Advertisment

Tamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்

Tamilnadu latest news : தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது; அடுத்த சில மணி நேரங்களுக்கு இது நீடிக்கும். நாளை (27ம் தேதி) முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: அமமுக-வின் தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனைப் பற்றி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் டிடிவி. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

Advertisment

இதைத் தவிர, தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு ஜூலை 1 முதல் 8ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக 3 பேரையும், திமுக 3 பேரையும் தேர்வு செய்ய முடியும். அதிமுகவின் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல் உள்ளிட்ட நால்வரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் பதவிக்காலமும் ஜூலை 24ம் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, Politics, Sports, Entertainment, Traffic, Train services and Airlines

தமிழக முக்கிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, பிக்பாஸ், வெதர் உட்பட பலவற்றையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்!



























Highlights

    20:58 (IST)26 Jun 2019

    தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்

    அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான். தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன்; இனி அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது  என அமமுக கட்சி  பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    20:29 (IST)26 Jun 2019

    விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்

    ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடையில்லை" * உயர்மின் கோபுர திட்டத்திற்கு எதிராக 11 விவசாயிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

    20:12 (IST)26 Jun 2019

    நிடி ஆயோக் தலைவர் பதவிக்காலம் நீட்டிப்பு

    நிடி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் பதவிக் காலத்தை மேலும், 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

    நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் மத்திய திட்ட கமிஷன் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு, இந்தியாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிடி ஆயோக் என்ற அமைப்பு பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.  இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது இருப்பவர் அமிதாப் கண்ட். இவரது பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு இன்று (ஜூன் 26) உத்தரவிட்டுள்ளது.

    20:09 (IST)26 Jun 2019

    ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? : மோடி கேள்வி

    ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்று சொல்வதா என்று காங்கிரசிற்கு பிரதமர்மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.  , தமிழகம், கேரளாவில் இப்படித் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதா? என்று,மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

    19:49 (IST)26 Jun 2019

    அண்ணா பல்கலை.,க்கு புதிய பதிவாளர் நியமனம்

    அண்ணா பல்கலைகழகத்தின் புதிய பதிவாளராக கருணாமூர்த்தியை நியமித்து, பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

    19:19 (IST)26 Jun 2019

    முதுநுிலை ஆசிரியர் தேர்வு முறைகேடு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மனுதாரர் அளிக்கும் புகாரை, ஒரு வாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    19:05 (IST)26 Jun 2019

    சென்னையில் இன்று மழை ஏன்? - தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

    வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவே, சென்னையில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன், தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,  சென்னையில் மழை பெய்வதை பார்த்தாலே ஆனந்தமாக உள்ளது.  சாலைகளில் எல்லாம் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.  சென்னையில் இன்று பெய்த மழைக்கு, வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியே காரணம். 

    சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்கிறது. உங்கள் பகுதியில் மழை பெய்யவில்லை எனில், நீங்கள் துரதிர்ஷ்டசாலி என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    18:50 (IST)26 Jun 2019

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை அந்தந்தமாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களே விசாரிக்கும் . அந்தந்த மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை சிறப்புநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள பிற மாவட்ட எம்பிக்கள்மீதான வழக்குகள் மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    18:16 (IST)26 Jun 2019

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

    சென்னையின்  அசோக் நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி  ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மழையால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    18:12 (IST)26 Jun 2019

    காவலர் குடியிருப்பு விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    காவலர் குடியிருப்பில் வசிப்பவர்கள் பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பேித்துள்ளது.   காவலர் குடியிருப்பில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக பலர் குடியிருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தனிக்குழு அமைத்து பட்டியல் தயாரிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    18:10 (IST)26 Jun 2019

    பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.

    publive-imageபிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால், காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த முன்னாள் எம்.பி அப்துல்லாகுட்டி, டில்லி்யில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    17:49 (IST)26 Jun 2019

    நண்பனை குத்திக்கொன்ற சகமாணவன் : சென்னையில் பயங்கரம்

    தன் தங்கையை காதலித்ததற்காக நண்பன் என்று பாராமல் பட்டப்பகலில் சக மாணவனே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் சென்னையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருபவர்கள் ஷரவந்த் மற்றும் சண்முகம். ஷரவந்த், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன். ஷரவந்த், சண்முகத்தின் தங்கையை காதலித்து வருவது சண்முகத்திற்கு தெரியவரவே, கல்லூரி வாசலிலேயே, ஷரவந்தை, சண்முகம் கத்தியால் குத்திக்கொன்றான். இதுதொடர்பாக, துரைப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    17:07 (IST)26 Jun 2019

    தமிழகத்தின் புதிய டிஜிபி - திரிபாதிக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் புதிய டிஜிபியாக திரிபாதி ஐ.பி.எஸ். நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம், இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய டிஜிபியை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 9 முதல் 13 பேர் கொண்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது.  இறுதியாக 5 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திரிபாதி, ஜாங்கிட். எம்.கே.ஜா. அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட 5 பேர்கள் இடம்பெற்றுள்ளன.  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, டிஜிபியாக நியமிக்கப்படுபவர்களுக்கு குறைந்தது 6 மாத காலம் இருக்க வேண்டும். ஜாங்கிட் ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவருக்கு டிஜிபி வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில், அனைத்து தகுதிகளுடன் திரிபாதி முன்னணியில் உள்ளார். 1985ம் பேட்சை சேர்ந்த திரிபாதி சீருடை ஆணையத்தின் உயரதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    16:27 (IST)26 Jun 2019

    அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி!

    அமமுக இனி இருக்காது, அங்கிருந்து ஒவ்வொருவராக அதிமுகவிற்கு வந்துவிடுவார்கள் தங்க தமிழ்ச்செல்வனை ஏற்பது பற்றி முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள் - என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.  2 தினங்களாக அமமுக தமிழ்ச்செல்வன்    ஆடியோ வெளிட்யாகி பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ள நிலையில் இதுக் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து  தெரிவித்துள்ளார். 

    16:05 (IST)26 Jun 2019

    அமைச்சர் சிவி சண்முகம் புகார் மனு!

    தன் மகன் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசை தாக்க முயன்றது அமைச்சரின் மகன் என தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், கமிஷனர் அலுவலகத்தில்  சி. வி சண்முகம் இந்த  புகார் மனுவை அளித்துள்ளார். 

    15:28 (IST)26 Jun 2019

    மாநிலங்களவையில் மோடி!

    நாட்டில் 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது எம்.பி.க்களின் நிதி மூலம் தண்ணீர் பிரச்னையை எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன் என்று மாநிலங்களவையில் மோடி தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்னை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 

    14:59 (IST)26 Jun 2019

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு!

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நீதி தேவை எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை  என்று மக்களவையில் எம்.பி கனிமொழி குரல் கொடுத்துள்ளார். வழக்கை சிபிஐக்கு மாற்றியும் ஒரு போலீசார் கூட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை - எனவும்  மக்களவையில் திமுக எம்பி கனிமொழி  பேசியுள்ளார். 

    14:22 (IST)26 Jun 2019

    news in tamil : கார்த்தி சிதம்பரம் - பியூஷ் கோயல் சந்திப்பு!

    மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை, எம்.பி. கார்த்தி சிதம்பரம் சந்தித்து சிவகங்கை தொகுதிக்கான ரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று வழங்கினார். சிவகங்கை எம்பியாக சமீபத்தில் நடைப்பெற்ற  பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து சிவகங்கை தொகுதி பணிகளில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    14:08 (IST)26 Jun 2019

    எடப்பாடி - தனபால் சந்திப்பு

    தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் சபாநாயகருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

    13:24 (IST)26 Jun 2019

    Tamil News today: கருணாநிதி சிலை திறப்பு

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினமான ஆகஸ்ட் 7-ம் தேதி, சென்னை முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்துவைக்கிறார்.  திமுக தலைவர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். 

    13:02 (IST)26 Jun 2019

    கி.வீரமணி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு பெரியார் திடலில் நடைபெற்று வருகிறது. 

    12:35 (IST)26 Jun 2019

    மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு

    குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகின்றனர். தற்போது பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “தமிழகத்தில் அனைத்து நதிகளும் வற்றிவிட்டன. ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

    12:16 (IST)26 Jun 2019

    இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

    வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழையால் வடதமிழகம், தென்தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    11:44 (IST)26 Jun 2019

    News Today: பேனர்களை தடுப்பது அரசின் வேலை

    விஐபி-க்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என தினம் அதிகளவில் பேனர்களைப் பார்க்க முடிகிறது. பொதுமக்களுக்கு இடையூறு தரும் இந்த பேனர்களைத் தடுக்க வேண்டியது அரசின் வேலை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    11:35 (IST)26 Jun 2019

    Tamil Nadu News: ஜெயக்குமார் பேட்டி

    டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த டிடிவி தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர். டிடிவி தினகரன் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக-வில் இணையலாம். தங்க தமிழ்ச்செல்வனை மீண்டும் அதிமுக-வில் இணைப்பது பற்றி கட்சி முடிவெடுக்கும். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம் தான் கிடைக்கும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

    10:38 (IST)26 Jun 2019

    மதுரையில் மாணவர்கள் காயம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தனியார் பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், கீழே நின்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    10:32 (IST)26 Jun 2019

    Tamil Nadu News: அதிமுக எம்.எல்.ஏ மகனுக்கு முன் ஜாமீன்

    ஈரோட்டில் மாணவர்கள் போராட்டத்தின்போது, செய்தியாளர்களை தாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் அதிமுக எம்எல்ஏ கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவ்-க்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரத்தன் பிரித்திவ் உட்பட 5 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், அவர்களுக்கு காவல் நிலைய முன்ஜாமின் வழங்கினர்.

    10:29 (IST)26 Jun 2019

    செயற்கை மழை குறித்து ஆய்வு

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்தப் பணி பணி 3 வாரத்திற்குள் முடிந்துவிடும். தமிழகத்தில் போதிய மழை பெய்யாததே குடிநீர் பிரச்னைக்கு காரணம். செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது. இருந்தாலும் செயற்கை மழை குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது” என்றார். 

    10:17 (IST)26 Jun 2019

    Tamil nadu News: ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒ.என்.ஜி.சி விண்ணப்பம்

    தமிழகத்தில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், ராமநாதபுரம் கடலூர் மாவட்டங்களில் கிணறு தோண்டவிருப்பதாக அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    10:08 (IST)26 Jun 2019

    Tamil Nadu Latest News: பிரபல ஹாலிவுட் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோவை பாதித்த சென்னை தண்ணீர் பஞ்சம்

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், ’டைட்டானிக்’ படத்தில் ’ஜேக்’ என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராமில் வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார். “இந்த சூழலில் மழையால் மட்டும் தான் சென்னையைப் பாதுகாக்க முடியும். தென்னிந்தியாவில் இருக்கும் சென்னை நகரம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    09:21 (IST)26 Jun 2019

    காதலர்கள் வெட்டப்பட்ட விவகாரம்

    மேட்டுப்பாளையத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த கனகராஜ் என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த அவரது அண்ணன் வினோத்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

    08:56 (IST)26 Jun 2019

    யாரும் என்னை இயக்கவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்.

    நேற்று டிடிவி தினகரன், தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து, “எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என என்னை யாரும் இயக்கவில்லை விமர்சனம் வைக்கத்தான் செய்வேன், அதை தாங்கிக் கொண்டு தலைமை அழைத்து பேசியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

    08:44 (IST)26 Jun 2019

    Tamil Nadu Latest News: நான் உண்மையை பேசினேன்

    தங்க தமிழ்ச்செல்வன் - டிடிவி தினகரன் இருவருக்குமிடையேயான பிரச்னை வெளியில் வந்துள்ளது. டிடிவி-யை தங்க தமிழ்ச்செல்வன் திட்டும் ஆடியோ ஒன்று வெளியாகியிருந்த நிலையில், “நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின. கூவத்தூர், புதுச்சேரி, கர்நாடகாவில் எங்களை அடைத்து வைத்தது ஏன்?” என தினகரனின் குற்றச்சாட்டை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார் தேனி மாவட்ட அமமுக செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன்.

    Tamil Nadu news today live updates: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அவரின் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தவிர, ராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

    Tamil Nadu Ops Eps Mk Stalin Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment