டிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Feb 13, 2020, 7:39:14 AM

Tamil nadu news today updates : டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக முழுமையான நடவடிக்கை எடுக்கு எண்டும் என்று திமுக சார்பில் தமிழ்நாடு தலைமை செயலாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62ல் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. எட்டு தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெற்றது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை பட்டாசு வெடித்து யாரும் கொண்டாடக் கூடாது என கட்சியினருக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் யாரும் பட்டாசு வெடிக்க வில்லை. கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கி ஆடிபாடி வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாடினர்.

மின்சார கண்ணா படத்தின் காப்பியா ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் ? : கேட்டாலே ஷாக் அடிக்குதே…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உற்சாகம் அடைந்துள்ளார். ஆம் ஆத்மி வெற்றிக்கு வியூகம் வகுந்து தந்த, பிரசாந்த் கிஷோர், தி.மு.க.,வுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து தர உள்ளது தான், இதற்கு காரணம். பிரசாந்த் கிஷோர், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘இந்தியாவின் ஆன்மா பாதுகாக்கப்பட்டுள்ளது’ என, கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள். வளர்ச்சி தான், வகுப்பு வாதத்தை வீழ்த்தும் என்பதற்கான தெளிவான நிரூபணம் இது. நாட்டின் ஒற்றுமைக்காக, நாம் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்களை வலுப்படுத்த வேண்டும்’ என, கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
07:39 (IST)13 Feb 2020
டிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக முழுமையான நடவடிக்கை எடுக்கு எண்டும் என்று திமுக சார்பில் தமிழ்நாடு தலைமை செயலாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் முடிவு.   

22:19 (IST)12 Feb 2020
செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் பலி; பணிக்கு வராத மருத்துவரிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க உத்தரவு

ஈரோடு விஜயமங்கலத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் பலியான விவகாரத்தில், கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணிக்கு வராத மருத்துவரிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

22:06 (IST)12 Feb 2020
தேனி அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; கல்லூரி முதல்வர் வீடு முற்றுகை

தேனி அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் கல்லூரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

21:41 (IST)12 Feb 2020
அதிமுக அரசு செய்வதைத்தான் சொல்லும், சொல்வதைத்தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார் பஞ்ச்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிதார். இது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக அரசு செய்வதைத்தான் சொல்லும், சொல்வதைத்தான் செய்யும். அதிமுக அரசு செய்வதைத்தான் சொல்லும், சொல்வதைத்தான் செய்யும்” என்று கூறினார்.

21:38 (IST)12 Feb 2020
கும்பகோணம் அருகே சீனிவாச பெருமாள் ஐம்பொன் சிலை திருட்டு

கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் இருந்து ஐம்பொன்னில் செய்யப்பட்ட சீனிவாச பெருமாள் சிலை திருடப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

20:34 (IST)12 Feb 2020
குரூப் 4 தேர்வு: பிப்ரவரி 19-ம் தேதி முதல் கலந்தாய்வு

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நீக்கி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. குரூப் 4 தேர்வில் புதிய தரவரிசைப் பட்டியல்படி, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. மேலும், கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

19:21 (IST)12 Feb 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி தலைமை செயலாளரிடம் திமுக மனு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர். இதுவரை 16-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தலைமை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

18:52 (IST)12 Feb 2020
ரூ.100 கட்டணம் தள்ளுபடி

FASTag பயன்படுத்துவோருக்கு பிப்.15 முதல் 29ஆம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி

* FASTag பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு

18:51 (IST)12 Feb 2020
குறைந்தபட்ச வயது வரம்பு 18

கருணை அடிப்படையில் வேலை பெற குறைந்தபட்ச வயது வரம்பு 18ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு

* கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு, அரசு ஊழியர்களின் வாரிசுகள் இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

18:29 (IST)12 Feb 2020
விஜய் பாடிய ‘ஒரு குட்டிக்கதை’ - அனிருத்

காதலர் தின பரிசாக விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக்கதை’ பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

18:20 (IST)12 Feb 2020
கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை

TNPSC விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை:

குரூப் 4 - 19 பேர்
குரூப் 2ஏ - 19 பேர்
விஏஓ முறைகேடு - 4 பேர்

17:55 (IST)12 Feb 2020
மரியலிஜோஸ்குமார் என்பவர் கைது

குரூப் 4 முறைகேடு : ஓம்காந்தின் கூட்டாளி மரியலிஜோஸ்குமார் என்பவர் கைது.

விடைத்தாள்களை காரில் எடுத்துச்செல்ல உதவியதால் கைது - சிபிசிஐடி

17:40 (IST)12 Feb 2020
இருவருக்கு தூக்கு தண்டனை

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை. நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி பரபரப்பு தீர்ப்பு

2008-ல் தமிழ் செல்வி என்பவரை பாலியல் வன்கொடுமை செய்து செய்து கொலை செய்த வழக்கில் வசந்த குமார், ராஜேசுக்கு தூக்கு
தண்டனை

17:35 (IST)12 Feb 2020
மாநில தலைமையை நம்பி தான், கட்சியின் வெற்றி, தோல்வி - கார்த்திக் சிதம்பரம்

மாநில தலைமைகளை நம்பி தான் கட்சியின் வெற்றி, தோல்விகள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, கட்சி என்றால் அதற்கு தலைமை, அரசியல், கொள்கை வேண்டும் என்றும், ஆம் ஆத்மியின் வெற்றி பாராட்டக்கூடிய விஷயம் என்றும் தெரிவித்தார். பாஜக மாநில தலைமையை முன்னிறுத்தாமல், மத்திய தலைமையை மட்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்தித்திருந்தாலும், இதே நிலைமை தான் என்று அவர் தெரிவித்தார்.

17:34 (IST)12 Feb 2020
நிர்பயாவின் தாய் கண்ணீர்

தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரிந்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் - நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாய் கண்ணீர்

17:34 (IST)12 Feb 2020
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம்

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

16:55 (IST)12 Feb 2020
6 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தகராறு காரணமாக மதுரை யானைக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளி வல்லரசு 2008-ல் கொலை செய்யப்பட்டார்.

16:55 (IST)12 Feb 2020
மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு

upsconline.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் - யுபிஎஸ்சி

16:22 (IST)12 Feb 2020
சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா?

நளினி சிறையில் இருப்பது சட்டவிரோத காவலா? சட்டப்பூர்வ காவலா?

பிப்.18ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

16:22 (IST)12 Feb 2020
மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கும் வகையில் மசோதா - மத்திய அரசு

15:52 (IST)12 Feb 2020
கொரோனா வைரஸ் - ராகுல் ட்வீட்

கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே என் எண்ணம்.

சரியான நேரத்தில் நடவடிக்கை முக்கியமானது.

15:36 (IST)12 Feb 2020
ஏழு பேர் விடுதலை குறித்து பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது

"ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை குறித்து பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது"

தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம். விடுதலை செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை - தமிழக அரசு.

விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

15:18 (IST)12 Feb 2020
புதிய தூக்கு தேதி

நிர்பயா கொலை குற்றவாளிகள் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதி அறிவிக்க திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

15:16 (IST)12 Feb 2020
போயி வேற வெல இருந்தா பாருங்கடா

அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அப்போது, விஜய் வீட்டில் கோடி கோடியாக பணம் எடுத்திருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது.

அதன்பின் வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் விஜய் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

இதன்பின் விஜய்க்கு எதிராக பல வதந்திகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். அதுபோல விஜய் சேதுபதியும் மதம் மாற்றப்பட்டுவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட கருத்துக்களையெல்லாம் பதிவிட்டு, அதனுடன் ‘போயி வேற வெல இருந்தா பாருங்கடா’ என்று விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

15:07 (IST)12 Feb 2020
திருமங்கையாழ்வார் சிலை லண்டன் ஆஷ்மோலென் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

கும்பகோணம் அருகே உள்ள சௌந்தர‌ராஜபெருமாள் கோவிலில் 1967ம் ஆண்டுக்கு முன் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை லண்டன் ஆஷ்மோலென் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

* சிலையை மீட்கவும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யவும் நடவடிக்கை - சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு

15:06 (IST)12 Feb 2020
வைகோ, திருமாவளவன் உள்பட 3 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016 ஆம் ஆண்டு, எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அரசு தரப்பு சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 4 ம் தேதிக்கு நீதிபதி ரமேஷ் தள்ளிவைத்தார்.

15:04 (IST)12 Feb 2020
இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை மறைக்க முடியாது - ஐகோர்ட்

‘இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘இந்து மகா சபா’ மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்தது’ என பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்றை நீக்கும் தமிழக அரசின் சுற்றறிக்கை எதிர்த்த மனுவிக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:52 (IST)12 Feb 2020
பிரிவினை அரசியல் நடக்கிறது – ஏ.ஆர் ரஹ்மான்

அரசியல் பிரிவினை அதிகமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில், கலைஞர்கள் அதைக் குறித்து கருத்து தெரிவிப்பது எவ்வளவு முக்கியமானது என்னும் கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “பிரிவினை அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் கட்டப்படுகிறார்கள். நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை மறுபடியும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

13:39 (IST)12 Feb 2020
முதல்வர் பழனிசாமி செயல்வீரர் – அமைச்சர் உதயகுமார் புகழாரம்

தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது. முதல்வர் பழனிசாமி செயல்வீரர். திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

12:46 (IST)12 Feb 2020
நடிகர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. நடிகர் விஜய்க்கும், பா.ஜ.வுக்கும் இடையே எந்த பகையும் இல்லை என்று பச.ஜ. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், வருமான வரித்துறை, தன்னுடைய பணியை செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

12:19 (IST)12 Feb 2020
வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏஜிஎஸ் அர்ச்சனா நேரில் ஆஜர்

பிகில் திரைப்படத்தின் வசூலைக் குறைத்துக் காட்டியதாக எழுந்த வரி ஏய்ப்பு புகாரில் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகள், நடிகர் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் வீடுகள் போன்ற பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய், அன்புச்செழியன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. நடிகர் விஜய் தரப்பில் அவரது ஆடிட்டர் நேற்று ஆஜராகி விஜய் தரப்பு விளக்கத்தைக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஏ.ஜி.எஸ் நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அர்ச்சனா இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

11:51 (IST)12 Feb 2020
டில்லி முதல்வராக 16ம் தேதி பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர உள்ளது.  சட்டசபை தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், டில்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை சந்தித்துப் பேசினார். பதவியேற்பு விழா, 16ம் தேதி நடைபெற உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:37 (IST)12 Feb 2020
அணைத்துக் கொள்ளுங்கள், வெறுக்காதீர்கள்' - காங்கிரஸ் கட்சியின் பதிவு

ஒரே செய்தியைத்தான் பாஜகவுக்கு  ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறோம். அணைத்துக் கொள்ளுங்கள், வெறுக்காதீர்கள்'' - #Hugday முன்னிட்டு காங்கிரஸ் கட்சி டுவிட்டரில்  பதிவு வெளியிட்டுள்ளது.

11:32 (IST)12 Feb 2020
சிறப்பு வேளாண் மண்டலங்களை யார் அறிவிக்க வேண்டும் – ஸ்டாலின் கேள்வி

திருச்சி, பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மற்றும் கடலூர் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறப்பு வேளாண் மண்டலங்கள் குறித்து மத்திய அரசு தான் அறிவிக்கும். இதில் மாநில அரசின் பங்கு ஏதுமில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

11:06 (IST)12 Feb 2020
கொரோனா வைரசின் புதுப்பெயர்

சீனாவில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரசிற்கு 'கோவிட் 19' (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது.

CO - Corona

VI - virus

D- disease

year - 2019

10:52 (IST)12 Feb 2020
கவர்னரை இன்று சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சட்டசபை தலைவராக தேர்வு செய்வதற்காக அக்கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ.,க்களின் கூட்டம் டில்லியில் கெஜ்ரிவால் இல்லத்தில் நடக்க உள்ளது. கெஜ்ரிவாலின் பதவியேற்பு பிப்., 14 முதல் 16 க்குள் நடக்க உள்ளதாகவும், ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின் சட்டசபை தலைவர் தேர்விற்கு பிறகு கவர்னரை சந்திக்க உள்ளதாகவும், அவரை முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பிறகு, பதவியேற்பு விழா நடக்கும் தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது

10:35 (IST)12 Feb 2020
சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு

மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினமும் 30 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் இண்டேன் நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது.அரசின் புள்ளிவிபரங்களின் படி சுமார் 11 கோடி பேர் மானியமில்லாத சிலிண்டர்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10:30 (IST)12 Feb 2020
பெட்ரோல்,டீசல் விலை மாற்றம் இல்லை

பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.50ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

09:50 (IST)12 Feb 2020
மோடி சிறந்த மனிதர் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

மோடி சிறந்த மனிதர் எனவும், நல்ல நண்பர் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்து தெரிவித்துள்ளார்.

Tamil nadu news today updates : மோடி சிறந்த மனிதர் எனவும், நல்ல நண்பர் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்து தெரிவித்துள்ளார். தனது இந்திய வருகை குறித்து டிரம்ப் கூறுகையில், நான் இந்தியா செல்கிறேன். விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை 5 முதல் 7 லட்சம் பேரை வரவேற்பிற்காக நிறுத்தி வைக்க பிரதமர் மோடி நினைப்பார். பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச் சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தும் பட்சத்தில், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு வடிவங்களில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு ஜூன் முதல், நாடு முழுவதும், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதனால், பிற மாநில கார்டுதாரர்கள், தமிழக ரேஷன் கடைகளிலும்; தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களிலும் பொருட்கள் வாங்கலாம். இந்நிலையில், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில், ரேஷன் கார்டின் வடிவங்களில் மாற்றம் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Web Title:Tamil nadu news today live updates aam aadmi delhi election modi arvind kejriwal tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X