Advertisment

Tamil Nadu news updates: நீட் ஆள்மாறாட்ட விவகாரம் - இடைத்தரகர் கோவிந்தராஜ் கைது

Tamil Nadu Latest News Today Live Updates : இன்றைய முக்கியச் செய்திகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: விக்கிரவாண்டி, நாங்குநேரி, ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 27-ந்தேதி வரை 8 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Advertisment

விக்கிரவாண்டியில் 23 பேரும், நாங்குநேரியில் 37 பேரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (அக்.1) நடக்கிறது.

தொடர் கனமழையால் வடமாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளின் அதிக அளவு பருவ மழை இந்தாண்டு தான் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், முக்கியச் செய்திகள், தங்கம் மற்றும் வெளியின் விலை நிலவரங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.



























Highlights

    22:26 (IST)01 Oct 2019

    நீட் ஆள்மாறாட்ட விவகாரம் – இடைத்தரகர் கோவிந்தராஜ் கைது

    ட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார்  கைது செய்துள்ளனர். . கைது செய்யப்பட்ட கோவிந்தராஜிடம் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    21:32 (IST)01 Oct 2019

    சிறைக்கு செல்லாமல் நடிகர்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள் – திருமாவளவன்

    போராட்டம் செய்யாமல், சிறைக்கு செல்லாமல் நடிகர்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார். 

    20:19 (IST)01 Oct 2019

    நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோமெட்ரிக் கருவிகள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

    நீட்  தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோமெட்ரிக் கருவிகள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தேசிய தேர்வுகள் முகமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    19:55 (IST)01 Oct 2019

    விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிடவில்லை – இஸ்ரோ

    விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை இஸ்ரோ கைவிடவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்து முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு குறித்து ஆராய தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது அதற்கான விஷயங்களை ஆராய்ந்து வருகிறது. இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    19:15 (IST)01 Oct 2019

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

    18:56 (IST)01 Oct 2019

    ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் பேர் பயன் – பிரதமர் மோடி

    ஆயுஷ்மான் பாரத்' திட்டம் ஆரம்பித்து ஒரு வருடத்தில் 50 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர்  என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் நிகழ்ச்சியான 'ஆரோக்கிய மந்தன்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

    18:09 (IST)01 Oct 2019

    காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிப்பு

    கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2020 குடியரசு தினத்தன்று முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்குகிறார், பரிசுத்தொகையாக தலா ரூ40 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு

    17:01 (IST)01 Oct 2019

    15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    கர்நாடக முன்னாள் அமைச்சரும், கர்நாடக காங்கிரசின் முக்கியத் தலைவருமான டி.கே.சிவக்குமாருக்கு வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    03.09.2019 முதல்  டி.கே.சிவக்குமாரை அமலாகக்துறை கைது செய்தது  என்பது குறிப்பிடத்தக்கது 

    16:57 (IST)01 Oct 2019

    கே எஸ் அழகிரி - கருத்து

    சமிபத்தில் நடந்த ஐ.நா ஐக்கய சபை பொதுக் குழு கூட்டத்தில், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தமிழ் மொழியை அடிக்கோடிட்டு உலக அமைத்திக்கு இந்தியா எப்போதும் ஒரு தூணாக இருக்கும் என்று உரைத்தார் . இந்த பேச்சு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  மேலும், சமிபத்தில் சென்னை ஐஐடி பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது, தமிழ்மொழி இந்தியாவில் மிகவும் பழமையான மொழி என்றும் மோடி தெரிவித்தார் . 

    இந்த இரண்டு கருத்துகளையும், தான் முழு மனதோடு வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.     

    16:57 (IST)01 Oct 2019

    கே எஸ் அழகிரி - கருத்து

    சமிபத்தில் நடந்த ஐ.நா ஐக்கய சபை பொதுக் குழு கூட்டத்தில், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தமிழ் மொழியை அடிக்கோடிட்டு உலக அமைத்திக்கு இந்தியா எப்போதும் ஒரு தூணாக இருக்கும் என்று உரைத்தார் . இந்த பேச்சு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  மேலும், சமிபத்தில் சென்னை ஐஐடி பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது, தமிழ்மொழி இந்தியாவில் மிகவும் பழமையான மொழி என்றும் மோடி தெரிவித்தார் . 

    இந்த இரண்டு கருத்துகளையும், தான் முழு மனதோடு வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.     

    15:53 (IST)01 Oct 2019

    முதல்வர் வேண்டுகோள்:

    ஏழை எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி பயன்படுத்தி அவர்தம் வாழ்வு சிறக்கவும், நெசவுத் தொழில் சிறக்கவும் கைகொடுப்போம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.  கதராடைகளை அணிந்து காந்தியடிகளின் வார்த்தைகளை செயல்படுத்துவோம் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    15:45 (IST)01 Oct 2019

    திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

    அண்ணா பல்கலைக்கழக முதுநிலை பொறியியல் படிப்பில் பகவத் கீதையை பாடமாக இணைத்து சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றி வெளியானது.  இதற்கு பலதரப்பும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்திருந்தனர். இந்நிலையில், திமுக வின் இளைஞர்அணி சார்பில் சைதாபேட்டை சின்னமலையில் இருந்து அண்ணா பல்கலைக் கழகம் நோக்கி இந்த முடிவை எதிர்த்து பேரணி நடத்தப் பட்டது. ஹிந்தி திணிப்பை நிறுத்தி,சமஸ்கிருதத்தை நிறுத்து  என்ற கோஷங்களையும் முன்வைத்தனர். 

    15:16 (IST)01 Oct 2019

    ராதாபுரம் தொகுதி:

    2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரத் தொகுதியில்  திமுக வின் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் வேட்பாளர்  இன்பத்துரை தோல்வியடைந்தார்.  203 தபால் ஓட்டுகளை எண்ணப்படவில்லை  என்று இந்த  வெற்றியை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில்  அப்பாவு  மனுத்தாக்கல் செய்திருந்தார். 

    இந்நிலையில், தபால் வாக்குககளை மட்டும் எண்ண வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. 

    14:33 (IST)01 Oct 2019

    சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் சிறப்பு ஏற்பாடு

    14:27 (IST)01 Oct 2019

    தீபாவளி சிறப்பு பேருந்துகள்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருகளுக்கு பயணம் செய்வது வழக்கம் , இதற்காக தமிழக அரசு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வரும் மக்கள் வசதிக்காக  4,627 பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் சற்றுமுன் தெரிவித்துள்ளார்

    14:23 (IST)01 Oct 2019

    அதிமுக கட்சியை தடை செய்ய வேண்டும் -

    தேர்தல் விதிமுறைகளில் அதிமுக கட்சி மீறியுள்ளதால்,  அக்கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று திமுக எம்எல்ஏ சரவணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  

    13:43 (IST)01 Oct 2019

    ஸ்டாலின் பதில்:

    2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 79 கோடி ரூபாயை செலவுக் கணக்காக காட்டியிருந்த  திமுக, அதில் ரூ40 கோடி ரூபாயை கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு வழங்கியதாக தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட அஃபிடவிட்டில்  சொல்லியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ரூ15 கோடி, 2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ரூ10 கோடி, 3. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி- ரூ15 கோடி. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் செலவுக் கணக்கில் இதுவரை திமுக.விடம் பணம் பெற்றதாக தெரிவிக்கவில்லை.

    இதற்கு ஸ்டாலின் வெளிப்படையான விளக்கம் கொடுக்கவேண்டும் என்று தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரமலதா  விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.   

    இந்நிலையில், செய்தையாளர்களை சந்தித்த ஸ்டாலின், " பிரேமலதா விஜயகாந்திற்கு  பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை. தேர்தல் ஆணையத்திடம் எல்லாவற்றிக்கும் தெளிவாக விளக்கம் கொண்டுப் பட்டுவிட்டது" என்று சொல்லியிருக்கிறார்.  

    13:29 (IST)01 Oct 2019

    சர்வதேச முதியவர் தினம்

    இந்தியாவின் ஜனத் தொகையில் மொத்த்ம் எட்டு சதவிகிதம் பேர் முதியர்வகளா உள்ளனர். அவர்களை நாம் மதிக்க வேண்டும் . அவர்களின் தேவைகளை அறிந்து நாம் உதவ முன் வர வேண்டும் என்று  இந்தியாவின் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர்  தெரிவித்துள்ளார். 

    இன்று, சர்வேதச முதியவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.   

    12:39 (IST)01 Oct 2019

    348 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை துவக்கிய முதல்வர் பழனிசாமி

    சென்னை கொடுங்கையூரில் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு வழங்கும் 348 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

    சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையைக் போக்கும் வகையில் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பேசிய முதல்வர் பழனிசாமி, "ரூ.4,078 கோடியில் கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம். தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது" என்றார். 

    12:24 (IST)01 Oct 2019

    தனது தீர்ப்பை திரும்பப் பெற்ற உச்சநீதிமன்றம்

    எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை - உச்சநீதிமன்றம்

    கைது செய்ய 2 நீதிபதிகள் அமர்வு விதித்த தடையை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் நீக்கி உத்தரவு

    12:20 (IST)01 Oct 2019

    ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு - 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

    ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்த வழக்குகளில் 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவ. 14-க்கு ஒத்திவைத்துள்ளது.

    12:18 (IST)01 Oct 2019

    அதிமுக வேட்பாளர் நாராயணனின் வேட்புமனு ஏற்பு

    விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை இன்று தொடங்கியது. விக்கிரவாண்டியில் 23 பேரும், நாங்குநேரியில் 37 பேரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. 

    12:16 (IST)01 Oct 2019

    இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள். தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம். உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும், தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது - மு.க.ஸ்டாலின்

    11:53 (IST)01 Oct 2019

    வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை இன்று தொடங்கியது

    விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை இன்று தொடங்கியது. விக்கிரவாண்டியில் 23 பேரும், நாங்குநேரியில் 37 பேரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்

    11:27 (IST)01 Oct 2019

    தமிழ் குறித்து பிரதமர் பேசியது மகிழ்ச்சி - திருமாவளவன்

    சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    11:26 (IST)01 Oct 2019

    அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது

    அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    11:25 (IST)01 Oct 2019

    குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன் - கமல்ஹாசன்

    அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும். இருபது வருடங்களாக சினிமா டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கூவிக் கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன். இளைஞர்களே என்னுடைய குடும்பம் 

    - சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரை.

    11:19 (IST)01 Oct 2019

    ரஜினி பெயரில் மெகா மோசடி

    நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய ரஜினி பழனி என்ற மோசடி நபர். ரஜினி ஷூட்டிங் பார்க்க ரூ.2500, ரஜினியுடன் புகைப்படம் எடுக்க ரூ.5,000 என ரசிகர்களிடம் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

    11:18 (IST)01 Oct 2019

    திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் - உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பு ரத்து

    திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது என்.ஐ.டி நிர்வாகம்.

    11:09 (IST)01 Oct 2019

    Today Gold Rate - தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 குறைவு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து ரூ.28,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 குறைந்து ரூ.3,545க்கு விற்பனையாகிறது.

    10:47 (IST)01 Oct 2019

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிபிசிஐடி முன் ஆஜர்

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராவ் சிபிசிஐடி முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.

    10:41 (IST)01 Oct 2019

    டெங்கு பாதிப்பு - 13 பேர் அனுமதி

    புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 13 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக மொத்தம் 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    10:26 (IST)01 Oct 2019

    கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்லும் மார்க்கெட் தெருவில் ரூ.37 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். பிறகு தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

    10:22 (IST)01 Oct 2019

    கேரள முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு

    டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசியிருக்கிறார். கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு சீரமைப்பு, நிவாரணம் உள்ளிட்டவை குறித்து பினராயி விஜயனுடன் ஆலோசித்தார் ராகுல் காந்தி.

    10:20 (IST)01 Oct 2019

    ரிலையன்ஸ் கமர்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் விற்க அனில் அம்பானி முடிவு

    ரிலையன்ஸ் கமர்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய அக்குழுமத் தலைவர் அனில் அம்பானி இவ்வாறு கூறியுள்ளார். அம்பானி குழுமத்துக்கு ரூ. 1,70,000 கோடி கடனிருந்த நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முக்கிய சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் காரணமாக. அந்நிறுவனத்தின் கடன் தொகை ரூ. 93,900 கோடியாக குறைந்தது.

    கடன் பிரச்சனை தீராத நிலையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் கமர்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனங்களை டிசம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்ய அம்பானி குழுமம் முடிவு செய்துள்ளது.

    இதனால், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தையும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    10:12 (IST)01 Oct 2019

    சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை

    செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தாரும் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

    09:49 (IST)01 Oct 2019

    குற்றாலத்தில் குளிக்க தடை நீக்கம்

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், அங்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

    09:41 (IST)01 Oct 2019

    ராட்சசி படத்துக்கு மலேசிய கல்வி அமைச்சர் பாராட்டு : படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து

    நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படத்தை பார்த்துவிட்டு மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு ஜோதிகாவும், நன்றி கூறி பதில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், படக்குழுவினரை நேரில் பாராட்டுவதற்காக மலேசியாவிற்கு வரவழைத்துள்ளார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். அதன்படி, ராட்சசி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஒய்.கௌதம் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மலேசிய அமைச்சரை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    09:26 (IST)01 Oct 2019

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகப்பேறு மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகளுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்

    09:11 (IST)01 Oct 2019

    போலி ஆவணங்கள் மூலம் ரூ. 3.27 கோடி மோசடி : இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் உள்ளிட்டோருக்கு சிறை

    அரக்கோணத்தில், 68 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக, போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெறப்பட்டது. 2005 ம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு, 2010ம் ஆண்டு நடந்த தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி கிளை மேலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் நாகபூஷணம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் விசாரித்தார். சீனிவாசன், நாகபூஷணம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    09:07 (IST)01 Oct 2019

    சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

    சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.13.50 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.606.50லிருந்து ரூ.620க்கு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

    09:03 (IST)01 Oct 2019

    Sivaji Ganesan Birthday Today - சிவாஜி கணேசன் பிறந்தநாள்

    செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்திய நடிகரான சிவாஜி கணேசனுக்கு இன்று 91வது பிறந்தநாள். கலைமாமணி விருது, பத்ம விருதுகள், தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரான இவர், நடிப்பு எனும் கலையின் மூலம் ஒவ்வொரு கலைஞர்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.

    08:58 (IST)01 Oct 2019

    திமுக 100 சதவிகிதம் தோல்வியைத் தழுவும் - ஹெச்.ராஜா.

    திமுகவின் இடைத் தேர்தல் பிரச்சாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்டுக்கு, ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார், 

    08:48 (IST)01 Oct 2019

    TN By Election : அதிமுகவுக்கு ஆதரவா? - பொன்னர் பதில்

    இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என சென்னை விமானநிலையத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

    08:44 (IST)01 Oct 2019

    குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு வலைவீச்சு : துப்பு கொடுத்தால் சன்மானம்

    கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேபோல் மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக், அஷ்ரப் அலி ஆகியோரும் கைது செய்யப்படவில்லை. மேற்கண்ட நான்கு பேரும், காவல்துறையினர் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில், தலைமறைவாக உள்ள 4 பேரை பற்றியும் துப்பு கொடுப்பவர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து தகவல் கொடுப்பதற்காக 24 மணி நேரம் இயங்கிவரும் காவல் காட்டுபாட்டு அறை தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    08:43 (IST)01 Oct 2019

    போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி சகோத‌ர‌ர்கள்

    புதுச்சேரி அருகே உள்ள கரிக்கலாம்பக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி ஜோசப். சமீபத்தில், சிதம்பரம் பெட்ரோல் பங்கில் ஊழியர்களை கத்தியால் வெட்டி பணத்தை பறித்த, அதே ரவுடி ஜோசப் தான். இந்த வழக்கில் கைதாகி வெளிய வந்த ஜோசப், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது, கரிக்கலாம்பாக்கம் போலீசார் அவரை தடுத்து விசாரித்ததாக தெரிகிறது. அப்போது போலீசாருக்கும் ஜோசப்பிற்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த ஜோசப்பின் தம்பி தமிழ், அண்ணணுடன் சேர்ந்து போலீசாரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த போலீசார் சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேடிக்கை பார்க்க, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி சகோத‌ர‌ர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    08:36 (IST)01 Oct 2019

    Today Petrol, Diesel Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை

    சென்னையில் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.77.50-க்கும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.71.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    08:35 (IST)01 Oct 2019

    TN News Today Live: தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு

    தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகனும் ஓய்வு பெற்றதால் சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Tamil Nadu news today live updates:

    கடந்த கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மார்ச் 2020, மற்றும் ஜூன் 2020 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் கீழ் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12-ம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11-ம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற மோடி, இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "உங்களை உருவாக்குவதற்கும், நீங்கள் பறக்க சிறகுகளை வழங்குவதற்கும் உங்கள் பெற்றோர் தியாகம் செய்துள்ளனர். கடுமையாக போராடியுள்ளனர். மாணவர்களை ஒரு சிறந்த என்ஜினீயர்களாக மட்டுமல்லாமல், சிறந்த குடி மகன்களாகவும் உருவாக்க ஆசிரியர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். மற்ற ஊழியர்களின் பங்களிப்பையும் நான் நினைவு கூறுகிறேன்.

    உலகத்திலேயே மிகப்பழமை யான மொழியான தமிழ் மொழியின் தாயகமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவை, உலகம் தொழில் வாய்ப்புக்கான தேசமாக உற்றுநோக்குகிறது" என்றார்.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment