Tamil Nadu news today updates: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. நாங்குநேரி எம்.எல்.ஏ எச். வசந்தகுமார், கன்னியாகுமரியின் எம்.பியாக பதவி ஏற்றார். விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமுற்றார். இதனால் இவ்விரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. முறையே காங்கிரஸ், திமுகவின் தொகுதிகளாக பார்க்கப்பட்ட இவ்விரண்டு தொகுதிகளையும் அதிமுகவை சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன், முத்தமிழ்ச்செல்வன் கைப்பற்றினர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
சென்னை வானிலை
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை முதல் மிககனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடும். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Diwali New releases
நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி தமிழக ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்துள்ளது விஜய் நடிப்பில் உருவான பிகில் மற்றும் கார்த்தியின் நடிப்பில் உருவான கைதி. பல்வேறு சர்ச்சைகளை கடந்து இவ்விரண்டு படங்களின் காட்சிகள் வெளியாகியுள்ளது. பிகில் படம் குறித்த ரசிகர்களின் கருத்துகளையும் படத்தின் திரை விமர்சனத்தையும் படிக்க
மருத்துவர்கள் போராட்டம் குறித்த அப்டேட்களை ஆங்கிலத்தில் படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, petrol diesel price, TN politics, traffic இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அருதிப் பெரும்பாண்மை பெறவில்லை என்றாலும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. பெரும்பாண்மைக்கு சுயேச்சைகள் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியிடமும் (ஜே.ஜே.பி) கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், பாஜக தலைமையில் ஜே.ஜே.பி கூட்டணி உறுதியாகி உள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை துஷ்யந்த் சவுதாலா சந்தித்த நிலையில் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டது.
இதையடுத்து, ஹரியானாவில் பாஜக தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராகிறார் ஜெஜெபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா. பாஜக- ஜனநாயக ஜனதா கட்சி நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் மாலை 5.40 மணிக்கு 26 அடி ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. விழுந்த குழந்தையை மீட்க, குழாயில் கயிறு கட்டி அதன் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
#BREAKING குழாயில் கயிறு கட்டி அதன் மூலம் ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம்
* மாலை 5.40 மணிக்கு 26 அடி ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது #Trichy #RescueChild pic.twitter.com/txif3iNbK9
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 25, 2019
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை இன்னும் 2 மணி நேரத்தில் மீட்டுவிடலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதாகவும், அசைவு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 4 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த இடத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆட்சியர் சிவராசு, எஸ்.பி. உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! தற்போதைய நிலவரம் என்ன?https://t.co/7GmZPFWgwi #Trichy
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 25, 2019
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்பதற்கு தேவையான சிறப்புக் கருவிகள் கொண்டுவரப்படுகிறது. குழந்தையை உயிருடன் மீட்கும்வரை தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும். மருத்துவக் குழு சம்பவ இடத்தில் இருக்கவும், மருந்து, உபகரணங்களை தயார்நிலையில் வைக்கவும் உத்தரவு.
மணப்பாறையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை தகவல். குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் செல்கிறார்.
கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட அட்சியர் உத்தரவு. விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 23-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கைரேகை பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் அக்டோபர் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
சேலத்தில் பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற 15 வயது சிறுமியின் கருவை கலைக்க சேலம் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கருகலைப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ: பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சர் அனுமதியோடு பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தீபாவளிக்கு வெளியாகி உள்ள மற்ற திரைப்படங்கள், சிறப்பு காட்சிகள் கோரி அரசை அணுகவில்லை. நடிகர் விஜய்க்கு அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது, சீமான் போன்றவர்கள் அதை புரிந்து பேச வேண்டும் என்றார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்த வேண்டுகோளில், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் காலம் என்பதால் மருத்துவர்களின் சேவை மக்களுக்கு தேவை. அதனால், அரசு மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னை விமர்சிக்கும் தனது கட்சியைச் சேர்ந்த புகழேந்தியை 24 ஆம் புலிகேசியாகிறார் என்று விமர்சித்திருந்தார். இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், 24 ஆம் புலிகேசி புகழேந்தி என்றால் 23ஆம் புலிகேசி டிடிவி தினகரனா? அமமுக என்பது கட்சியே கிடையாது; இந்த கட்சியில் அம்மா பெயரை பயன்படுத்த தார்மீக உரிமையும் இல்லை என்று கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்துவரும் புகழேந்தி பற்றி டிடிவி தினகரன் விமர்சனம்;
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்: 24 ஆம் புலிகேசியாக புகழேந்தி உருவாகிறார். கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூறினார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற்ற இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் நாராயணன், முத்தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் வரும் 29ம் தேதி பதவியேற்கின்றனர்
சேலத்தில் இருக்கும் வீட்டில் தங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. காலையில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்தார். தற்போது அமமுகவின் புகழேந்தி முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதனால் அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புகழேந்தி அதிமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்புகள் அனைவரிடமும் நிலவி வருகிறது.
இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பிற்கு தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்ததாக கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சீன தூதர் சன் வெய்டங் கடிதம் மூலம் பாராட்டுகளை கூறியுள்ளார். இந்திய - சீன மக்களுக்கு இடையே கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் மேம்படும் என கடித்ததில் அறிவிப்பு.
ராதாபுரம் மறுவாக்குப்பதிவு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நவம்பர் 13ம் தேதி வரை தொடரும் என்றும் அதற்குள் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாமல்லபுரத்தில் அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கான வேலைகளை சிறப்பாக செய்தது தமிழக அரசு என்றும், சீன அதிபருக்கு நாம் அளித்த வரவேற்பு நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலித்தது. அதற்காக தமிழக மக்கள் மற்றும் முதல்வருக்கு நன்றிகள் என மோடி கடிதம். தனக்கும், சீன அதிபருக்கும் இது மறக்க முடியாத நிகழ்வாக இது இருந்தது என்றும் கடிதத்தில் நெகிழ்ச்சி.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2423 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 2,120 பேரின் பணிக்காலம் மட்டுமே முன்பு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீதம் இருக்கும் 303 பேரின் பதவிகாலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மருத்துவர்கள் ஊதிய உயர்வு, பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் இருக்கும் 10 அரசு மருத்துவமனைகள், 67 ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வேலை நிறுத்தம். அவசர காலங்களில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து நேற்று மட்டும் 1.37 லட்சம் நபர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தமிழக அரசு, தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதிகளை செய்து கொடுத்தது. நேற்று மட்டும் 2,963 அரசு பேருந்துகளில் மக்கள் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி என்றாலே சிக்கன், மட்டன், மீன் என ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். கடலூர் மாவட்டம் வேப்பூர் சந்தையில் தீபாவளியை ஒப்ட்டி ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொடியாடு, கருப்பு ஆடு, செம்மறி ஆடு என ஆடுகள் ரூ. 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights