Tamil Nadu news today updates: பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.

By: Oct 20, 2019, 10:34:47 PM

Tamil Nadu news today updates:  மேட்டூர் அணைக்கு வரும் வரும் நீரின் அளவு 27,985  கனஅடியில் இருந்து 16,250  கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2000 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது . இன்று காலை நேர நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 116.27 அடியாகவும், நீர்இருப்பு 87.64 டிஎம்சி,யாகவும் உள்ளது.

 இரட்டை வேடங்களில் அதிரடி காட்டும் விஜய். பிகில் 4வது திரைப்படம்.

 

அமெரிக்காவில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரத்த்தை மந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். கார்ப்ரேட் வரி குறைப்பு, பொதுவங்கி இணைப்பு போன்ற அரசின் செயல்திட்டங்களால் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழல் எற்பட்டுள்ளதாகவும் விளக்கிகூறினார்.

மேலும், இது போன்ற செய்திகளைப் படித்து தெரிந்துகொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின்தொடருங்கள்.

 

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines :  இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
21:46 (IST)20 Oct 2019
பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து

வருகிற 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி துருக்கி செல திட்டமிட்டிருந்தார். ஆனால், கடந்த மாதம் ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகராம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

19:36 (IST)20 Oct 2019
சட்டீஸ்கரில் சரணடைந்த 28 நக்சல்கள்

சட்டீஸ்கரில் உள்ள தந்தேவாடா சிக்பால் பகுதியில் இன்று புதிய காவல் முகாமில் 28 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைந்தவர்களில் ஒருவரின் தலைக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்களில் 3 பேரின் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

19:28 (IST)20 Oct 2019
குட்கா விற்பனை வழக்கில் தேடப்பட்ட சத்ராரம் ஆம்பூரில் கைது

குட்கா விற்பனை வழக்கில் காஞ்சிபுரம் போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த சத்ராரம் என்பவர் ஆம்பூரில் கைது செய்யப்பட்டார்.

19:02 (IST)20 Oct 2019
காஷ்மீர் எல்லையில் இந்தியா பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, 10 பாக். வீரர்கள் பலி

காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதில் 10 பாக். வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

18:30 (IST)20 Oct 2019
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தென்காசி அருகே குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

18:23 (IST)20 Oct 2019
ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலொசனை

காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் ஆபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோசனை நடத்தினார்.

18:21 (IST)20 Oct 2019
வானிலை அறிவிப்புகளை பிராந்திய வட்டார மொழியில் அறிவிக்க அறிவுறுத்தல்

வானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு வட்டார மொழிகளில் கூற வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்.

17:40 (IST)20 Oct 2019
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர்.

16:27 (IST)20 Oct 2019
முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

சென்னை எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக, முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்மூலம் டாக்டர் பட்டம் பெற்ற மாநில முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் பழனிசாமியும் இணைந்துள்ளார்.

15:42 (IST)20 Oct 2019
நீர்மட்டம் 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம், ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகரில், 2018 நவம்பருக்குப் பிறகு தற்போது நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையில், நீர்மட்டம் 102 அடியை எட்டியவுடன் உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

14:53 (IST)20 Oct 2019
சீமான் மீது தூத்துக்குடியில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

" அலிபாபாவும் 40 திருடர்களும்" என்று தமிழக அரசு குறித்து சீமான் விமர்சனம் செய்ததாக அதிமுக பிரமுகர் அளித்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேசனில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13:43 (IST)20 Oct 2019
தமிழகத்தின் பலபகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பலபகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை; கனமழை பெய்யும் இடங்களையே ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

13:05 (IST)20 Oct 2019
யாருக்கும் பாதகம் நினைக்காதவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – கருணாஸ்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர். ஆனால், மனதளவில் யாருக்கும் பாதகம் நினைக்காதவர் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு, மக்கள்நல திட்டங்களை செயல்படுத்தி வருவதால், இந்த இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு, அதிமுகவுக்கே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12:43 (IST)20 Oct 2019
ரோகித் சர்மா முதலாவது இரட்டை சதம் - வலுவான நிலையில் இந்தியா

ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாவது நாளாக இன்று பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். சிக்சருடன் 200 ரன்களை கடந்து அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். முன்னதாக ரஹானே 115 ரன்கள் குவித்து அவுட்டானார். ரோகித் சர்மா, 212 ரன்களில் ஆட்டமிழந்தார்.  தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் அபார பேட்டிங் காரணமாக திணறி வருகிறார்கள்.

12:08 (IST)20 Oct 2019
காஷ்மீர் குறித்த எர்டாகன் பேச்சு - பிரதமர் துருக்கி பயணம் ரத்து

வரும் அக்டோபர் 27,28 சவுதி அரேபிய செல்லும் மோடி, முதலீட்டார்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  அங்கிருந்து  துருக்கி நாடு பயணம் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மாதம் ஐ.நா சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன்,  காஷ்மீர் விசயத்தில்  இந்தியாவைக் கடுமையாக கண்டித்தார்.  இதன் விளைவாக , பிரதமரின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் தெரிவிக்கையில், "துருக்கி பயணம் உறுதி படுத்தப்படவில்லை , அதனால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று கருத்து தெரிவித்தார்.      

11:09 (IST)20 Oct 2019
பாகிஸ்தான் சிறுமிக்கு உதவிய காம்பீர்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒமைமா அலி என்ற ஆறு வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கான விசா வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடந்த அக்டோபர் 1ம் த்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் .   கம்பீரின் முயற்சி பலனளிக்கும் விதமாக ,  ஒமைமா அலிக்கு விசா ஏற்பாடுகள் செய்ய இந்தியா வெளியுறவு அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.  

10:54 (IST)20 Oct 2019
வெண்ணை உருண்டை பாறை கட்டண வசூலுக்கு வாசன் எதிர்ப்பு

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட  கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்றில் இருந்து நடைமுறைக்கு வந்தது.   ரூ.40 கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்தது.இந்நிலையில், கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொல்லியல் துறை  திரும்ப பெற வேண்டும் என்று  தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.   

10:47 (IST)20 Oct 2019
எல்லையில் துப்பாக்கிச் சூடு:

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவப் படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதில்  இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும்  கொல்லப்பட்டதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.  

10:37 (IST)20 Oct 2019
நாங்குநேரி இடைத்தேர்தல் :

299 வாக்குச்சாவடிகள் கொண்ட நாங்குநேரியில்,  நடக்கவிருக்கும்  இடைத்தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் 2 ஏடிஎஸ்பிக்கள், 17 டிஎஸ்பிக்கள் என மொத்தம்  2,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளதாக  நெல்லை எஸ்.பி. அருண்குமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

10:06 (IST)20 Oct 2019
திருச்சி - மலேசியா விமானம் ரத்து

ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததை  கண்டுபிடித்ததால் கடைசி நேரத்தில் திருச்சி- மலேசியா தனியார் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் விமானத்தில் பயணம் செய்ய விருந்த 120 பயணிகளின் உயிகள் காப்பாற்றப்பட்டது.   

09:53 (IST)20 Oct 2019
பாலிவுட் நட்சத்திரங்களுடன் மோடி

காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுக் கூறும் விதமாக, இந்தி சினிமா நட்சத்திரங்கள் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். காந்தியின் சித்தாந்தங்களை பிரபல சினிமாவின் மூலம் எவ்வாறு கொண்டு செல்வது, காந்திய சிந்தனையில் சினிமாவின் பங்கு என்ன ? போன்றவைகள் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்தார். சில புகைப்படங்கள்: 

09:42 (IST)20 Oct 2019
இன்று கவுரவ டாக்டர் பட்டம்:

நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட,  டாக்டர் ஏ.சி.சண்முகம் துணைவேந்தராக இருக்கும், எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் , இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பரத நாட்டிய கலைஞர் ஷோபனா உள்ளிட்டோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

Tamil Nadu news today live updates: கர்நாடாகாவின்  பகத் பி.யூ. கல்லூரியில் நடந்த தேர்வில் மாணவர்கள் அடுத்தவரை பார்த்து எழுதாமல் இருப்பதர்காக அனைவருக்கும் அட்டைபெட்டி மாட்டிய சம்பவதற்கு அம்மாநில கல்வி அமைச்சர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்றதை நான் வாழ்த்தும் அதே நேரத்தில் அவரின்  இடது சாரி சிந்தனையை மக்கள் நிராகரித்துவிட்டனர்  என்று அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டிற்கு பதில அளித்த அபிஜித் பானர்ஜி எந்த பாகுபாடும்யின்றி மக்கள் பிரச்சனைகளை தீவிரமாக பார்ப்பதாக தெரிவித்தார்.

 

Web Title:Tamil nadu news today live updates chennai weather crime politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X