Advertisment

Tamil Nadu news today : சிதம்பரத்தை காட்டி ஸ்டாலினை மத்திய அரசு மிரட்டியது - அமைச்சர் செல்லூர் ராஜு

தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்கள் , பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் , சென்சக்ஸ் நிலவரம் போன்ற முக்கியத் தகவல்களை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News today live updates

Tamil Nadu News today live updates

Tamil Nadu news today updates: சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட, அதனுடைய 48வது நாளில் லாண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்குமாறு வடிவமைக்கப்பட்டது. நிலவில் தரையிறங்க சரியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது லேண்டர் விக்ரம் சிக்னல்களை இழந்து நிலவில் ஹார்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. செப்டம்பர் 21ம் தேதிக்குள்( அதாவது இன்று) விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பின் தொடர்புக் கொள்ள முடியாது என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரோ சிவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ளும் முயற்சி பலனளிக்க வில்லை என்று அறிவித்தார்.

Advertisment

பொருளாதார மந்தநிலையை சரி செய்யவும், பொதுத் துறை வங்ககளின் லெண்டிங் சதவீதத்தை அதிகரிக்கவும் மத்திய நிதி அமைச்சம் இருக்கும்   பொதுத் துறை வங்கிகளை பாதியாக இணைத்தது. இந்த வங்கிகள் இணைப்பை கைவிட கோரி செப். 26, 27 தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் என்று  வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதி ஆய்வு.

இது போன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள், மற்றும் அரசியல் சூழ்நிலைகளை இங்கே காணலாம்.   



























Highlights

    21:34 (IST)21 Sep 2019

    நித்யானந்தா சர்ச்சை

    சேலம்: மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் மூல லிங்கம் குறித்து பாலவாடி கிராம மக்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினர் நடத்திய விசாரணை நிறைவு.

    ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தாவே கூறிய வீடியோ வெளியானதால் லிங்கத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் புகார்

    21:33 (IST)21 Sep 2019

    இளைஞரணியில் தகுதியான நபர்களுக்கு வாய்ப்பு

    உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் இளைஞரணியில் தகுதியான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் - சத்தியமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    20:51 (IST)21 Sep 2019

    ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும்

    இந்தி மொழிக்கு எதிராக திமுக போராடினால் ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் வரும் என மத்திய அரசு

    மிரட்டியதையடுத்து போராட்டத்தை நடத்தவில்லை -அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    20:50 (IST)21 Sep 2019

    மோடியை பின்பற்றி வெளிநாடு பயணம்

    தமிழக முதல்வர் அவருடைய தலைவரான பிரதமர் மோடியை பின்பற்றி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என காங். செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

    20:26 (IST)21 Sep 2019

    சுமார் 2.30 மணிநேரம் விசாரணை

    நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம், விசாரணை அதிகாரி உஷா நடத்திய விசாரணை நிறைவு.

    ஆள்மாறாட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம், சுமார் 2.30 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

    20:25 (IST)21 Sep 2019

    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

    ரஷ்யாவில் நடைபெறும் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார், இந்திய வீரர் அமித் பன்ஹால்

    52கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜோய்ரோ, தங்கம் வென்றார்

    19:48 (IST)21 Sep 2019

    வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்: நான்கு நாள்கள் வங்கிச் சேவை முடங்கும் அபாயம்

    வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, வரும் 26, 27 ஆகிய தேதிகளில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அந்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

    வரும் 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும், 29-ம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் 26, 27 ஆகிய 2 நாட்களோடு சேர்த்து மொத்தம் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தினால் நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாயும், இந்திய அளவில் 48 ஆயிரம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏ.டி.எம்-களில் பணப்பற்றாக்குறை இருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

    19:44 (IST)21 Sep 2019

    தெலுங்கு தேச முன்னாள் எம்பி என்.சிவபிரசாத் மரணம்

    சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு தேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வித விதமான கெட் அப்களில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் அவர்... எம்.ஜி ஆர் வேடமிட்டும் அசத்தியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது .

    19:41 (IST)21 Sep 2019

    நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - டிஜிபிக்கு பரிந்துரை?

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது. டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.

    19:39 (IST)21 Sep 2019

    அபராதத் தொகை குறைப்பு

    கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    19:38 (IST)21 Sep 2019

    அக்.2 முதல் அக்.30 வரை பாத யாத்திரை

    மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அக்.2 முதல் அக்.30 வரை பாத யாத்திரையில் பாஜகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

    18:57 (IST)21 Sep 2019

    சவரனுக்கு ரூ.136 உயர்வு

    தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், இன்று சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாயாக விற்பனை ஆகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனையானது.

    நேற்று ஒரு கிராம் சவரன் 3 ஆயிரத்து 586 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 603 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை தொட்ட நிலையில், அதன் பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவில் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக விற்பனையாகி வருகிறது.

    18:56 (IST)21 Sep 2019

    சுபஸ்ரீ மரணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

    சுபஸ்ரீ மரணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை; எங்களை குற்றவாளிகள் போல் சித்தரிக்கின்றனர்

    நீதிமன்ற தீர்ப்பால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியுள்ளது

    நடிகர்கள் விஜய்,கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது

    - டிஜிட்டல் பேனர் சங்கதலைவர் சுரேஷ்

    18:54 (IST)21 Sep 2019

    3ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் பகுதியில் குளத்தில் குளிக்கச் சென்ற 3ம் வகுப்பு மாணவன் சரவணன்(10) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

    18:53 (IST)21 Sep 2019

    சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தது முதல் தற்போது வரை குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் உண்டவல்லியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுசில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு உட்பட அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட கெஸ்ட்ஹவுஸ்கள் கிருஷ்ணா நதி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்று கூறும் ஆந்திர அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தது. வீட்டை காலி செய்ய ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சந்திரபாபு நாயுடு வாசிக்கும் கெஸ்ட்ஹவுசுக்கு சென்ற அதிகாரிகள் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்ய கோரி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

    17:24 (IST)21 Sep 2019

    மத்திய அரசு அதிரடி!

    மாற்று பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து எஃப்ஐஆர் பெற்றுவர மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று  மத்திய அரசு உத்தரவு பிற்பித்துள்ளது.   முதன்முறையாக பாஸ்போர்ட் பெரும் போது  காவல் நிலையத்தில் இருந்து பெறப்படும் சான்றிதழே போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    17:07 (IST)21 Sep 2019

    அமித் ஷா ஆலோசனை!

    இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக-வினருடன் அமித் ஷா  இன்று அவசர ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை காணொலி காட்சி மூலமாக அமித் ஷா உரையாடுகிறார் என்றும்  இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    16:49 (IST)21 Sep 2019

    தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்!

    அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. 

    16:47 (IST)21 Sep 2019

    விக்கிரவாண்டி தொகுதி!

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன எனவும்  அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் வீடியோ பதிவுமூலம் கண்காணிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    16:18 (IST)21 Sep 2019

    மக்கள் நீத்கி மய்யம் போட்டி?

    அக். 21-ம் தேதி நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தகவல், இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    15:53 (IST)21 Sep 2019

    திமுக நேர்காணல்!

    திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் - என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும்  இவர்கள் அனைவரும்  திமுக நேர்காணலில் கலந்க்துக் கொள்ளவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. 

    15:31 (IST)21 Sep 2019

    அதிமுக சார்பில் நேர்காணல்!

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமையகத்தில் செப்.23 பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  நேர்க்காணலில் தேர்தலில் போட்டியிட விருப்பமனி பெற்ற கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    14:59 (IST)21 Sep 2019

    தேர்தலுக்கு அதிமுக தயார்!

    இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது, தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று  அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் இத்தகைய பதிலை அளித்துள்ளார். 

    14:36 (IST)21 Sep 2019

    அமமுக விலகல் !

    இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை  எனவும் டிடிவி கூறியுள்ளார்.  நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக காங்கிரஸ் போட்டி உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

    14:14 (IST)21 Sep 2019

    ஸ்டாலின் அறிவிப்பு

    அக்டோபர் 21 - ல் நடக்க விருக்கும் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி உடன்பாட்டை அறிவித்தார் ஸ்டாலின். உடன் பாட்டின் படி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக விற்கும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும்  போட்டியிடுகின்றன. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டி. 

    13:34 (IST)21 Sep 2019

    அதிமுக விருப்ப மனு வெளியானது-

    அக்டோபர் 21 - ல் நடக்க விருக்கும் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கான அதிமுக விருப்ப மனுவை நாளை மற்றும் நாளை மறுநாளில்  பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ. 25000 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

    13:28 (IST)21 Sep 2019

    ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நடை பெற்று வருகிறது

    திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டுத் தலைவர் கே. எஸ் . அழகிரி சந்திப்பு நடைபெற்று வருகிறது.வரும் அக்டோபர் 21-ம் தேதி விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில் இடைத் தேர்தல் என்று அறிவித்தது.  நாங்குநேரி தொகுதியை முன்வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

    13:20 (IST)21 Sep 2019

    திமுக பொதுக் குழு கூட்டம் ஒத்திவைப்பு

    திமுக வின் பொதுக் குழு கூட்டம் வரும் அக்டோபர் 6- ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதனாத்தில் நடை பெரும் என்று கட்சியின்  பொதுச் செயலாளர் அன்பழகன்செப்டம்பர் 19 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.  இந்நிலையில், இன்று தேர்தல் வாரியம் விக்கிரவாண்டி, நாங்குனேரி போன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும்  அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்று இன்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து  திமுக வின் பொதுக் குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்துவைக்கப் பட்டுக்ளது அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    12:54 (IST)21 Sep 2019

    தமிழகத்தில் இடைத்தேர்தல்:

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார். வேட்பு மனு தாக்கல் வரும் செப்.30ஆம் தேதியும்,  வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    12:47 (IST)21 Sep 2019

    பயணத்தில் தாமதம்:

    அரசு முறை பயணமாக செப்டம்பர் 21 (இன்று) முதல் செப்டம்பர் 27 வரை அமெரிக்காவிற்கு பயணம் செய்ய உள்ளார். இன்று விமானம் மூலம் பயணத்தைத் தொடங்கினார் மோடி. ஆனால், விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஜெர்மனி பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு பயணம் தொடங்கியது.  

    12:36 (IST)21 Sep 2019

    நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம்:

    சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா 2019-2020-ம் ஆண்டு ‘நீட்’தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார் என்ற சில நாட்களுக்கு முன் தெரிய வந்துள்ளது. இது குறித்து, போலீசார் தனிப்படை அமைத்து உதித்சூர்யா வைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அஷியா பேகம் தலைமையில் முதலாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    11:43 (IST)21 Sep 2019

    கார்ப்பரேட் வரி குறைப்பு - கபில் சிபல் கருத்து

    நாட்டின் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சரி செய்யும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கார்பரேட் வரியைக் கணிசமான முறையில் குறைத்தார். இதனால்,  1.45 லட்சம் கோடி  வருவாய் வரை அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

    இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் - இந்த நடவடிக்கை பாரபட்ச மானது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனால்,  பணக்காரர்கள்மட்டும் தான் பயனடைவார்கள். நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய ஏழைகளிடம் பணத்தைக் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

    11:32 (IST)21 Sep 2019

    தேர்தல் தேதி அறிவிப்பு:

    மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்க உள்ளது.  மகாராஷ்டிரா சட்டசபையின் காலம் நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஹரியானா சட்டசபையின் காலம் வரும் நவம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்த பின்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது. 

    11:26 (IST)21 Sep 2019

    கமலேஷ் தஹில்ரமணி பதவி விலகல் கடிதம்.

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி பதவி விலகல் கடிதத்தை இன்று ஏற்றுள்ளார். இந்த பதவி விலகல் செப்டம்பர் 6- ம் தேதியில் இருந்து நடைமுறை படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    சென்னையின் தலைமை நீதிபதியாக இருந்த கமலேஷ் தஹில்ரமணி உச்ச நீதிமன்ற கொலிஜியம் இவரை மேகாலய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றியிருந்தனர். இந்த முடிவை எதிர்த்து கமலேஷ் தஹில்ரமணி செப்டம்பர் 6- ம் தேதி ஜனாதிபதிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தகது

    11:17 (IST)21 Sep 2019

    இஸ்ரோ முயற்சி பலனளிக்க வில்லை

    செப்டம்பர் 21ம் தேதிக்குள்( அதாவது இன்று) விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையேல், அதன் பின் தொடர்புக் கொள்ள முடியாது என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரோ சிவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விக்ரம் லேண்டரோடு தொடர்பு கொள்ளும் முயற்சி பலனளிக்க வில்லை என்று அறிவித்திருக்கிறார். 

    Tamil Nadu news today updates: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    நாட்டின் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சரி செய்யும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கார்பரேட் வரியைக் கணிசமான முறையில் குறைத்தார். இதனால்,சென்சக்ஸ் நேற்று ஒரு நாளில் மட்டும் 1921.15 புள்ளிகள் உயர்ந்தன

    Live Updates
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment