/tamil-ie/media/media_files/uploads/2019/09/pc-1-1.jpg)
News Today Updates
Tamil Nadu news today updates:எல்லைப் பாதுகாப்பின் தற்போதைய நிலை மற்றும் அதை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உயர் மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
பிரதான் மந்திரி உஜலா யோஜனாவின் கீழ், மோடி அரசு 36 கோடி எல்.ஈ.டி பல்புகளை விநியோகித்து, 46,790 மில்லியன் கிலோவாட் ஆற்றலைப் பாதுகாத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மதிப்பீட்டை 2019-20 ஆம் ஆண்டில் 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இது போன்ற முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின்தொடருங்கள்
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், பெட்ரோல்/தங்கம் விலைகள், மற்றும் அரசியல் நிலவரங்களை கீழே காணலாம்.
சென்னையை அடுத்த மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில், சின்னத்திரை நடிகை நிலானி, கணவரை பிரிந்து இரண்டு குழந்தை களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை, போலீஸ் உடையில் பேசி, ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே தனது காதலருடன் ஏற்பட்ட மோதலால் தற்கொலைக்கு முயன்று அதில் இருந்தும் நிலானி மீண்டு வந்தார். அதன் பின், வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வரும் வேலூரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருடன் அவர் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு நாதனுக்கு திருமணமானது தெரிய வந்ததையடுத்து, நிலானி விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மஞ்சுநாதன், செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு, நிலானியை செல்போனில், ஆபாசமாக பேசி தொந்தரவு செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து நிலானி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனிடேயே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மஞ்சுநாதனை போலீசார் கைது செய்தனர்.
கீழடி 3ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். கீழடி அகழாய்வில் கிடைத்தவற்றை பாதுகாக்க மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் கூடுதல் மகளிர் நீதிமன்ற திறப்பு விழாவில் பேசியஅவர், சிங்கப்பூர் மற்றும் தெலங்கானா மாநிலம் ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு பத்தாயிரம் அளவில் உள்ளதாகவும், தமிழகத்தில் நூறு என்ற அளவில் கட்டுக்குள் உள்ளதாகவும் கூறினார். கொசு கடிப்பதற்கு முன்பு அது உள்ளாட்சித் துறை கொசு என்றும், கடித்த பிறகுதான் அது சுகாதாரத்துறை கொசு என்றும் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் ஆழம் பார்ப்பதாக கராத்தே தியாகராஜன் கருத்து கூறியுள்ளார். சென்னை நங்கநல்லூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த மரம் நடும் விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் பேசிய கராத்தே தியாகராஜன், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்ல முயற்சி எடுத்து வரும் ரஜினி, சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேசத்தை நேசிப்பவர்கள்,
பிரதமரையும் மதிப்பதால்தான்
அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
இது எப்படி தேசத் துரோகமாகும்?
வியப்பு; வேதனை.— வைரமுத்து (@vairamuthu) October 5, 2019
தேச துரோக வழக்கில் 49 கலைஞர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கவிஞர் வைரமுத்து ”தேசத்துரோகமாகுமா?’ என்ற தலைப்பில் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.
திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், சுரேஷ் தாயார் கனகவல்லி ஆகியோரை திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே தேடப்பட்டு வந்த கொள்ளையன் சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுரேஷையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த காவல் துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,
யார் வேண்டுமானலும் பிரதமருக்கு கடிதம் எழுதலாம் என்றும், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக முழுவதும் கலைஞர்களின் மீதான் தேச துரோக வழக்குக்கு எதிர்ப்பு குரல்கள் ஒலித்து வருகின்றன.
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இல்லாத விஷயங்களை பெரிதாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் செய்தியாளரகளிடம் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை தேச துரோகிகளாக சித்தரிப்பதும் முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் பசுமை பட்டாசுகளை அறிமுகப்படுத்தினார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். கடந்தாண்டு சுற்றுசூழலை பாதுகாக்க உச்சநீதிமன்றம் இனிமேல் தீபாவளி பண்டிகை காலங்களில் பசுமை பாட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் விற்பனை செய்ய வேண்டும் என அதிரடி உத்தவை பிற்பித்தது. இருந்த போதும் கடந்த வருடம் பசுமை பட்டாசுகள் குறித்து பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வருடம் பசுமை பட்டாசுகளை மக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தினார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தலைமறைவான கொள்ளையன் சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.கைதான சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற பாஜக சார்பில் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரக்கோரி அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்திருந்த நிலையில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன்னர் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
”மத்திய அரசை விமர்சித்ததால் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள். தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்கான நாடகம் இது. சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிஎன் மீதும், என் தந்தை மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் நிரூபிக்க வேண்டியதுதானே” என மதுரை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம்அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைக்கு நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னைய்கில் மேகமூட்டம் சூழும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
49 கலைஞர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ”அமைதியாகத்தான் இருக்க வேண்டும்; அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று ஆய்வாளர் @Ram_Guha, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை!
சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு!#SeditionCase pic.twitter.com/pJ5DK9bgNN
— M.K.Stalin (@mkstalin) October 5, 2019
பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் முயற்சி கண்டனத்திற்குரியது’ என குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 கலைஞர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவிடப்பட்டுள்ளத்தை எதிர்த்து ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய ரயில்வே பல முயற்சிகளை எடுத்து வருகிறது . இந்நிலையில், 2019 க்கான தூய்மை/தூய்மையற்ற ரயில்வே ஸ்டேஷன்களை கணக்கெடுத்து பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தூய்மையற்ற முதல் 10 ரயில்வே ஸ்டேஷன்களில் ஆறு தமிழகத்தில் உள்ளது என்று கருத்துக் கணிப்பு சொல்லியுள்ளது.
பெருங்குளத்தூர், கிண்டி,வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில், பழவந்தாங்கல் ஆகியவைகள் தூய்மையற்ற முதல் 10 ரயில்வே ஸ்டேஷன்களில் இடம் பெற்றுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காளிப்பாளர் ராஜேஷ் தலைமையில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவகலத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 1.80 லட்சம் மேல் ரொக்கப் பணமும், நூற்றிக்கும் மேற்பட்ட ஆவணங்களும் சிக்கியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்பார்மல் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இது குறித்து, முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , இந்த வாரலாற்று மிக்க சந்திப்பு மாமலபுரத்தில் நடைபெறுவதால் தமிழகம் கவுரவம் அடைகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இரு தலைவர்கள் வருகைக்குபின் மாமல்லபுரம் உலக அளவில் பெயர்பெற்ற பகுதியாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9% உயர்ந்துள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 390 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையர்களை திருவாரூரில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டபோது திருச்சியை சேர்ந்த மணிகண்டன்என்பவரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். காவல் துரையினர் கொள்ளையர்களை துரத்தும் சிசிடிவி காட்சி தற்போது இணைய தளங்களில் பரவி வருகிறது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) மேற்கோள் காட்டி பேசிய பாஜக தேசிய செயற்பாட்டுத் தலைவர் ஜே.பி.நட்டா, இனி வரும் காலங்களில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியே சென்று- பக்கத்து நாடுகளில் சித்திரவதை செய்யப்பட்ட இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்குள் அடைக்கலம் அடையும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துளார். இது ஒரு நாடு, ஒரு சத்திரம் அல்ல என்று விஜய் சங்கல்ப் யாத்திரையில் பேசும் பொது தெரிவித்தார்.
பங்களாதேஷ் பிரதமர் நான்கு நாள் இந்தியா சுற்றுப் பயணமாக வந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். அசாம் என்.ஆர்.சி, ஆனியன் ஏற்றுமதி, உலகப் பொருளாதாரம் போன்றவைகள் முக்கியப் பேச்சுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
ஜெய் ஸ்ரீராம் என்ற போர்வையில் நாட்டில் சிருபான்பையினர் தாக்கப் படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ராமச்சந்திர குஹா, மணிரத்னம் உட்பட்ட 49 பேர் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பீகார் காவல் துறையினருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து, பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த நடவடிக்கைக்கு பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு நாட்டின் குடிமகன்கள் கடிதம் எழுதுவதில் என்ன தவறு உள்ளது ? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
பாஜக அலுவலகத்துக்குச் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இடைத்தேர்தலுக்கு நேற்று ஆதரவு கோரிய பின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்க்கும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights