Advertisment

News today updates: தமிழக பாஜக தலைவராக ரஜினியை பரிந்துரைக்கவில்லை - ஹெச்.ராஜா

Tamil Nadu news today live updates : இன்று தமிழகத்தில் நடக்கும் முக்கிய செய்திகளை இங்கே உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: புதிய பிரதமராக பதவியேற்ற  போரிஸ் ஜான்சன் பிரெக்சிட் ஒப்பந்தத்த்திற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார். இதனால், பிரிட்டன் பிரெக்சிட்  விவகாரம் மேலும் குழப்பமாக்கப் பட்டுள்ளது.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில், அச்சுறுத்தல் தென்பட்டதா, அல்லது இந்த வெடிகுண்டு சோதனை வழக்கமான நடைமுறைதானா? என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமார் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். "இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல" என்று கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற  ஜனதா தள கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் இன்று ஒரு நாள் போராட்டத்தையும் அறிவித்துள்ளது.

இது போன்ற மற்ற முக்கிய செய்திகளையும் இந்த ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகள், பெட்ரோல் விலைகள் , தங்க விற்பனை தொடர்பான தகவல்களுக்கு கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்   



























Highlights

    22:18 (IST)04 Sep 2019

    பாஜக தலைவராக ரஜினியை பரிந்துரைக்கவில்லை – ஹெச்.ராஜா

    தமிழக பாஜக தலைவராக ரஜினியை பரிந்துரைக்கவில்லை, ரஜினியும் கேட்கவில்லை, அவரது பெயருக்கு யாரும் இழுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

    தமிழிசை செளந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில பா.ஜ., தலைவராக பலரின் பெயர் அடிபட்டு வரும்நிலையில், ரஜினி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    21:50 (IST)04 Sep 2019

    மீம் கிரியேட்டர்கள் என்னிடம் தோற்றனர் - தமிழிசை

    எவ்வளவு தான் மீம் கிரியேட்டர்கள் என்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப்போய்விட்டனர்  என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

    தெலுங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ள தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது, அரசியலுக்கு பெண்கள் மற்றும் படித்தவர்கள் அதிகம் வரவேண்டும். திமிங்கலங்கள் இல்லாத கடலில் எனக்கு நீந்த பிடிக்காது, திமிங்கலங்கள் இருந்தால் தான் பிடிக்கும், அதுபோன்று தான் அரசியல், நான் ஆளுநர் இல்லை சாதாரண ஒரு பெண். நான் சாதிக்கவில்லை, சாதாரண ஒரு பெண், எனக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்தேன்  என்று அவர் பேசினார்.

    21:46 (IST)04 Sep 2019

    பழநி அருகே விபத்து - 3 பேர் பலி

    பழனி அருகே சத்திரப்பட்டியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் 3 பேர், சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்துக்கு பொதுமக்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    20:44 (IST)04 Sep 2019

    ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது – ஸ்டாலின்

    ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது கண்டிக்கத்தக்கது  என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    20:40 (IST)04 Sep 2019

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் பலி

    பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பாடலாவில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. மக்கள் குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக கட்டடமும் இடிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல், மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

    19:55 (IST)04 Sep 2019

    டி.கே.சிவக்குமாருக்கு 13ம் தேதி வரை காவல்

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு வரும் 13ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    19:22 (IST)04 Sep 2019

    சென்னையின் பல்வேறு இடங்களில் மழை – மக்கள் மகிழ்ச்சி

    சென்னையின் தேனாம்பேட்டை. நந்தனம் , அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சென்னை மக்கள் இந்த மழையை மகிழச்சியுடன் ஏற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    18:57 (IST)04 Sep 2019

    ஆசிரியர் தினம் – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

    நாளை ( செப்டம்பர் 5ம் தேதி) ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆசிரிய பெருமக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே, நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    17:11 (IST)04 Sep 2019

    விஜயகாந்த் குடும்பத்திற்கு நன்றி தெரித்த தமிழிசை சௌந்தரராஜன்

    தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் கவர்னாராக அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களும் வேறுபாடுகளை மறந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். விஜயகாந்த் போனில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். சுதீஷ் மற்றும் பிரேமலதா ஆகியோர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்கள். அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். 

    தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த அண்ணன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கும் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரி திருமதி.பிரேமலதா அவர்களுக்கும் மற்றும் சகோதரர் திரு. சுதிஸ் அவர்களுக்கும் எனது நன்றி... pic.twitter.com/bhRuEAtvrn

    16:51 (IST)04 Sep 2019

    நியூயார்க்கில் பேசிய முதல்வர்

    வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீட்டை ஈர்க்க யாதும் ஊரே என்ற திட்டத்தை துவங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனை துவங்கி வைத்து பேசிய அவர் “வறுமை நிலை துளியும் இல்லாத இந்தியாவின் மாநிலமாக தமிழகம் திகழ்ந்திட வேண்டும்” என்றும் இதுவரை 220 நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளை துவங்கியுள்ளது “ என்றும் கூறியுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ. 3 லட்சம் கோடி முதலீட்டுக்கான உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    16:39 (IST)04 Sep 2019

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமனம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கினை நியமனம் செய்துள்ளது. மேலும் அவரை தேர்வுக்குழு தலைவராகவும் நியமித்து அறிவித்துள்ளது கிரிக்கெட் வாரியம். இது தொடர்பான முழுமையான தகவல்களை படிக்க

    16:17 (IST)04 Sep 2019

    காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு

    கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு முறையே 12,025 கன அடி நீரும், 12,076 கன அடி நீரும் தற்போது திறக்கப்படுகிறது.

    15:44 (IST)04 Sep 2019

    தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

    மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர். தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    15:09 (IST)04 Sep 2019

    மக்கள் அதிகம் விரும்பும் சேனல்கள்

    அரசு கேபிள் டிவியில் மக்கள் அதிகம் விரும்பும் சேனல்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை பெற உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அணுகலாம் என அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    14:50 (IST)04 Sep 2019

    கனிமொழி பதிலளிக்க உத்தரவு

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    14:48 (IST)04 Sep 2019

    ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சம் - பிரதமர் மோடி

    "ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று. சென்னை - ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து. இரு நாடுகளிடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளன. ஏ.கே-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும். ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    14:44 (IST)04 Sep 2019

    அமித்ஷாவுக்கு அறுவை சிகிச்சை

    குஜராத் - அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

    14:16 (IST)04 Sep 2019

    கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? - ஐகோர்ட்

    கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து செப்டம்பர் 6-ம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

    14:14 (IST)04 Sep 2019

    போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு

    புதுச்சேரியில் காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு பகல் 12 மணியுடன் வேட்பு மனு செய்ய இறுதி கால அவகாசம் முடிவடைந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பாலன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். எதிர்க் கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஆளும் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படுள்ளார்.

    14:13 (IST)04 Sep 2019

    ஊட்டச்சத்து குறைபாட்டால் யாருமே பாதிக்கப்படவில்லை

    தமிழகத்தில் 13 துறைகளுடன் இணைந்து சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் யாருமே பாதிக்கப்படவில்லை என்ற நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

    14:11 (IST)04 Sep 2019

    மூடப்படும் மாருதி தொழிற்சாலை

    குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள மாருதி சுசுகி கார் உற்பத்தி தொழிற்சாலைகள் வரும் 7 மற்றும் 9-ம் தேதி மூடப்படும் என மாருதி நிறுவனம் அறிவிப்பு

    14:06 (IST)04 Sep 2019

    இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

    விளாடிவாஸ்டாக் நகரில், மோடி - புதின் முன்னிலையில் இந்தியா - ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

    முன்னதாக பேசிய பிரதமர் மோடி, ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது எனக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள், இது இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்பு உறவை நிரூபிக்கிறது, இது 1.3 பில்லியன் இந்தியர்களுக்கும் மரியாதைக்குரிய விஷயம்" என்றார்.

    13:08 (IST)04 Sep 2019

    மும்பையில் அதிகப்படியான மழை:

    கடந்த இரண்டு மணி நேரங்களாக மும்பையில் கனத்த மழை பெய்து வருகிறது . மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் போன்ற பகுதிகளில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மழையின் அழுத்தம் மிகவும் கடினாமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடும் மழையால் இன்று பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    12:13 (IST)04 Sep 2019

    கொலீஜியம் பரிந்துரை

    சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உச்சநீதி மன்ற கொலீஜியம் - தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கும் , மேகாலயா தலைமை நீதிபதியாய் இருக்கும் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை இந்திய ஜனாதிபதிக்கி அனுப்பியுள்ளது .

    11:20 (IST)04 Sep 2019

    பேருந்து தீ வைப்பு

    கர்நாடாகவின் அரசியலில்  பலம் வாய்ந்தவரவாக கருதப்படுவர் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் அமைச்சர்  டி.கே சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நேற்று கைது செய்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  இன்று ஒரு நாள் கர்நாடக பந்தை நடத்திக் கொண்டுவருகிறது காங்கிரஸ்.   இந்த சூழ்நிலையில், ராமநகரா பகுதியில் அரசு பேருந்து ஒன்று முற்றிலும் எரிக்கப்பட்டது. காவல் துறையும்  ராமநகரா  பகுதியில் எந்த பேருந்தையும் இயக்க வேண்டாம் என்று கர்நாடக போக்குவரத்து கழகத்திற்கு அறிவுருத்தியுள்ளது.  

    10:45 (IST)04 Sep 2019

    தங்கம் விலை 30,000 ரூபாயைத் தொட்டது.

    சென்னை இன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் 30,120 என்ற விலையிலும், ஒரு கிராம் 3765  என்ற விலையிலும் விற்கப்படுகிறது. ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால்  தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், தங்க விற்பனை பதிகப்படுமா? மீண்டும் தங்கத்தின் விலை சகஜ நிலை திரும்பா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.   

    10:11 (IST)04 Sep 2019

    கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

    முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற ஒரு காரணத்தால் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலைக்கு சமமானது  என்று  கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.  பாஜகவுக்கு ஆதரவாக இல்லாத எதிர்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகளை கொண்டு மத்திய அரசு அடக்க நினைக்கீறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.  

    09:38 (IST)04 Sep 2019

    செங்கோட்டையன் கூடைப்பந்தில் கலக்கல்

    அறிவியல், கல்வி தொடர்பான செயல்பாடுகள் குறித்து பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அங்கு கூடைப்பந்து விளையாடிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

    09:26 (IST)04 Sep 2019

    வெடிகுண்டு சோதனை

    சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். உண்மையில், அச்சுறுத்தல் தென்பட்டதா, அல்லது இந்த வெடிகுண்டு சோதனை வழக்கமான நடைமுறைதானா? என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

    Tamil Nadu news today live updates: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரின் பெயர்கள் போட்டியில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உலகில் சர்வ வல்லமை மற்றும் பல்திறன் கொண்ட அப்பாச்சி ஏஹச் 64இ ரத்தத்தைச் சேர்ந்த எட்டு போர் ஹெலிகாப்டர்கள் அதிகாரப் பூர்வமாக இன்று இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள  ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் வருகிற 5-ம் தேதி வரை தொடரும் என்று நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment