Tamil Nadu news today updates : பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது, எதிர்காலத்திலும் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

By: Sep 29, 2019, 10:43:03 PM

Tamil Nadu news updates : பிரதமர் மோடி, அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து, நாடு திரும்பியுள்ளதை அடுத்து,மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு குறித்த அறிக்கையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில்,அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த, பிரதமர் முடிவு செய்துள்ளார். இதனால், சரியாக செயல்படாத அமைச்சர்களிடையே பீதி நிலவுகிறது.ஹரியானா மற்றும் மஹாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியாகும். அதன் பின், மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம்; ஒரு சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை – உடனுக்குடன் அப்டேட்ஸ் (தமிழில்)

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? : விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க., – தி.மு.க., இடையே, நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே தான் போட்டி. இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அ.தி.மு.க., வெற்றி பெற்றால், அக்கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகும். தோல்வி அடைந்தால், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விரும்பாது என, கருதப்படுகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் நடப்பது, இரு தொகுதி மக்களின் கைகளில் தான் உள்ளது.அ.தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விரும்புகின்றனர். எனவே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த வெற்றி, உள்ளாட்சி தேர்தலில், தங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:12 (IST)29 Sep 2019
பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் - ஓ.பன்னீர்செல்வம்

செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது; எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும். கீழடி அகழாய்வுக்கு தேவை இருந்தால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். அதிமுகவின் அடிப்படைக் கொள்கையே நீட் தேவையில்லை என்பது தான் என்று தெரிவித்தார்.

21:12 (IST)29 Sep 2019
பேனர் விழுந்து விபத்தில் பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். அவர் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வரும்போதுதான் பேனர் விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், கனடா செல்வதற்கான தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

20:57 (IST)29 Sep 2019
மழை வெள்ளத்தில் பாதித்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை - சித்தராமையா விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் முத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா: கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு 50 நாட்களாகியும் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை. வெள்ள பாதிப்பை சரிசெய்யும் நடவடிக்கையில் இருந்து மத்திய அரசு தவறிவிட்டது என்று சாடியுள்ளார்.

20:31 (IST)29 Sep 2019
தமிழ் மொழி என்பது நம் அதிகாரம் - கவிஞர் வைரமுத்து பேச்சு

சென்னை திருவொற்றியூரில் தமிழாற்றுப்படை நூலின் 9ஆம் பதிப்பு அறிமுக விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து: வடசென்னைக்கு நான் வந்ததால் எனக்குதான் பெருமை; இது திராவிட மண், தமிழை வளர்த்த மண். தமிழ் மொழி என்பது நம் அதிகாரம், அதன் மூலம் தான் அனைத்தையும் பெற முடியும் என்று கூறினார்.

20:11 (IST)29 Sep 2019
எந்திரத் துப்பாக்கியை இயக்கிய பாதுகாப்புத்துரை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலை ஆய்வு செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கப்பலில் வீரர்களின் உதவியுடன் எந்திர துப்பாக்கியை இயக்கினார்.

19:47 (IST)29 Sep 2019
காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக நிர்வாகி இடம்பெற்றது குறித்து கே.எஸ்.அழகிரி விளக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழுவில், அதிமுகவைச் சேர்ந்த கே.பி.கே. செல்வராஜ் பெயர் இடம்பெற்றது. இது குறித்து ஊடகங்களிடம் விளக்கம் அளித்த கே.எஸ்.அழகிரி: கே.பி.கே.ஜெயக்குமாருக்கு பதில் அவரது சகோதரர் செல்வராஜின் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

19:44 (IST)29 Sep 2019
காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக நிர்வாகி இடம்பெற்றுள்ளார்

நாங்குநேரி இடத்தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் தொகுதி மேற்பார்வையாளராக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கே.பி.கே.செல்வராஜ், தற்போது அதிமுகவில் நெல்லை மாவட்ட புறநகர் சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக உள்ளார்.

19:33 (IST)29 Sep 2019
அண்ணா பல்கலை.யில் பகவத்கீதையை விருப்பப்பாடமாக மாற்ற அறிவுறுத்தல் - அமைச்சர் அன்பழகன்

செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை விருப்பப்பாடமாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகவத்கீதையை விருப்பப்பாடமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பக் கல்வி கழகம் பரிந்துரையில் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த பாடத்தில் சமஸ்கிருத பிரிவு இல்லை என்று கூறினார்.

19:07 (IST)29 Sep 2019
மகாராஷ்டிரா தேர்தல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல் 51 வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.

18:44 (IST)29 Sep 2019
உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான் இருக்கும். இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை இன்று இரவு அல்லது நாளை காலை தெரிவிப்போம். என்று கூறினார்.

18:21 (IST)29 Sep 2019
சேலம் கோட்டத்தில் புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அவர், தாலிக்கு தங்கம், திருமண உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். கடந்த 8 ஆண்டுகளில் 11.46 லட்சம் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ3956 கோடி வழங்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 5,260 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

17:52 (IST)29 Sep 2019
நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமித்தார் கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி தொகுதிக்கு காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். எச்.வசந்தகுமார் எம்.பி தலைமையிலான குழுவில் 26பேர் இடம்பெற்றுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி தலைமையில் காங். தேர்தல் பணிக்குழு நியமனம்.

17:31 (IST)29 Sep 2019
இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு நாளை காலைக்குள் வெளியாகும் - சி.பி.ராதாகிருஷ்ணன்

செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன்: புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி அந்த மாநில பாஜக தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

17:03 (IST)29 Sep 2019
இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது முடிவு செய்யவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

16:58 (IST)29 Sep 2019
சில்லரை வியாபாரிகள் 100, மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும் - மத்திய அரசு

வெங்காயம் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால்,மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் மட்டுமே வெங்காயம் இருப்பு வைக்க வேண்டும். வங்கதேசம், இலங்கைக்கு குறைந்த விலையிலான வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. உணவுத்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

16:30 (IST)29 Sep 2019
ஸ்டாலின் ஊழல் புகார்:

தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. இது குறித்து,  லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சுதந்திரமாக விசாரணை நடத்தி, காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.  

15:37 (IST)29 Sep 2019
டிஎன்பிஎஸ்சி விவகாரம் - முதல்வர் கருத்து

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு- II(இன்டர்வுயூ மற்றும் நான்-இன்டர்வுயூ )  பணிகளுக்கான முதல் நிலைதேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்ககளை  அதிகரித்து  அறிவிப்பை வெளியிட்டிருந்தது டிஎன்பிஎஸ்சி. இதுகுறித்து, பல அரசியல் தலைவர்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், செய்தயாளர்களிடம் சந்தித்த முதல்வர் பழனிசாமி, " டிஎன்பிஎஸ்சி   அரசியலமைப்பால் உருவாக்காப்பட்ட ஆணையம்.  அதன் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவது முறையாக இருக்காது என்றும் தெரிவித்தார். 

மேலும், நீட் ஆள்மாறாட்டம் இனியும் நடை பெறாமல் இருக்க போதிய பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி மத்திய அரசுடன் விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.       

15:02 (IST)29 Sep 2019
பீகாரில் கனமழை

கடந்த 36 மணி நேரங்களாக தொடந்து பெய்த கனமழையால் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மற்றும் சில பகுதிகளில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன . இதனை சமாளிக்க  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உதவியை நாடியுள்ளது அம்மாநில அரசு . இது வரை, கனமழை காரணமாக அங்கு ஏழு பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

14:16 (IST)29 Sep 2019
100 பில்லியன் டாலர் முதலீடு:

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா,பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் துறைகளில் 100 பில்லியன் டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பதாக சவுதி தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி தெரிவித்திருக்கிறார். சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உடன் இணைந்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நம்பகத் தன்மையை  பிரதிபலிகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

14:04 (IST)29 Sep 2019
வெங்கயாம் ஏற்றுமதி தடை

சமிப நாட்களாகவே, வெங்காயத்தின் விலை கணிசமான அளவில் உயர்ந்துக் கொண்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து,  வெங்காயம் தட்டுப்பாட்டைக் குறைக்க அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு.  

13:44 (IST)29 Sep 2019
ஐஐடி பட்டமளிப்பு விழா – உரைக்கு யோசனை கூற மாணவர்களுக்கு மோடி அழைப்பு

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில், பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, தன்னுடைய உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

13:07 (IST)29 Sep 2019
அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனை – முதல்வர் பழனிசாமி

எதிர்கட்சியினரின் பொய் பிரசாரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது  என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி உபரி நீரை சேமிக்க மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை 4 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13:02 (IST)29 Sep 2019
ஸ்டாலின் உடன் புதுச்சேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் சந்திப்பு

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

13:00 (IST)29 Sep 2019
இஸ்ரோ கண்காட்சியை புகைப்படம் எடுத்தவர்களிடம் உளவுத்துறையினர் விசாரணை

தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை புகைப்படம் எடுத்த ரபீக், ஜாபர் அலி ஆகியோரிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர்.  சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ரபீக் வீட்டில் நடத்திய சோதனையில் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஹார்டு டிஸ்க், பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

12:56 (IST)29 Sep 2019
டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது இல்லை – டிஎன்பிஎஸ்சி செயலர்

குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லமுடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் குரூப் 2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது, இதனால்தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி செயலர் தெரிவித்துள்ளார்.

12:07 (IST)29 Sep 2019
தூத்துக்குடியில் அமைகிறது இஸ்ரோ ஏவுதளம் – அமைச்சர் உதயகுமார்

தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் வழங்க முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். ஏவுதளம் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

11:41 (IST)29 Sep 2019
நவராத்திரி - தசரா விழா : பிரதமர் மோடி வாழ்த்து

இந்த திருவிழா காலம் மக்களுக்கு புதிய ஆர்வம், புதிய சக்தி, புதிய தீர்மானம் ஆகியவற்றை அளிக்கட்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11:01 (IST)29 Sep 2019
குரூப்-2 தேர்வில் மாற்றம் ஏன்? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காகவே குரூப்-2 தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

10:40 (IST)29 Sep 2019
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரு குரலில் பேசவேண்டும் – சிதம்பரம்

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால்தான் தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் - ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர், டுவிட்டரில் பதிவு இட்டுள்ளனர்.

10:20 (IST)29 Sep 2019
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை

பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெறும் " ஹேக்கத்தான்" தொழில்நுட்ப  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

10:02 (IST)29 Sep 2019
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் – மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்  தொடர்பாக, 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.   3 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.  நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

09:44 (IST)29 Sep 2019
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.71.09 ஆகவும் உள்ளது. 

09:41 (IST)29 Sep 2019
அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை எத்தனை? – துரைமுருகன் கேள்வி

எட்டு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். தி.மு.க ஆட்சியில் காவிரியில் தடுப்பணையே கட்டப்பட வில்லை என்று உண்மைக்குப் புறம்பாக முதல்வர்ர் பேச கூடாது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu news today updates : நவீன போர் விமானங்களை தயாரிக்கும், அமெரிக்காவை சேர்ந்த, 'லாக்ஹீடு மார்ட்டின் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனம், 'எப் - 16' ரக போர் விமானங்களை, அடுத்த ஆண்டு முதல், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் இருந்து உற்பத்தி செய்ய உள்ளதாக, அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார். ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து, பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட 'மிக்' ரக போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நவீன போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. விமான படைக்கு தேவையான போர் விமானங்கள், ஐரோப்பிய நாடான பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

நடிகர் ரஜினியும், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும், மும்பையில் சந்தித்து பேசியது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, ரஜினி ரசிகர்கள் பதிலடி தந்துள்ளதால், பா.ம.க., - ரஜினி இடையே, மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

Web Title:Tamil nadu news today live updates chennai weather modi mann ki baat navratri tn byelection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X