Tamil nadu news today updates : சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்புக்கு கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனாவில் உள்ள வெளிநாட்டவர், இந்தியாவுக்கு பயணம் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கான பல விமான சேவையை ரத்து செய்துள்ள, ஏர் இந்தியா விமான நிறுவனம், டில்லி - ஹாங்காங் இடையேயான விமான சேவையை, பிப்., 8 முதல் ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, மூன்றாண்டுகள் நிறைவடையும் தருவாயில், நீதிமன்றம் விதித்த, 10 கோடி ரூபாய் அபராத தொகையை, சசிகலா உட்பட மூவரும், இதுவரை செலுத்தவில்லை. செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவுப்படி அபராத தொகை செலுத்த வேண்டும். இல்லை என்றால் கூடுதலாக ஓராண்டு சிறை வாசம் அனுபவிக்க வேண்டும். அபராத தொகை செலுத்தும்பட்சத்தில், அந்த பணம் எப்படி வந்தது என்பதை வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் பிப்ரவரி 10 முதல் 13 வரை மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன்தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ குறித்து கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரஜினி தனிக்கட்சி தொடங்கத் தேவையில்லை. ரஜினி பாஜ்கவில் இணைவதுதன் நல்லது. அவரது வெளிப்பாட்டைக் கூறியது நல்லது. ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாஜகவின் பொம்மலாட்டத்திற்கு ரஜினி செவி சாய்க்கிறார்.” என்று கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடியாவில் பேசுகையில், “டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியடையும். அவர்கள் பல மாநிலங்களில் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வெட்கமில்லை. அவர்கள் எல்லாவற்றையும் விற்பனை செய்வார்கள். பிறகு என்ன மிஞ்சி இருக்கும். சிறைகளும் தடுப்பு முகாமகளும் மட்டுமே மிஞ்சியிருக்கும்” என்று கூறினார்.
West Bengal CM Mamata Banerjee in Nadia: BJP will lose Delhi elections. They are losing in many states but they are shameless. They will sell everything, what will remain are only jails and detention camps. pic.twitter.com/slBPVwvzE2
— ANI (@ANI) February 5, 2020
மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேர் என்ற நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தர குறியீட்டின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு காப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், காப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன், காப்பர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக ஸ்டெர்லைட் இருந்தது” என்று கூறியுள்ளார்.
சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக கூறிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சிஏஏ ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டது மகிழ்வளிக்கிறது. மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல. இந்தி எதிர்ப்பின் போது எழுந்தவையே! அப்போதைப் போலவே தற்போதைய அறப் போராட்டமும் வெல்லும். ஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக கூட்டணிக் கட்சிகள் எங்கே? அரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா? என்று ரஜினியின் பெயர் குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்துவரும் நிலையில், நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் பகுதிக்கு நேஇர்ல் சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்துள்ளனர். அங்கே விஜய் தனிமை தனிமைபடுத்தப்பட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல். நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
குஜராத்தில் குழந்தைகளை கடத்தல் சட்டவிரோதமாக அடைத்துவைத்தல் உள்ளிட்ட வழக்குகளில் அம்மாநில போலீசாரா தேடப்பட்டு வந்த நித்யானந்தா தலைமறைவான நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ரஜினி சி.ஏ.ஏ, என்.பி.அர். என்.சி.ஆர் குறித்து தெரிவித்த கருத்து குறித்து, திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை; அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன்” என்று ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க கோரி டெல்லி திஹார் சிறை நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செதிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிடக் கோரிய மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜி. என். அன்புச் செழியன் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவரது தயாரிப்பு நிறுவனம் கோபுரம் ஃபிலிம்ஸ் ஆகும். தங்க மகன், ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
ரஜினி சி.ஏ.ஏ, என்.பி.அர். என்.சி.ஆர் குறித்து தெரிவித்த கருத்து குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “ரஜினியின் ஆன்மீக அரசியல் முகமூடி அம்பலமாகிவிட்டது. ரஜினியை நடிகராக பார்த்த மக்கள், பாஜகவின் ஊதுகுழலாக பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் விடுதலை விரைந்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நல்ல பதில் அளிக்க வேண்டும். ஒரு தாயின் 29 ஆண்டு கால கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது .இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் .வாழ்த்துக்கள்.. நன்றி... என்று நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின்போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்மபூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? அதுபோல் ஏதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, இனியும் தாமதப்படுத்தப்படாமல், விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்'' என, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights