/tamil-ie/media/media_files/uploads/2019/01/prakash-javadekar_759-1.jpg)
Tamil Nadu news today updates: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பொது மக்களுக்கு சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள்:
சென்னையில் பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ. 76.61-க்கும், டீசல் 13 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ .70.68-க்கும் விற்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2ம் தேதியில் இருந்தே பெட்ரோல்/ டீசலின் விலை சற்று சரிவை நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகளில் உற்பத்தி தடைபட்டதால், பெட்ரோல்/டீசலின் விலை 100 ரூபாயைத் தொடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் தான் இந்த விலை தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மேலும் ஒருவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. முருகனின் உறவினரான சீராத்தோப்பை சேர்ந்த பிரதாப்பை திருச்சி அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து 5லட்சம்பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வாழ்த்து:
கழகம் இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் "ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி" திருநாள் வாழ்த்து செய்தி.. #ஆயுதபூஜை pic.twitter.com/0V02mbpaIu
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 6, 2019
இதுப்போன்று இன்றைய தினத்தின் முக்கிய செய்திகள், அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு தொடர்பான உடனடி தகவல்கள் அனைத்தையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் லிங்கில் தெரிந்துக் கொள்ளுங்கள்.ஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் தன் பார்வையால், செல்லக்குறும்பால், தன் பெரிய விழிகளால் ரசிகர்களைக் கொள்ளை கொள்பவர் ரக்ஷிதா. எப்போதும் காதலும் கோபப்பார்வையுடனும் சீரியலில் வலம் வரும் ரக்ஷிதா அம்மன் வேடத்தில் தோன்றி மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.
ஏன் அம்மணி இந்த மாற்றம்? பக்தி அதிகமாயிருச்சா என்கிற கேள்வியை அவர் முன் வைத்தோம்.
'‘எவ்வளவு நாள்தான் ஒரே கேரக்டரையே டைரக்ட் பண்றது. எனக்கும் சேஞ்ச் வேணும் இல்லியானு எங்க இயக்குநர் அடிக்கடி சொல்லிட்டு இருப்பார். அதுக்கேத்த மாதிரி சீரியல் கேரக்டர்களுக்கு ட்விஸ்ட் வைச்சுட்டே இருப்பார்.
Live Blog
Tamil Nadu and Chennai news : இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
மத்திய அரசு 370 சட்டப்பிரிவை திருத்தம் செய்து ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு உள்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற வேண்டும் என்ற உள்துறை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
திபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது. நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன்; சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர். பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும்; மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள். யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும்.” என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; காலம் தாழ்த்தி செல்ல வேண்டாம். மக்கள் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணைக்கட்டும் முடிவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: கீழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கேரளாவில் தொல்லியல் ஆய்வு நிறுத்தப்பட்டதுபோல் கீழடியிலும் நிறுத்திவிடக்கூடாது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும்.
சானியா மிர்சாவின் தங்கை அனம் மிர்சாவை, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் மகன் ஆசாத் அசாருதீன் திருமணம் செய்யவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வலம் வந்த வதந்திக்கு சானியா மிர்சா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை, பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து மீண்டும் கீழடிக்கே கொண்டு வந்து, அருங்காட்சியகத்தை விரைந்து அமைத்து, மக்களுக்குக் காட்சிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை இந்தியாவிடம் அளித்து ஸ்விட்சர்லாந்து அரசு2020 செப்டம்பர் மாதத்தில் 2-வது பட்டியலை இந்தியாவிடம் அளிக்கிறது ஸ்விஸ் அரசு.
இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, சுவிட்சர்லாந்து வரி நிர்வாக அமைப்பான F.T. A. இந்த தகவல்களை இந்தியாவுக்கு அளித்துள்ளது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இந்த பட்டியல் மூலம் அதனை கண்டறிய முடியும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில், தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் கணக்குகள் மற்றும் 2018 க்கு முன்பாக மூடப்பட்ட கணக்குகள் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
வில்லியம் ஜி கலின், சர் பீட்டர் ரேட்கிளப், கெர்க் செமென்சா ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
He bought the house ... and lit the lights
Kalainanam 😄😄#Thalaivar solratha tha seivar!! Seiratha tha solvar #Rajinikanth 🤘
Thalaivar for a Reason !! pic.twitter.com/59XSy0P8YO
— ONLINE RAJINI FANS (@thalaivar1994) October 7, 2019
தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு சென்னை சாலிகிராமத்தில் புதிய வீடு வாங்கித் தந்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ரஜினிகாந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், இலங்கைப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் - என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே ஏ.கோவிந்தசாமிக்கு சிலை வைக்கப்படுவது தொடர்பாக விவாதங்கள் எழுந்த நிலையில் மு. க ஸ்டாலின் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தங்க தமிழ்செல்வன் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே, அதிமுக அரசு ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை பெற்றதாக தெரிவித்தார். மேலும், வரும் 24ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் ராதாபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வண்டலூர் ஓட்டேரியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு தரப்பில் இதுக்குறித்து துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு உயிர் பறிப்போயுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி தொகுதிக்கு அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை, பண விநியோகம் செய்வதற்காக வந்துள்ளனர் என்று தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் தொகுதி சென்றுள்ளனர். இதனை விமர்சிக்கும் வகையில் கே. எஸ் அழகிரி இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வரும் பொதுத்தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை உறுதி செய்தார். ஏற்கனவே திமுக - காங்கிரஸ் பற்றி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் திமுக் காங்கிரஸ் கூட்டணியை வரும் பொதுத்தேர்தலிலும் திருநாவுக்கரசர் உறுதி செய்துள்ளார்.
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த திருமாறன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பஜனை மாட தெருவை சேர்ந்த திருமாறனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நீர் பற்றாக்குறையை குறைக்க ஆந்திராவின் காந்தலேரு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நீரை சென்னைக்கு திறந்து விட்டது ஆந்திர அரசு. 2000 கனஅடிகளாக வந்த கிருஷ்ணா நீரை தற்போது 1300 கன அடியாக குறைத்துள்ளது ஆந்திர அரசு.
1980 களில் அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மற்றும் தமிழ்நாடு முதல்வர் எம். ஜி. ஆர், சென்னையின் தண்ணீர் வறட்சியை சமாளிக்க கொண்டு வந்த தெலுங்கு கங்கா திட்டம் மூலம் ஆந்திர அரசாங்கம் கிருஷ்ணா நதிநீரை திறந்துவிடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது
விஜயதசமியை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் , மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு ஏதுவாக அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . விதயசமியை முன்னிட்டு பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாளை பள்ளியில் சேர்க்க விருப்பப் படுவார்கள் என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயோமெட்ரிக் வருகைப்பதிவினை கட்டாயமாக்கப் படவேண்டும் என்று தமிழக அரசு சுற்றிக்கை தெரிவித்துள்ளது. மேலும், பயோமெட்ரிக் வருகைப்பதிவினை செயல்படுத்தாத பள்ளிகளை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை நெறிமமுறைப்படுத்துவதற்காகவும், சில முறைகேடுகளைத் தவிர்ப்பதற்க்காவும் பயோமெட்ரிக் கட்டாய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது .
'சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்' என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தெலுங்காவின் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பணி மிகவும் நுணுக்கமானது என்றும், சவாலானது என்றும் தெரிவித்துள்ளார். இந்த சவால்களையெல்லாம் தாண்டி, சிறந்த ஆளுநராக, தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் 11 சீனா அதிபர் ஜின்பிங் அரசுமுறை பயணமாக மாமல்லபுரம் வருகிறார். இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, போராட்டம் நடத்தவிருந்த 8 திபெத்தியர்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திபெத்தை சினா ஆக்கிரமித்துள்ளதாகவும், இதை உலகிற்கு வெளிபடுத்துவே போராட்டத்தை திட்டமிட்டிருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தங்கள் கருத்தை கடித்தத்தின் மூலம் பிரதமருக்கு வெளிபடுத்திய மணிரத்தினம் உட்பட 49 சிந்தனையாளர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கை மத்திய அரசு தலையிட்டு உடனடியாக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights