Tamil Nadu news updates : நாடு முழுவதும் ஆயுஷ் மையங்கள்: பிரதமர் மோடி -டில்லியில் நடந்த, யோகா விருது வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 500 ஆயுஷ் மையங்களை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தாண்டில் மட்டும், 4,000 மையங்கள் அமைக்கப்படும்.ஒரே நாடு, ஒரே வரி ஆகிய வரிசையில், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, ஒரே மாதிரியான மருத்துவ சேவையை வழங்க, ஆயுஷ் மையங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இது தவிர, நாடு முழுவதும், 1.5 லட்சம் சுகாதார மையங்களை அமைக்க வேண்டியுள்ளது. ஆயுஷ் திட்டத்தில், பழமையான மருத்துவ முறையில் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். இதை சாத்தியமாக்க, இந்த தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர்களை, இந்த துறைக்கு அழைத்து வர வேண்டியது அவசியமாகிறது. இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
மதுரை, திருச்சி, நெல்லையில் 'மெட்ரோ': மத்திய அரசு பரிசீலனை : தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக திருச்சி, மதுரை, நெல்லை போன்ற நகரங்களில் சிறிய ரக மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அமைச்சா்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்த போது, "நாளை அமெரிக்காவில் முதலமைச்சரோடு நாங்கள் இணைகிறோம். அமெரிக்காவில் சைடெக் நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிந்து, அங்குள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.
'பிகில்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கும் 'வெறித்தனம்' பாடல் நாளை(செப்.1) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து #Verithanam எனும் ஹேஷ் டேக் இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
#Verithanam from tomorrow 6pm!!@actorvijay @arrahman @Lyricist_Vivek @Atlee_dir @Ags_production @archanakalpathi @dop_gkvishnu @AntonyLRuben @SonyMusicSouth @Jagadishbliss pic.twitter.com/dVTiqvAIPl
— kathir (@am_kathir) August 31, 2019
பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 6 வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 2 ம் தேதி தொடங்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், உள்பட 13 மாவட்டங்களில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய், சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி - காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான கடலூர்-சென்னை சாலைக்கும் கருணாநிதி பெயர் வைக்க கிரண்பேடி அனுமதி அளித்திருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி மல்லிகைப் பூ ஒரு கிலோ 1500 ரூபாயாகவும், முல்லைப்பூ கிலோ 800 ரூபாயாகவும் உள்ளது. அடுத்தடுத்து விழா நாட்கள் வர உள்ளதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சென்னை முழுவதும் வருடம்தோறும் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. பொது இடங்களில் சிலைகளை வைப்பதற்கும் அதனை கடலில் கறைப்பதற்கு காவல்துறையினரிடம் இருந்து முறையான அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு 2600 சிலைகள் அமைக்க சென்னை பெருநகர காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த அறிவிப்பை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார். வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், எனினும் அவர்களுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை எனவும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அதிகாரி, நில அளவையாளர் உள்ளிட்ட காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 இடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு நாளை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக டிஎன்பிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் நாளை காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுப் பணிகளை கண்காணிக்க கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என கூறினார். சமூகவலைத்தளங்களில் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறி இருந்த அமைச்சர் ஜெயக்குமார், “ நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்றார், மேலும் சீமானின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து” எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சமீபத்தில் ஆவின் பால் விலைகள் திடீரென்று உயர்த்தப்பட்டன. இதை சற்றும் எதிர்பார்க்கதாக பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பால் விலை உயர்வை எதிர்த்த தொடரப்பட்ட இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ,62,248 கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 38,507 கட்டட உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 69,490 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு இடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலக பேட்மிடன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, டில்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சில தினங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று (ஆகஸ்ட் 31ம் தேதி) கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது..
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகுநிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? https://t.co/mriVLpgBcU
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 30, 2019
மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் வழங்குவதை பொறுத்து மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்துக்கு 24 சதவீத மண்ணெண்ணெயை ஒதுக்கியிருப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ரேசன் கடைகளில் நுகர்வோர்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெயின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பணி அமர்த்தலில் பாலின சேர்க்கை என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலை மாணவர்களான ரேச்சல் லெவன்சன் மற்றும் லயலா ஓகேன் ஆய்வு மேற்கொண்டனர். நகர்ப் புறங்களில் படித்த பெண்களில் 8.7 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. வேலை தேடுவதில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ள போதிலும் பாலின இடைவெளியும், உயர்கல்வி கற்ற பெண்கள் ஆண்களுடன் போட்டி போடும் போது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights