்பு கவுன்சிலிங் யோசனையை முற்றிலும் நிராகரித்துவிட்டது .     

    11:13 (IST)03 Sep 2019

    ஓஎன்ஜிசி - நான்கு பேர் பலி

    ஓஎன்ஜிசி யின் யுரேன் எண்ணெய் மற்றும் எரிவாயு பதப்படுத்தும் ஆலையில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர்.   

    11:10 (IST)03 Sep 2019

    தமிழிசை சௌந்தரராஜன் ஆசி பெற்றார்

    தெலுங்கான மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இருக்கும் தனது தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி பெற்றார். 

    09:46 (IST)03 Sep 2019

    ஓஎன்ஜிசி பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து

    பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் யுரேன் எண்ணெய் மற்றும் எரிவாயு பதப்படுத்தும் ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்ப்பட்டது . எந்த உயிர்க்கும் சேதம் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

    Tamil Nadu news today live updates: மேற்கிந்திய தீவுகளுகளுக்கு  சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட்  அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரை முழுமையாக வென்றது.

    கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கணக்கில் வராத 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    லாகூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சீக்கிய சமூகத்தின் கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான்-  இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் பாகிஸ்தான் போர் தொடங்காது என்று உறுதியளித்திருக்கிறார்.

    Tamil Nadu India
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment