Tamil Nadu news updates : சிதம்பரத்திற்கு ஜாமின் மறுப்பு - மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதனால், கைது நடவடிக்கையை தவிர்க்க, உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள, மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டால், அவர் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம் : தமிழகம், தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொழில் துறையில் முன்னேறிய மற்றும் தொழில் துவங்க உகந்த மாநிலமாகவும், தமிழகம் உள்ளது.சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத, சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து வசதி உடைய மாநிலமாகவும் உள்ளது.மேலும், 37 ஆயிரத்து, 720 தொழிற்சாலைகளுடன், எண்ணிக்கையில், இந்திய அளவில், முதல் இடத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், மகாராஷ்டிராவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளதாக தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள் தமிழகத்தில் தொடரும் கனமழை... பொதுமக்கள் மகிழ்ச்சி
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Diwas, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தார்கள். இதனால் சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஹரிஹரனுடன், தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். பயணிகள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது’ என கூறப்பட்டிருக்கிறது.
நிதிமோசடி செய்தவர்கள் வெளிநாடு தப்பிச்சென்றிருப்பதை கருத்தில்கொண்டு ப.சிதம்பரம் விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை எடு்ததுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவிட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளதாவது, ப.சிதம்பரம் Scam Kingpin என்று டில்லி உயர்நீதிமன்றம். விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார். மழுப்பலாக பதிலளித்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு செப். 4-ம் தேதிக்குள் பதிலளிக்க கிரண்பேடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை புனரமைப்போம் முதலமைச்சர் நிவாரண நிதியில் நமது பங்களிப்பை செலுத்துவோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவீட் செய்துள்ளார்.
கேரளாவை புனரமைப்போம்
முதலமைச்சர் நிவாரண நிதியில் நமது பங்களிப்பை செலுத்துவோம்முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி
கணக்கு எண்: 67319948231
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, திருவனந்தபுரம் கிளை.
ஐ.எப்.எஸ்.சி :SBIN0070028ஸ்விப்ட் கோடு: SBININBBT08
சேமிப்பு கணக்கு
பேன் எண்: AAAGD0584M— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 19, 2019
இத்துடன் முதலைமச்சர் பேரிடம் நிவாரண நிதி வங்கி கணக்கையும் இணைத்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் ர;.9.89 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.9,89,71,731 வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர் சிதம்பரம். அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
டிஸ்கவரி சேனலில் பிரபலமான, 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற நிகழ்ச்சிக்காக, தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து, பிரதமர் மோடி, அடர்ந்த காடுகளில் மேற்கொண்ட சாகச பயண நிகழ்ச்சி ஒளிபரப்பு, உலகின் மிகவும் பிரபலமான டி.வி. டிரெண்டிங் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights