Tamil Nadu news today live updates : 1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த வருடம் 20 ஆவது நினைவு தினம் என்பதால் மத்திய ராணுவ அமைச்சகம் இப்போரில் பங்காற்றிய வீரர்களுக்கு வீடியோ ஒன்று அர்ப்பணிப்பு செய்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் ஆங்கிலத்தில் படிக்க : Chennai, Tamil Nadu News Live Updates: Rain in Chennai today; Athi Varadar has received 34L devotees
Kargil Vijay Diwas
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு அப்போரில் பங்காற்றிய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி ட்வீட் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு போரை நினைவு கூறிய அவர், “அந்த போரை முடித்துவிட்டு வீடு திரும்பாத ராணுவ வீரர்களுக்கு இந்நாடு பெரும் நன்றிக்கடன் பெற்றுள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
On Kargil Vijay Diwas, a grateful nation acknowledges the gallantry of our Armed Forces on the heights of Kargil in 1999.
We salute the grit and valour of those who defended India, and record our everlasting debt to those who never returned.
Jai Hind! ???????? #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 26, 2019
இன்றைய வானிலை
தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்னையில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் நீர் ஆதாரங்களான ஏரிகளில் நீர் சேகரம் ஆகவில்லை என்றாலும், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து இருக்கக்கூடும். இன்று வட தமிழக மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Kargil Vijay Diwas, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக ஜான் லூயிசும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருண் சுந்தர் தயாளனும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்த விவகாரம் தொடர்பாக தவறான அறிக்கை அளித்த காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஆகஸ்ட் 5ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற இருப்பதன் காரணமாக – மருத்துவ பல்கலை. தேர்வுகள் நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த சுதா சேஷய்யன் கூறியதாவது, வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக, வரும் 5ம் தேதி நடைபெற இருந்த மருத்துவ பல்கலை. தேர்வுகள் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இஎன்டி பிரிவு மாணவர்களுக்கான தேர்வு, 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பி.டி.எஸ்., முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய முறையிலான பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக அவர் மேலும் கூறினார்.
தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க மருத்துவ கல்வித்துறையின் முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என பாடப்புத்தகத்தில் 12-ம் வகுப்பு புத்தகத்தில் அச்சிடப்பட்டதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச் சென்ற வழக்கில் சிக்கிய பேராசிரியை நிர்மலாதேவி, சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சாமி வந்திருப்பதாகக் கூறி அங்கேயே அமர்ந்து குறி சொல்லத் தொடங்கினார். மனநிலை சரியில்லாதவரைப் போன்று நடந்து கொண்ட அவர் தற்போது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனதை திடப்படுத்தவதற்காக தியான முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜெய் ஸ்ரீராம் கோசத்தினை கூற சொல்லி அப்பாவி சிறுபான்மையினரை தாக்கப்படுவதை வழக்கத்தில் கொண்டிருப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று பலரும் வேண்டிக் கொண்டு மணிரத்தினம், அபர்னா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினர். இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் கூறுவது தவறில்லை என்றும், அதனை முழக்கமிடுபவர்கள் தவறானவர்கள் இல்லை என்றும் கூறி கங்கனா ரனாவத் உள்ளிட்ட 61 பிரபலங்கள் இந்த கடிதத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் இனிமேல் எந்த விதமான, விரும்பதகாத செயல்களாஇ செய்ய மாட்டோம் என்று 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழி அளித்தனர். மேலும் எங்களின் பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை அறிவிக்க ஜூன் 30ம் தேதியில் இருந்து ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. திமுகவினர் இதில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய குழு ஒன்றை பொன்முடி தலைமையில் அமைத்தது. அந்த ஆய்வின் முடிவுகளை பொன்முடி முக ஸ்டாலினிடம் சமர்பித்தார்.
டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என மாநிலங்களவையில் வைகோ பேசி வருகிறார். அந்த உரையில் அவர் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் இந்த திட்டங்களை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி, சிவகங்கை, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியீடு... 2021ம் ஆண்டுக்கான 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இந்த அரசாணை வெளியீடு..
கார்கில் போரின் போது எனக்கு கார்கில் வீரர்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைதஹ்து. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜவிற்காக வேலை செய்து கொண்டிருந்த போது எனக்கு இப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்து என்றும் அவர்களுடன் பேசியது மிகவும் மறக்க முடியாத தருணம் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
During the Kargil War in 1999, I had the opportunity to go to Kargil and show solidarity with our brave soldiers.
This was the time when I was working for my Party in J&K as well as Himachal Pradesh.
The visit to Kargil and interactions with soldiers are unforgettable. pic.twitter.com/E5QUgHlTDS
— Narendra Modi (@narendramodi) July 26, 2019
இன்று மாலை முதல்வராக பதவி ஏற்கிறார் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா. ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடுவிடுத்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா.
பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட திட்டம் தீட்டியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கினை வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கள் கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்று காலை கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் பாஜக தலைவர் எடியூரப்பா. இன்றே பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 23ம் தேதி மாலை நடைபெற்ற குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு சாதகமாக 105 வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஏ.ஆர். முருகதாஸ், ரஜினி காந்தின் தர்பார் படத்தின் சில ஸ்டில்களை ஃபேன்மேடிற்காக வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இது தான் சாக்கு என்று தங்களின் திறமையை வெறித்தனமாக காட்டி வருகின்றனர். அது தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற
ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் வழிபாட்டு தலங்களில் காலை முதல் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்று ஸ்வாமி தரிசனம் பெற்று வருகின்றனர். இன்று காலையில் இருந்தே சுவாமி மலை, மருதமல்லை, திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவகத்தில், கார்கில் போரில் உயிர்துறந்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலில் செலுத்தி வருகிறார்.
Delhi: Defence Minister Rajnath Singh pays tribute at National War Memorial on 20th #KargilVijayDiwas. pic.twitter.com/PWssdObUJY
— ANI (@ANI) July 26, 2019
மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு இணையான, சுதந்திர அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது மத்திய தலைமை தகவல் ஆணையம். அரசின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்வதற்காகவே செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் தகவல் ஆணையர்களின் நியமனம், பதவிக்காலம், விதிமுறைகள், மற்றும் ஊதியம் உள்ளிட்டவையை மத்திய அரசே நிர்ணயிக்கும் என்று கூறி தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தகவல் ஆணையங்களின் அதிகாரத்தினை நீர்த்து போகச் செய்யும் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடும் அமளிக்கு மத்தியில் 22ம் தேதி மக்களவையில் நிறைவேற்றபட்டது.
வேலூரில் வருகின்ற 5ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். 27, 28, 29 தினங்களில் அவருடைய பிரச்சாரம் நடைபெற உள்ளது. அடுத்த வாரம் ஆகஸ்ட் மாதத்தில் 1, 2, 3 தேதிகளில் மீண்டும் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
நேற்று முன் தினம் புதிய சுற்றுவட்டப்பாதையை அடைந்தது போலவே இன்றும் 2வது முறையாக தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை அதிகரித்துக் கொண்டது சந்திரயான் 2. சந்திரயான் 2 தற்போது 54,829 கி.மீ தூரம் பயணித்துள்ளது. 20ம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி நகரத்துவங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights