Tamil Nadu news today updates chennai rains : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சி, நாகை, அரியலூர், திருச்சி, தஞ்சை, சிதம்பரம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர், திருச்சி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவித்துள்ளனர் அம்மாவட்ட ஆட்சியர்கள். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
இன்று உதயமாகிறது செங்கல்பட்டு மாவட்டம்
தமிழகத்தின் 37வது புதிய மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயமாகிறது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் தாலுக்காகள் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகிறது. இன்றைய துவக்க விழா வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று மதியம் 12:15 மணிக்கு நடைபெறுகிறது.
விண்ணை தொட்ட வெங்காய விலை... வருத்தத்தில் மக்கள்
Live Blog
Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாஸ்ட் டேக் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5%. ஆறு ஆண்டுகளில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதமாக உள்ளது. இது ஒரு பொருளாதார மந்தநிலை மட்டுமல்ல, இது முன்மாதிரி இல்லாத விகித அளவிலான பொருளாதார நெருக்கடி. அரசாங்கம் திசை திருப்பப்படுவதை நிறுத்தி அதன் பொருளாதார யுக்தியை பிரதிபலிக்கத் தொடங்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
GDP at 4.5%. Lowest economic growth rate in six years!
This is not just an #EconomicSlowdown, this is an economic crisis of unprecedented proportions.
The Govt needs to stop deflecting and start reflecting on its economic strategy. pic.twitter.com/Uz8i15G54O
— M.K.Stalin (@mkstalin) November 29, 2019
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: நமது பொருளாதாரம் ஆண்டுக்கு 8% வளரத் தொடங்குவதற்கு நமது சமுதாயத்தின் தற்போதைய சூழ்நிலையை பயத்திலிருந்து நம்பிக்கையாக மாற்ற வேண்டும். பொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். நம்முடைய சமூகத்தின் நம்பிக்கையின் பாதாகையும் நம்பிக்கையும் இப்போது கிழிந்து பிரச்னையாகியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது; ஆனால், பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142 புள்ளி 05 அடியாக உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி இரண்டாயிரத்து 750 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தாமிரபரணி நதியில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாமிரபரணி நதியில் அதிகளவில் நீர் வந்துகொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். புதிய அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு கைக்கொடுக்கும். மத்திய அரசின் தொடர் முயற்சியால் 4 அல்லது 5 காலாண்டுகளில் பொருளாதார நிலைமை சீராகலாம் - நாகப்பன், பொருளாதார நிபுணர்
5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் துவங்கப்படும் புதிய தொழில்கள் தொடர்பாக 9 தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக இருக்கின்றன.இதன் மூலம் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயரை வெளியிடுவதோடு தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற புதிய இணைய தளத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கல்வித்துறையில் 3 இயக்குனர்கள் பணியிட மாற்றம்
தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராமன் வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக இருந்த உமா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக நியமனம்.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இருந்த பழனிசாமி தொடக்க கல்வி இயக்குனராக நியமனம்.
இலங்கையில் மீண்டும் குடியேற நினைக்கும் தமிழர்களுக்காக, கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என தெரிவித்தார். இது தவிர சூரிய மின்னுற்பத்தி திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை மீறி செயல்படுவதாக மனுவில் குற்றச்சாட்டு. புகழேந்தி மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை.
சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி கூடுதல் ஆவணங்களோடு புதிய மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மனு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம்தான் கோவையில் பொறியாளர்கள், பட்டதாரிகள் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஏதோ ஒரு செயற்கை காரணங்களால் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் இருப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். எதிர்க்கால தலைமுறைகளின் வாழ்வில் விளையாடாமல், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், ஐ. டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கையை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுத்தினார்.
மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணிக்கு எதிராக பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்தது உச்ச நீதிமன்றம். கூட்டணி அமைப்பது என்பது அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் செயல்பட உள்ளன. அதே போன்று செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்ப்போரூ, செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட உள்ளது.
கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்ற விவகாரங்களில் பங்கேற்க கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடிதம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யாசிங் தாக்கூர்.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
டிசம்பர் 6ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மத நல்லிணக்கத்திற்கு குந்தகமான நிலை உருவாகும் என்றும், இதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 2ம் தேதிக்கு அந்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.
கோத்தபய ராஜபக்சேவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்று பேசினர். இருநாட்டு உறவுகளும் வலுப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றும், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் இலங்கை அதிபர் அறிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட திமுக தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டிந்தது. அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்திருந்தது உச்ச நீதிமன்றம், மேலும் வழக்கை பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவம்பர் 30ம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச. கடந்த வாரம் இலங்கைக்கு சென்று நேரடியாக வாழ்த்துகளை பதிவு செய்திருந்தார் எஸ்.ஜெயசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: Newly elected President of Sri Lanka Gotabaya Rajapaksa meets External Affairs Minister Dr S Jaishankar. The Sri Lankan President is on a visit to India till November 30. pic.twitter.com/q41NzEqkzK
— ANI (@ANI) November 29, 2019
மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை இந்த ஆட்டோவை இயக்க முடியும். அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 60 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியது இது.
தை ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புடனும் கொண்டாட இருப்பதையொட்டி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டவைத் தொடர்ந்து தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது குறிப்பிடத்தக்கது,
ஈரோடு பவானி கூடுதுறையில் அமைந்திருக்கிறது சங்கமேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திருப்பணி செய்து வந்தது வேதநாயகி என்றொரு யானை. 43 வயதான வேதநாயகிக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. மருத்துவ உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.
மேலும் படிக்க : உத்தவ் தாக்கரே அவர் தந்தையைப் போன்ற போர்க்குணம் கொண்டவர் இல்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights