Tamil Nadu news today live updates Chennai weather : தமிழகம் மற்றும் புதுவையின் கடற்கரையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தஞ்சை, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் போக்குவரத்து பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. 15 நாட்கள் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.
விண்ணை முட்டிய வெங்காய விலை
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, Tamil Nadu politics, traffic, rain updates இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
கடவுள்களுக்கு பவர் இருப்பது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. ரஜினியின் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை. அரசியலுக்கு வந்தால் கொள்கையை விட்டுத் தரக் கூடாது என ரஜினியிடம் கூறியிருக்கிறேன். நான் இந்த மேடையில் நிற்பது சூப்பர் ச்டாருக்காக அல்ல. சூப்பர் மனிதனுக்காக என்று வேலூர் ரஜினி மக்கள் மன்ற நலத்திட்டம் வழங்கும் விழாவில் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த தேசிய மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தகவல்
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருந்த சாத் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை அதிபர் கூறுவது ஏமாற்றுவேலை, இலங்கைக்கு நிதி அளிக்கும் பிரதமர் மோடியின் செயல் கண்டிக்கத்தக்கது - வைகோ
உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தலைமையிலான அணி தயாராக உள்ளது, ஆளும் அரசுதான் வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் இருக்கிறது
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில், ராணுவ வீரர்கள் 2 பேர் சிக்கித் தவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர், 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். கடந்த வாரம் நிகழ்ந்த பனி சரிவில் சிக்கி 4 வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வீராணம் ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5650 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 350 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளான வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, கல்யாணிபட்டி போன்ற ஊர்களில் மல்லிகை பூ விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை மாத முகூர்த்த நாள் என்பதால், ஒரு கிலோ மல்லிகைப்பூ 3000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இதேபோல் திண்டுக்கல் பூ சந்தையிலும் ஒரு கிலோ மல்லிகைப்பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது
தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சென்னையில் நடைபெற்று வரும் முதலீடு மற்றும் தொழில் திறன் மேம்பாடு மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.2,892 கோடி மூதலீட்டில், 19,771 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
டெல்லியில் இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்ஸு ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை திமுக எதிர்க்கவில்லை, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியா ஓய்வுபெற்றதை அடுத்து புதிய செயலாளராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய செயலாளரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டதால் அரசு ஆணை தனக்கு பொருந்தாது" எனக் குறிப்பிட்டுள்ளார். வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததன் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் உத்தவ் மரியாதை செலுத்தினார்
Chief Minister of Maharashtra Uddhav Thackeray pays tribute to Chhatrapati Shivaji Maharaj in the state Assembly premises ahead of the floor test of #MahaVikasAghadi government today. pic.twitter.com/kLmrPcD9NC
— ANI (@ANI) November 30, 2019
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நாங்கள் எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினரின் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தி வந்தனர். சோதனை முடிவில் ரூ. 79 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுதும், ரூ. 440 கோடி மதிப்பிலான போலி ரசீதுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோய் தொற்றுள்ளவர்களுக்கு சம உரிமை அளித்து அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இறந்து போனவர்கள் எத்தனை பேர் என கேள்வி எழுப்பியுள்ளது மனித உரிமை ஆணையம். தமிழக மருத்துவ கல்வி இயக்குநர், மனநல காப்பக இயக்குநர் ஆகியோர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராச்ட்ராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து துணை முதல்வராக தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவரும், சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரும் பொறுப்பேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நானா படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்காயம் வாங்கிச் சென்றனர். தகராறு ஏற்படாமல் தடுக்கும் வண்ணத்தில் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயம் விற்றனர்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டு இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகின்ற நிலையில் பாஜக தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளையும், இந்தியாவில் அவர்கள் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்தும் ட்வீட் செய்து வருகின்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பிற்காக தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.
Today, we mark the completion of six months of the second term of @PMOIndia @narendramodi. Several significant steps in structural reforms have been taken in these months.
Responses/interventions addressing the needs of the economy will continue. #6MonthsOfIndiaFirst— Nirmala Sitharaman (@nsitharaman) November 30, 2019
Tamil Nadu news today updates : டி20 கிரிக்கெட் போட்டி : இந்தியா 2Vs வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளுக்கு மேற்கிந்திய தீவு அணியில் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறார். முதல் போட்டி வருகிற 6ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி 8ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது போட்டி மும்பையில் 11ம் தேதி நடைபெற உள்ள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights