/tamil-ie/media/media_files/uploads/2019/10/tn-2.jpg)
Tamil Nadu News Today Live Updates
Tamil Nadu news today updates: வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில், தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து , தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை அடுத்துள்ள லாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பேசிய திமுகவின் பொருளாளர் துரைமுருகன்- விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் திமுக தனது தோழமைக் கட்சியோடு சேர்ந்து வெற்றியடையும் என்று தெரிவித்துள்ளார்.
கடலோர மாவட்டங்களை மிரட்ட காத்திருக்கும் வடகிழக்கு பருவமழை :
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு முதன்மைச் செயலாளர் ஜவகர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது. பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலி இளமையான நிர்வாகி, அவர் திறம்பட செயல்படுவார். இந்திய அணியில் தோனியின் விளையாட்டு மிகவும் பிடிக்கும், அவரது தலைமை பண்பும், போராடும் குணமும் என்னை கவர்ந்தது - ஷேன் வாட்சன்.
வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்
பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும்
நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 அதிகபட்சம் ரூ.16,800 தீபாவளி போனஸ்
போனஸ் வழங்குவதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3,48,503 பேர் பயன் பெறுவர்
மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும்
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில்கொண்டு 20% போனஸ் தரப்படும்
நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
31 ஆயிரம் சதுர அடி நிலத்தை காலி செய்யும்படி மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.
முதல்வரானால் நான் நேர்மையாக இருப்பேன்; யார் வந்தாலும் இருக்க வேண்டும். முதல்வரானவுடன் முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயம்; நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன். விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் இளைஞர்கள் அரசியல் களத்திற்கு வராதீர்கள்; முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் - கமல்ஹாசன்
புத்தரும், கலாமும் ஒன்றுதான்; நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்
அப்துல்கலாமிடம் 3 மணி நேரம் பேசியது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது
கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது; கற்பது என்பதை விட புரிவது என்பதே கல்வி
என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை, அவரை எல்லாருடைய நெஞ்சிலும் கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். தலைவர் என்று சொல்வதில் அகந்தை உள்ளது தோழர் என்று சொல்லும்போது தொடர்ச்சி உள்ளது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம். தமிழகத்தில் 125 டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதி ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால், ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தவறான நடைமுறை என கிரிக்கெட் வல்லுநர்கள், வீரர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஐசிசி அதிக பவுண்டரி விதிமுறையை ரத்து செய்து அதற்கு பதிலாக, புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. புதிய விதிமுறைப்படி ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஒவர் முறை கடைபிடிக்கப்படும் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவரே தொடரும் என்று தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் கோலி, 37 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கோலிக்கும் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்திற்கும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளதால் , விரைவில் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 2வது டெஸ்டில் சதம் விளாசிய அகர்வால் 8 இடங்கள் முன்னேறி 17வது இடம் பிடித்துள்ளார், பந்து வீச்சாளர்கள தரவரிசையில் அஸ்வின் 7 இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.
சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது. ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திரைபிரபலங்கள் பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார். ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லை என்பதால் நடிகர் சங்கம் நடத்திய தேர்தலே செல்லாது எனத் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் சங்கத்தேர்தல், உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான வழக்குகள் அக்டோபர் 18 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.இந்த வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. , வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஜூலை இறுதி வரை பதிவு செய்தோர் எண்ணிக்கை 79 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் கருப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்ய்ஹுக் கொண்ட அவர், நடிகர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டி, பிரபலங்கள் அனைவரும் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை காவல் . சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாங்குநேரி தொகுதியில், திடீரென 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடம் மாற்றியது குறித்து விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், தமிழக காங்கிரஸ் சார்ப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்ததற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோவிற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக #AbhijitBanerjee அவர்களுக்கும் அவரது மனைவி திருமதி.எஸ்தர் டூஃப்ளோ அவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்தமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். pic.twitter.com/vgXr0BKk1t
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 15, 2019
பட்டாசு தடை தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இதுக் குறித்து விழுப்புரம் ஆட்சியர் அறிக்கை தர வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தி ராமஜென்மபூமி, பாபர் மசூதி வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. முன்னதாக இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பும் தங்கள் வாதங்களை முடித்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் மூன்றாம் வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு பரோல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் ரவிசந்திரன் தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது உயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் அண்ணா பல்கலை. இருக்க வேண்டுமென கோரிக்கை வைத்து அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சென்னையில் பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.எல். ஏ ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தொடர்பாக நடைப்பெற்ற விசாரணையில் “ உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஏற்கனவே சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான் விசாரணை தற்போது தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலுள்ள, முதலாவது அணு உலையில் அமைந்திருக்கும் வால்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணமாக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம் . அதில், டெல்லி உயர்நீதிமன்றம் தன்னை ஜாமீனில் வெளிவிட்டால் ஆதாரங்களை சேதப்படுத்துவதற்கான அபாயம் இருக்காது என்று சொன்ன கருத்தையும் முன்வைத்திருந்தார். இந்த ஜாமீன் குறித்து பதில் தர உச்ச நீதிமன்றம் சிபிஐ க்கு உத்தரவிட்டிருந்தது. இன்று, இதற்கு பதில் மனுத் தாக்கல் செய்த சிபிஐ, ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்த்துள்ளது . தனது செல்வாக்கின் மூலம் ப.சிதம்பரம் ஆதாரங்களை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.
डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उन्होंने 21वीं सदी के सक्षम और समर्थ भारत का सपना देखा और इस दिशा में अपना विशिष्ट योगदान दिया। उनका आदर्श जीवन देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।
India salutes Dr. APJ Abdul Kalam Ji on his Jayanti. pic.twitter.com/PPgPrkqQRG
— Narendra Modi (@narendramodi) October 15, 2019
இன்று மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மரியாதையை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்திற்கு வரும் அக்டோபர் 17 ம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே, அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் மக்களில் 10 சதவீத மக்களுக்கு டெங்கு காய்ச்சல் வரக்கூடிய அறிகுறி தென்படுகிறது என்று சுகாதார ஆய்வுகள் தெரிவித்து இருந்தன. இந்நிலையில், தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட சென்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் , வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு மிகவும் சவாலாக இருக்கும். ஏனெனில், வடகிழக்கு பருவமழையின் போது , கொசுக்களுக்கு ஏற்ப வானிலையும், சுற்றுச் சூழலும் அமைவதால் கொசுக்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் . இதனால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் அதிகரிக்கும் என்று தெரிவித்தள்ளார் . இருந்தாலும் , தமிழக அரசு அனைத்திற்கும் தயாராகி வருகிறது என்ற கருத்தையும் முன்வைத்தார்.
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்காட்டில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றிப் பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றத்திற்கு செய்யப்பட்ட திட்டங்களையும் விளக்கி கூறினார். மேலும், தற்போதைய ஆட்சிக் காலத்தில் சுழல் நிதி, மானியம் இல்லாமல், சுய உதவிக் குழுக்கள் புத்துயிர் இன்றி தவிப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 10 ஆவின் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இரண்டு வருடத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு நிறைவடைந்தாலும், ஒப்பந்தத்தை புதிப்பிக்கும் பணியை அரசு சார்பில் எடுக்கப்படாமலே இருந்தது . மேலும், கடந்த ஐந்து மாதத்திற்கான ரூ. 10 கோடி வாடகை பாக்கியையும் அரசு டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு செளுத்தாமல் இருந்து வருகிறது. எனவே, இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறித்தி நாளை முதல் ( அக்டோபர் 16 ) தொடர் வேலை நிறுத்தம் செய்ய உரிமையாளர்கள் முடிவெடுத்து உள்ளனர்.
மக்களின் ஜனாதிபதி #அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது "வல்லரசு இந்தியா" கனவு ஈடேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம்.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக்குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!
இந்திய திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்! pic.twitter.com/jLcbCumWEW
— O Panneerselvam (@OfficeOfOPS) October 15, 2019
மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் நினைவில் கொள்ளப்படுகிறது. இது குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாமின் "வல்லரசு இந்தியா" கனவை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒற்றுமையாய் உழைத்திட வேண்டும், என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேற்று தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . மேலும், சீமானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 17 ம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights