Tamil Nadu News Today Updates : நீட் தேர்வு தமிழகத்திற்கு கூடாது இதுவே அரசின் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

Petrol Diesel Price in Chennai : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.78-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.13-க்கும் விற்பனையாகிறது.

Tamil Nadu news today live updates

Tamil Nadu News Today Live Updates : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் தற்போது ரூ.28,896-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மரணமடைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகின்ற நிலையில் அவருடைய நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளைப் படிக்க

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, and airlines : இன்று சென்னை மற்றும் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

21:35 (IST)16 Aug 2019
நீட் தேர்வு தமிழகத்திற்கு கூடாது இதுவே அரசின் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வு தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 'நீட்' தேர்வு விவகாரத்தில் விதை போட்ட திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

20:43 (IST)16 Aug 2019
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் சாரல்மழை பெய்துவந்த நிலையில், தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. மழையால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

20:34 (IST)16 Aug 2019
திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை

திருத்தணி அருகே ஓட்டலுக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட இளைஞர் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

20:22 (IST)16 Aug 2019
அத்திவரதர் திருவிழா நிறைவு – சிறப்பு ரயில்கள் நிறுத்தம்

அத்திவரதர் வைபவம் முடிவடைவதால் காஞ்சிபுரத்திற்கு அறிவித்த சிறப்பு ரயில்கள் சேவை நாளையோடு நிறுத்தம்.  காஞ்சிபுரத்தில் ஆக.18 முதல் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

19:41 (IST)16 Aug 2019
அத்திவரதர் திருவிழா – அனைத்து துறையினருக்கும் முதல்வர் நன்றி

அத்திவரதர் வைபவத்தில் தன்னலம் பாராமல் இரவும், பகலும் உழைத்த அனைத்து துறையினருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள். மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக அத்திவரதர் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:36 (IST)16 Aug 2019
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என கபில் தேவ் தலைமையிலான தேர்வு குழு அறிவித்துள்ளது.

18:00 (IST)16 Aug 2019
அத்திவரதர் தரிசனம் இன்று இரவு 9 மணியுடன் நிறைவு

அத்திவரதர் தரிசனம் இன்று  (16ம் தேதி) இரவு 9 மணியுடன் நிறைவு பெறுவதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். கோவிலின் கிழக்கு கோபுர வாசல் இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்றும், இதன்பின்னர், கோயிலில் உள்ளவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

17:05 (IST)16 Aug 2019
மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடி குறைந்து 20 ஆயிரம் கனஅடியானது. மேட்டூர் அணையில் தற்போது 81.25 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. கடந்த சில தினங்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்த காரணத்தினால் காவிரி கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்படிட்ருந்தனர். இந்நிலையில் அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளது. 

16:51 (IST)16 Aug 2019
வி.பி.சந்திரசேகர் உடலுக்கு அஞ்சலி!

நேற்று தற்கொலை செய்துக் கொண்ட  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் உடலுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார். வி.பி.சந்திரசேகரின் மரணத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அவர் உருக்கமாக தெரிவித்தார். 

16:11 (IST)16 Aug 2019
மு. க ஸ்டாலின் அவசர கடிதம்!

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு. க ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் போதாது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்  என்றும் அந்த கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

15:43 (IST)16 Aug 2019
மோடி - எடியூரப்பா சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று நேரில் சந்தித்தார்.  கடுமையான வெள்ளதால பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்திற்கு உடனடியாக நிவாரண நிதியை  விடுவிக்கும் படியும்., பிற உதவிகளை செய்து தரும்படியும் மோடியிடம் கோரிக்கை வைத்தார். 

15:41 (IST)16 Aug 2019
அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக நடிகர் ரஜினி கூறியுள்ள கருத்தை வரவேற்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 1962-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணா கூறிய கருத்தை தான் ரஜினி தற்போது கூறுவதாகவும் தெரிவித்தார்.  செல்லூர் ராஜூவின்  இந்த கருத்தை மற்ற சில அதிமுக அமைச்சர்களும் ஆதரித்துள்ளனர். 

14:50 (IST)16 Aug 2019
நாளைக்கு குளத்துக்குள் வைக்கப்படுகிறார் அத்தி வரதர்

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு ஒரு மண்டலம் மக்களின் வழிபாட்டிற்கு வைக்கப்படும் அத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவடைகிறது. பக்தர்களின் வருகையைப் பொறுத்தே நடை சாத்தப்படும் என்று காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். நாளை மாலை அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திவரதர் வைக்கப்படுகிறார் என்று கூறியவர் அனைத்து தரப்பினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்றும் காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

14:34 (IST)16 Aug 2019
பிரதமர் மோடியை சந்தித்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடக முதல்வர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்தவதஆற்கான நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

14:00 (IST)16 Aug 2019
ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவு

13:09 (IST)16 Aug 2019
காஷ்மீரில் திங்கள் முதல் பள்ளிகள் செயல்படும்

கடந்த 5ம் தேதி முதல் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், பத்திரிக்கை நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்து உள்ள நிலையில், திங்கள் முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

12:48 (IST)16 Aug 2019
உமா மகேஸ்வரி கொலை வழக்கு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கினை விசாரணை செய்து வந்தார் டி.எஸ்.பி. அனில்குமார். அவர் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரி டி.எஸ்.பி. ஃப்ராங்க்ளின் ரூபன் விசாரணையை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12:18 (IST)16 Aug 2019
தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

நெல்லை ஆணையராக தீபக் தாமர் நியமனம். நெல்லை ஆணையராக பணியாறிய பாஸ்கரன் சென்னை மாவட்ட செயலாக்கத்துறை ஐ.ஜி.யாக மாற்றம்.  ரங்கராஜன் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.  திருப்பூர் மாவட்ட எஸ்.பி. கயல்விழி உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படை கமாண்டண்ட்டாக நியமனம்.  சென்னை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நிஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்.

12:02 (IST)16 Aug 2019
மோடியின் திட்டத்தை வரவேற்ற ப. சிதம்பரம்

நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழா உரையின் போது மோடி அறிவித்த ப்ளாஸ்டிக் ஒழிப்பு, குடும்பக்கட்டுப்பாடு போன்ற சிறப்பு அம்சங்களை வரவேற்றுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

11:45 (IST)16 Aug 2019
அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க இயலாது - உயர் நீதிமன்றம் மறுப்பு

லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வருகை புரிவதால் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாராணைக்கு வந்த இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க இயலாது என்று உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, நீட்டிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அறிவிப்பு. ஆகமவிதிகள் படி அனந்தசரஸ் குளத்திற்குள் சிலை வைக்கப்படுவதாக என அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடினார்.  கோயிலின் மரபு வழிபாடுகளில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது என்றும், கோயில் நிர்வாகமும் அரசும் சேர்ந்து தான் தரிசன நேர நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.

11:41 (IST)16 Aug 2019
New coach for Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். தலைமை பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங் கோச், ஃபீல்டிங்க் கோச் ஆகியோரின் பதவிகாலங்கள் முடிவுற்ற நிலையில் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தலைமை பயிற்சியாளருக்கான தேர்வு இன்று நடைபெற்று முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:32 (IST)16 Aug 2019
ஜம்மு காஷ்மீர் விவகாரம்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவினை திரும்பப் பெற கூறியும், தொலைபேசி, இணைய சேவைகளை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவின் மீதான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

11:30 (IST)16 Aug 2019
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் நீரை திறந்துவிடுகிறது கர்நாடக அரசு. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 18,985 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 8000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu news today live updates : காஞ்சியில் எழுந்தருளிய அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் அத்தி வரதரை 48 நாட்கள் மக்கள் தரிசனம் செய்யலாம். லட்சக்கணக்கான மக்கள் இந்த 48 நாளில் அத்தி வரதரை சந்தித்துள்ளனர். பெரிய வி.ஐ.பிகள் முதற்கொண்டு அனைவரும் இங்கு வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Chennai Weather : இந்த வார இறுதியில் சென்னைக்கு கனமழை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Web Title:

Tamil nadu news today live updates chennai weather athi varathar vajpayee death anniversary kerala flood gold rate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close