Tamil Nadu news updates : நிலவுக்கான அடுத்த பயணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்தலைவர், சிவன்தெரிவித்தார்.நிலவின் தென் துருவப் பகுதியை ஆராயும் வகையில், 'சந்திரயான் - 2' விண்கலத்தை,இஸ்ரோ சமீபத்தில் அனுப்பியது. அதன், 'ஆர்பிட்டர்' எனப்படும், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும் சாதனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.விக்ரம் லேண்டர் சாதனம் தொடர்பு இழந்தது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
பணப்புழக்கம் ஒரு பிரச்னை இல்லை: பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், சிறிய அளவிலான மைக்ரோ நிதி நிறுவனங்களும் நாட்டில் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. தேவை உள்ள பகுதிகளில் அவர்கள் கடன்களை நீட்டித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நேர்மறையான வளர்ச்சிக்கு குரல் கொடுத்து வருகின்றனர். பணப்புழக்கத்தில் சிக்கல் இருந்தால் அது மொத்தநிதி அமைப்பில் இருந்தது. சில்லறை வணிகத்தில் இல்லை.இந்த கூட்டம் உற்சாகம் தருவதாக இருந்தது. பல நல்ல விஷயங்களை நிர்வாகிகள் தெரிவித்தனர். பிரச்னை உள்ளதாக ஒருவர் கூட சொல்லவில்லை. பணப்புழக்கம் குறித்தும் ஒருவரும் புகார் தெரிவிக்கவில்லை.. என நிர்மலா சீதாராமன் கூறினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை வரும் 30-ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும், தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் - கனிமொழி
கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது. இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 370 மில்லியன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவங்கியுள்ளோம்.
தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது எனபிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி பேராசிரியர் நிர்மலா தேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி மூன்று பேரும் கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் காலியாக உள்ள புதுச்சேரியின் காமராஜர் தொகுதிக்கும் வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரவீனா மதியழகன் உள்பட 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பத்து வருடங்களுக்கு பின் இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி கராச்சியில் இன்று தெடாங்க இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பாஜக சார்பில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர். அடுத்த மாதம் 21ஆம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் இந்த நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்தது. நேர்காணல் நிறைவடைந்த நிலையில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை அறிவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். வெங்கடேசன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
நீதிபதி கிருபாகரன்: எல்லோரும் டாக்டராக வேண்டும் என்று விரும்புவார்கள். நான் கூட டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். நல்ல மதிப்பெண் எடுக்காததால் நீதிபதி ஆகிவிட்டேன் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி அளித்த இந்திய ராணுவ வீரரும், பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.
Indian Army Spokesperson, Col Aman Anand: An Indian Army Helicopter crashed at 1 pm near Yongphulla in Bhutan. Helicopter went out of radio and visual contact soon after 1 pm. It was enroute from Khirmu (Arunanchal Pradesh) to Yongfulla on duty. (file pic) https://t.co/RoF540RMx3 pic.twitter.com/6SM0SYWJCl
— ANI (@ANI) September 27, 2019
அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ? என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “திராவிட நாகரீகத்தின் தொட்டிலாக, சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் உள்ள புனித பூமியான கீழடியைப் பார்வையிட்டேன். இந்திய வரலாறு தெற்கிலிருந்து - தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிட நாகரீகத்தின் தொட்டிலாக, சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் உள்ள புனித பூமியான கீழடியைப் பார்வையிட்டேன்.
இந்திய வரலாறு தெற்கிலிருந்து - தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை #கீழடி உறுதி செய்திருக்கிறது. pic.twitter.com/OQoeF9K0NS
— M.K.Stalin (@mkstalin) September 27, 2019
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜய் தஹில் ரமணிக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் தஹில் ரமணி: மும்பையில் இருப்பதை விட தமிழகம் பிடித்ததால்தான் சென்னையில் குடியேற விரும்புகிறேன்; அதற்காக இங்கு வீடு வாங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு: கோவை மருத்துவ மாணவர்களின் புகைப்படங்களில் சிறு வித்தியாசம் இருந்தது, தவறு ஏதும் நடக்கவில்லை. ஆள் மாறாட்டங்களை தடுக்க, பயோ மெட்ரிக் முறையில்தான் இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறினார்.
ஊடகங்களிடம் பேசிய சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா: மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை; மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. மக்களுக்கு பயன்படுகிறதா என்று பார்க்காமல் இதைவைத்து அரசியல் செய்கிறார்கள். பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழி இருப்பதனால், இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாகப் பரப்பப்படுகிறது. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை. அதற்கு மொழி ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
கீழடியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மதுரை திருமலை நாயக்கர் மகாலை சர்வதேச தரத்திற்கு மாற்ற மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாக கீழடி அகழாய்வு இடத்தை பார்வையிட்ட பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனறு அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பழமையான பொருட்களை, அங்கு அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை திருச்சி, ஒகேனக்கல் பகுதிக்கு விரைந்துள்ளது.
பேனர் வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டதை தொடர்ந்து, ஜெயகோபால் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய நிலையில், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறதா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சி நடக்கிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். திருமாவளவனின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சொக்கத்தங்கத்தின் ஆட்சி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 6 மாதங்களில் சீரடையும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பொருளாதார மந்தநிலை குறைந்து விட்டதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பண்டிகை காலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என கூறினார்.
ஐநா பொதுச்சபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று ( செப்டம்பர் 27ம் தேதி) மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இரவு 8 மணியவில் பிரதமர் மோடி சர்வதேச தலைவர்கள் மத்தியில் பேச உள்ளார். மோடி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசுவது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2014ம் ஆண்டும் அவர் ஐநா பொதுச் சபையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகையை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்படும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் 'பயோமெட்ரிக்' முறையில் கைரேகை பதிவு செய்யப்படும். இந்த முறையை செயல்படுத்தும்படி 'நீட்' நுழைவு தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் செப்.,30 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 5,574 கோடி ரூபாய் முதலீட்டில், 28 ஆயிரத்து, 566 பேருக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய தொழில்கள் துவங்க, 15 தொழில் நிறுவனங்களுடன், முதல்வர், இ.பி.எஸ்., முன்னிலையில், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights