Tamil Nadu news today updates : ‘மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு’ – ஜல்சக்தி துறை அமைச்சகம்

Chennai petrol diesel price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.69-க்கு விற்பனையாகி வருகிறது., டீசல் விலை ரூ.68.95 ஆகும்.

By: Aug 18, 2019, 10:08:01 PM

Tamil Nadu news today updates : நாளை முதல் ஆவின் பால் விலை உயர்கிறது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி. தலைவர்கள் தங்களின் கண்டங்களை பதிவு செய்வதோடு, இந்த விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். நான்கு ரக பால்களின் விலையும் உயர்வதால், தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் போன்ற இதர பால் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக ஃபுல் கிரிம் பாலின் விலை ரூ. 51க்கு நாளை முதல் விற்பனையாக உள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Today Chennai weather updates

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில் மழை வெளுத்து வாங்குகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தேனாம்பேட்டை, தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலை அறிக்கை தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog
mil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and rainfall  : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்
21:00 (IST)18 Aug 2019
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு - ஜல்சக்தி துறை அமைச்சகம்

சேலம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது என ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணையின் நீர் இருப்பை கண்காணித்து நீரை வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது

20:56 (IST)18 Aug 2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது

நீர் மட்டம் - 114.05 அடி

நீர் இருப்பு - 84.29 டிஎம்சி

நீர் திறப்பு - வினாடிக்கு 10,000 கன அடி

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 20,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக நீர்வரத்து உயர்வு

20:23 (IST)18 Aug 2019
மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை - பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயான கலாச்சார பண்பாட்டு ரீதியான தொடர்புகளை அவர் நினைவு கூர்ந்தார். பூடான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்களிடம் பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவ​ர் கூறினார். உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் 500 மில்லியன் மக்களுக்கு சுகாதார உத்தரவாதம் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாகவும் மோடி கூறினார்.

19:44 (IST)18 Aug 2019
வைகோ நலமுடன் உள்ளார் - வைரமுத்து

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவ பரிசோதனைக்காக, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், 20,21,22 ஆகிய நாள்களில், வைகோ அவர்கள், தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், "

18:57 (IST)18 Aug 2019
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் - முதல்வர்

பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என சேலம் எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

18:02 (IST)18 Aug 2019
திருச்சியில் வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, 18 பேருடன் கிணற்றில் மினி வேன் கவிழ்ந்தது. இதில், அனைவரும் கிணற்றில் விழ, 8 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த கிராமத்தில் இருந்து திருவிழாவிற்காக மினிவேனில் சென்ற போது, டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கிணற்றில் விழுந்தது.

17:28 (IST)18 Aug 2019
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி திமுக கருத்தரங்கம்

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி வரும் 28-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் , மத்திய - மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாய தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் ஆகியவற்றை அறிவித்து, அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி காவிரி டெல்டாவை பாலைவனம் ஆக்கிட மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் குறை கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி, வருகிற 28 ந்தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்ற உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

16:58 (IST)18 Aug 2019
விலை உயர்வை அரசியலாக்குகிறார் - தமிழிசை

பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

16:09 (IST)18 Aug 2019
ஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்- பாஜக எம்.பி கோரிக்கை

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை வைக்க வேண்டும். மோடியின் பெயரில் ஏதாவது ஒன்று இருக்கவேண்டும்  என்று பா.ஜ. எம்.பி. ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார். 

14:50 (IST)18 Aug 2019
வைகோ மருத்துவமனையில் அனுமதி – நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவ பரிசோதனைக்காக, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டாக்டர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், 20,21,22 ஆகிய நாள்களில், வைகோ அவர்கள், தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

14:22 (IST)18 Aug 2019
ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதல்வர் பழனிசாமி 16 முறை யோசிப்பார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதல்வர் பழனிசாமி 16 முறை யோசிப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பால்விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு பதிலளித்துள்ளார். உற்பத்தி செலவு அதிகரிப்பு குறித்து மக்களுக்கு தெரியும், அதனால் பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுகொள்வார்கள் எனறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

13:52 (IST)18 Aug 2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியிலிருந்து 29 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் - 113.64 அடியாக உள்ளது. நீர் இருப்பு - 83.69 டிஎம்சி, நீர் திறப்பு - 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

13:47 (IST)18 Aug 2019
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13:18 (IST)18 Aug 2019
இந்தியா - மியான்மர் பகுதியில் நில அதிர்வு

இந்தியா - மியான்மர் பகுதியில் தற்போது லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 4.7ஆக பதிவாகியுள்ளது.

12:59 (IST)18 Aug 2019
Nilgiris Land slides : உதகை மலை ரயில் ரத்து

மூன்று வாரங்களுக்கும் மேலாக பருவமழை நீலகிரியில் கொட்டி வருவதால், பல்வேறு இடங்களில் மண்சரிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது கல்லாறு - அடர்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக உதகை மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

12:32 (IST)18 Aug 2019
திம்புவில் பிரதமர் நரேந்திர மோடி

பூடான் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி திம்பு பகுதியில் அமைந்திருக்கும் நேசனல் மெமொரியல் சோர்ட்டனில் இருக்கும் த்ரூக் க்யால்ப்போவின் நினைவிடத்தை  பார்வையிட்டார். அதன் பிறகு அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரை சந்தித்து பேசி வருகிறார் அவர்.

12:09 (IST)18 Aug 2019
பால் விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்வாதாராத்தை பாதிக்கும் - திருச்சி எம்.பி

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை அதிகமாக விமர்சித்து பேசியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான் என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேச்சு. காஷ்மீர் விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் இருவரையும் குற்றம் சாட்டி பேசவும், கே.எஸ். அழகிரி தன்னுடைய கண்டனங்களை வைகோவுக்கு தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்த்க்கது. பால் விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்வாதாராத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

11:25 (IST)18 Aug 2019
பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை அதிகரித்துள்ளோம் - முதல்வர்

டீசல் பெட்ரோல் விலை உயர்வால் அரசு இந்த விலையை நிர்ணயம் செய்துள்ளது. மற்ற மாநிலங்களை விட, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை மனதில் கொண்டு அவர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்துள்ளோம். அனைத்து பொருட்களின் விலை உயரும் போது பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை அதிகரித்துள்ளோம் என்று சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

11:18 (IST)18 Aug 2019
நீதிமன்றத்துக்கு வந்தவர் திருத்தணியில் ஓட ஓட வெட்டிக் கொலை

திருவண்ணாமலை பெருமாள்பட்டு மகேஷ் தன் நண்பர்களுடன் விளையாட்டு போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். எதிர் தரப்பினருடன் ஏதோ பிரச்சனை ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். ஒருவர் சென்று மற்றவரின் வீட்டை நொறுக்க, அவர்களோ மகேஷின் நண்பர்களை அடிக்க என்று நீடித்த பகை தற்போது கொலையில் முடிந்துள்ளது. நீதிமன்றத்திற்கு வந்த மகேஷை அவரின் எதிராளிகள் விரட்ட, அரக்கோணம் - திருத்தணி சாலையில் இருக்கும் உணவகம் ஒன்றின் உள்ளே நுழைந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் இருந்த அந்த பகுதியில் ஏற்பட்ட இந்த கொலை அனைவருக்கும் அச்சுறுத்தலை தந்துள்ளது. 

10:46 (IST)18 Aug 2019
Himachal Pradesh heavy rain

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மலையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகள் முற்றிலும் பழுதடைந்ததால் போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது. கிண்ணாவூரில் இருக்கும் ரிப்பா பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 5 முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

10:34 (IST)18 Aug 2019
அருண் ஜெட்லியை சந்தித்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து அறிந்து கொண்டார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். உடல் நலக் குறைவின் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

10:31 (IST)18 Aug 2019
சென்னை - புதுச்சேரி இடையே மேலடுக்கு சுழற்சி

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை-புதுச்சேரிக்கு இடையே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை வரை மழை நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10:13 (IST)18 Aug 2019
Vellore rains : வேலூர் மாவட்டத்தின் ஆம்பூர் பகுதியில் வெள்ளம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆம்பூர் அருகே இருக்கும் ஊட்டல் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து வேர்கடலை போன்ற பயிர்கள் முற்றிலும் நாசம் அடைந்துள்ளது.

10:13 (IST)18 Aug 2019
Modi's speech in Royal University of Bhutan

அரசு பயணமாக பூடான் சென்றுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இன்று காலை ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றியுள்ளார் அவர். அதில் அவர் “பூடானின் இயற்கை எழில் கொஞ்சும் அழகில் எவரும் ஈர்க்கப்பட்டுவார்கள். வரலாறு, கலாச்சாரம், ஆன்மீக மரபுகளால் இவ்விரு நாட்டினருக்கும் ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார் அவர்.

Tamil Nadu news today  live updates :  மேட்டூர் அணை நிலவரம்

இன்று காலை வரை விநாடிக்கு 24,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது விநாடிக்கு 27,000 கன அடி நீர் வர துவங்கியுள்ளது.  மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113.45 அடியாக உள்ளது.  நீர் இருப்பு - 83.40 டி.எம்.சி.  நீர்வரத்து 27,000 கன அடி, நீர் திறப்பு 10,000 கனஅடி.  இன்று முதல் ஆனைமலை வட்டத்தின் விவாசய பகுதிகளுக்கு பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வரை நீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவு.

Web Title:Tamil nadu news today live updates chennai weather tn politics aavin milk price hike fuel price

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X