Tamil Nadu news updates 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், இன்றும், நாளையும் மழை பெய்யும்; 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலுார் ஆலங்காயத்தில், ஒரே நாளில், 15 செ.மீ., மழை பெய்தது. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, வட மாவட்டங்களின் வறட்சி நிலை மாறுகிறது. தொடர் மழையால், பல பகுதிகளில் ஏரிகள் நிரம்புவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலவை நோக்கி சந்திரயான்-2 பயணம் : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பியுள்ள, 'சந்திரயான் - 2' விண்கலம், செப்டம்பர், 7ல், அங்கு தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பராமரிப்புபணி காரணமாக, சென்னையின் பலபகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) மின்விநியோகம் தடைசெய்யப்பட உள்ளது. சென்னையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்
பவானிசாகர் அணை, இன்று, 65வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அடுத்த பெரிய அணை மற்றும் தென் மாநிலங்களில், மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு உண்டு.அணையின் மொத்த உயரம், 105 அடி. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணையின் முழு நீர்தேக்கப் பரப்பு, 30 சதுர மைல். கரையின் நீளம், 8.78 கி.மீ., ஆகும்.கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம், 200 கி.மீ.,யாக உள்ளது. பிரதான கால்வாயில் இருந்து, 800 கி.மீ.,க்கு கிளை வாய்க்கால்களும், 1,900 கி.மீ.,க்கு, பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டு உள்ளன.
வேலூரில் கனமழை, காட்டாற்று வெள்ளம் தமிழகத்தில் மழைப்பொழிவு குறித்து அறிந்துகொள்ள
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் சிம்லா மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ளது போன்று விளையாட்டு மையங்களை அமைக்க வேண்டும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன்
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்றின் நீரை நிரப்ப வேண்டும்; பொற்றாமரைக் குளத்தின் நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசி படிய வாய்ப்பு என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்ததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குமாரசாமி ஆட்சி கடந்த மாதம் கலைக்கப்பட்ட பிறகு முதல்வராக பி.எஸ். எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அமைச்சரவையில் யாரும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நாளை காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை ஆளுநர் மாளிகையில் கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்கிறது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்விக்காக புதிய தொலைக்காட்சி ஒன்றை அறிமுகம் செய்யும் திட்டம் வெகு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது. காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாக அறிவித்தார் ஜெ. தீபா . நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகள் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் ஜெ. தீபா. தொண்டர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் இணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதங்கள் மூலமாக வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் விளைவாக இந்த முடிவை எட்டியுள்ளதாகவும் அவர் அறிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மத உணர்வை தூண்டும் படி பேசியதாக காவல்துறை அவருக்கு சம்மன் அளித்துள்ளது. ஜூலை மாதம் 22ம் தேதி “கடந்த காலத்தில் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சியே அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்டார். தற்போது அப்படி ஒரு நிலை இல்லை” என்று அவர் பேசியதால் காவல்துறை நடவடிக்கை.
கொடநாட்டில் நடைபெற்ற மர்ம கொலைகளை முதல்வருடன் ஒப்பிட்டு பேசினார் ஸ்டாலின். முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசாணைப்படி, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு அவ்வழக்கு மாற்றம்.
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். அதற்கான தொடர் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம் என்றும், நாட்டில் மருத்துவ வசதி மற்றும் உட்கட்டமைப்பில் முதன்மையான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதல் அமைச்சர் அறிவிப்பு. மேலும் ரூ. 500 கோடியில் 1,829 ஏரிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்கள், வீடுகள், உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு முறையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறுவ வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவு. மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை
ப. சிதம்பரம் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சராக இருந்த போது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தேவையான விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அளித்துள்ளது. 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
அதிகப்படியாக கொட்டித்தீர்த்த மழையால் ஏற்கனவே வேலூரின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் வாணியம்பாடி அருகே உள்ள கபூராபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தென் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களின் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி. தலைமைச் செயலாளர் தலைமையில் குழுவை விரைவில் அமைத்து, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு.
கார்ட்டூனகள் இல்லாமல் பத்திரிக்கைகள் இல்லை. அதைப் போலத்தான் தற்போது மீம்ஸ்கள் இல்லாமல் சமூக வலைதளங்களும் இல்லை. மீம்ஸ்களை அவமதிப்பது நேரடியாக கார்ட்டூன் என்ற கேலிச்சித்திரங்களை அவமதிப்பதாகும் என்று மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பரில் தேர்தலை நடத்த தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களிடம் இ-சலான் இயந்திரம் மூலம், அபராதம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளாக அவர் மேலும் கூறினார்.
தமிழகத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் துவங்கின. மக்களின் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டுவதற்காக புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரிய சோரகை பகுதியில் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் .
தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எலி மருந்தையே அதிகம் பயன்படுத்துவதால், அந்த மருந்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக கணிசமாக அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு பிறகு, இன்று ( ஆகஸ்ட் 19ம் தேதி) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்படும் என்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இ.மெயிலை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வரும் 23ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பஹ்ரைன் நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பவதாவது: இந்தியாவில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.
தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கடைகளில் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும் விற்பனை விலையை லிட்டருக்கு ஆறு ரூபாயும் உயர்த்தியுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: ''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, பல நாடுகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும். ''பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகள் இடையிலும் கூட்டு முயற்சி தேவை. பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்,'' என்று, லிதுவேனியா சென்றுள்ள, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights