/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-13T112741.594.jpg)
tamilnadu 4 core subject stream retained
Tamil Nadu news updates : முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சிங்கப்பூர் செல்லும் ஓபிஎஸ், அங்கிருந்து சீனா அல்லது இந்தோனேசியாவிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அட... கோவில் கருவறையில் நம்ம ரசிகா...
புதிய பார்லிமென்ட் கட்டடம் : 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்கும் குளிர்கால கூட்டத் தொடரை புதிய பார்லி., கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.டில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பார்லி., கட்டடம், ஜனாதிபதி மாளிகை, வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள், இந்தியா கேட் ஆகியவை 1911 முதல் 1931 காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டன. தற்போது பார்லி. உறுப்பினர்கள் எண்ணிக்கை துறைகள் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து பார்லி. கட்டடத்தை மறுசீரமைக்க அல்லது புதிய கட்டடத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணி அடுத்த ஆண்டு துவங்கி 2022ல் புதிய பார்லி. கட்டடம் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் இஸ்லாமாபாத்தில் நவ. 29, 30 அல்லது நவ.30, டிச.1ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய டென்னிஸ் சங்கம் அறிவிப்பு.
இருப்பினும் இஸ்லாமாபாத்தில் போட்டியை நடத்தலாமா அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்தலாமா என நவ.4ம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் - இந்திய டென்னிஸ் சங்கம்
கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.1,02,772 கோடி தனியார் துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.சி.சம்பத்
ரூ.1,04,961 கோடி முதலீடு பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது, 1,61,822 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.சி.சம்பத்
தமிழ்நாடு தொழில் துறையின் சாதனைகளை பொறுக்க முடியாமல் அறியாமையில் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது-அமைச்சர் எம்.சி.சம்பத்
திமுக ஆட்சியுடன் ஒப்பிடும் போது அதிமுக அரசு ஆட்சியில் ஒவ்வொரு வருடத்திலும் மூன்றரை மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது- அமைச்சர் எம்.சி.சம்பத்
டெல்லியில் நாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்; தொழில்துறைக்கு சலுகைகள், வங்கிகள் இணைப்பு என ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த பொதுத் தேர்வுகளின் முடிவைக் கொண்டு, மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. லண்டனில் முறைகேடாக சொத்து வாங்கியதாக கறுப்பு பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறையின் பரிந்துரையின் பேரில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என்று ராபர்ட் வதேரா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்துள்ளது.
இனி பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவித்த அரசியல் தலைவர்கள்
’இனி பேனர்கள் வைக்கக்கூடாது’
- பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ விவகாரத்தில் கட்சி தலைவர்கள் அறிவிப்பு... | #NoMoreBannerpic.twitter.com/uBLyoLleUJ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 13, 2019
உடல்நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 520 செவிலியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மருத்துவ சேவை தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை கோரி வழக்கு
சுகாதாரம் & குடும்ப நலத்துறை செயலர் ஒரு வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கீழ்நிலை ஊழியர் ஒருவரை பொறுப்பாக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள்
தவறிழைத்த நபரை முறையாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள்
- உயர்நீதிமன்றம்
ஆணையர் எடுக்கும் நடவடிக்கையை தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கைதர நீதிபதிகள் உத்தரவு
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் டிஜிட்டல் பேனர் அச்சிடும் கடைகள் உள்ளன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள். ஆன்லைன் மூலம் பேனர் வைக்க மாநகராட்சி & சம்பந்தப்பட்ட துறைகள் அனுமதி வழங்கினால் முறைகேடுகள் & விபத்துக்களை தவிர்க்கலாம் என தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் டிஜிட்டல் பேனர் அச்சிடும் கடைகள் உள்ளன . இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள். ஆன்லைன் மூலம் #Banner வைக்க மாநகராட்சி & சம்பந்தப்பட்ட துறைகள் அனுமதி வழங்கினால் முறைகேடுகள் & விபத்துக்களை தவிர்க்கலாம் என தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சிசிடிவி காட்சி | #Bannerspic.twitter.com/pA9YFClKcZ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 13, 2019
விவகாரத்திற்கு மட்டும் தான் தற்போது பேனர் அடிப்பதில்லை என்கிறார்கள், மற்றபடி எல்ல நிகழ்விற்கு பேனர் அடிக்கும் கலாச்சாரம் உள்ளது. நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதனை அரசு அதிகாரிகள் பயன்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் யாராவது இறந்தால் தான் ஏதாவது முன்னெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் உயிர்ப்பலி தேவைப் படுகிறது” என சுபஸ்ரீ விபத்து குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பணியில் கவனக்குறைவு போன்றவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
”பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது. தலைமைச் செயலரோ,நகராட்சி நிர்வாக செயலரோ பதில் மனுவில் கூறியது போல் செயல்படவில்லை” என பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பேனர் வைத்தவரிடமிருந்து தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பேனர்கள் வைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேட்டதற்கு, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அப்போது கூறப்பட்டது. உயிர் பலி கொடுத்தால் தான் அரசு செயல்படும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தபோது, ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் அறிக்கை அளித்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். அதோடு எதிர்காலத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.
கறுப்பு பண மோசடி தொடர்பாக பிரியங்கா காந்தியின் கணவர், ராபர்ட் வதேரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது அமலாக்கத்துறை. அவர் வெளிநாடு செல்ல சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தற்போது அனுமதியளித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 8 வரை ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என்ற ராபர்ட் வதேராவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரிநாதன் மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளனர். பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இவர்கள் 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராவது குறிப்பிடத்தக்கது
பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும். பதாகைகள் தவிர்ப்போம்... நாகரிகம் காப்போம். பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூறும் உரிமை உண்டு!
— Dr S RAMADOSS (@drramadoss) September 13, 2019
பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பா.ம.க. நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது!
— Dr S RAMADOSS (@drramadoss) September 13, 2019
வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதாெடர்பாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தி.மு.க. நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்க கூடாது என்று கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த அறிவுரையை தி.மு.க.வினர் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதல்வர் கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலைகளில் தேக்கப்பட வேண்டும்? என கேள்வியும் எழுப்பியுள்ளது.
பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பான முறையீட்டின் போது உயர்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.. இந்த வழக்கை தற்போது உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழாவை துவக்கிவைத்து பேசிய துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது, வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் . இயற்கை பானங்களான இளநீர், மோர் உள்ளிட்டவைகளை மக்கள் பருக வேண்டும் என்று அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் என தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்னை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றிவரும் மருத்துவர் உதயராஜ்(29) விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த உதயராஜ் மதுரை மதிச்சியம் பகுதியில் அறை எடுத்து வசித்து வந்த நிலையில், நள்ளிரவில் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக, மதிச்சியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 37,000 கனஅடியில் இருந்த 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120.490 அடியாகவும், நீர்இருப்பு 94.254 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 29,900 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு 28,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை பள்ளிகரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், இரு சக்கரவாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பின்னார் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
வங்கிகள் இணைப் புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட, நான்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தினர், வரும், 26, 27ம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். நாடு முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான, வங்கி அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் வேலை நிறுத்தத்தால், வங்கியின் செயல்பாடுகள் முழுவதும் முடங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights