Advertisment

Tamil Nadu news today updates : திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடம்பெறும் தாலுகாக்கள்: அரசு அறிவிப்பு

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.69.54க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
new collectors and sp's for newly created district

தமிழ்நாடு அரசு

Tamil Nadu news today updates : சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி தனி மாவட்டமாகவும், தென்காசி தனி மாவட்டமாகவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தென்காசி மாவட்டத்தின் கீழ் செயல்படும் தாலுகாக்கள் குறித்தும், நெல்லை கீழ் செயல்படும் தாலுக்காக்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Advertisment

தாலுகாக்கள் விபரம்

சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே. புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுக்காக்கள் தென்காசி மாவட்டத்தின் கீழ் செயல்படும்.  பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுக்காக்கள் நெல்லை மாவட்டதின் கீழ் செயல்படும்.

சங்கரன்கோவில் வருவாய் கோட்டம்

குருக்கள்பட்டி, சேர்ந்தமங்கலம், கரிவலம்வந்த நல்லூர், வீரசிகாமணி ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கி சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தின் புதிய மாவட்டங்களாகும் தென்காசி, செங்கல்பட்டு! கும்பகோணம் மிஸ்ஸானது எப்படி?

Live Blog

Tamil Nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!














Highlights

    21:30 (IST)13 Nov 2019

    டெல்லியில் காற்று மாசு; பள்ளிகளை மேலும் 2 நாட்களுக்கு மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

    டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை.
    நிலக்கரி பயன்பாடு கொண்ட தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை 15ஆம் தேதி வரை மூட வேண்டும் எனவும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை.
    அதே போல, உத்தர பிரதேசம் மாநிலத்தில் காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:42 (IST)13 Nov 2019

    சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை - ஜவாஹிருல்லா

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    20:00 (IST)13 Nov 2019

    மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என கூறவில்லை; நிலைப்பாட்டில் மாற்றமில்லை - மாஃபா பாண்டியராஜன்

    அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. ஆனால், ஸ்டாலினின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது; மன்னிப்புக் கேட்க மாட்டேன்.

    19:20 (IST)13 Nov 2019

    சிவசேனா புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - அமித்ஷா

    செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா: மகாராஷ்டிராவில் கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வராவார் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தோம். ஆனால், சிவசேனா தற்போது புதிதாக கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    இதற்கு முன்னர் எந்த மாநிலத்திற்கும் ஆட்சியமைக்க 18 நாட்கள் கொடுக்கப்பட்டதில்லை. சட்டசபை பதவிக்காலம் முடிந்த பின்னரே, கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். தற்போது கூட பெரும்பான்மை உள்ள கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை அணுகலாம்.

    18:21 (IST)13 Nov 2019

    தி.நகர் - பாண்டி பஜாரில் நடைபாதை வளாகம் சீர்மிகு சாலைகளை திறந்துவைத்தார் முதல்வர்

    சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

    18:17 (IST)13 Nov 2019

    பேராசிரியரின் பாகுபாட்டால் ஐஐடி மாணவி தற்கொலை செய்தி அதிர்ச்சியளிக்கிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

    சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரள மாணவி ஃபாத்திமா பேராசிரியர்களின் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மாணவி ஃபாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என வலியுறுத்தல்

    18:11 (IST)13 Nov 2019

    மத்திய கனரக தொழில், பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்பு

    சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருடைய துறையின் பொறுப்பை சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்றார்.

    18:03 (IST)13 Nov 2019

    கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முற்றுகை போராட்டம் :

    சென்னை ஐஐடி விடுதியில் கடந்த 8ம் தேதி , கேரளாவை சேர்ந்த பாத்திமா என்கிற மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி கேட்டு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  என்ற மாணவர் அமைப்பினர் ஐஐடி கல்லூரியை முற்றுகை செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மாணவி தற்கொலைக்கு சமந்தப்பட்ட நபர்கள் உரியமுறையில் கைது செய்யப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்னெடுத்து போராட்டம் நடைபெற்றது.  கோட்டுர்புரம் போலீசார், போராட்டம் செய்த மாணவ அமைப்பினர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.    

    17:19 (IST)13 Nov 2019

    விடுதி கட்டண உயர்வு ஓரளவு திரும்பப் பெறுவதற்கான முடிவு

    ஜே.என்.யூ நிர்வாகக் குழு விடுதி கட்டணம் மற்றும் பிற நிபந்தனைகளில் மாணவர்களின் நிபந்தனைகளை ஏற்பதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பொருளாதரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உதவி திட்டத்தையும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.    திருத்தப்பட்ட முடிவின்படி, ஒற்றை குடியிருப்பாளர்களுக்கான அறை வாடகை ரூ .200 ஆகவும், இரண்டு பேர் தங்கும் அரை வாடகை  ரூ .100 என்றும் இருக்கும்.  சேவைக் கட்டணங்கள்  தொடர்ந்து 1,700 ரூபாய் . 

    16:18 (IST)13 Nov 2019

    அமைச்சர் பாஸ்கரன் பேட்டி

    பட வாய்ப்பு இல்லை என்பதால் கமல் கட்சி தொடங்கினார் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்தால் சிவாஜி கணேசன் நிலைதான் என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்நிலையில், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் அமைச்சரான பாஸ்கரன் இன்று சிவகங்கையில் பேசும் போது,  "நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் வரும் காலங்களில் செல்லுபடியாகாது, விஜய காந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது"  என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.   

    15:40 (IST)13 Nov 2019

    சரியான திசையில் பேச்சுவார்த்தை நகர்கிறது : உத்தவ் தாக்கரே

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் முன்னேறி வருவதாகவும், தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் . 

    15:38 (IST)13 Nov 2019

    அடுத்த முதல்வர் சிவசேனாவில் இருந்து தான் - சஞ்சய் ரவுத்

    ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சையை முடித்துவிட்டு   இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத். செய்தியாளர்களிடம் பேசிய அவர்  “மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவிலிருந்து வருவார்” என்று தீர்க்கமாக கூறினார். முன்னதாக, உத்தவ் தாக்கரே, சரத்பவார்  நேரில் சென்று நலம் விசாரித்தனர் என்பது குறிபிடத்தக்கது.   

    15:03 (IST)13 Nov 2019

    தீர்ப்பாயங்கள் குறித்த 2017ம் ஆண்டு விதிமுறைகள் செல்லாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    நிதிச் சட்டம், 2017ன்  பிரிவு 156 முதல் 189 தீர்ப்பாயங்களை கட்டமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பான விதிகளைத் திருத்தி அமைத்திருந்தது.  இந்த விதிகள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.  மேலும், புதிய விதிகளை வகுக்குமாறும்  அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.   

    14:53 (IST)13 Nov 2019

    இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் வரும்:

    இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் வருமா ?  என்ற முக்கிய வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அரசியலமைப்பு  அமர்வில் நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதி தீபக் குப்தா, நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்ளிட்டோரும் அடங்குவர்.  தீர்ப்பில், உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி (சி.ஜே.ஐ.) அலுவலகம் ஒரு பொது அதிகார அமைப்பு.  எனவே, இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்ற தீர்பபு வெளியாகியுள்ளது. 

    14:14 (IST)13 Nov 2019

    லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்து குடும்பத்தினர் அறிக்கை-

    பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லதாமங்கேஷ்கரின் குடும்பத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், " லதா டி-ன் உடல் நிலை நிலையானதாகவும், சிறப்பாகவும் உள்ளது . உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி. இந்த நேரத்தில் எங்களுடன் இருந்ததற்கும், எங்கள் தனியுரிமையை மதித்தமைக்கும் நன்றி" என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

    13:53 (IST)13 Nov 2019

    மனித மாண்பு பேண அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்

    கழிவுகளை அகற்றும் போது விசவாயு தாக்கி 206 பேர் உயிரிழிந்துள்ளனர். தமிழகம் இதில் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு. இந்த இறப்புகள் திமுக காலத்திலும் நடைபெற்றுள்ளது. அரசு மட்டும் இல்லாமல் அனைவரும் இதில் சேர்ந்து இந்த சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    13:51 (IST)13 Nov 2019

    ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு

    ஊரக சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகள் தரத்தை மேம்படுத்த ரூ. 60 கோடி நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

    12:43 (IST)13 Nov 2019

    சீமான் பேட்டி

    உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் அறிவித்துள்ளார். வயதானால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று முதல்வர் கூறியதை அவர் அமோதிப்பதாகவும் அறிவித்தார்.

    12:14 (IST)13 Nov 2019

    ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்

    ராதாபுரம் தொகுதியில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வருகின்ற 22ம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

    12:11 (IST)13 Nov 2019

    சபரிமலை மறுசீராய்வு மனு - நாளை தீர்ப்பு

    சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த உரிமை உண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த தீர்ப்பினை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்த தீர்ப்பினை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான தீர்ப்பு நாளை காலை 10:30 மணிக்கு வெளியாக உள்ளது.

    12:06 (IST)13 Nov 2019

    ரஃபேல் வழக்கில் நாளை தீர்ப்பு

    ரபேல் ஒப்பந்தம் முறைக்கேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. தலைமை நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    11:45 (IST)13 Nov 2019

    அமெரிக்காவில் பன்னீர் செல்வம்

    தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதியாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பான முதலீடுகளை திரட்ட அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம். அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    11:41 (IST)13 Nov 2019

    7 தமிழர்கள் விடுதலைக்கு மத்திய அரசு இரங்க மறுப்பது ஏன்?

    பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த பியாந்த் சிங் படுகொலை செய்யப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளியான பல்வந்த்சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு மறுப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

    11:39 (IST)13 Nov 2019

    ரூ. 100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

    தெலுங்கானா மாவட்டம் கம்மம் பகுதியில் ரூ. 100 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    11:36 (IST)13 Nov 2019

    டிசம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது இடைத்தேர்தல்

    இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    11:34 (IST)13 Nov 2019

    கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

    17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த காரணத்தால் குமாரசாமி ஆட்சி கலைந்தது. இந்நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார் அன்றைய சபாநாயகர் ரமேஷ்குமார். இந்த தகுதி நீக்கம் குறித்து எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    11:31 (IST)13 Nov 2019

    சென்னையில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்த இளைஞன் உயிரிழந்த விவகாரம்

    சென்னையில் இயங்கி வரும் வணிக வளாகம் ஒன்றில் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கிய இளைஞன் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர், வணிக வளாக நிர்வாகம் மீது வழக்கு பதிவு.

    11:27 (IST)13 Nov 2019

    சிவசேனா வழக்கு விவகாரம்

    ஆட்சி அமைக்க கூடுதல் கால அவகாசம் வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தொடுத்துள்ளது. ஆனால் அதனை அவசர வழக்காக விசாரிக்க கோரும் திட்டம் ஏதும் இல்லை என சிவசேனா தரப்பு அறிவித்துள்ளது.

    11:26 (IST)13 Nov 2019

    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்

    பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை முறையாக பராமரிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முயற்சி எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    11:22 (IST)13 Nov 2019

    புதிய தாலுகாக்கள்

    சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய தாலுகாக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் இயங்கும்.  மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் இயங்கும்.

    உத்திர மேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் காஞ்சியிலும், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் ஆகிய தாலுகாக்கள் விழுப்புரம் மாவட்டத்தின் கீழும் செயல்படும்.

    11:17 (IST)13 Nov 2019

    ரேசன் அரிசி கடத்த முயற்சி

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருக்கும் பர்கூரில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்பட இருந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    11:11 (IST)13 Nov 2019

    அணைகளின் நீர்மட்டம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகும். நீர் வரத்து 16,678 கன அடி. வெளியேற்றம் 15,000 கன அடியாக உள்ளது. பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி. நீர் இருப்பு 32.8 டி.எம்.சி, நீர் வரத்து 7,948 கன அடியாக உள்ளது. வெளியேற்றம் 7,950 கன அடியாக உள்ளது.

    11:10 (IST)13 Nov 2019

    தென்பெண்ணை அணை - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.

    Tamil Nadu news today updates : மகராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 48 மணி நேரம் கூடுதலாக ஒதுக்குமாறு சிவசேனா அம்மாநில ஆளுநரை கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிவித்தார் பகத் சிங் கோஷ்யாரி. இதனை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என ராம் நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை அனுப்பினார் அம்மாநில ஆளுநர். அதற்கு ஒப்புதல் கிடைக்கப்பெறவும் தற்போது மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவி வருகிறது.

    ஹரியானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அக்டோபர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Tirunelveli Nellai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment