Advertisment

Tamil Nadu news updates : ஆண்டாள் திருக்கல்யாணம் - ஆகஸ்ட் 3ம் தேதி 3 மணிநேரம் தரிசனம் இல்லை

Petrol diesel price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 75.60 ஆகும். டீசல் விலை ரூ. 69.72 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates :   உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது உலக வங்கி. 2017ம் ஆண்டு 5வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 2018ம் ஆண்டில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ஜப்பானும், நான்காவது இடத்தில் ஜெர்மனியும் உள்ளன. 5வது இடத்தில் பிரிட்டன் மற்றும் 6வது இடத்தில் ஃபிரான்ஸ் நாடுகள் உள்ளன.

Advertisment

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்த சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  2017ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பானது 2.65 ட்ரில்லியனாக இருந்தது. 2018ம் ஆண்டு இந்திய ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சியாலும், பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினாலும் பின்னடவை பெற்றுள்ளது இந்தியா. தற்போது இந்திய பொருளாதாரம் 2.73 ட்ரில்லியனாக உள்ளது.  நடைபெற்று முடிந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியனை எட்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரபிக் கடலோர மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் இந்த வார இறுதியில் கனம்ழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services : தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    20:47 (IST)02 Aug 2019

    ஆண்டாள் திருக்கல்யாணம் – 3 மணிநேரம் தரிசனம் இல்லை

    ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நாளை ( ஆகஸ்ட் 3ம் தேதி) மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாது என்று காஞ்சிபுரம் கெலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

    19:57 (IST)02 Aug 2019

    அணை பாதுகாப்பு மசோதா விவகாரம் – பிரதமருக்கு எம்.பி.ரவீந்திரநாத் பாராட்டு

    அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளார். தமிழக உரிமை மற்றும் அதன் செயல்பாடுகள் பாதிக்காத வகையில் அணை பாதுகாப்பு மசோதா அமைய வேண்டும் என்று தேனி எம்.பி. ரவீந்திரநாத் மக்களவையில் பேசியுள்ளார்.

    19:03 (IST)02 Aug 2019

    திமுகவில் வாரிசு அரசியல் – முதல்வர் பழனிசாமி தாக்கு

    திமுகவிற்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, உதயநிதிக்கு பதவி வழங்கியிருப்பது அக்கட்சியில் வாரிசு அரசியல் இருப்பைதயே காட்டுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    வேலூர் மக்களவை தேர்தல், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. அணைக்கட்டு நகரில் நடைபெற்ற  தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது, லூர் மக்களவை தொகுதிக்கு, தேர்தல் வர, திமுகவே காரணம் என கூறினார்.

    18:30 (IST)02 Aug 2019

    தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள் – ஸ்டாலின்

    தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தல், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது.  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

    திமுக தலைவர் ஸ்டாலின், உமராபாத் பகுதியில்  பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம். திமுக கூட்டணியில் 38 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தை கலக்கி வருகிறார்கள்.  ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை ஒருமுறை கூட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை என்று கூறினார்.

    17:53 (IST)02 Aug 2019

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்!

    பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் தொடர்ந்திருந்த வழக்கில், நீதிமன்றம் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது.

    17:45 (IST)02 Aug 2019

    தலைமை காவலர் சஸ்பெண்ட்.!

    சென்னை அசோக் நகரில் வாகன சோதனையின்போது ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.100 லஞ்சம் பெற்ற போக்குவரத்து தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    17:19 (IST)02 Aug 2019

    அண்ணா சாலை இருவழிச்சாலை!

    மெட்ரோ பணிகள் நிறைவடைந்த சாலைப்பகுதிகள், இருவழிச்சாலையாக்கப்பட்டு வரும் நிலையில், எல் ஐ சி  முதல் ஆயிரம் விளக்கு இடையேயான உள்ள சாலை மட்டும் இருவழிப்பாதையாக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போதும் இச்சாலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நாளை முதல் அண்ணா சாலை இருவழிச்சாலையாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    16:48 (IST)02 Aug 2019

    பொன். மாணிக்கவேல் மீது குற்றச்சாட்டு.

    இந்து அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை முறையாக தர பொன். மாணிக்கவேல் மறுக்கிறார் என்று தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் கவிதா. இவர் மீதான் வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும் நிலையில் பொன்.மாணிக்க வேல் மீது  தமிழக அரசு  இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.   

    16:18 (IST)02 Aug 2019

    விஷாலுக்கு பிடிவாரண்ட்!

    நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிற்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் இத்தகைய  உத்தரவை பிற்பித்துள்ளது. விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் விஷால் மீது வழக்கு தொடர்ந்திருந்தனர். 

    16:04 (IST)02 Aug 2019

    உமா மகேஸ்வரி கொலை வழக்கு!

    நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது நெல்லை மாநகர காவல்துறை.   இதுவரை இந்த கொலை தொடர்பாக விசாரித்து வந்த  அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்பிக்கும்படி  நெல்லை மாநகர் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

    14:40 (IST)02 Aug 2019

    Ayodhya Case

    மத்தியஸ்தர்கள் வழியில் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இவ்விசாரணை நாள்தோறும் நடைபெற உள்ளதாக தகவல்.

    13:57 (IST)02 Aug 2019

    UAPA amendment Bill - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

    உபா சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 147 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் பாதிவாகியுள்ளன.

    13:55 (IST)02 Aug 2019

    UAPA amendment Bill

    உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  மசோதா மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் உபா சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பும், இந்த திருத்த மசோதாவை ஆய்வுக்குழுக்கு அனுப்ப வேண்டுமா எனவும் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டாம் என 104 வாக்குகள் பதிவாகியுள்ளன. 85 வாக்குகள் அதற்கு எதிராகவும் பதிவாகியுள்ளன.

    13:05 (IST)02 Aug 2019

    வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி

    வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக்கத்தின் ஒரு சில இடங்களுக்கு மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு.

    13:04 (IST)02 Aug 2019

    NIA குறித்து நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் பேச்சு

    தேசிய புலனாய்வு அமைப்பிற்கு அளிக்கப்படும் கூடுதல் அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு. 

    12:39 (IST)02 Aug 2019

    நாதுராம் கோட்ஸே விவகாரம் : அக்.15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் ஹாசன் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சிலர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மீது வழக்கு பதிவும் செய்தனர். இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணுகுப்தா தொடர்ந்த வழக்கை அக்டோபர் 15ம் தேதிக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    12:36 (IST)02 Aug 2019

    உன்னாவ் விவகாரம்

    உன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பாதிகப்பட்ட பெண் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட கடுமையான கட்டுப்பாட்டினை விதித்துள்ளது . அப்பெண்ணின் உறவினர் ஒருவர் ரேபரேலி சிறையில் இருக்கிறார். அவரை டெல்லி திகார் சிறைக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    11:50 (IST)02 Aug 2019

    Gold Rate Today : 27 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்

    சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 62 உயர்ந்து, ரூ. 3,372க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 496 உயர்ந்து, ரூ. 26,976-க்க்கு விற்பனையாகிறது.

    11:36 (IST)02 Aug 2019

    வேலூர் தேர்தல்

    வேலூரில் திங்கள் கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். முறையான அனுமதி இல்லாமல் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறி ஆம்பூர் மண்டபத்டதுக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை அகற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.

    11:23 (IST)02 Aug 2019

    அயோத்தி விவகாரம் : கை விரித்த மத்தியஸ்தர்கள்

    அயோத்தி விவகாரத்தில் சமரச தீர்வு காண்பதற்காக உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கிற்கான அறிக்கையை சமர்பிக்க மார்ச் 8ம் தேதி சமரச குழு அமைத்து உத்தரவிட்டது. நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு  முழு அறிக்கையை நேற்று சமர்பித்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் உரையாடல் நடத்தி அந்த விவரங்களை அறிக்கையாக சமர்பித்தது. ஆனாலும் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை என மத்தியஸ்தர்கள் கூறியுள்ளனர்.

    11:13 (IST)02 Aug 2019

    தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு

    ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் பாம்பியோ ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், இன்று காலை மஹானகோன், மாடி ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடித்ததால் பரபரப்பானது. வெடித்தவை நாட்டு வெடிகுண்டுகள் தான் என்றும், மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என்றும் தாய்லாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்க 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    11:10 (IST)02 Aug 2019

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    சென்னையில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், நெக்ஸ்ட் தேர்வு போன்றவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    10:58 (IST)02 Aug 2019

    Indian economy : மோசமடையும் இந்திய பொருளாதாரம்... கேள்வி கேட்கும் ராகுல் காந்தி

    ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரம் குறித்தும், நிதி அமைச்சரின் தகுதி குறித்தும் கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். அதில், உங்களின் நிதி அமைச்சர் ”இந்திய பொருளாதாரத்திற்கான ஒளி தெரிகின்றது என்று கூறினால் நம்பாதீர்கள்... இந்திய பொருளாதாரம் தரம் புரண்டுவிட்டது” என்று ட்வீட் செய்துள்ளார். 

    Tamil Nadu news today live updates

    NMC bill : மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம்

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. கர்நாடக அணைகள் வெகுவாக நிரம்பி வருவதால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது.

    பவானி சாகர் அணையின் நீர்மட்டம்

    62.45 அடியாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உள்ளது. நீர் இருப்பு 8.1 டி.எம்.சி ஆகும். நீர் வரத்து 571 கன அடி ஆகும். நீர் வெளியேற்றம் 205 கன அடி.

     

    Tamil Nadu India
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment