Tamil Nadu news today updates : ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, நேற்று அதிகாலை தன்னுடைய இலக்கை அடையும் போது ஏற்பட்ட க்ராஷின் காரணமாக, லேண்டர் விக்ரமிடம் இருந்து தகவல் தொடர்பை இழந்தது இஸ்ரோ. இதனால் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் மனம் உடைந்தனர்.
இந்நிலையில், இஸ்ரோவின் இந்த சோதனை முயற்சிக்கு நாசா வாழ்த்துகளையும் தன்னுடைய கருத்தினையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அப்பதிவில் "விண்வெளி என்பது மிகவும் சிக்கலானது. இஸ்ரோவின் சந்திரயான் 2 முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கின்றோம். இஸ்ரோ எங்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. வருகின்ற காலத்தில் நம்முடைய சூரிய குடும்பத்தை சேர்ந்து ஆராய்ச்சி செய்வோம்" என்று கூறியுள்ளது.
Space is hard. We commend @ISRO’s attempt to land their #Chandrayaan2 mission on the Moon’s South Pole. You have inspired us with your journey and look forward to future opportunities to explore our solar system together. https://t.co/pKzzo9FDLL
— NASA (@NASA) September 7, 2019
கே.சிவன் நம்பிக்கை
அடுத்துவரும் 14 நாட்களும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் ஆர்பிட்டர் 7 ஆண்டுகளுக்கு நிலவை சுற்றி வந்து தகவல்களை நமக்கு அளிக்கும் என்றும் மகிழ்ச்சி கரமான செய்தியை அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ‘அடுத்த 14 நாட்களுக்கு மீண்டும் சிக்னல் இணைப்பைப் பெற முயற்சிப்போம்’ – சிவன்
Live Blog
Tamil Nadu news today updates : Chennai news, Chennai weather, ISRO, Chandrayaan 2, Political news, fuel price : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் செய்திகளை உடனுக்குடன் படிக்க இந்த இணைப்பை தொடருங்கள்
பெரிய திரையரங்குகளில் கூடுதல் திரையரங்குகளை அமைக்க விரைவில் அனுமதி
தமிழகத்தில் சுமார் 200 திரைப்படங்கள் திரையிடப்படாமல் நிலுவையில் இருக்கின்றன
ஆன்லைனில் புதிய படங்கள் வெளியாவதை தடுக்க திரைத்துறையும், உள்துறையும் இணைந்து நடவடிக்கை
- அமைச்சர் கடம்பூர் ராஜூ
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள உள்ளூர் வங்கி ஒன்றில், துப்பாக்கியை காட்டி முகமூடி கொள்ளையர்கள் நால்வர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வழக்கம் போல் பரிவர்த்தனை நடைபெறும் வங்கிக்கும் நுழையும் கொள்ளையர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களை தாக்கினர். அதைத் தொடர்ந்து, வங்கியை கொள்ளையிட்டனர். துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளையில், 1 லட்சத்து 34 ஆயிரத்தை எடுத்துச் சென்றனர். இந்த பரபரக்கும் காட்சி மூலம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் : துப்பாக்கி முனையில், வங்கியில் கொள்ளை#Rajasthan https://t.co/oKkgLR5zG7
— Thanthi TV (@ThanthiTV) September 8, 2019
2ஆவது முறையாக பதவியேற்ற நாள் முதல் ஓய்வின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு உழைத்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். பதவியேற்ற 100 நாட்களில் மோடி செய்துள்ள பணிகள் யாருடனும் ஒப்பிட முடியாதவை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் மற்றும் டேனீல் மேட்வேடிவ் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. ரஷ்யாவின் டேனீல் மேட்வேடிவ், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வசமாக்கும் முனைப்பில் களம் காணுகிறார். அதே நேரத்தில் ஸ்பெனின் நடால், தனது 19-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல ஆவலுடன் உள்ளார். இவ்விரு வீரர்களும் ரோஜர் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்கெனவே நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். அந்தப் போட்டியில் நடால் நேர் செட் கணக்கில் மெட்வேடிவ்வை வீழ்த்திருந்தார்.
ஆண்டின் இறுதி கிராண்ட் ஸ்லாமான அமெரிக்க ஓபனின் ஆடவர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது.
முன்னதாக அமெரிக்க ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில், கனடாவின் பியான்கா ஆன்டெர்ஸ்க்யூ பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் இறுதிப் போட்டியில் அனுபவ வீராங்கனை செரினா வில்லியம்ஸை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தேர்தல் களத்தை பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சி எப்போதும் ஒதுங்கி நின்றதே இல்லை. அந்த வகையில் விரைவில் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.
தேர்தலில் பெண்களுக்கு சம உரிமையை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன்படி 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அது எந்த தொகுதி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்." என்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பத்தாண்டு பசுமை திட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பனை விதைகளை விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார். அங்குள்ள நாராயணபுரம் ஏரிக்கரையில் பனை விதைகளை சீமான் நட்டு வைத்தார்.
சென்னையில் விநாயகர் சதூர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
பூந்தமல்லி , போரூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வளசரவாக்கம் , வடபழனி , கோடம்பாக்கம் வழியாக பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு சென்று கரைக்கப்படுகின்றன.
மாலை 6 மணிக்குள் அனைத்து சிலைகளையும் கரைத்துவிடும்படி மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுறுத்தல்.
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று தெலங்கானாவின் ஆளுநராக பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “கடின உழைப்பிற்கான எடுத்துக்காட்டு தமிழிசை” என்று பாராட்டியுள்ளார்.
குவஹாத்தில் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்கள் கவுன்சிலின் 68வது அமர்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்திய அரசியலமைப்பின் 371வது பிரிவு சிறப்பு சட்டம் ஆகும். 371வது பிரிவை பாஜக அரசு மதிக்கிறது. எந்த வகையிலும் அதை மாற்றாது என்று கூறினார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே கடந்த வாரம் ஒரு கும்பல் பட்டா கத்தியில் கேக் வெட்டி, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது. இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கும் முன், லேண்டரின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் விக்ரம் லேண்டரை, நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சட்டம் - ஒழுங்கு என்பது இருபுறமும் கூர்மையான கத்திபோன்றது. அதனை மாநில அரசு சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் அதன் பாதிப்பு அவர்களையே வந்தடையும் என்று எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு நாளை முதல் இரண்டு மாத காலத்திற்கு 114 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ். அக்டோபர் 25 முதல் 31-ஆம் தேதி வரை பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய தடைவிதித்துள்ளார்.
தேவையற்ற விளம்பர பலகைகள், கம்பிகள், கேபிள்கள் அமைத்தால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மாநகர ஆணையர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இவ்வகை நடவடிக்கைகளை தடுக்க புதிய முயற்சி.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் அதிமுகவின் கூட்டணியே தொடரும் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தஞ்சையில் பேட்டி. அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
அடையாறில் இருந்து பாரிஸ் செல்லும் பயணிகளுக்கான பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஜே. முட் சாலை, மந்தவெளி ஜங்சன், லஸ், ராயப்பேட்டை ஹை ரோட், வைட்ஸ் ரோட். மற்றும் அண்ணா சாலை வழியாக் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ள நிலையில் மெரினா மற்றும் இதர கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.. உழைப்பாளர் சிலையில் இருந்து க்ரீன்வேஸ் பாய்ண்ட், மற்றும் சாந்தோம் லூப் சாலை பகுதிகளில் இன்று அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் துவங்கி பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் நடப்பதால் பொதுமக்கள் வெளியே செல்லும் வேலை இருந்தால் சரியாக திட்டமிடுங்கள்.
பெரியார் சாலை, ஹாரிங்டன் ரோடு, 100 அடி ரோடு, ஆர்காட் ரோடு, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் ரோடு, கதேட்ரல் ரோடுகளில் இன்று அதிக அளவு போக்குவரத்து நெரிசல் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநராக பொறுப்பேற்க தெலுங்கானா சென்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. பேகம்பேட்டை விமான நிலையத்திற்கே நேரடியாக வந்த அம்மாநில முதல்வர் அரசு மரியாதையுடன் தமிழிசையை வரவேற்றார்.
Dr Tamilisai Soundararajan Telangana Governor-designate reached Hyderabad today. CM Sri KCR, Ministers, senior officials and others have warmly welcomed her and her family members at the Begumpet Airport. She received ceremonial salute from the Police and later reached Raj Bhavan pic.twitter.com/mOBzeJNoMf
— Telangana CMO (@TelanganaCMO) September 8, 2019
இன்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேம்பாலம் அருகே மட்டும் 33 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரம்
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்கும் நிகழ்வு துவங்கியது. தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். பதவியேற்ற பின்பு தன்னுடைய அப்பா குமரி அனந்தன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் தமிழிசை
புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற இயலும் என அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே 1500 ஆசிரியர்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எந்த தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர் கொள்ள தேமுதிக தயாராகவே உள்ளது என பழனியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் நன்மைக்காகவே எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார் என்று குறிப்பிட்ட அவர் இந்திய பொருளாதாரம் மந்தநிலை குறித்து வதந்திகள் பரப்பப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக இன்று பதவி ஏற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.தமிழுக்கும் தெலுங்குக்கும் பாலமாக செயல்படுவேன் என்றும், மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் என்று பேச்சு. இன்று காலை 11 மணிக்கு தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்க உள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
Tamil Nadu news today updates : அணை நிலவரம்
காவிரி ஆற்றில், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்ததால் மீண்டும் மேட்டூர் அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.05 அடி ஆகும். நீர் இருப்பு 25.7 டி.எம்.சி, நீர் வரத்து 6483 கன அடி, நீர் வெளியேற்றம் 3650 கன அடியாகும். கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 737 கன அடி நீர் திறப்பு.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights