Advertisment

Tamil Nadu news today updates : நீட் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

பெட்ரோல் டீசல் விலை : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.12க்கும், டீசல் ரூ. 70.98க்கும் விற்பனையாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neet impersonation case high court madurai bench granted bail udit surya - நீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு!

Neet impersonation case high court madurai bench granted bail udit surya - நீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு!

Tamil Nadu news today updates : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் 86வது பிறந்த நாள் இன்று. இந்தியாவின் பிரதமராக 2 முறை ஆட்சியில் இருந்தவர். மேலும் தற்போது ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸால் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அவருடைய பிறந்த நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Advertisment

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனங்களை தெரிவித்த எம்.பி. ஜோதிமணி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை விமர்சித்து பேசியதை கண்டித்து கரூர் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை வானிலை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று அறிவித்துள்ளனர்.

அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன்  அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    21:49 (IST)26 Sep 2019

    உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

    நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யா, தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 2 பேரையும் அக்.10 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    20:53 (IST)26 Sep 2019

    சென்னையில் குடியிருப்பில் வெடிகுண்டு?

    சென்னை அண்ணா நகரில் தாதா மணிகண்டன் பதுங்கியிருந்த குடியிருப்பில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

    20:51 (IST)26 Sep 2019

    சில்லறை வணிகத்தில் பணப்புழக்கம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை

    சில்லறை வணிகத்தில் பணப்புழக்கம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை : டெல்லியில் தனியார் வங்கி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

    20:24 (IST)26 Sep 2019

    உதித் சூர்யா, தந்தை வெங்கடேசன் நீதிமன்றத்தில் ஆஜர்

    நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிசிஐடி. 

    20:18 (IST)26 Sep 2019

    கீழடியில் மு.க.ஸ்டாலின்

    கீழடியில் அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை நாளை பார்வையிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    20:03 (IST)26 Sep 2019

    இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

    இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி என தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்துஜா குடும்பத்தினர் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி சொத்து மதிப்புடன் 2 வது இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் அசீம் பிரேம்ஜியும், 4 ஆம் இடத்தில் கவுதம் அதானியும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    19:42 (IST)26 Sep 2019

    மேலும் 5 வேலையில்லா நாட்கள் - அசோக் லேலண்ட்

    ஆட்டோமொபைல் துறைகளின் தொடர் சரிவு காரணமாக, மேலும் 5 நாட்களுக்கு வேலையில்லா நாட்களாக ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவிப்பு

    அறிவிக்கப்பட்டுள்ள வேலையில்லா நாட்களில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - அசோக் லேலண்ட்

    19:23 (IST)26 Sep 2019

    தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி!

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளியின் மகள் சுபாஷினி. மாற்றுத்திறனாளியான இவர், சேலம் அயோத்யா பட்டணத்திலுள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கான விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்ட சுபாஷினி, பாரா ஜூடோ போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடிய சுபாஷினி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது ஒருபுறமிருக்க வறுமையின் காரணமாக மாணவி சுபாஷினி காமன் வெல்த் போட்டியில் பங்கேற்பதில் எழுந்த சிக்கல் பற்றி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழக அரசு உதவியுடன் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற மாணவி சுபாஷினி தற்போது தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    19:21 (IST)26 Sep 2019

    நீட் ஆள்மாறாட்டம் - ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டதா?

    நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் தரப்பட்டதாக தகவல்

    உதித் சூர்யா, அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இடைத்தரகர்கள் விவரம் கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் மும்பை செல்ல முடிவு.

    19:20 (IST)26 Sep 2019

    உதித் சூர்யா தந்தைக்கு மருத்துவ பரிசோதனை

    நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோருக்கு தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    மருத்துவ பரிசோதனைக்கு பின் இருவரும் தேனி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    18:43 (IST)26 Sep 2019

    உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மீது நடவடிக்கை

    பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரவி வர்மன், உதவி பொறியாளர் கமல்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை. இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    18:41 (IST)26 Sep 2019

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு

    இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ், ரங்கசாமி முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    18:04 (IST)26 Sep 2019

    அமைதிக்கான நோபல் பரிசு

    2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதுக்காக ஸ்வீடனை சேர்ந்த 16 வயதேயான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    17:28 (IST)26 Sep 2019

    தவறு செய்து விட்டோம் - உதித் சூர்யா தந்தை

    நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யாவின் குடும்பே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவரின் தந்தை வெங்கடேசன், 'மகனை மருத்துவராக்க வேண்டும் என்று ஆசையில், பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஆள்மாறாட்டம் செய்துவிட்டோம்' என்று ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

    17:22 (IST)26 Sep 2019

    காவிரி ஒழுங்காற்று குழு

    காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 10ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    17:21 (IST)26 Sep 2019

    பள்ளிகளில் ஸ்மார்ட்போன் - அமைச்சர் செங்கோட்டையன்

    7800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். அடுத்த மாதம் இறுதிக்குள் 7ஆயிரத்து 800 பள்ளிகளில் கணினி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறினார்.

    17:20 (IST)26 Sep 2019

    மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாஜகவில்...

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாஜகவில் இணைந்தார். முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங் பாஜகவில் இணைந்தார்

    17:19 (IST)26 Sep 2019

    உதித் சூர்யாவின் பெற்றோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யாவின் பெற்றோர் மீது குற்றவாளியை தப்பிக்க விடுதல், குற்றவாளிக்கு இடம் கொடுத்தல், கூட்டு சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    16:53 (IST)26 Sep 2019

    தூக்குத் தண்டனை - கோவை நீதிமன்றம் பரபரப்பு

    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் 2013ம் ஆண்டில், நகைக்காக சரோஜினி என்ற பெண்ணைத் துண்டு துண்டாக வெட்டி, கொலை செய்த வழக்கில்  கோவை மாவட்ட நான்காவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று யாசர் அராபத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    16:40 (IST)26 Sep 2019

    கர்நாடக இடைத் தேர்தல் ஒத்திவைப்பு

    கர்நாடக வின் முன்னாள் சபா நாயகர்,  குமாரசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளாத 15 சட்ட மன்ற உறுப்பினர்களை பதவி இறக்கம் செய்தார்.  இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் தேர்த ஆணையம் இந்த 15 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது .  இன்று உச்ச நிதி மன்றம்  வழக்கு விசாரனையில் இருப்பதால்  இடைத் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.  எடியூரப்பாவின் ஆட்சியில் இந்த 15 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடும் தாகத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

    16:31 (IST)26 Sep 2019

    நீட் ஆள் மாறாட்டம்:

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிசெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பயொமெட்ரிக் நடைமுறைகளை விரிவுபடுத்தி தேர்வு முறைகேடுகளை தவிர்க்கவும் கோரிக்கை. 

    15:46 (IST)26 Sep 2019

    ராபர்ட் பயஸ் பரோல் மனு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கடந்த 28 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினிக்கு கடந்த ஜூலை மாதம் ஒரு மாத பரோலில் வெளி வந்தது நம் அனைவருக்கும் தெரியும்.  இதே வழக்கில் , சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் என்பவரும் கடந்த 28 வருடங்களாகவே சிறையில் இருந்து வருகிறார். இவர் தற்போது, ஒரு மாத பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 28 வருடங்களாக சிறையில் நான் மதிப்பை பெற்றவன், சிறை அதிகாரி தனது பரோல் விண்ணப்பத்தை செவி சாய்க்காமல் இருந்தாதல் உயர் நீதிமன்றம் அணுகியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

    15:27 (IST)26 Sep 2019

    ராஜ்ய சபா தேர்தல்:

    அருண் ஜெட்லி மற்றும் ராம் ஜெத்மலானி ஆகியோரின் மரணம் காரணமாக காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜெய்ட்லி உத்தரபிரதேசத்திலும் இருந்தும்,  ஜெத்மலானி பீகாரில் இருந்து பாஜகவை  சார்பில் ராஜ்ய சபாவின் உறுப்பினர்களா இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.  

    வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 16, 2019 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. 

    15:23 (IST)26 Sep 2019

    மீண்டும் நிலநடுக்கம்:

    இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பீம்பர் பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில், கடந்த செவ்வாயன்று ரிக்டர் அளவு கோளில் 6.3 பதிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது. இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்ப்படவில்லை என்று அங்கிரிந்து வரும்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    15:13 (IST)26 Sep 2019

    முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குனர் நிலை I க்கான தேர்வுகள் வருகின்ற 27-09-2019, 28-09-2019 மற்றும் 29-09-2019 ஆகிய தேதிகளில் தமிழகமெங்கும் 30 மாவட்டங்களில் சுமார் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கப்பட வேண்டும் என்று கண் பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நிதி மன்றத்தில் வழக்கு பதவி செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில், பார்வையற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத உதவியாளர்கள் நியமிக்கபடுவதை தமிழக அரசு உரிது செய்ய வேண்டும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. 

    14:29 (IST)26 Sep 2019

    வெங்காய விலை குறைந்தது

    இந்த வருடம் மே மாதம் தொட்டே ஹோல்-சேல் மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆனால், இன்று வெங்கயாத்தின் விலை சரிவை சந்தித்துள்ளன. கோயம்பேடில் கிலோ 45 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது . கடந்த வாரத்தில் மட்டும் வ்ஹோல் சேல் மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.4000க்கும் விற்பனையாகி வந்தது என்பது குறிப்பிடத் தக்கது

    14:22 (IST)26 Sep 2019

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை - வைகோ கருத்து

    அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (All India Council for Technical Education (AICTE)) அறிவுறுத்தலின் படி முதுநிலை பொறியியல் படிப்பில் பகவத் கீதையை பாடமாக இணைக்கும் அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழக அறிவித்திருந்தது. மேலும், இது விருப்ப பாடமாகத் தான் நடைமுறைப்படுத்தப் படும் என்றும் அறிவித்திருந்தது. கல்வி நிலையங்களில் மதம் சார்பான கல்வியை கொண்டுவருவது பற்றி பல தலைவர்களும், கல்வியாளர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அண்ணா பல்கலைக் கழகத்தில்  பகவத் கீதை கொண்டு வருவது மிகத் தவறானது என்று தெரிவித்துள்ளார். மேலும், விருப்பப் பாடமாக கூட அதை வைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். 

    12:56 (IST)26 Sep 2019

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ரூபா குருநாத்

    ஐ.சி.சி. முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகள் தான் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    12:34 (IST)26 Sep 2019

    திரையரங்குகளில் இனிமேல் அரசே டிக்கெட்களை விற்பனை செய்யும்

    தலைமை செயலகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. திரையரங்குகளில் அரசே ஆன்லைன் மூலமாக டிக்கெட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    12:06 (IST)26 Sep 2019

    நீட் விவகாரம் : சோதனைக்குள்ளாகும் 2017, 2018 மாணவர்கள் சேர்க்கை

    அட்மிட் கார்டில் உள்ள புகைப்படமும், கலந்தாய்வு புகைப்படமும் வெவ்வேறாக இருப்பதாக கூறி கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரியில் இருந்து அறிக்க வந்ததாக எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் அறிவித்துள்ளார். கலந்தாய்வின் போது எவ்வாறு தவறு நடந்தது என தெரியவில்லை என்று கூறிய அவர் உரிய ஆவணங்களை அளித்தால் தான் அவர்கள் பெயர் பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். மாணவர் சேர்க்கையில் முறைக்கேடு நடைபெற்றிருக்குமா என மருத்துவக்கல்லூரி இயக்குநர் அலுவலகத்திடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    11:49 (IST)26 Sep 2019

    45 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள்

    முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் தொடங்கப்பட இருக்கும் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ரூ. 7,175 கோடி முதலீட்டில் துவங்க இருக்கும் நிறுவனங்களால் தமிழகத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    11:23 (IST)26 Sep 2019

    அயோத்தி வழக்கு : ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்க முடியாது

    அயோத்தி வழக்கில் அக்டோபர் 18ம் தேதிக்குள் அனைத்து வாதங்களையும் முடிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்பு ஒரு நாள் கூட வாதத்திற்கான அவகாசம் வழங்க இயலாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    11:09 (IST)26 Sep 2019

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பரோல் கேட்டு மனு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 நபர்களில் ஒருவர் ராபர்ட் பயஸ் ஆவார். தன்னுடைய மகன் திருமணம் நெதர்லாந்தில் நடைபெற இருப்பதால் திருமண ஏற்பாடுகளை நடத்த ஒரு மாத பரோல் வேண்டும் என மனு. இவருடைய மனு குறித்து சிறைத்துறை டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் 2 வாரங்களில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    11:09 (IST)26 Sep 2019

    370 புதிய பேருந்துகள் இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

    ரூ. 109 கோடி மதிப்பில் 370 புதிய பேருந்துகளை துவங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் என்பதால் பயணிகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும். சென்னையில் இருக்கும் தலைமை செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

    11:04 (IST)26 Sep 2019

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.369 குறைந்தது

    சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.369 குறைந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை ரூ.28,776 ஆகும்.

    11:04 (IST)26 Sep 2019

    பெங்களூர் செய்திகள் : முன்னாள் காவல் ஆணையர் வீட்டில் சி.பி.ஐ சோதனை

    குமாரசாமியின் ஆட்சி காலத்தில் பெங்களூரூவில் காவல் ஆணையராக பணியாற்றினார் அலோக் குமார். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அவருடைய வீட்டில் இன்று காலையில் இருந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    10:35 (IST)26 Sep 2019

    மன்மோகன் சிங் பிறந்த நாள் - ஸ்டாலின் வாழ்த்து

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்துகளை கூறியுள்ளார். நம் நாடு அவரிடம் இருந்து இன்னும் பல நன்மைகளை பெரும். நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அவரின் சேவை தொடர அவர் மென்மேலும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

    10:31 (IST)26 Sep 2019

    நீட் விவகாரம்

    கோவை தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பது குறித்து அக்கல்லூரி டீன் ராமலிங்கம் பேசி வருகிறார். முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் போது புகைப்படங்கள் மாறியது தெரிய வந்து, அவர்கள் இருவரையும் தேர்வுகுழு விசாரணைக்காக சென்னை அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். தேர்வுக்குழு தான் முறைகேடுகள் நடைபெற்றதா என்று ஆவணங்கள் மற்றும் கை ரேகை உள்ளிற்றவற்றை வைத்து நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    10:28 (IST)26 Sep 2019

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

    இன்று பிற்பகல் 2 மணிக்கு காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

    10:04 (IST)26 Sep 2019

    பாராமதி நகரில் வெள்ளப்பெருக்கு

    மும்பையின் சஸ்வத் பகுதியில் கனமழை பெய்து வருவதால் விரைவாக நிரம்பியது நசார் அணை. தற்போது நொடிக்கு 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    09:41 (IST)26 Sep 2019

    எழுத்தாளர் கி.ராவின் மனைவி மரணம்... எழுத்தாளர்கள் அஞ்சலி

    எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மனைவி கணவதி அம்மாள் நேற்று நள்ளிரவு மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள் சார்பில் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    09:15 (IST)26 Sep 2019

    திருச்சி முக்கொம்பு அணை நிலவரம்

    திருச்சியின் முக்கொம்பு அணைக்கு வரும் நீர் வரத்து 41,478 கன அடியாக உள்ளது. முக்கொம்பு அணையில் இருந்து காவிரிக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 28,671 கன அடியாகவும், கொள்ளிடம் ஆற்றுக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 11,727 கன அடியாகவும் உள்ளது.

    09:13 (IST)26 Sep 2019

    நீட் தேர்வு ஆள்மாறாட்டம்

    தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தனியார் மருத்துவக்கல்லூரி அறிவிப்பு. பீளமேட்டில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்களின் புகைப்படங்கள் மாறி இருப்பதாக ஆவணங்களை சரிபார்த்த போது கண்டறியப்பட்டது.  தேனியில் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்.

    09:10 (IST)26 Sep 2019

    வெங்காய விலை

    வெங்காய விலைசென்னை கோயம்பேட்டில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.45க்கு விற்பனை ஆகிவருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.

    09:07 (IST)26 Sep 2019

    மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைப்பு

    40,000 கன அடி நீராக இருந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து 27,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரும் 27,900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    Tamil Nadu news today updates : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை கட்சியினர் அறிவித்து வருகின்றனர். அதிமுகவுக்கு ஆதரவாக தேமுதிக மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் தங்களின் ஆதரவை அளித்துள்ளனர். சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவை தரும்படி கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார்.

    விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.  அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி ரெட்டியார்பட்டி வெ. நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்படுள்ளார்.

    மேலும் படிக்க : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்பாளர்கள் பின்னணியும், அதிமுக, திமுக வியூகமும்

    Narendra Modi Former Pm Manmohan Singh
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment