Tamil Nadu news today updates: சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட, அதனுடைய 48வது நாளில் லாண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்குமாறு வடிவமைக்கப்பட்டது. நிலவில் தரையிறங்க சரியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது லேண்டர் விக்ரம் சிக்னல்களை இழந்து நிலவில் ஹார்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. செப்டம்பர் 21ம் தேதிக்குள்( அதாவது இன்று) விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பின் தொடர்புக் கொள்ள முடியாது என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரோ சிவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ளும் முயற்சி பலனளிக்க வில்லை என்று அறிவித்தார்.
பொருளாதார மந்தநிலையை சரி செய்யவும், பொதுத் துறை வங்ககளின் லெண்டிங் சதவீதத்தை அதிகரிக்கவும் மத்திய நிதி அமைச்சம் இருக்கும் பொதுத் துறை வங்கிகளை பாதியாக இணைத்தது. இந்த வங்கிகள் இணைப்பை கைவிட கோரி செப். 26, 27 தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் என்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாமல்லபுரத்திற்கு பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி ஆய்வு.
இது போன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள், மற்றும் அரசியல் சூழ்நிலைகளை இங்கே காணலாம்.
சேலம்: மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் மூல லிங்கம் குறித்து பாலவாடி கிராம மக்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு.
ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தாவே கூறிய வீடியோ வெளியானதால் லிங்கத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் புகார்
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்
ரஷ்யாவில் நடைபெறும் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார், இந்திய வீரர் அமித் பன்ஹால்
52கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜோய்ரோ, தங்கம் வென்றார்
வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, வரும் 26, 27 ஆகிய தேதிகளில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அந்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
வரும் 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும், 29-ம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் 26, 27 ஆகிய 2 நாட்களோடு சேர்த்து மொத்தம் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தினால் நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாயும், இந்திய அளவில் 48 ஆயிரம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏ.டி.எம்-களில் பணப்பற்றாக்குறை இருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு தேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வித விதமான கெட் அப்களில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் அவர்... எம்.ஜி ஆர் வேடமிட்டும் அசத்தியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது .
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது. டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.
தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், இன்று சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாயாக விற்பனை ஆகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரு கிராம் சவரன் 3 ஆயிரத்து 586 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 603 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை தொட்ட நிலையில், அதன் பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவில் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக விற்பனையாகி வருகிறது.
சுபஸ்ரீ மரணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை; எங்களை குற்றவாளிகள் போல் சித்தரிக்கின்றனர்
நீதிமன்ற தீர்ப்பால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியுள்ளது
நடிகர்கள் விஜய்,கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது
- டிஜிட்டல் பேனர் சங்கதலைவர் சுரேஷ்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தது முதல் தற்போது வரை குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் உண்டவல்லியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு உட்பட அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட கெஸ்ட்ஹவுஸ்கள் கிருஷ்ணா நதி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்று கூறும் ஆந்திர அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தது. வீட்டை காலி செய்ய ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சந்திரபாபு நாயுடு வாசிக்கும் கெஸ்ட்ஹவுசுக்கு சென்ற அதிகாரிகள் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்ய கோரி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
மாற்று பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து எஃப்ஐஆர் பெற்றுவர மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிற்பித்துள்ளது. முதன்முறையாக பாஸ்போர்ட் பெரும் போது காவல் நிலையத்தில் இருந்து பெறப்படும் சான்றிதழே போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன எனவும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் வீடியோ பதிவுமூலம் கண்காணிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் - என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் திமுக நேர்காணலில் கலந்க்துக் கொள்ளவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமையகத்தில் செப்.23 பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நேர்க்காணலில் தேர்தலில் போட்டியிட விருப்பமனி பெற்ற கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது, தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் இத்தகைய பதிலை அளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை எனவும் டிடிவி கூறியுள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக காங்கிரஸ் போட்டி உறுதியானது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 21 - ல் நடக்க விருக்கும் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி உடன்பாட்டை அறிவித்தார் ஸ்டாலின். உடன் பாட்டின் படி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக விற்கும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிடுகின்றன. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டி.
தலைமைக் கழக அறிவிப்பு.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - 2019
விருப்ப மனு பெறுதல் : 22. 9. 2019 மற்றும் 23.9.2019. pic.twitter.com/YjRmlnB7Ba
— AIADMK (@AIADMKOfficial) September 21, 2019
அக்டோபர் 21 - ல் நடக்க விருக்கும் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கான அதிமுக விருப்ப மனுவை நாளை மற்றும் நாளை மறுநாளில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 25000 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டுத் தலைவர் கே. எஸ் . அழகிரி சந்திப்பு நடைபெற்று வருகிறது.வரும் அக்டோபர் 21-ம் தேதி விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் இடைத் தேர்தல் என்று அறிவித்தது. நாங்குநேரி தொகுதியை முன்வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
திமுக வின் பொதுக் குழு கூட்டம் வரும் அக்டோபர் 6- ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதனாத்தில் நடை பெரும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன்செப்டம்பர் 19 அன்று அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று தேர்தல் வாரியம் விக்கிரவாண்டி, நாங்குனேரி போன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்று இன்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திமுக வின் பொதுக் குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்துவைக்கப் பட்டுக்ளது அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்!
செப்டம்பர் 23ம் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
- சுனில் அரோரா
தலைமை தேர்தல் அதிகாரி #TnElection https://t.co/1u70Kv6u2j pic.twitter.com/b9ufs9M15q— IE Tamil (@IeTamil) September 21, 2019
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார். வேட்பு மனு தாக்கல் வரும் செப்.30ஆம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு முறை பயணமாக செப்டம்பர் 21 (இன்று) முதல் செப்டம்பர் 27 வரை அமெரிக்காவிற்கு பயணம் செய்ய உள்ளார். இன்று விமானம் மூலம் பயணத்தைத் தொடங்கினார் மோடி. ஆனால், விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஜெர்மனி பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு பயணம் தொடங்கியது.
சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா 2019-2020-ம் ஆண்டு ‘நீட்’தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார் என்ற சில நாட்களுக்கு முன் தெரிய வந்துள்ளது. இது குறித்து, போலீசார் தனிப்படை அமைத்து உதித்சூர்யா வைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அஷியா பேகம் தலைமையில் முதலாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Howdy Modi
Corporate Diwali
India foregoes 1.45 lakh cr. revenue
Need Diwali for needy folk !
Extra money in corporate hands will not boost demand . Need extra money in hands of rural India to spur consumption.
The rich will benefit
The poor left to fend for themselves— Kapil Sibal (@KapilSibal) September 21, 2019
நாட்டின் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சரி செய்யும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கார்பரேட் வரியைக் கணிசமான முறையில் குறைத்தார். இதனால், 1.45 லட்சம் கோடி வருவாய் வரை அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் - இந்த நடவடிக்கை பாரபட்ச மானது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனால், பணக்காரர்கள்மட்டும் தான் பயனடைவார்கள். நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய ஏழைகளிடம் பணத்தைக் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்க உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையின் காலம் நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஹரியானா சட்டசபையின் காலம் வரும் நவம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்த பின்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது.
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி பதவி விலகல் கடிதத்தை இன்று ஏற்றுள்ளார். இந்த பதவி விலகல் செப்டம்பர் 6- ம் தேதியில் இருந்து நடைமுறை படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையின் தலைமை நீதிபதியாக இருந்த கமலேஷ் தஹில்ரமணி உச்ச நீதிமன்ற கொலிஜியம் இவரை மேகாலய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றியிருந்தனர். இந்த முடிவை எதிர்த்து கமலேஷ் தஹில்ரமணி செப்டம்பர் 6- ம் தேதி ஜனாதிபதிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தகது
செப்டம்பர் 21ம் தேதிக்குள்( அதாவது இன்று) விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையேல், அதன் பின் தொடர்புக் கொள்ள முடியாது என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரோ சிவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ளும் முயற்சி பலனளிக்க வில்லை என்று அறிவித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநில சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சரி செய்யும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கார்பரேட் வரியைக் கணிசமான முறையில் குறைத்தார். இதனால்,சென்சக்ஸ் நேற்று ஒரு நாளில் மட்டும் 1921.15 புள்ளிகள் உயர்ந்தன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights