tamil nadu news today updates Chennai rains : சென்னை எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாசாலை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவில் இருந்து பல்வேறு பகுதிகளில் மிதமான மழை. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான கனமழை.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான வீடியோவை கீழே காணுங்கள்!
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று ஆளுநர் தமிழக சட்டமன்றத்தில் பேசி வருகிறார். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள : தமிழக சட்டப்பேரவை கூட்டம் : ஆளுநரின் உரையுடன் துவக்கம்
tamil nadu news today updates : நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது முகம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல்களில் மாணவர்கள் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்த உத்தரவிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Web Title:Tamil nadu news today live updates chennai rains tn politics jnu students attacked dmk admk
சென்னை பள்ளிக்கரணையில், கடந்த ஆண்டு பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், அவரது தந்தை ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசிற்கு நிலம் கொடுத்ததற்கு தனக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அப்துல் காதர் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு பயன்பாட்டிற்கு நிலம் ஒதுக்கியவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க கோருவது, அரசியல் சாசன உரிமை அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைவதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை.
அண்ணா பல்கலைக்கழகம் பிரிப்பு விவகாரத்தில் இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை! எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார். இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட தாக்குதல்
சபர்மதி விடுதியில் போராடத்தயாராக இருந்தபோது தாக்குதல் நடந்தது
தாக்குதலின் போது பெயரைச் சொல்லியே தாக்குதல் நடத்தினர்; காவலாளிகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது.
கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்பார்க்கவில்லை
உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை, சுத்தியல் ஆகியவற்றை பயன்படுத்தி முகமூடி அணிந்துவந்து தாக்குதல் நடத்தினர்; வன்முறையாளர்களை காவலாளிகள் தடுக்கவில்லை
- காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ்
கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சென்றுகொண்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரியை மறித்து மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த லாரியில் கர்நாடக மாநில கொடியை கட்டியுள்ளனர்.
இரட்டை குடியுரிமை என்பது இந்தியா, இலங்கைக்கு பொருத்தமற்றது. இலங்கை அகதிகளுக்கு முதலில் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி
ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவு - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
‘திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்ககோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம் ஆகிய 5 பேர் கொண்ட குழு ஆலோசனை.
2ஆம் பருவத்திற்குரிய 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான, மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள, அனைத்து பாடப் புத்தகங்களையும் பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும்
- அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 12 பேர் உறுதி மொழியுடன் பதவியேற்பு.
ஜேஎன்யூ-வில் நடைபெற்றுள்ள தாக்குதல் அவமானகரமானது, இதற்கு காரணமானவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட்.
கொத்தவால் சாவடி மின்மாற்றியில் பழுது நீக்கிய போது மின்சாரம் பாய்ந்து மின்துறை ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம்.
உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், மேலாண்மை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது; 70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது என்று மகாராஷ்ட்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.
நவம்பர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைப்பு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குமளங்குளம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலெட்சுமி என்பவர் பதவி ஏற்க பொதுமக்கள் எதிர்ப்பு. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நாட்டில் நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு
டெல்லியில் இவ்வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று மதியம் 03.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
ஜே.என்.யூவில் நடைபெற்ற தாக்குதல்கள் கண்டனத்திற்கு உரியது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் பல்கலைக்கழகங்களில் வன்முறையான சூழலை உருவாக்குகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை திருவரங்குளம் யூனியன் ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் திமுகவை சேர்ந்த ஞான இளங்கோவன் - கே.பி.கே தங்கமணி தரப்பினர் இடையே கடுமையான மோதல். காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு.
பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுடன் பாமக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதால் பரபரப்பு. அதிமுகவுடன் பதவியேற்பார்கள் என்று நினைத்திருந்த நிலையில் புதிய மாற்றம்.
திரௌபதி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று சென்னை காவல் ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் கோவிலில் நடைபெற இருக்கும் மார்கழி தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 9ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதை தடுக்க முயற்சி செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை இன்று 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 2 நாட்கள் ஆன போது சி.சி.டி.வி. பதிவுகளை சமர்ப்பிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி.
13 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைவர் தலைமையில் இன்று மாலை நடைபெற இருந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுவதாக சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.
இன்று ஒரே நாளில் சென்னையில் ரூ.512 அதிகரித்து, ரூ. 31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தை 357 புள்ளிகள் குறைந்து 40,987 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இமாச்சல் பிரதேசம் சிம்லா அருகே நில அதிர்வு ஏற்படுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 3.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு எதிராக போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைத்து மேற்பார்வையிடப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் அதிகரித்து ரூ.78.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.72.58க்கு விற்பனை செய்யப்படுகிறது.