Tamil Nadu news today updates: ‘மாஸான லீடர் பாஸான லீடர் முதல்வர் பழனிசாமி’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இது போன்ற மற்ற செய்திகளையும் , அரசியல் சூழ்நிலைகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.

Tamil Nadu today news live updates

Tamil Nadu news today updates:  இஸ்ரோவின் சந்திரயான் , 7ம் தேதி  நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீ தூரத்தில் லேண்டர் விக்ரம் தரையிறங்கும் போது பூமீ உடனான அதன்  சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகளுக்குத் தெரிவித்தார். இது பற்றி மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன “அதாவது ஹார்ட் லேண்டிங் செய்த லேண்டர் விக்ரமிற்கு எந்த சேதாரமும் இல்லை. ஆனால், அதில் இருக்கும் ஆண்டனாக்கள் பூமியை அல்லது ஆர்பிட்டரை நோக்கி இல்லாமல் உள்ளது. அதனால் அதை தொடர்புகொள்வது சற்று சிரமம்” என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க: 

மத்திய பிரதேச காங்கிரஸ் உட்கட்சி மோதல் தற்போது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு  ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் மாநில முதல்வர் கமல் நாத்துக்கு இடையே கடும் போட்ட போட்டி நிலவி வருகிறது. இதை சமாளிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இருவரையும் தனித்தனியே சந்திக்க விருக்கிறார். இன்று , டெல்லியில்  ஜோதிராதித்யா சிந்தியா சந்திக்கும் சோனியா காந்தி நாளை கமல் நாத்துடன் உரையாட உள்ளார்.

இது போன்ற மற்ற செய்திகளை தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், அரசியல் சூழ்நிலைகள் , தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்களை இங்கே காணலாம்.  

21:22 (IST)10 Sep 2019
பாகிஸ்தான் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, இட்டுக்கட்டி கூறப்பட்டவை. வியன்னாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

20:34 (IST)10 Sep 2019
காவல்துறை வழங்கும் இலவச ஹெல்மெட்

புவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரால் இலவச ஹெல்மெட் வழங்கப்படுகிறது.

சாலைவிதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கார்டு கொடுக்கப்படுகிறது.

20:33 (IST)10 Sep 2019
மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்; பொறாமையால் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

20:31 (IST)10 Sep 2019
கார்த்தி சிதம்பரம் - உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசுக்கு ஆணை

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவு நகலை தாக்கல்செய்ய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

வழக்கு மாற்றம் தொடர்பாக தலைமைப்பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டது. எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுநகல் ஏதும் வழங்கப்படவில்லை என கார்த்தி சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.

20:28 (IST)10 Sep 2019
நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.லால் சவுக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

19:45 (IST)10 Sep 2019
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவிலான நீர் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

19:43 (IST)10 Sep 2019
ஜனாதிபதி ஓணம் வாழ்த்து

நாட்டின் முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும் உழைக்கத் தூண்டுகிறது ஓணம் பண்டிகை. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

19:07 (IST)10 Sep 2019
காங்கிரஸில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

19:04 (IST)10 Sep 2019
முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா. தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங். பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கினார்.

19:03 (IST)10 Sep 2019
அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்

அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. செப்.15ல் விருகம்பாக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, சோழிங்கநல்லூரில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொள்கின்றனர்.

18:04 (IST)10 Sep 2019
மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம்

கடந்த ஆக. மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 

18:00 (IST)10 Sep 2019
தமிழகத்தில் காங்கிரசுக்கு பலம் இல்லை - கார்த்தி சிதம்பரம்

கர்நாடகாவில் காங்கிரசுக்கு இருக்கும் பலம் தமிழகத்தில் இல்லை என எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

17:23 (IST)10 Sep 2019
நாளை முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடத்த பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் நாளை முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

17:04 (IST)10 Sep 2019
டெங்கு காய்ச்சலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

ஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று  கூறினார்.

16:58 (IST)10 Sep 2019
அம்பத்தூர் தொழிற்பேட்டை முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து

சென்னையின் பல்வேறு இடங்களில் முருகன் இட்லி கடை என்ற உணவகம் உள்ளது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லிகடையில் உணவில் புழு இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் அந்த குறிப்பிட்ட கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறை ரத்து செய்துள்ளது.

16:36 (IST)10 Sep 2019
இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கித்தார். பீகாரின் கெகுசராய் மாவட்டம், மோதிஹாரியில் இருந்து நேபாளத்தின் அமலேககஞ்ச் பகுதிவரை சுமார் 69 கி.மீ தொலைவு பூமிக்கு அடியில் பெட்ரோல் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

16:11 (IST)10 Sep 2019
22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,649-க்கு விற்பனை

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3.649-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.29,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,806-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.30,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.50.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.50,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

15:45 (IST)10 Sep 2019
பாரம்பரிய உணவு வகைகளை நோக்கி மாணவ, மாணவிகள் திரும்ப வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: “பாரம்பரிய உணவால் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் கட்டுப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

15:26 (IST)10 Sep 2019
அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் பாராட்டு விழா நடத்த தயார் - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் “சிலரை பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

15:11 (IST)10 Sep 2019
பழவேற்காடு ஏரி முகத்துவாரப்பகுதி தூர்வார கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப்பகுதியை தூர்வார கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:56 (IST)10 Sep 2019
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அதிகாரப்பூர்வ விடைத்தாள் வெளியானது

செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

14:41 (IST)10 Sep 2019
பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் கடந்த 100 நாட்களில் செய்தது என்ன என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: மோட்டார் வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்தோம். பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம்.

14:31 (IST)10 Sep 2019
நெல்லை உவரி கடல் பகுதியில் உயிரிழந்து உடல் சிதைந்து மிதக்கும் மிகப் பெரிய திமிங்கலம்

திருநெல்வேலி மாவட்டம், உவரி கடல் பகுதியில் சுமார் 10 டன் எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் உயிர் இழந்து உடல் சிதைந்த நிலையில் மிதந்து கொண்டிருக்கிறது.

14:21 (IST)10 Sep 2019
வங்கிகள் இணைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு செல்கிறது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் கடந்த 100 நாட்களில் செய்தது என்ன என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வங்கிகள் இணைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு செல்கிறது. 16 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது வரை 41 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடியாக உயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6000 உதவித்தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது ஜனசங்கம் காலம் முதல் எங்கள் கொள்கையாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு 370வது பிரிவு உபயோகமாக இருந்தது இல்லை. 370வது பிரிவால் ஜம்மு காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்ததில்லை. அங்கே தேசிய மகளிர் ஆணையமும் செயல்பட முடியாத நிலை இருந்தது. என்று கூறினார்.

13:47 (IST)10 Sep 2019
தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது :

வங்காளதேசத்தில் இருந்து இயங்கும், தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாஅத் அல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற தீவிரவாதியை சென்னையில் இன்று கைது செய்தது மேற்கு வங்காள போலீஸ்.  சென்னையில் ராஜா என்ற பெயரில்  கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கியிருந்த இந்த அசதுல்லா ஷேக் பல வருடங்களாக தேடப்பட்டவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.  

13:38 (IST)10 Sep 2019
தினகரன் கருத்து

அமமுக  நிர்வாகிகள்  கட்சியில் இருந்து விலகி  திமுகவில் இணைவது அவரவர் விருப்பம். அதை அமமுக செய்யும் துரோகம் என்று நான் நினைத்தது கிடையாது என்று அக்கட்சியுன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   

சமிபத்தில் செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச் செல்வன் போன்றோர்  அமமுக வில் இருந்து விலகி திமுக வில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.   

13:22 (IST)10 Sep 2019
நீதிபதி தஹில் ரமாணி

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இந்த பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் இன்றும் வழக்குகள் விசாரணை இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஜனாதிபதி  தஹில் ரமாணியின் பதவியில் இருந்து தோகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

11:39 (IST)10 Sep 2019
இந்திராணி முகர்ஜியிடம் இன்று விசாரணை:

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக  மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும்  இந்திராணி முகர்ஜியை இன்று சிபிஐ விசாரணை நடத்த விருக்கிறது. ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில்  இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனார். இதனைத் தொடர்ந்து  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த முறை கேடு வழக்கிற்க்காக கைது செய்தது என்பது குறிப்பிடத் தக்கது. 

11:11 (IST)10 Sep 2019
பிரதமர் பிறந்தநாள்- சேவை வாரமாக கொண்டாடத் திட்டம்

பிரதமரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 அன்று வருகிறது. நீண்ட ஆயிலும், நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதற்காக செப்டம்பர் 14 முதல் 20 வரை சேவை வாரமாக கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

மருத்துவமனைகளில் பயனுள்ள பொருட்களை விநியோகிப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது பத்து மாற்றுத்திறனாளிகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது, மற்றும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது போன்ற விசயங்களில் இந்த சேவை வாரம் கவனம் செலுத்தும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

10:58 (IST)10 Sep 2019
முகமது ஷமி கைது இடைக்கால தடை

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்டை  இடைக்கால தடை விதித்து அலிப்பூர் நீதிமன்றம் (மேற்கு வங்கம்) நேற்று உத்தரவிட்டது.  அவரது மனைவி ஹசின் ஜஹான் வரதட்சணை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக முகமது ஷமி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.  கடந்த வாரம் கொல்கத்தா நீதிமன்றம் 15 நாளுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் இல்லையேல் கைதாகும் சூழ்நிலை வரும்  என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

இதை எதிர்த்து, அலிப்பூர் நீதிமன்றத்தில் (மேற்கு வங்கம்) ஷமியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

10:45 (IST)10 Sep 2019
காட்பாடியில் பெரும் ரயில் விபத்து தடுத்து நிறுத்தம்:

தமிழகத்தில் அதிகப்படியான  வருவாய் ஈட்டும் 20 ரயில் நிலையங்களில் மிக முக்கியமாக விளங்குவது காட்பாடி ரயில் நிலையம். இன்று, அந்த ரயில் நிலையத்தில் குடிநீர் ரயிலும், பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் வந்ததை அடுத்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு ரயிலையும் சாதூரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்கப்பட்டுள்ளது என்றே சொல்லாம்.   

10:17 (IST)10 Sep 2019
இந்த அறிகுறி இருந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம்

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, முதுகுவலி, மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண் வலி மற்றும் சொறி ஆகியவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த,  அறிகுறி இருந்தால் உங்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுங்கள். பொதுவாக,  பெரியவர்களை விட இளைய குழந்தைகள் தான் அதிகம் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்

10:12 (IST)10 Sep 2019
டெங்கு காய்ச்சல் தமிழகம் தயாராகிறது:

சமிபத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும்  பரவத் தொடங்கியுள்ளன.  சென்னையைப் பொறுத்த வரையில் தன்டையார்ப் பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், வேளச்சேரி போன்ற இடங்கள் டெங்கு ஹோட்ஸ் பாட்டாக விளங்குகிறது. தமிழக அரசு பல்வேறு முயற்சிகளைத் தற்போது எடுக்கத் தொடங்கியுள்ளன. இதில், ஒரு கட்டமாக  சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.   

10:02 (IST)10 Sep 2019
முதல்வர் வெளிநாட்டுப் பயணம்:

13 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தனது பயணத்தால் வெளிநாட்டில் இருந்து 8835 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினார்.   எதிர்காலத்திலும் இது போன்ற வெளிநாட்டுப் பயணங்கள் தொடரும் என்றார். சிறிய நாடான இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது.  இதை ஆராய தான் இஸ்ரேல் செல்ல வாய்ப்புள்ளது என்றும்  தெரிவித்தார்.  

Tamil Nadu news today updates: 13 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.இந்த பயணித்திப் மூலமாக கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகம் வர உள்ளன என்றும், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை சென்னையில் துவங்கப்பட உள்ளது என்றும், இந்த 3 நாடுகள் பயணத்தின் இறுதியில் 40க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், யாதும் ஊரே என்ற திட்டம் துவங்கப்பட்டது என்றும் முதல்வர் அறிவித்தார்.

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) தனது இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்க ஏதுவாக இந்திய அரசின் திங்க் டேங் நிதி ஆயோக் சில முக்கிய ஒப்புதல்கள் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில்  ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

Web Title:

Tamil nadu news today live updates chennai weather crime politics tamilnadu news indian politics indian economy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close