Advertisment

Tamil Nadu news today : சந்திர கிரகணம் - கோயில்கள் நடைஅடைப்பு

Petrol Diesel Price in Chennai : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ76.03க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ69.96 க்கும் விற்பனையாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates : சென்னையில் நேற்று மாலை துவங்கி நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை பல்வேறு பகுதிகளில் துவங்கிய போதும், சென்னையில் வெப்பம் மிகுந்த நாட்களை மக்கள் தினம் தினம் அனுபவித்து வந்தனர். ஜூன் 26ம் தேதி ஒரு மழை பெய்தது.

Advertisment

Chennai Weather :

அதன் பின்பு இங்கும் அங்கும் சாரல் மழை பெய்ய, நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் துவங்கியது. மழை பெய்ய ஆரம்பித்ததும் சாலைகள் தண்ணீர் தேங்க, அலுவலக வேலை முடித்து வீடு திரும்புவோர்கள் நிலை சற்று மோசமானது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

Partial Lunar Eclipse 2019

இன்று நள்ளிரவு முதல் பகுதியளவு சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. இன்று நள்ளிரவு சரியாக 12:12 மணிக்கு துவங்கும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 01:31 மணிக்கு உச்சம் பெறும் என்றும், அதிகாலை 4 மணி 29 நிமிடத்திற்கு கிரகணம் முழுமை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முழுமையான சந்திர கிரகணம் 2021ம் ஆண்டு தான் நிகழும். உங்கள் குழந்தைகளுடன் சந்திரகிரகணத்தை பார்ப்பது எப்படி?

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, Rainfall, Southwest Monsoon, Athi Varadhar, Lunar Eclipse 2019 : இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து செய்திகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    21:07 (IST)16 Jul 2019

    சந்திர கிரகணம் - கோயில்கள் நடைஅடைப்பு

    சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்டவைகளின் நடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    19:57 (IST)16 Jul 2019

    அத்திவரதர் திருவிழா – இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம்

    ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்வத்தின் 16வது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தந்து கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், 15வது நாளான நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த 15 நாட்களில் இதுவரை சுமார் 17 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர்.

    19:29 (IST)16 Jul 2019

    அமமுகவை கண்டு பயப்படும் ஆளுங்கட்சி - டிடிவி தினகரன்

    அமமுகவை கண்டு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகின்றன  என்று அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  உளவுத்துறையினரை வைத்து அமமுகவினர் மிரட்டப்படுவதாக தினகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

    18:56 (IST)16 Jul 2019

    போக்குவரத்துத் துறையில் 37,782 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

    2011ம் ஆண்டு முதல் 2019 வரை போக்குவரத்துத் துறையில் 37,782 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன - போக்குவரத்து மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பேருந்து தடம் காட்டும் புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    18:54 (IST)16 Jul 2019

    ஆந்திராவிற்கு புதிய கவர்னர் நியமனம்

    ஆந்திராவின் புதிய கவர்னராக பிஸ்வா பூஷன் ஹரிசந்தனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

    18:26 (IST)16 Jul 2019

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை : 24 பேருக்கு சம்மன்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 13ம் கட்ட விசாரணை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் நடைபெறும் விசாரணைக்காக 24 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

    18:18 (IST)16 Jul 2019

    வேலூர் மக்களவை தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளர் நியமனம்

    வேலூர் மக்களவை தேர்தல் சிறப்பு செலவீன பார்வையாளராக, சென்னை மண்டல வருமானவரி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற முரளிக்குமாரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

    17:48 (IST)16 Jul 2019

    எடப்பாடி அரசு கொத்தடிமை அரசு - வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

    தமிழக அரசை மத்திய அரசு கால் மிதி போல் பயன்படுத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது, நீட் தேர்வு சமூக நீதியை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை முதுகெலும்பில்லாமல் தமிழக அரசு வேடிக்கைப்பார்க்கிறது. எடப்பாடி அரசு கொத்தடிமை அரசு  என்று வைகோ கூறினார்.

    17:44 (IST)16 Jul 2019

    புதிய கல்விக்கொள்கை ; சூர்யாவின் கருத்தில் தவறில்லை – அன்புமணி ராமதாஸ்

    புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

    17:16 (IST)16 Jul 2019

    தமிழில் தபால்துறை தேர்வு அறிவிப்பு ; திமுகவின் வெற்றி அல்ல – தமிழிசை

    தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல; இது பாஜக அரசு ஜனநாயக முறைப்படி நடக்கிறது என்பதை காட்டுவதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

    நியாயமான கோரிக்கை என்றால், அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    16:49 (IST)16 Jul 2019

    சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

    சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட குழந்தையை பரங்கிமலை காப்பகத்தில் இருந்து செங்கல்பட்டு முகாமிற்கு கொண்டு சென்றனர் . குழந்தையை பெற்றோர் அடையாளம் காட்டி உறுதி செய்தனர்.

    16:31 (IST)16 Jul 2019

    ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராக முடியாது

    ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன் நிறுத்தி முதலமைச்சராவது உறுதி என்று கூறிய அவர், ஸ்டாலின் அரசியல் கனவு பலிக்காது என்றும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக ரஜினி இடையூறாக இருப்பார் என்று நாகப்பட்டினத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

    15:52 (IST)16 Jul 2019

    அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

    தமிழக முதல்வர், எதிர்க் கட்சித் தலைவரை போல, உடல் உறுப்புகளை தானமாக வழங்க அனைத்து எம்.எல்.ஏ-க்களும் முன்வர வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு உடல் உறுப்புகள் கொண்டு வரப்படுவதாகவும், தமிழகத்தில் இருந்து ஒரு உறுப்பு கூட வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் அவரின் மனைவியும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி என அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏற்கனவே உடல் உறுப்பு தானம் செய்ய விண்ணப்பித்து உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    15:41 (IST)16 Jul 2019

    தலைவர்கள் கருத்து!

    மீண்டும் தமிழில் தபால் தேர்வு என மத்திய அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இதுக் குறித்து கூறியிருப்பதாவது, “ ஜனநாயக முறைப்படி அரசு செயல்படுகிறது என்பதை பாஜக அரசு மீட்னும் நிரூப்பித்துள்ளது” என்றார். திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி  கூறியிருப்பதாவது, “இது திமுக-வின் போராட்டத்திற்கும் மற்ற கட்சிகளின் ஒத்துழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என தெரிவித்துள்ளார். 

    15:14 (IST)16 Jul 2019

    3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்!

    தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என தகவல் வெளியாகிறது.  டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுமதி வழங்க இருப்பதாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

    15:02 (IST)16 Jul 2019

    தமிழில் அஞ்சல் தேர்வு!

    தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வு செய்யப்படுகின்றன என மாநிலங்களவையில்  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். இனி  அஞ்சல் தேர்வுகள் தமிழில் நடத்தப்ப்அடாது என அறிவிப்பு வெளியான நிலையில் சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுள்ளது. 

    14:45 (IST)16 Jul 2019

    ராஜாத்தி அம்மாள் அத்தி வரதர் தரிசனம்!

    திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழி அம்மாவான ராஜாத்தி அம்மாள் இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வருகை  தந்தார். பின்பு   அத்திவரதரை தரிசனம் செய்தார். கடந்த வாரம், திமுக தலைவர் ஸ்டாலின்யின் மனைவி துர்கா ஸ்டாலின் பச்சை நிற பட்டுபுடைவை சாத்தி அத்திவரதரை தரிசித்தார். 

    14:28 (IST)16 Jul 2019

    சிக்கலில் ராட்சசி!

    ஜோதிகா நடித்துள்ள ராட்சசி திரைப்படத்தில் அரசு பள்ளிகள், ஆசிரியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையம் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    14:24 (IST)16 Jul 2019

    இரட்டை இலை சின்னம் வழக்கு!

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    13:52 (IST)16 Jul 2019

    அமளியில் அதிமுக எம்பிக்கள்!

    தபால் தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தபால் தேர்வுகள் இனிமேல்  ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்றும் தமிழ் மொழியில் இனி தேர்வு எழுத முடியாது என மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    13:06 (IST)16 Jul 2019

    மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்…

    மும்பை டோங்கிரி பகுதியில் 4 மாடி குடியிருப்பு பகுதி இடிந்து விழுந்தது. 40 பேர் இடர்பாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    12:12 (IST)16 Jul 2019

    கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பம்... தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்?

    அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நீக்கம் குறித்து சபாநாயகர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்தனர். இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் , ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.  நாளை மறுநாள் நடைபெற இருக்கும் குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை குறைக்க இந்த எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதிற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

    11:54 (IST)16 Jul 2019

    நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையில் இல்லாத அமைச்சர்கள்... அதிருப்தியில் மோடி

    நடைபெற்றுக் கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில், நாடாளுமன்ற அவைகளில் இல்லாத அமைச்சர்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார் மோடி. பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அமைச்சர்கள் முறையாக அவையில் இருப்பதில்லை என்று புகார் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் தனக்கு கடிதம் எழுதியிருப்பதை தெரிவித்துள்ளார்.

    11:25 (IST)16 Jul 2019

    இரட்டை இலை விவகாரம்

    இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் ப்ரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு.

    11:23 (IST)16 Jul 2019

    ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு

    சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. அதன் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    11:09 (IST)16 Jul 2019

    Indian Cricket Team New Coach : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

    ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி இந்தியவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிகாலம் அதுவரையில் தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வெளியிட உள்ளது.

    10:47 (IST)16 Jul 2019

    குறைந்து கொண்டே செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை

    அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 2,47,629 பேராக குறைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 4,15,558 பேராக குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 12,10,055 மாணவர்கள் என்று கல்வித்துறை சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    10:40 (IST)16 Jul 2019

    சென்னை நந்தனத்தில் அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு

    நந்தனத்தில் அரசு பேருந்தின் மீது 3 பேர் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்தானதில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பவானி, நாகலட்சுமி ஆகியோர் உயிரிழப்பு. சிவன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    10:24 (IST)16 Jul 2019

    ICC World Cup Cricket 2019 Champions : விருந்தளித்த இங்கிலாந்து பிரதமர்

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பவுண்ட்ரிகள் அடிப்பையில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றது இங்கிலாந்து அணி. வெற்ற பெற்ற வீரர்களுக்கு விருந்தளித்தார் அந்நாட்டின் பிரதமர் தெரசா மே.

    10:06 (IST)16 Jul 2019

    Karnataka Trust Vote Motion: கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைப்பாரா குமாரசாமி?

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை  சபாநாயகர் ஏற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  இந்நிலையில் இன்று அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 18ஆம் தேதி (வியாழக்கிழமை) கர்நாடக முதல்வர் குமாரசாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ரமேஷ் குமார். 

    10:00 (IST)16 Jul 2019

    வரதராஜா பெருமாள் கோவில் அத்திவரதர்

    காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் இருக்கும் அத்திவரதரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி ,காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் கோவிலுக்கென இருக்கும் ஐதீகத்தை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.  நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கடவுளை தரிசிப்பதால் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க பக்தர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர். 

    09:58 (IST)16 Jul 2019

    கும்பகோணம் தீ விபத்து :15ம் ஆண்டு நினைவு தினம்

    கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்தது ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பள்ளி. கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அந்த பள்ளியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலம் அருகே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த கொடூர நிகழ்வு நடந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 94 குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விபத்து நடந்த பள்ளியின் முன்பு தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    Tamil Nadu news today live updates : சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், ஹோட்டலில் வேலை பார்த்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கடத்தி சென்று கொடைக்கானல் கொலை செய்தார்.  இந்த வழக்கு விசாரணை முடிந்து  அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் ராஜகோபால். அவர் ஆஜராகும் போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பிலும் அவருடைய உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி அவருடைய மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    Saravana Bhavan Rajagopal : இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் எம் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு ராஜகோபாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

    Tamil Nadu Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment