Tamil Nadu news live updates 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் வழக்கில் கடந்த 15 நாட்களாக சி.பி.ஐ. காவலில் இருந்த காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்(73) இனி இருக்கப் போவது திஹார் சிறைதான். அவரை 19ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய நல் ஆசிரியர் விருது : டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 46 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய நல் ஆசிரியர் விருதை வழங்கினார். ஆசிரியர் தினம் நேற்று ( செப்டம்பர் 5ம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று, நடந்த விழாவில், 46 பேருக்கும், தேசிய நல்லாசிரியர் விருதை, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார்
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Diwas, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மேட்டூர் அணைக்கு காவிரி ஆற்றில் இருந்து மணிக்கு 50 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மேலும் 15 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 117.59 அடியாகும். நீர் இருப்பு - 89.67 டி.எம்.சியாகும். நீர் திறப்பு 18 ஆயிரம் கன அடி
ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில் பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது என்றும் , ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், துணைமுதல்வரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
பாஜகவில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு, ஆனால் பாஜக மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை . ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி என நடிகரும் பா.ஜ. பிரமுகருமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவு உலகத்திலேயே இருந்து வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் மக்கள் அங்கீகாரம் கொடுப்பதே முக்கியம். யார் வந்தாலும் அதிமுக ஆட்சியே தொடரும், அதிமுக வாக்குவங்கியை யாரும் தட்டி பறிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் ஆய்வு மேற்கொண்டனர். கார்களின் தயாரிப்பு, வடிவமைப்பு உள்ளிட்ட விபரங்களை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் சேரமாட்டார். அவரால் ஒருகட்சியின் கீழ் பணியாற்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ப.சிதம்பரம், டி கே சிவகுமார் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை . அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என தெரிவித்த அவர், இதுபோன்ற வழக்குகளின் மூலம் காங்கிரஸ் கட்சியை முடக்கி விட முடியாது என்று கூறினார்.
கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 50,000 கனஅடியும், கபினி அணையில் இருந்து 20,000 கனஅடியும் நீர்திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தமிழகத்திற்கு 70,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 28,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 30,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights